தப்பி ப்3ரதிகி போவ தரமா ராம கலிலோ
அனுபல்லவி
1முப்புன விஷய தடாகமுன
முனுக3க த்3ரு2ட4 மனஸை (த)
சரணம்
சரணம் 1
கஞ்சு மொத3லு லோஹ த4ன
கனகமுலனு ஜூசி விஷ-
மஞ்சு மரியு பெஞ்சிகனுசு-
யெஞ்சியண்டனி மனஸை (த)
சரணம் 2
நங்க3னாசுல 2மானகு3
3அங்க3 வஸ்த்ரமுல 2பா3க3கு3
முங்க3ருலனு கனி-
யந்தரங்க3முனனு ஆஸி1ஞ்சக (த)
சரணம் 3
ஜாஜி மல்லெ மந்தா3ர
ஸரோஜமுலனு மனஸார
4ராஜ பத2முசே த்யாக3-
ராஜ நுதுனி பூஜிஞ்சக (த)
பொருள் - சுருக்கம்
இராமா!
- தப்பிப் பிழைத்துப் போகத் தரமா, கலியினில்?
- முதுமையில், விடயங்களெனும் தடாகத்தினில் மூழ்காது, திடமான மனத்தினனாகி, தப்பிப் பிழைத்துப் போகத் தரமா? (அல்லது)
- கொடிய, விடயங்களெனும் தடாகத்தினில் மூழ்காது, திடமான மனத்தினனாகி, தப்பிப் பிழைத்துப் போகத் தரமா?
- வெண்கலம் முதலாக, உலோகச் செல்வமாகிய பொன் ஆகியவற்றைக் கண்டு, நஞ்சு எனவும், மேலும், கலவோடெனவும் எண்ணி, தீண்டாத மனத்தினனாகி தப்பிப் பிழைத்துப் போகத் தரமா?
- பாசாங்கு செய்வோரின் இனிமையிலும், (பெண்களின்) அங்க, ஆடை ஒயிலிலும், மயிர்ச் சுருளல்களையும் கண்டு, உள்ளத்திலும் ஆசைப்படாது, தப்பிப் பிழைத்துப் போகத் தரமா?
- சாதி மல்லி, மல்லிகை, மந்தாரம், தாமரை மலர்களினால் உளமார, உயர் பக்தி நெறியினில், தியாகராசன் போற்றுவோனை வழிபடாது (நமனிடம்) தப்பிப் பிழைத்துப் போகத் தரமா?
- முதுமையில், விடயங்களெனும் தடாகத்தினில் மூழ்காது, திடமான மனத்தினனாகி, தப்பிப் பிழைத்துப் போகத் தரமா? (அல்லது)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
தப்பி/ ப்3ரதிகி/ போவ/ தரமா/ ராம/ கலிலோ/
தப்பி/ பிழைத்து/ போக/ தரமா/ இராமா/ கலியினில்/
அனுபல்லவி
முப்புன/ விஷய/ தடாகமுன/
முதுமையில்/ கொடிய/ விடயங்களெனும்/ தடாகத்தினில்/
முனுக3க/ த்3ரு2ட4/ மனஸை/ (த)
மூழ்காது/ திடமான/ மனத்தினனாகி/ தப்பி...
சரணம்
சரணம் 1
கஞ்சு/ மொத3லு/ லோஹ/ த4ன/
வெண்கலம்/ முதலாக/ உலோக/ செல்வமாகிய/
கனகமுலனு/ ஜூசி/ விஷமு/
பொன் ஆகியவற்றை/ கண்டு/ நஞ்சு/
அஞ்சு/ மரியு/ பெஞ்சிக/-அனுசு/-
எனவும்/ மேலும்/ கலவோடு/ எனவும்/
எஞ்சி/-அண்டனி/ மனஸை/ (த)
எண்ணி/ தீண்டாத/ மனத்தினனாகி/ தப்பி...
சரணம் 2
நங்க3-நாசுல/ மானகு3/
பாசாங்கு செய்வோரின்/ இனிமையிலும்/
அங்க3/ வஸ்த்ரமுல/ பா3க3கு3/
(பெண்களின்) அங்க/ ஆடை (மேலாடை)/ ஒயிலிலும்/
முங்க3ருலனு/ கனி/-
மயிர்ச் சுருளல்களையும்/ கண்டு/
அந்தரங்க3முனனு/ ஆஸி1ஞ்சக/ (த)
உள்ளத்திலும்/ ஆசைப்படாது/ தப்பி...
சரணம் 3
ஜாஜி/ மல்லெ/ மந்தா3ர/
சாதி மல்லி/ மல்லிகை/ மந்தாரம்/
ஸரோஜமுலனு/ மனஸார/
தாமரை மலர்களினால்/ உளமார/
ராஜ/ பத2முசே/ த்யாக3ராஜ/
உயர் (பக்தி)/ நெறியினில்/ தியாகராசன்/
நுதுனி/ பூஜிஞ்சக/ (த)
போற்றுவோனை/ வழிபடாது (நமனிடம்)/ தப்பி...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
மேற்கோள்கள்
4 - ராஜ பத2மு - அரச பாட்டை - 'சக்கனி ராஜ மார்க3' என்ற கரஹரப்ரிய ராக கீர்த்தனையில், 'இராமனின் பக்தியே அந்த அரச பாட்டை' என்று தியாகராஜர் கூறுகின்றார்.
Top
விளக்கம்
1 - முப்புன - 'முப்பு' என்ற தெலுங்கு சொல்லுக்கு, 'முதுமை' என்றும் 'ஆபத்து' என்றும் பொருளாகும். ஆனால் 'முப்புன' என்ற கொடுக்கப்பட்டுள்ளதால், 'ஆபத்து' என்ற பொருள் கொள்வது இயலாது. எனவே 'முதுமையில்' என்று பொருள் கொள்ளப்பட்டது. ஆயினும் 'கொடிய' என்ற பொருளும் கொடுக்கப்பட்டுள்ளது.
2 - மானகு3, பா3க3கு3 - இவ்விரண்டு சொற்களையும் 'மானு'+அகு3' என்றும் 'பா3கு3+அகு3' என்றும் பிரிக்கலாம். ஆனால், இவ்விடத்தில், 'மானு' மற்றும் 'அகு3' என்ற சொற்களின் பொருள் சரிவர விளங்கவில்லை.
Top
3 - அங்க3 வஸ்த்ர - இதனை 'அங்க3' மற்றும் 'வஸ்த்ர' (அங்கம் மற்றும் ஆடை) என்று இரண்டு சொற்களாகவோ, அல்லது 'அங்க3வஸ்த்ர' (மேலாடை) என்று ஒரே சொல்லாகவோ பொருள் கொள்ளலாம்.
அனுபல்லவியிலும், முதலிரண்டு சரணங்களிலும், எதனைச் செய்தால் நமனிடமிருந்து தப்ப இயலாது என்றும், கடைசி சரணத்தில், எதனைச் செய்யாது நமனிடமிருந்து தப்ப இயலாது என்றும் தியாகராஜர் விவரிக்கின்றார்.முதலிரண்டு சரணங்களில் கூறியவற்றினை, ராமகிருஷ்ண பரமஹம்ஸர், 'காமினி' (பெண்), 'காஞ்சன்' (பொன்) என்று கூறுவார்.
விடயங்கள் - புலன் நுகர்ச்சி
கலவோடு - மண்பாண்டச் சல்லி
Top
Updated on 06 Sep 2010
2 comments:
திரு கோவிந்தன் அவர்களுக்கு
மானகு3- மானு என்பதற்கு மனோஜ்ஞமு/ ஸுந்தரமு (அழகு) என்று பொருள் கொடுக்கப்பட்டுள்ளது.
பா3க3கு3 என்பதற்கு சிறந்த என்று பொருள் அல்லவா.
“அழகிய மேலாடைகளையும் சிறந்த மயிற்சுருளல்களையும்” என்று பொருள் கொள்ளலாமா.
நங்கநாசி என்பது பாசாங்குக்காரி அல்லவா.
ஹிந்தியில் நங்கநாச் என்றால் உடையைக் களைந்து ஆடும் ஆட்டம் (strip-tease dance) என்று பொருள் அல்லவா?
வணக்கம்
கோவிந்தசாமி
திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,
இவ்விடத்தில் 'அகு3' என்ற சொல்லுக்கு எப்படி விளக்கம் கூறுவது என்று தெரியவில்லை. 'மானு' என்பதற்கு, நீங்கள் கூறிய பொருளேயானாலும், 'அகு3' என்ற சொல்லினைச் சேர்க்கும்போது எப்படிப் பொருள் கொள்வது என்று தெரியவில்லை.
நங்கநாசிதனமு நோக்கவும். இதற்கு பெண்பாலில்தான் பொருள் கொள்ளவேண்டுமென்றில்லை. இரண்டு பாலர்க்குமே இச்சொல் பொதுவாகும்.
வணக்கம்
வே கோவிந்தன்
Post a Comment