Thursday, September 10, 2009

தியாகராஜ கிருதி - பு3த்3தி4 ராது3 - ராகம் ஸ1ங்கராப4ரணம் - Buddhi Raadu - Raga Sankarabharanam

பல்லவி
பு3த்3தி4 ராது3 பு3த்3தி4 ராது3 பெத்331ஸுத்3து3லு வினக (பு3)

அனுபல்லவி
பு3த்3தி4 ராது3 பு3த்3தி4 ராது3 பூ4ரி வித்3யல நேர்சின (பு3)

சரணம்
சரணம் 1
தா4ன்ய த4னமுல சேத த4ர்மமெந்தயு ஜேஸின
நான்ய சித்த ப4க்துல வாக3ம்ரு2த பானமு ஸேயக (பு3)


சரணம் 2
மானக பா43வதாதி3 ராமாயணமுலு சதி3வின
மானுஷாவதார சரித மர்மக்3ஞுல ஜத கூட3க (பு3)


சரணம் 3
2யோக3முலப்4யஸிஞ்சின போ43முலெந்தோ கலிகி3
த்யாக3ராஜ நுதுடௌ3 ராம தா3ஸுல செலிமி ஸேயக (பு3)


பொருள் - சுருக்கம்
  • மிக்கு வித்தைகள் கற்றிடினும்,

  • உணவுப்பண்டங்கள், செல்வத்தினால் தருமங்களெத்தனை செய்திடினும்,

  • தவறாது, பாகவதம், இராமாயணம் ஆகியவை ஓதிடினும்,

  • யோகங்கள் பயின்றிடினும், புவியின்பங்க ளெத்தனையோ உண்டாயினும்,


  • சான்றோர் சொற்களைக் கேளாது,

  • மற்ற எண்ணங்களற்ற தொண்டர்களின் சொல்லமிழ்து பருகாது,

  • மானிட உருவ (இராமனின்) சரித மருமமறிந்தோரின் கூட்டு சேராது,

  • தியாகராசன் போற்றும் இராமனின் தொண்டர்களின் நட்பு கொள்ளாது,

  • அறிவு வாராது.



  • பதம் பிரித்தல் - பொருள்
    பல்லவி
    பு3த்3தி4/ ராது3/ பு3த்3தி4/ ராது3/ பெத்33ல/ ஸுத்3து3லு/ வினக/ (பு3)
    அறிவு/ வாராது/ அறிவு/ வாராது/ சான்றோர்/ சொற்களை/ கேளாது/


    அனுபல்லவி
    பு3த்3தி4/ ராது3/ பு3த்3தி4/ ராது3/ பூ4ரி/ வித்3யல/ நேர்சின/ (பு3)
    அறிவு/ வாராது/ அறிவு/ வாராது/ மிக்கு/ வித்தைகள்/ கற்றிடினும்/ அறிவு...


    சரணம்
    சரணம் 1
    தா4ன்ய/ த4னமுல சேத/ த4ர்மமு/-எந்தயு/ ஜேஸின/
    உணவுப்பண்டங்கள்/ செல்வத்தினால்/ தருமங்கள்/ எத்தனை/ செய்திடினும்/

    ந-அன்ய சித்த/ ப4க்துல/ வாக்/-அம்ரு2த/ பானமு ஸேயக/ (பு3)
    மற்ற எண்ணங்கள் அற்ற/ தொண்டர்களின்/ சொல்/ அமிழ்து/ பருகாது/ அறிவு...


    சரணம் 2
    மானக/ பா43வத/-ஆதி3/ ராமாயணமுலு/ சதி3வின/
    தவறாது/ பாகவதம்/ ஆகியவை/ இராமாயணம்/ ஓதிடினும்/

    மானுஷ/-அவதார/ சரித/ மர்மக்3ஞுல/ ஜத/ கூட3க/ (பு3)
    மானிட/ உருவ (இராமனின்)/ சரித/ மருமமறிந்தோரின்/ கூட்டு/ சேராது/ அறிவு...


    சரணம் 3
    யோக3முலு/-அப்4யஸிஞ்சின/ போ43முலு/-எந்தோ/ கலிகி3ன/
    யோகங்கள்/ பயின்றிடினும்/ புவியின்பங்கள்/ எத்தனையோ/ உண்டாயினும்/

    த்யாக3ராஜ/ நுதுடௌ3/ ராம/ தா3ஸுல/ செலிமி/ ஸேயக/ (பு3)
    தியாகராசன்/ போற்றும்/ இராமனின்/ தொண்டர்களின்/ நட்பு/ கொள்ளாது/ அறிவு...


    குறிப்புக்கள் - (Notes)
    வேறுபாடுகள் - (Pathanthara)
    1 - ஸுத்3து3லு - ஸு1த்3து4லு : தெலுங்கு அகராதியின்படி, இவ்விரண்டு சொற்களும், ஸம்ஸ்கிருத சொல் 'ஸு1த்34' என்பதன் திரிபாகும். ஆனால், இவ்விடத்தில், இச்சொல்லுக்கு 'அறிவுரை' என்று பொருளாகும். 'ஸு1த்3து4லு' என்ற சொல்லுக்கு அத்தகைய பொருளில்லை. எனவே 'ஸுத்3து3லு' ஏற்கப்பட்டது.

    Top

    மேற்கோள்கள்
    2 - யோக3மு - யோகங்கள் - யமம், நியமம் முதலான அட்ட யோகங்கள். பதஞ்சலி யோக சூத்திரங்கள் நோக்கவும்.

    ஸ்வாமி சிவானந்தாவின் 'Practical lessons in Yoga’ (இலவச e-book download) நோக்கவும்.

    Top

    விளக்கம்
    அறிவு - இறைவனை உணரும் மெய்யறிவு

    மற்ற எண்ணங்களற்ற - கடவுளைத் தவிர மற்ற எண்ணங்கள்

    Top


    Updated on 11 Sep 2009

    No comments: