Thursday, January 8, 2009

தியாகராஜ கிருதி - வினதா ஸுத வாஹன - ராகம் ஜயந்த ஸேன - Vinataa Suta Vaahana - Raga Jayanta Sena

பல்லவி
வினதா ஸுத வாஹன ஸ்ரீ ரமண
மனஸாரக3 ஸேவிஞ்செத3 ராம

அனுபல்லவி
நினு ஸாரெகு ஜூட3னி ப்3ரதுகேல
1மனுஜுலனேசெடு3 ஜீவனமேல (வி)

சரணம்
2மத பே43மனே 3ஸெக3னார்சக3
ஸம்மத வாக்குலு பல்குட ஸுக2மா
க்ஷிதிலோ 4ஸத்-ஸங்க3தி ஸௌக்2யமு
பாலித த்யாக3ராஜாமர பூஜித (வி)


பொருள் - சுருக்கம்
வினதை மைந்தன் வாகனனே! திருமகளுக்கினியோனே! இராமா! தியாகராசனைப் பேணுவோனே! அமரரால் தொழப்பெற்றோனே!

  • (உன்னை) மனதார சேவித்தேன்.

  • உன்னை எவ்வமயமும் காணாத பிழைப்பேன்?

  • மனிதர்களை துயருறுத்தும் வாழ்க்கையேன்?

  • மத வேற்றுமையெனும் தழலினைத் தணிக்காது சம்மதச் சொற்கள் பகர்தல் சுகமா?

  • புவியிலே நல்லோரிணக்கம் இனிதன்றோ!



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
வினதா/ ஸுத/ வாஹன/ ஸ்ரீ/ ரமண/
வினதை/ மைந்தன்/ வாகனனே/ திருமகளுக்கு/ இனியோனே/

மனஸாரக3/ ஸேவிஞ்செத3/ ராம/
(உன்னை) மனதார/ சேவித்தேன்/ இராமா/


அனுபல்லவி
நினு/ ஸாரெகு/ ஜூட3னி/ ப்3ரதுகு/-ஏல/
உன்னை/ எவ்வமயமும்/ காணாத/ பிழைப்பு/ ஏன்/

மனுஜுலனு/-ஏசெடு3/ ஜீவனமு/-ஏல/ (வி)
மனிதர்களை/ துயருறுத்தும்/ வாழ்க்கை/ யேன்/


சரணம்
மத/ பே43மு/-அனே/ ஸெக3னு/-ஆர்சக3/
மத/ வேற்றுமை/ யெனும்/ தழலினை/ தணிக்காது/

ஸம்மத/ வாக்குலு/ பல்குட/ ஸுக2மா/
சம்மத/ சொற்கள்/ பகர்தல்/ சுகமா/

க்ஷிதிலோ/ ஸத்-ஸங்க3தி/ ஸௌக்2யமு/
புவியிலே/ நல்லோரிணக்கம்/ இனிதன்றோ/

பாலித/ த்யாக3ராஜ/-அமர/ பூஜித/ (வி)
தியாகராசனை/ பேணுவோனே/ அமரரால்/ தொழப்பெற்றோனே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
3 - ஸெக3னார்சக3 (ஸெக3னு + ஆர்சக3) - ஸ1கனார்சக3 - ஸ13னார்சக3 : 'ஆர்சக3' என்னும் சொல்லுக்கு 'அணைக்காது' என்று பொருள். எனவே, இங்கு 'நெருப்பு' அல்லது 'தழல்' என்ற சொற்களே பொருந்தும். தெலுங்கு மொழியில் 'ஸெக' அல்லது 'ஸெக3' என்பதற்கு 'தழல்' என்று பொருள். எனவே அச்சொல் ஏற்கப்பட்டது.
Top

மேற்கோள்கள்
2 - மத பே43மு - மத வேற்றுமை - சைவம், வைணவம் ஆகிய அறுமதங்கள்

விளக்கம்
1 - ஏசெடு3 - சில புத்தகங்களில், இச்சொல்லுக்கு 'ஏய்க்கும்' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. அத்தகைய பொருள் இவ்விடத்தில் பொருந்தினாலும், 'ஏசெடு3' என்ற சொல்லுக்கு அத்தகைய பொருளில்லை. அதனால் 'துயருறுத்தும்' என்று பொருள் கொள்ளப்பட்டது. ஆயினும், ஒரு வேளை, 'ஏய்த்தல்' என்ற தமிழ்ச்சொல்லினை தியாகராஜர் உபயோகித்துள்ளாரோ என்ற ஐயமும் எழுகின்றது.

4 - ஸத்-ஸங்க3தி - நல்லோரிணக்கம் - 'இறைப் பற்று' எல்லா மதங்களுக்கும் பொதுவானதொன்றாகையினால், அத்தகைய 'இறைப்பற்றுடைய, மத வேறு பாடு காணாத நல்லோர்' என்று பொருளாகும்.

வினதை - கருடனின் தாய்
சம்மதச் சொற்கள் - மனதுக்கினிய சொற்கள்
Top


Updated on 08 Jan 2009

No comments: