Wednesday, January 12, 2011

தியாகராஜ கிருதி - ப3லமு குலமு - ராகம் ஸாவேரி - Balamu Kulamu - Raga Saveri

பல்லவி
3லமு குலமு ஏல ராம ப4க்தி காரணமு
வெலயு ஸகல 1ஸித்3து4லெல்ல வெண்ட வச்சு கானி மேனு (ப3)

சரணம்
சரணம் 1
2நீட காகி மீனு முனுக3 நிரதமுத3ய ஸ்நானமா
தேட கனுலு கொங்க3 3கூர்ச தே3வ தே3வ த்4யானமா (ப3)


சரணம் 2
பத்ரமுலனு மேயு மேக ப3லமைன 4உபாஸமா
5சித்ர பக்ஷுலெக3 ஸூர்ய சந்த்3ருலகு ஸாம்யமா (ப3)


சரணம் 3
கு3ஹல வேஷ கோடுலுண்டே கு3ணமு கல்கு3 மௌனுலா
3ஹனமுனனு கோதுலுண்டே க4னமௌ 6வன வாஸமா (ப3)


சரணம் 4
7ஜங்க3முலு பலுககுண்டே ஸங்க3திகா3 மௌனுலா
அங்க3மு முய்யனி 8பா3லுலு அபுடு3 9தி33ம்ப3ருலா (ப3)


சரணம் 5
வலசு த்யாக3ராஜ வரது3 வர ப4க்துலு ஸேயு ப4க்தி
செலகு3 ஸகல ஜனுலகெல்ல செல்லின காஸௌனுகா3 (ப3)


பொருள் - சுருக்கம்
 • தேவதேவா!

 • உடல் வலிமையும் குலமும் ஏன்?
 • இராமனின் பக்தி காரணமாக, திகழும் அனைத்து சித்திகள் யாவும் பின் தொடருமன்றோ?

  • நீரில் காகமும் மீனும் மூழ்க, என்றும் காலைக் குளியலா?
  • தூய கண்களைக் கொக்கு குவிக்க, (அது) தியானமா?

  • இலைகளை மேயும் ஆடு, முழுப் பட்டினியா?
  • பல்வகைப் பறைவைகள் பறக்க, சூரிய சந்திரர்களுக்கு நிகரா?

  • குகையில் வேடமணிந்த கும்பலிருந்தால், குணமுடை முனிவர்களா?
  • காடுகளில் குரங்குகளிருந்தால், பெரும் வன வாசமா?

  • சங்கமர்கள் பேசாதிருந்தால், மொத்தமாக முனிவர்களா?
  • உடல் மூடாத சிறுவர்கள் அப்படியானால், திகம்பரர்களா?


 • காதலுடன், தியாகராசனுக்கருள்வோனின் உயர் தொண்டர்கள் செய்யும் பக்தி, திகழும் அனைத்து மக்கள் யாவர்க்கும் செல்லும் காசாகுமன்றோ!பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
3லமு/ குலமு/ ஏல/ ராம/ ப4க்தி/ காரணமு/
வலிமையும்/ குலமும்/ ஏன்/ இராமனின்/ பக்தி/ காரணமாக/

வெலயு/ ஸகல/ ஸித்3து4லு/-எல்ல/ வெண்ட/ வச்சு/ கானி/ மேனு/ (ப3)
திகழும்/ அனைத்து/ சித்திகள்/ யாவும்/ பின்/ தொடரும்/ அன்றோ/ உடல்/ வலிமையும்...


சரணம்
சரணம் 1
நீட/ காகி/ மீனு/ முனுக3/ நிரதமு/-உத3ய/ ஸ்நானமா/
நீரில்/ காகமும்/ மீனும்/ மூழ்க/ என்றும்/ காலை/ குளியலா/

தேட/ கனுலு/ கொங்க3/ கூர்ச/ தே3வ/ தே3வ/ த்4யானமா/ (ப3)
தூய/ கண்களை/ கொக்கு/ குவிக்க/ தேவ/ தேவா/ (அது) தியானமா/


சரணம் 2
பத்ரமுலனு/ மேயு/ மேக/ ப3லமைன/ உபாஸமா/
இலைகளை/ மேயும்/ ஆடு/ முழு/ பட்டினியா/

சித்ர/ பக்ஷுலு/-எக3ய/ ஸூர்ய/ சந்த்3ருலகு/ ஸாம்யமா/ (ப3)
பல்வகை/ பறைவைகள்/ பறக்க/ சூரிய/ சந்திரர்களுக்கு/ நிகரா/


சரணம் 3
கு3ஹல/ வேஷ/ கோடுலு/-உண்டே/ கு3ணமு/ கல்கு3/ மௌனுலா/
குகையில்/ வேடமணிந்த/ கும்பல்/ இருந்தால்/ குணம்/ உடை/ முனிவர்களா/

3ஹனமுனனு/ கோதுலு/-உண்டே/ க4னமௌ/ வன/ வாஸமா/ (ப3)
காடுகளில்/ குரங்குகள்/ இருந்தால்/ பெரும்/ வன/ வாசமா/


சரணம் 4
ஜங்க3முலு/ பலுகக/-உண்டே/ ஸங்க3திகா3/ மௌனுலா/
சங்கமர்கள்/ பேசாது/ இருந்தால்/ மொத்தமாக/ முனிவர்களா/

அங்க3மு/ முய்யனி/ பா3லுலு/ அபுடு3/ தி33ம்ப3ருலா/ (ப3)
உடல்/ மூடாத/ சிறுவர்கள்/ அப்படியானால்/ திகம்பரர்களா/


சரணம் 5
வலசு/ த்யாக3ராஜ/ வரது3/ வர/ ப4க்துலு/ ஸேயு/ ப4க்தி/
காதலுடன்/ தியாகராசனுக்கு/ அருள்வோனின்/ உயர்/ தொண்டர்கள்/ செய்யும்/ பக்தி/

செலகு3/ ஸகல/ ஜனுலகு/-எல்ல/ செல்லின/ காஸு/-ஔனுகா3/ (ப3)
திகழும்/ அனைத்து/ மக்கள்/ யாவர்க்கும்/ செல்லும்/ காசு/ ஆகுமன்றோ/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
7 - ஜங்க3முலு - ஜங்க3மமுலு : இவ்விடத்தில், 'ஜங்க3முடு3' (ஜங்கமர்) என்பதன் பன்மையாகிய 'ஜங்க3முலு'தான் பொருந்தும்.

8 - பா3லுலு - பா3லுரு.

Top

மேற்கோள்கள்
1 - ஸித்3து4லு - சித்திகள் - அணிமா முதலான எண் சித்திகள்

4 - உபாஸமா - பட்டினி - நோன்புக்காக - பாகவத புராணத்தில் (4-வது புத்தகம், 8-வது அத்தியாயம்), நாரதர், துருவனுக்கு உபதேசித்த உணவு முறையாவது -

"முதல் மாதம், மூன்று இரவுகளுக்குப் பின், ஒரு முறை, ஒரு பழம் அருந்து;
இரண்டாவது மாதம், ஆறு நாட்களுக்கு ஒரு முறை, இலை அல்லது புல் உண்பாய்;
மூன்றாவது மாதம், ஒன்பது நாட்களுக்கு ஒரு முறை, நீர் மட்டும் அருந்து;
நான்காவது மாதம், பன்னிரண்டு நாட்களுக்கு ஒரு முறை, காற்றை மட்டும் புசிப்பாய்;
ஐந்தாவது மாதம், மூச்சினை முழுவதாக அடக்குவாய்."

6 - வன வாஸமா - வன வாசம் - வானப்பிரஸ்தாசிரமம் எனப்படும் வாழ்வின் மூன்றாவது நிலை.

Top

7 - ஜங்க3முலு - சங்கமர்கள் - சில இடங்களில் வீரசைவர்கள் என்றும், சில இடங்களில், இரத்தலைப் பிழைப்பாயுடைய பரதேசிகள் என்றும் கூறப்பட்டுள்ளது.

9 - தி33ம்ப3ருலு - திகம்பரர் - இது விண்ணினையே ஆடையாகவுடைய, பரம்பொருளினைக் குறிக்கும். சிவன் பிட்சாடனர் உருவத்தினில் ஆடையின்றி தோன்றினார். ஆனால், இவ்விடத்தில் பன்மையில் கொடுக்கப்பட்டுள்ளதால், இது ஆடையற்ற சமண முனிவர்களைக் குறிக்கும்.

Top

விளக்கம்
2 - நீட காகி - நீரில் காக்கை (முழுக) - புத்தகங்களில் இதனை 'காக்கை' என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. ஆனால், 'நீர்க் காக்கை' என்று, காக்கையைப் போல் தோற்றமளிக்கும் பறவை இனம், நீரினுள் மூழ்கி இரையினைத் தேடும். அவ்வகையில், இவ்விடத்தில், 'நீர்க் காக்கை மற்றும் மீன் நீரில் மூழ்க, காலைக் குளியலா?' என்றிருந்தால், அதிகப் பொருத்தமாக இருக்கும். ஆனால், அதற்கு, 'நீடி காகி' என்றிருக்க வேண்டும். ஆனால், எல்லா புத்தகங்களிலும், 'நீட காகி' என்றுதான் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, 'நீரில், காக்கை மூழ்க' என்றே பொருள் கொள்ளப்பட்டது.

3 - கூர்ச - (கண்களைப் புருவத்திற்கிடையில்) குவித்தல் - தியானம் செய்யு முறை

Top

5 - சித்ர பக்ஷுலு - சில புத்தகங்களில், இதற்கு, 'மின்மினிப் பூச்சி' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், தெலுங்கில், 'மின்மினிப் பூச்சி'க்கு அத்தகைய பெயரில்லை. மாறாக, 'சித்ர பக்ஷமு' என்பது 'மயிலை'க் குறிக்கும். 'சித்ர பக்ஷி' என்பது 'புறா'வைக் குறிக்கும். இவற்றினில், மயிலினால் அதிக உயரமோ, தூரமோ பறக்க இயலாது. சம்ஸ்கிருதத்திலும், தெலுங்கிலும் 'சித்ர' என்பதற்கு 'பல்வகையான' என்ற பொருளும் உண்டு. எனவே, அத்தகைய பொருளே இங்கு கொள்ளப்பட்டது. ஆனால், தியாகராஜர், 'மின்மினிப் பூச்சி'களைக் குறிப்பிடுவதாக இருந்தால், 'இந்த பூச்சிகளின் ஒளி, சூரிய, சந்திரர்களுக்கு நிகராகுமா?' என்று பொருள் கொள்ளப்படும்.

தியாகராசனுக்கருள்வோன் - இராமன்
செல்லும் காசு - ஈடேறுதற்குப் பயன்படுமென

Top


Updated on 12 Jan 2011

No comments: