ப4ஜரே ரகு4வீரம் ஸ1ர ப4ரித த3ஸ1ரத2 குமாரம்
சரணம்
சரணம் 1
நீவு து3ராஸல ரோஸி பர நிந்த3லனெல்லனு பா3ஸி (ப4)
சரணம் 2
பஞ்சேந்த்3ரியமுலனணசு ப்ரபஞ்ச ஸுக2மு விஸமனுசு (ப4)
சரணம் 3
1அன்னியு பனிகொதி3கெ3னா இடு அடு 2திரிகி3ன தெலிஸெனா (ப4)
சரணம் 4
வேரு பனுலகு போக கோ3-முக2 வ்யாக்4ரமு சந்த3மு காக (ப4)
சரணம் 5
தப்பு தண்டலனு மானி ப4வ தரணமுனனு மதி3 பூனி (ப4)
சரணம் 6
3கர்மமு ஹரிகினொஸங்கி3 ஸத்கார்யமுலந்து3ப்பொங்கி3 (ப4)
சரணம் 7
ப4க்தி மார்க3முனு தெலிஸி நிஜ பா4க3வதுல ஜத கலஸி (ப4)
சரணம் 8
மாயா ரஹிதுனி கொலிசி நீ மனஸுன ராமுனி தலசி (ப4)
சரணம் 9
காமாது3லனேகிஞ்சி நீ கார்யமுலனு ஸாதி4ஞ்சி (ப4)
சரணம் 10
ராஜாதி4புகா3 4வெலஸி த்யாக3ராஜ வரது3ட3னி தெலிஸி (ப4)
பொருள் - சுருக்கம்
- பஜிப்பாயடா, இரகுவீரனை, அம்புகள் நிறைந்த, தசரத குமாரனை;
- அனைத்துமே பணிக்குதவுமா?
- இங்கும் அங்கும் திரிந்தும் தெரிந்ததா?
- நீ தீய ஆசைகளைத் துறந்து,
- பிறரைப் பழித்தல் யாவற்றினையும் விடுத்து,
- ஐம்புலன்களை யடக்கு;
- பிரபஞ்ச சுகம் நஞ்சென (எண்ணி),
- வேறு பணிகளுக்குச் செல்லாது,
- பசு-முகப் புலி போன்றாகாது,
- தப்பு தண்டல்களை விடுத்து,
- பிறவிக் கடல் கடத்தலை உள்ளத்தில் விரதம் பூண்டு,
- கருமங்களை அரிக்கு அர்ப்பித்து,
- நற்பணிகளில் பெருமிதமுற்று,
- பக்தி நெறியினைத் தெரிந்து,
- நிசமான பாகவதர்களுடன் இணக்கம் கொண்டு,
- மாயையினுக்கு அப்பாற்பட்டோனைத் தொழுது,
- உனது மனத்தினில் இராமனை நினைந்து,
- காமம் ஆகியவற்றினைப் பழித்து,
- உனது காரியங்களினை நிறைவேற்றி,
- மன்னாதி மன்னனாக விளங்கியவனே தியாகராசனுக்கருள்வோனெனத் தெரிந்து,
- அனைத்துமே பணிக்குதவுமா?
- பஜிப்பாயடா, இரகுவீரனை.
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ப4ஜரே/ ரகு4வீரம்/ ஸ1ர/ ப4ரித/ த3ஸ1ரத2/ குமாரம்/
பஜிப்பாயடா/ இரகுவீரனை/ அம்புகள்/ நிறைந்த/ தசரத/ குமாரனை/
சரணம்
சரணம் 1
நீவு/ து3ராஸல/ ரோஸி/ பர/ நிந்த3லனு/-எல்லனு/ பா3ஸி/ (ப4)
நீ/ தீய ஆசைகளை/ துறந்து/ பிறரை/ பழித்தல்/ யாவற்றினையும்/ விடுத்து/ பஜிப்பாயடா...
சரணம் 2
பஞ்ச-இந்த்3ரியமுலனு/-அணசு/ ப்ரபஞ்ச/ ஸுக2மு/ விஸமு/-அனுசு/ (ப4)
ஐம்புலன்களை/ யடக்கு/ பிரபஞ்ச/ சுகம்/ நஞ்சு/ என (எண்ணி)/ பஜிப்பாயடா...
சரணம் 3
அன்னியு/ பனிகி/-ஒதி3கெ3னா/ இடு/ அடு/ திரிகி3ன/ தெலிஸெனா/ (ப4)
அனைத்துமே/ பணிக்கு/ உதவுமா/ இங்கும்/ அங்கும்/ திரிந்தும்/ தெரிந்ததா/
சரணம் 4
வேரு/ பனுலகு/ போக/ கோ3/-முக2/ வ்யாக்4ரமு/ சந்த3மு/ காக/ (ப4)
வேறு/ பணிகளுக்கு/ செல்லாது/ பசு/-முக/ புலி/ போன்று/ ஆகாது/ பஜிப்பாயடா...
சரணம் 5
தப்பு/ தண்டலனு/ மானி/ ப4வ/ தரணமுனனு/ மதி3/ பூனி/ (ப4)
தப்பு/ தண்டல்களை/ விடுத்து/ பிறவிக் கடல்/ கடத்தலை/ உள்ளத்தில்/ விரதம் பூண்டு/ பஜிப்பாயடா...
சரணம் 6
கர்மமு/ ஹரிகி/-ஒஸங்கி3/ ஸத்-கார்யமுலந்து3/-உப்பொங்கி3/ (ப4)
கருமங்களை/ அரிக்கு/ அர்ப்பித்து/ நற்பணிகளில்/ பெருமிதமுற்று/ பஜிப்பாயடா...
சரணம் 7
ப4க்தி/ மார்க3முனு/ தெலிஸி/ நிஜ/ பா4க3வதுல/ ஜத கலஸி/ (ப4)
பக்தி/ நெறியினை/ தெரிந்து/ நிசமான/ பாகவதர்களுடன்/ இணக்கம் கொண்டு/ பஜிப்பாயடா...
சரணம் 8
மாயா/ ரஹிதுனி/ கொலிசி/ நீ/ மனஸுன/ ராமுனி/ தலசி/ (ப4)
மாயையினுக்கு/ அப்பாற்பட்டோனை/ தொழுது/ உனது/ மனத்தினில்/ இராமனை/ நினைந்து/ பஜிப்பாயடா...
சரணம் 9
காம/-ஆது3லனு/-ஏகிஞ்சி/ நீ/ கார்யமுலனு/ ஸாதி4ஞ்சி/ (ப4)
காமம்/ ஆகியவற்றினை/ பழித்து/ உனது/ காரியங்களினை/ நிறைவேற்றி/ பஜிப்பாயடா...
சரணம் 10
ராஜ-அதி4புகா3/ வெலஸி/ த்யாக3ராஜ/ வரது3டு3/-அனி/ தெலிஸி/ (ப4)
மன்னாதி மன்னனாக/ விளங்கியவனே/ தியாகராசனுக்கு/ அருள்வோன்/ என/ தெரிந்து/ பஜிப்பாயடா...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
சில புத்தகங்களில் 3-வது மற்றும் 9-வது சரணங்கள் மாற்றிக் கொடுக்கப்பட்டுள்ளன.
2 - திரிகி3ன - எல்லா புத்தகங்களிலும், இங்ஙனமே கொடுக்கப்பட்டுள்ளது. இவ்விடத்தில், இச்சொல்லுக்கு 'திரிந்தாலும்' என்று பொருளாகும். அதற்கு, 'திரிகி3னா' என்று (கடைசி உயிரெழுத்து நீட்டித்து) இருக்கவேண்டும்.
4 - வெலஸி - எல்லா புத்தகங்களிலும் இங்ஙனமே கொடுக்கப்பட்டுள்ளது. இச்சொல்லினால் சரணம் நிறைவுறுவதில்லை. எனவே, இது 'வெலஸின' என்றோ 'வெலயு' என்றோ இருக்கவேண்டும். இங்கு, 'வெலஸின' என்ற பொருள் கொள்ளப்பட்டது.
Top
மேற்கோள்கள்
3 - கர்மமு ஹரிகினொஸங்கி3 - கருமங்களை அர்ப்பித்து - கருமங்களின் பயன்களை அர்ப்பித்து என. இது குறித்து, கண்ணன் கீதையில் (9-வது அத்தியாயம், 27-வது செய்யுள்) கூறியது -
"எது செய்தாலும், எதனை உண்டாலும், என்ன வேள்வி இயற்றினாலும், கொடை ஏதாகிலும்,
எந்த தவமியற்றினாலும், குந்தி மகனே! அதனை எனக்கு அர்ப்பணம் செய்வாயாக."
(ஸ்வாமி ஸ்வரூபானந்தாவின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்)
Top
விளக்கம்
1 - அன்னியு பனிகொதி3கெ3னா - அனைத்துமே பணிக்கு உதவுமா? - இந்த சரணத்தின் நோக்கம் என்னவென்று விளங்கவில்லை.
பசு-முகப் புலி - பசுத்தோல் போர்த்த புலி
மன்னாதி மன்னன் - இராமனைக் குறிக்கும்
Top
Updated on 14 Jun 2010
No comments:
Post a Comment