Sunday, April 25, 2010

தியாகராஜ கிருதி - பர லோக ஸாத4னமே - ராகம் பூரி கல்யாணி - Para Loka Sadhaname - Raga Poori Kalyani

பல்லவி
பர லோக ஸாத4னமே மனஸா

அனுபல்லவி
1ஸ்மர லோப4 மோஹாதி3 பாபுலனு
ஸ்மரியிஞ்சகே ஸ்ரீ ராம ப4ஜன (ப)

சரணம்
ஜனனாதி3 ரோக34யாது3லசே
ஜக3மந்து3 கல்கு3 து3ராஸலசே
தனயாதி3 பா3ந்த4வுல ப்4ரமசே
தக3லனீது3 த்யாக3ராஜ நுதுனி ப4ஜன (ப)


பொருள் - சுருக்கம்
மனமே!

  • இராமனின் பஜனை, மறுமைக்குச் சாதனமடி;
  • காமம், பேராசை, மயக்கம் ஆகிய பாவிகளை நினையாதேயடி;

    • பிறவி முதலாக, நோய்களெனும் பேரச்சங்களிலும்,
    • உலகினில் ஏற்படும் தீய ஆசைகளிலும்,
    • (மனைவி) மக்கள் முதலாக, சுற்றமெனும் திகைப்பினிலும் சிக்கவிடாது;

  • தியாகராசன் போற்றுவோனின் பஜனை, மறுமைக்குச் சாதனமடி.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
பர லோக/ ஸாத4னமே/ மனஸா/
மறுமைக்கு/ சாதனமடி/ மனமே/


அனுபல்லவி
ஸ்மர/ லோப4/ மோஹ/-ஆதி3/ பாபுலனு/
காமம்/ பேராசை/ மயக்கம்/ ஆகிய/ பாவிகளை/

ஸ்மரியிஞ்சகே/ ஸ்ரீ ராம/ ப4ஜன/ (ப)
நினையாதேயடி/ ஸ்ரீ ராமனின்/ பஜனை/ மறுமைக்கு...


சரணம்
ஜனன/-ஆதி3/ ரோக3/ ப4யாது3லசே/
பிறவி/ முதலாக/ நோய்களெனும்/ பேரச்சங்களிலும்/

ஜக3மு-அந்து3/ கல்கு3/ து3ராஸலசே/
உலகினில்/ ஏற்படும்/ தீய ஆசைகளிலும்/

தனய/-ஆதி3/ பா3ந்த4வுல/ ப்4ரமசே/
(மனைவி) மக்கள்/ முதலாக/ சுற்றமெனும்/ திகைப்பினிலும்/

தக3லனு/-ஈது3/ த்யாக3ராஜ/ நுதுனி/ ப4ஜன/ (ப)
சிக்க/ விடாது/ தியாகராசன்/ போற்றுவோனின்/ பஜனை/ மறுமைக்கு...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்

விளக்கம்
1 - ஸ்மர லோப4 - 'ஸ்மர' என்ற சொல்லுக்கு, 'நினைத்தல்' என்றும், 'காம இச்சை' என்றும் பொருட்களுண்டு. இவ்விடத்தில், இதனை அடுத்து வரும், 'லோப4' (பேராசை) என்ற சொல்லினால், இச்சொல் 'இச்சை' (காமம்) என்ற பொருளில், உட்பகைவர் அறுவரைக் குறிப்பதாகப் பயன்படுத்துள்ளது (இச்சை, சினம், பேராசை, மயக்கம், செருக்கு, காழ்ப்பு). அன்றேல், இதனை, 'நினைவிற்கொள்!' என்று எச்சரிக்கையாகக் கொளல் வேண்டும்.

பாவிகள் - காமம் முதலாகிய உட்பகைவர் அறுவர்
நினையாதே - ஈடுபடாதேயென

Top


Updated on 26 Apr 2010

No comments: