நம்மக நே மோஸ 1போது3னடரா
நடராஜ வினுத
சரணம்
சரணம் 1
து3ர்விஷயம்முலு மனஸுன
2தூ3ரக சேஸே நினு நெர (ந)
சரணம் 2
த4ன தனய களத்ராது3லு
3தமத3னி பு3த்3தீ4யனி நினு (ந)
சரணம் 3
இந்த்3ரியம்முல4காஹ்லாத3-
மிச்சே ரூபமு க3ல நினு (ந)
சரணம் 4
பொ3ம்மரிண்ட்3லு கானி நெர நம்மகு
ப4வமுனுயனு நினு (ந)
சரணம் 5
நெம்மதி3 லேனி ஜனன மரணம்முல
தொலகி3ஞ்சே நினு (ந)
சரணம் 6
ரகு4 குல ரத்னமா த்யாக3-
ராஜார்சித பத3 யுக3 நினு (ந)
பொருள் - சுருக்கம்
நடராசனால் போற்றப் பெற்றோனே! இரகு குல இரத்தினமே! தியாகராசன் தொழும் திருவடி இணையோனே!
- உன்னை நம்பாது நான் மோசம் போவேன், அப்படித்தானே, ஐயா?
- தீய விடயங்கள் மனதினில் நுழையாது செய்யும் உன்னை,
- செல்வம், மக்கள், மனைவி ஆகியவற்றினை தமதெனும் எண்ணம் தராத உன்னை,
- புலன்களுக்குக் களிப்பு ஊட்டும் உருவமுடைய உன்னை,
- பொம்மை வீடேயன்றி, சிறிதும் நம்பாதே உலக வாழ்க்கையை யெனும் உன்னை,
- நிம்மதியற்ற பிறப்பு, இறப்புகளினை யொழிக்கும் உன்னை,
- தீய விடயங்கள் மனதினில் நுழையாது செய்யும் உன்னை,
- முழுதும் நம்பாது நான் மோசம் போவேன், அப்படித்தானே, ஐயா?
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நம்மக/ நே/ மோஸ/ போது3னு/-அடரா/
நம்பாது/ நான்/ மோசம்/ போவேன்/ அப்படித்தானே, ஐயா/
நடராஜ/ வினுத/
நடராசனால்/ போற்றப் பெற்றோனே/
சரணம்
சரணம் 1
து3ர்/-விஷயம்முலு/ மனஸுன/
தீய/ விடயங்கள்/ மனதினில்/
தூ3ரக/ சேஸே/ நினு/ நெர/ (ந)
நுழையாது/ செய்யும்/ உன்னை/ முழுதும்/ நம்பாது...
சரணம் 2
த4ன/ தனய/ களத்ர/-ஆது3லு/
செல்வம்/ மக்கள்/ மனைவி/ ஆகியவற்றினை/
தமதி3/-அனி/ பு3த்3தி4/-ஈயனி/ நினு/ (ந)
தமது/ எனும்/ எண்ணம்/ தராத/ உன்னை/ நம்பாது...
சரணம் 3
இந்த்3ரியம்முலகு/-ஆஹ்லாத3மு/-
புலன்களுக்கு/ களிப்பு/
இச்சே/ ரூபமு/ க3ல/ நினு/ (ந)
ஊட்டும்/ உருவம்/ உடைய/ உன்னை/ நம்பாது...
சரணம் 4
பொ3ம்ம/-இண்ட்3லு/ கானி/ நெர/ நம்மகு/
பொம்மை/ வீடே/ யன்றி/ சிறிதும்/ நம்பாதே/
ப4வமுனு/-அனு/ நினு/ (ந)
உலக வாழ்க்கையை/ யெனும்/ உன்னை/ நம்பாது...
சரணம் 5
நெம்மதி3/ லேனி/ ஜனன/ மரணம்முல/
நிம்மதி/ யற்ற/ பிறப்பு/ இறப்புகளினை/
தொலகி3ஞ்சே/ நினு/ (ந)
யொழிக்கும்/ உன்னை/ நம்பாது...
சரணம் 6
ரகு4/ குல/ ரத்னமா/ த்யாக3ராஜ/-
இரகு/ குல/ இரத்தினமே/ தியாகராசன்/
அர்சித/ பத3/ யுக3/ நினு/ (ந)
தொழும்/ திருவடி/ இணையோனே/ உன்னை/ நம்பாது...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
சில புத்தகங்களில், 3, 4, 5-வது சரணங்கள் 5, 3, 4 எனும் வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளது.
2 - தூ3ரக சேஸே - தூ3ரக ஜேயு.
3 - தமத3னி - தனத3னி.
4 - ஆஹ்லாத3மிச்சே - ஆஹ்லாத3கரமிச்சு.
Top
மேற்கோள்கள்
விளக்கம்
1 - அடரா - அப்படித்தானே, ஐயா? - 'அப்படியல்ல. உன்னை நம்பாது நான் மோசம் போகமாட்டேன்' எனப் பொருள்.
விடயம் - புலன் நுகர்ச்சி
தீய விடயம் - தீய்மை பயத்தலால்
பொம்மை வீடு - குழந்தைகள் மணலில் கட்டும் வீடு எனப் பொருள்
Top
Updated on 26 Sep 2010
No comments:
Post a Comment