Wednesday, July 7, 2010

தியாகராஜ கிருதி - நாராயண ஹரி - ராகம் யமுனா கல்யாணி - Narayana Hari - Raga Yamuna Kalyani

பல்லவி
நாராயண ஹரி நாராயண ஹரி
நாராயண ஹரி நாராயண ஹரி

சரணம்
சரணம் 1
நஸ்1வரமைன த4னாஸ்1வமுலனு நே
விஸ்1வஸிஞ்ச 1பூ4ஜேஸ்1வர ஹரி ஹரி (நா)


சரணம் 2
கோடீஸு1ல கனி ஸாடி லேனி பல்கு
போ3டினொஸகி3 மும்மாடிகி வேட3னு (நா)


சரணம் 3
ஆஸ1 2பிஸா1சாவேஸ1மு கலுகு3
4னேஸு13காசெடு3 தே31முனேலனு (நா)


சரணம் 4
நா லோனே நீ சேலோ சிக்கிதி
நீ லோப4மு 4விடு3வவேலோ தெலியது3 (நா)


சரணம் 5
பூ4-லோகமுலோ மேலோர்வரு விதி4
வ்ராலோ 5நீதௌ3 ஜாலோ தெலியது3 (நா)


சரணம் 6
தூ3ரெடு3 பனுலகு தூ3ரெத3ரு கட3
தேரெடு3 பனுலனு தேரே மனஸுகு (நா)


சரணம் 7
தொலி தா ஜேஸின ப2லமே கலத3னி
இலனெஞ்சனி மர்த்யுல செலிமியெந்து3கு (நா)


சரணம் 8
6தூ3ஷண ஹர பர தூ3ஷண ஜன க3
பீ4ஷண ஸுகு3ண விபீ4ஷண ஸன்னுத (நா)


சரணம் 9
நோரெப்புடு3 நீ பேரே பலுகனி
வேரேயெவருன்னாரே ராக4வ (நா)


சரணம் 10
மித்ர குலேஸ1 சரித்ர ரஸிக ஜன
மித்ரமு கோருது3 7வ்ரு2த்ராரி 8வினுத (நா)


சரணம் 11
வீன விமான 9கவீன ஹ்ரு2தா3லய
தீ3ன ஜனாவன தா3னவ ஹர ஸ்ரீ (நா)


சரணம் 12
நா ஜூபுலு மீ நாஜூகு தனமுனே
ஜூட3னி த்யாக3ராஜுல்லமலரு (நா)


பொருள் - சுருக்கம்
  • நாராயணா! அரியே! புவிமகள் மணாளா! தூஷணனை வதைத்தோனே! பிறரை நிந்திப்போருக்கு அச்சமே! நற்குணத்தோனே! விபீடணனால் போற்றப்பெற்றோனே! இராகவா! விருத்திரன் பகைவனால் போற்றப் பெற்றோனே! புள்ளரசன் வாகனனே! கவியரசன் உள்ளத்துறைவோனே! எளியோரைக் காப்போனே! அரக்கரையழித்தோனே! தியாகராசனின் உள்ளத்தினை மலரச்செய்யும் நாராயணா!

    • நிலையற்ற, செல்வம், வாகனங்களை நான் ஒரு நாளும் நம்பமாட்டேன்.
    • கோடீசுவரர்களைக் கண்டு, ஒப்பற்ற நாமகளினை யளித்து, உறுதியாக வேண்ட மாட்டேன்.
    • ஆசைப் பிசாசுகளின் ஆவேசம் கொண்ட செல்வந்தர்களைப் பேணும் நாடு (எனக்கு) எதற்கு?

    • என்னுள்ளேயே உன் கையினில் சிக்கினேன்; உனது கருமித்தனத்தினை விடமாட்டாய், ஏனோ அறியேன்.

    • புவியினில் (மற்றவரின்) மேன்மையினைச் சகியார்; பிரமனின் எழுத்தோ, அன்றி உனது மாயையோ, அறியேன்.
    • வெறுக்கத் தக்கப் பணிகளில் ஈடுபடுவர்; கடைத் தேறும் பணிகளைக் கொண்டுவாராரே உள்ளத்திற்கு.
    • முன்னம் தான் செய்வினையின் பயனே கிடைக்குமென இங்கு எண்ணாத மனிதரின் நேசமெதற்கு?

    • (எனது) நாவெப்போழ்தும் உனது பெயரினையே உரைக்கட்டும்; வேறே எவருளரே?
    • பரிதி குலத் தலைவனின் சரிதத்தினை விரும்புவோரின் நட்பு கோருவேன்.
    • எனது பார்வை உமது நேர்த்தியினையே காணட்டும்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நாராயண/ ஹரி/ நாராயண/ ஹரி/
நாராயணா/ அரியே/ நாராயணா/ அரியே/

நாராயண/ ஹரி/ நாராயண/ ஹரி/
நாராயணா/ அரியே/ நாராயணா/ அரியே/


சரணம்
சரணம் 1
நஸ்1வரமைன/ த4ன/-அஸ்1வமுலனு/ நே/
நிலையற்ற/ செல்வம்/ குதிரைகளை (வாகனங்களை)/ நான்/

விஸ்1வஸிஞ்ச/ பூ4ஜா/-ஈஸ்1வர/ ஹரி ஹரி/ (நா)
நம்பமாட்டேன்/ புவிமகள்/ மணாளா/ அய்யய்யோ (ஒரு நாளும்)/


சரணம் 2
கோடி/-ஈஸு1ல/ கனி/ ஸாடி லேனி/ பல்கு/
கோடி/-ஈசுவரர்களை/ கண்டு/ ஒப்பற்ற/ நா/

போ3டினி/-ஒஸகி3/ மும்மாடிகி/ வேட3னு/ (நா)
மகளினை/ யளித்து/ உறுதியாக/ வேண்ட மாட்டேன்/


சரணம் 3
ஆஸ1/ பிஸா1ச/-ஆவேஸ1மு/ கலுகு3/
ஆசை/ பிசாசுகளின்/ ஆவேசம்/ கொண்ட/

4ன-ஈஸு1ல/ காசெடு3/ தே31மு/-ஏலனு/ (நா)
செல்வந்தர்களை/ பேணும்/ நாடு/ (எனக்கு) எதற்கு/


சரணம் 4
நா லோனே/ நீ/ சேலோ/ சிக்கிதி/
என்னுள்ளேயே/ உன்/ கையினில்/ சிக்கினேன்/

நீ/ லோப4மு/ விடு3வ/-ஏலோ/ தெலியது3/ (நா)
உனது/ கருமித்தனத்தினை/ விடமாட்டாய்/ ஏனோ/ அறியேன்/


சரணம் 5
பூ4-லோகமுலோ/ மேலு/-ஓர்வரு/ விதி4/
புவியினில்/ (மற்றவரின்) மேன்மையினை/ சகியார்/ பிரமனின்/

வ்ராலோ/ நீதௌ3/ ஜாலோ/ தெலியது3/ (நா)
எழுத்தோ/ (அன்றி) உனது/ மாயையோ/ அறியேன்/


சரணம் 6
தூ3ரெடு3/ பனுலகு/ தூ3ரெத3ரு/ கட3/
வெறுக்கத் தக்க/ பணிகளில்/ ஈடுபடுவர்/ கடை/

தேரெடு3/ பனுலனு/ தேரே/ மனஸுகு/ (நா)
தேறும்/ பணிகளை/ கொண்டுவாராரே/ உள்ளத்திற்கு/


சரணம் 7
தொலி/ தா/ ஜேஸின/ ப2லமே/ கலது3/-அனி/
முன்னம்/ தான்/ செய் (வினையின்)/ பயனே/ (கிடைக்கும்) உளது/ என/

இலனு/-எஞ்சனி/ மர்த்யுல/ செலிமி/-எந்து3கு/ (நா)
இங்கு/ எண்ணாத/ மனிதரின்/ நேசம்/ எதற்கு/


சரணம் 8
தூ3ஷண/ ஹர/ பர/ தூ3ஷண ஜன க3ண/
தூஷணனை/ வதைத்தோனே/ பிறரை/ நிந்திப்போருக்கு/

பீ4ஷண/ ஸுகு3ண/ விபீ4ஷண/ ஸன்னுத/ (நா)
அச்சமே/ நற்குணத்தோனே/ விபீடணனால்/ போற்றப்பெற்றோனே/


சரணம் 9
நோரு/-எப்புடு3/ நீ/ பேரே/ பலுகனி/
(எனது) நா/ எப்போழ்தும்/ உனது/ பெயரினையே/ உரைக்கட்டும்/

வேரே/-எவரு/-உன்னாரே/ ராக4வ/ (நா)
வேறே/ எவர்/ உளரே/ இராகவா/


சரணம் 10
மித்ர/ குல/-ஈஸ1/ சரித்ர/ ரஸிக ஜன/
பரிதி/ குல/ தலைவனின்/ சரிதத்தினை/ விரும்புவோரின்/

மித்ரமு/ கோருது3/ வ்ரு2த்ர/-அரி/ வினுத/ (நா)
நட்பு/ கோருவேன்/ விருத்திரன்/ பகைவனால்/ போற்றப் பெற்றோனே/


சரணம் 11
வி/-இன/ விமான/ கவி/-இன/ ஹ்ரு2த்3/-ஆலய/
புள்/ அரசன்/ வாகனனே/ கவி/ யரசன்/ உள்ளத்து/ உறைவோனே/

தீ3ன ஜன/-அவன/ தா3னவ/ ஹர/ ஸ்ரீ/ (நா)
எளியோரை/ காப்போனே/ அரக்கரை/ யழித்தோனே/ ஸ்ரீ/ நாராயண...


சரணம் 12
நா/ ஜூபுலு/ மீ/ நாஜூகு தனமுனே/
எனது/ பார்வை/ உமது/ நேர்த்தியினையே/

ஜூட3னி/ த்யாக3ராஜு/-உல்லமு/-அலரு/ (நா)
காணட்டும்/ தியாகராசனின்/ உள்ளத்தினை/ மலரச்செய்யும்/ நாராயண...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - பூ4ஜேஸ்1வர - பூ4தேஸ்1வர.

2 - பிஸா1சாவேஸ1மு - பிஸா1ச வேஸ1மு : இவ்விடத்தில் 'பிஸா1ச வேஸ1மு' என்பது பொருந்தாது.

3 - காசெடு3 தே31முனேலனு - காசே தே31முனேலுது3 : பிற்கூறப்பட்டது மாறான பொருள் தருவதனால், பொருந்தாது.

4 - விடு3வவேலோ தெலியது3 - விட3வேலோ தெலியனு.

5 - நீதௌ3 ஜாலோ தெலியது3 - நீகௌஸா1லோ தெலியனு.

8 - வினுத - ஸன்னுத.

Top

மேற்கோள்கள்
6 - தூ3ஷண - தூஷணன் - இராமனால் வதைக்கப் பெற்ற இராவணின் உறவினன்

7 - வ்ரு2த்ராரி - விருத்திரன் பகைவன் - இந்திரன். இந்திரன், விருத்திரனைக் கொன்ற நிகழ்ச்சியினை, மகாபாரதத்தினில் (உத்தியோக பருவம், அத்தியாயம் 10) காணலாம்.

9 - கவீன - கவியரசன் - வால்மீகி முனிவன். இச்சொல்லினை தியாகராஜர் 'ஜக3தா3னந்த3 காரக' என்ற (பஞ்ச ரத்தின) கீர்த்தனையிலும் (சரணம் 8) பயன்படுத்துகின்றார்.

Top

விளக்கம்
5 - நீதௌ3 - நீது3+ஔ - 'அவு' என்பது 'ஔ' என்றும் வழங்கும்.

வாகனம் - குதிரை முதலானவை
நாமகளினை யளித்து - அவர்தம் புகழ்பாடி
கருமித்தனத்தினை விடமாட்டாய் - இரங்குவதற்கு
பணிகளைக் கொண்டுவாராரே உள்ளத்திற்கு - பணிகனைப் பற்றி நினைக்கமாட்டார்
பரிதி குலத் தலைவன் - இராமன்
பரிதி குலத் தலைவன் சரிதம் - இராமாயணம்
புள்ளரசன் - கருடன்

Top


Updated on 08 Jul 2010

1 comment: