Friday, June 19, 2009

தியாகராஜ கிருதி - இக காவலஸினதே3மி - ராகம் ப3லஹம்ஸ - Ika Kaavalasinademi - Raga Balahamsa

பல்லவி
இக காவலஸினதே3மி மனஸா ஸுக2முனனுண்ட3வதே3மி

அனுபல்லவி
அகி2லாண்ட3 கோடி ப்3ரஹ்மாண்ட3 நாது2டு3
அந்தரங்க3முன நெலகொனியுண்ட33 (இக)

சரணம்
சரணம் 1
முந்த3டி ஜன்மமுலனு ஜேஸினயக4 ப்3ரு2ந்த3 விபினமுல-
கானந்த3 கந்து3டை3ன ஸீதா பதி 1நந்த3க யுதுடை3யுண்ட33 (இக)


சரணம் 2
காமாதி3 லோப4 மோஹ மத3 ஸ்தோம தமம்முலகுனு
ஸோம ஸூர்ய நேத்ருடை3ன ஸ்ரீ ராமசந்த்3ருடே3 நீயந்து3ண்ட33 (இக)


சரணம் 3
க்ஷேமாதி3 ஸு14முலனு த்யாக3ராஜ காமிதார்த2முலனு
2நேமமுனனிச்சு3யா நிதி4 3ராமப4த்3ருடு3 நீயந்து3ண்ட33 (இக)


பொருள் - சுருக்கம்
மனமே!
  • இன்னும் வேண்டியதென்ன, சுகமாய் இராயேனோ?

    • அனைத்தண்ட கோடி பிரம்மாண்ட நாதன் அந்தரங்கத்தினில் நிலைபெற்றிருக்க...

    • முந்தைய பிறவிகளில் செய்த பாவங்களெனும் அடவியையழிக்க, ஆனந்தக் கிழங்கான சீதாபதி, நந்தகத்துடனிருக்க ...

    • இச்சை, கருமித்தனம், மயக்கம், செருக்கு ஆகிய இருட்டினுக்கு, மதி, பரிதிகளைக் கண்களாயுடைய இராமசந்திரனே உன்னுள்ளிருக்க ...

    • நிம்மதி ஆகிய நலன்களையும், தியாகராசன் விரும்பியவற்றினையும், தவறாது வழங்கும் கருணைக் கடலான இராம பத்திரன் உன்னுள்ளிருக்க...

  • இன்னும் வேண்டியதென்ன? சுகமாய் இராயேனோ?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
இக/ காவலஸினதி3/-ஏமி/ மனஸா/ ஸுக2முனனு/-உண்ட3வு/-அதே3மி/
இன்னும்/ வேண்டியது/ என்ன/ மனமே/ சுகமாய்/ இராய்/ ஏனோ/


அனுபல்லவி
அகி2ல/ அண்ட3/ கோடி/ ப்3ரஹ்மாண்ட3/ நாது2டு3/
அனைத்து/ அண்ட/ கோடி/ பிரம்மாண்ட/ நாதன்/

அந்தரங்க3முன/ நெலகொனி/-உண்ட33/ (இக)
அந்தரங்கத்தினில்/ நிலைபெற்று/ இருக்க/ இன்னும்...


சரணம்
சரணம் 1
முந்த3டி/ ஜன்மமுலனு/ ஜேஸின/-அக4 ப்3ரு2ந்த3/ விபினமுலகு/-
முந்தைய/ பிறவிகளில்/ செய்த/ பாவங்கள் (எனும்)/ அடவியை (அழிக்க)/

ஆனந்த3/ கந்து3டை3ன/ ஸீதா/ பதி/ நந்த3க யுதுடை3/-உண்ட33/ (இக)
ஆனந்த/ கிழங்கான/ சீதா/ பதி/ நந்தகத்துடன்/ இருக்க/ இன்னும்...


சரணம் 2
காம/-ஆதி3/ லோப4/ மோஹ/ மத3 ஸ்தோம/ தமம்முலகுனு/
இச்சை/ முதலாக/ கருமித்தனம்/ மயக்கம்/ செருக்குகளி்ன்/ இருட்டினுக்கு/

ஸோம/ ஸூர்ய/ நேத்ருடை3ன/ ஸ்ரீ ராமசந்த்3ருடே3/ நீயந்து3/-உண்ட33/ (இக)
மதி/ பரிதிகளை/ கண்களாயுடைய/ ஸ்ரீ ராமசந்திரனே/ உன்னுள்/ இருக்க/ இன்னும்...


சரணம் 3
க்ஷேம/-ஆதி3/ ஸு14முலனு/ த்யாக3ராஜ/ காமித-அர்த2முலனு/
நிம்மதி/ ஆகிய/ நலன்களையும்/ தியாகராசன்/ விரும்பியவற்றினையும்/

நேமமுனனு/-இச்சு/ த3யா/ நிதி4/ ராமப4த்3ருடு3/ நீயந்து3/-உண்ட33/ (இக)
தவறாது/ வழங்கும்/ கருணை/ கடலான/ இராம பத்திரன்/ உன்னுள்/ இருக்க/ இன்னும்...

குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - நந்த3க யுதுடை3 - நந்த3கா யுதுடை3 - நந்த3காயுது4டை3 : 'நந்த3கா யுதுடை3' தவறாகும்.

2 - நேமமுனனிச்சு - நேமமுதோனிச்சு.

3 - ராமப4த்3ருடு3 - ராமசந்த்3ருடு3.

Top

மேற்கோள்கள்
1 - நந்த3 - நந்தகம் - அரியின் வாள் - அன்னமாச்சார்யா - திருப்பதி வேங்கடேசப் பெருமானின் தலைசிறந்த தொண்டர், அரியின் 'நந்தக' வாளின் அவதாரம் என கூறப்படும்.

விளக்கம்

அந்தரங்கம் - உள்ளம்

Top


Updated on 19 Jun 2009

No comments: