Saturday, March 7, 2009

தியாகராஜ கிருதி - பத3வி நீ - ராகம் ஸாளக பை4ரவி - Padavi Nee - Raga Saalaka Bhairavi

பல்லவி
பத3வி நீ 1ஸத்34க்தியு கல்கு3டே

அனுபல்லவி
சதி3வி வேத3 ஸா1ஸ்த்ரோபனிஷத்துல
2ஸத்த தெலிய லேனிதி3 பத3வியா (ப)

சரணம்
சரணம் 1
4ன தா3ர ஸுதாகா3ர ஸம்பத3லு
4ரணீஸு1ல செலிமியொக பத3வியா (ப)


சரணம் 2
3ஜப தபாதி3 4யணிமாதி3 ஸித்3து4சே
ஜக3முலனேசுடயதி3 பத3வியா (ப)


சரணம் 3
ராக3 லோப4 யுத யக்3ஞாது3லசே
போ43முலப்3பு3டயதி3 பத3வியா (ப)


சரணம் 4
த்யாக3ராஜ நுதுடௌ3 5ஸ்ரீ ராமுனி
தத்வமு
தெலியனிதொ3க பத3வியா (ப)


பொருள் - சுருக்கம்
பதவி உனது தூய பற்றுண்டாகுதலே
  • கல்வி கற்று, மறைகள், சாத்திரங்கள், உபநிடதங்களின் உண்மை யறியாமை பதவியா?

  • செல்வம், மனைவி, மக்கள், வீடு ஆகிய சம்பத்துக்கள், புவியாள்வோரின் நட்பு பதவியா?

  • செபம், தவத்தினால் அணிமாதி சித்திகளுடன் உலகத்தை ஏய்த்தல் பதவியா?

  • இச்சை, கருமித்தனம் கூடிய வேள்வி ஆகியவற்றால் (புவி) இன்பங்களைப் பெறுதல் பதவியா?

  • தியாகராசனால் போற்றப் பெற்றோனாகிய இராமனின் தத்துவம் அறியாமை யொரு பதவியா?பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
பத3வி/ நீ/ ஸத்3-/ப4க்தியு/ கல்கு3டே/
பதவி/ உனது/ தூய/ பற்று/ உண்டாகுதலே/


அனுபல்லவி
சதி3வி/ வேத3/ ஸா1ஸ்த்ர/-உபநிஷத்துல/
கல்வி கற்று/ மறைகள்/ சாத்திரங்கள்/ உபநிடதங்களின்/

ஸத்த/ தெலிய லேனிதி3/ பத3வியா/ (ப)
உண்மை/ அறியாமை/ பதவியா/


சரணம்
சரணம் 1
4ன/ தா3ர/ ஸுத/-ஆகா3ர/ ஸம்பத3லு/
செல்வம்/ மனைவி/ மகன் (மக்கள்)/ வீடு/ ஆகிய சம்பத்துக்கள்/

4ரணீ/-ஈஸு1ல/ செலிமி/-ஒக/ பத3வியா/ (ப)
புவி/ ஆள்வோரின்/ நட்பு/ - ஒரு/ பதவியா/


சரணம் 2
ஜப/ தப-ஆதி3/-அணிமா-ஆதி3/ ஸித்3து4லசே/
செபம்/ தவத்தினால்/ அணிமாதி/ சித்திகளுடன்/

ஜக3முலனு/-ஏசுட/-அதி3/ பத3வியா/ (ப)
உலகத்தை/ ஏய்த்தல்/ - அது/ பதவியா/


சரணம் 3
ராக3/ லோப4/ யுத/ யக்3ஞ/-ஆது3லசே/
இச்சை/ கருமித்தனம்/ கூடிய/ வேள்வி/ ஆகியவற்றால்/

போ43முலு/-அப்3பு3ட/-அதி3/ பத3வியா/ (ப)
(புவி) இன்பங்களை/ பெறுதல்/ - அது/ பதவியா/


சரணம் 4
த்யாக3ராஜ/ நுதுடௌ3/ ஸ்ரீ ராமுனி/
தியாகராசனால்/ போற்றப் பெற்றோனாகிய/ ஸ்ரீ ராமனின்/

தத்வமு/ தெலியனிதி3/-ஒக/ பத3வியா/ (ப)
தத்துவம்/ அறியாமை/ யொரு/ பதவியா/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்
3 - ஜப தபாதி3 - யம, நியம, ஆஸன, ப்ராணாயாம, ப்ரத்யாஹார, தா4ரண, த்4யான, ஸமாதி4 எனப்படும் அஷ்டாங்க (எட்டு) யோக நிலைகளின் அங்கங்கள். பதஞ்சலி யோக சூத்திரங்கள் - அத்தியாயம் 2 - 'பழகு முறைகள்' நோக்கவும்.

4 - அணிமாதி3 ஸித்3து4 - சித்திகள் - அணிமா, லகி3மா, ப்ராப்தி, ப்ராகாம்ய, மஹிமா, ஈஸி1த, வஸி1த, காமாவஸ்1யதா - என வடமொழி அகராதியிலும், அணிமா, கரிமா, லகிமா, ப்ராப்தி, ப்ராகாம்ய, ஈஸித, வஸித - என்று தமிழ் 'பிங்கள நிகண்டி'லும் கொடுக்கப்பட்டுள்ளது.

உத்தவ கீதை எனப்படும் பாகவத புராணம், புத்தகம் 11, அத்தியாயம் 15-ல் 8 முக்கிய சித்திகளும், 10 சில்லரை சித்திகளும் விவரிக்கப்பட்டுள்ளன.

பதஞ்சலி யோக சூத்திரங்கள் - அத்தியாயம் 3 - 'சக்திகள்' நோக்கவும்.

Top

விளக்கம்
1 - ஸத்34க்தியு - 'யு' என்ற விகுதிக்கு 'உடன்' என்று பொருளாகும். அதாவது 'தூய பற்றும் உண்டாகுதலே' என. ஆயின், சரணம் 1-ல் மட்டுமே இத்தகைய பொருள் பொருந்தும் - அதவாது, 'இல்லறத்திலுள்ளவன் இறைப்பற்றும் கொண்டிருத்தல்'. அனுபல்லவியிலும் மற்ற சரணங்களிலும் கொடுக்கப்பட்டவைகள் இறைப்பற்றுக்கு முரண்பாடானது. எனவே, 'தூய பற்று உண்டாகுதலே' என்று மொழிபெயர்க்கப்பட்டது.

2 - ஸத்த - இச்சொல் வடமொழிச் சொல் 'ஸத்' என்பதன் தெலுங்கு திரிபாகும். இது மறை பகரும் 'ஏகம் ஸத்' - அதாவது 'சச்சிதானந்தம்' (சத்-சித்-ஆனந்தம்) எனப்படும் பரம்பொருளின் இலக்கணத்தில், 'சத்'தினைக் குறிக்கும். பொதுவாக இதனை 'உண்மை'யென மொழி பெயர்க்கப்படும். ஆனால் கடைசி சரணத்தினில் தியாகராஜர் குறிப்படும் 'ராமனின் தத்துவம்' இந்த 'சத்'தினைத்தான் சுட்டும். கீழ்க்கண்ட விளக்கத்தினையும் நோக்கவும்.

5 - ஸ்ரீ ராமுனி தத்வமு - தியாகராஜர் ராமனை பரம்பொருளாக வழிபட்டார். ஆனால் அவர் மனதுக்குகந்த பரம்பொருளின் வடிவம் - இஷ்ட தெய்வம் - ராமனாகும். அவருடைய 'ஸ்1யாம ஸுந்தராங்க1' மற்றும் 'எவரனி நிர்ணயிஞ்சிரிரா' என்ற கிருதிகளை நோக்கவும்.

Top


Updated on 08 Mar 2009

No comments: