Sunday, November 16, 2008

பக்கல நிலப3டி - ராகம் க2ரஹர ப்ரிய - Pakkala Nilabadi - Raga Kharahara Priya

பல்லவி
பக்கல நிலப3டி3 கொலிசே முச்சட
பா33 தெல்ப ராதா3

அனுபல்லவி
1சுக்கல ராயனி கேரு மோமு க3
ஸு-த3தி ஸீதம்ம ஸௌமித்ரி ராமுனிகிரு (ப)

சரணம்
தனுவுசே வந்த3னமொனரிஞ்சுசுன்னாரா
சனுவுன நாம கீர்தன ஸேயுசுன்னாரா
மனஸுன தலசி மை மரசியுன்னாரா
நெனருஞ்சி த்யாக3ராஜுனிதோ 2ஹரி ஹரி மீரிரு (ப)

பொருள் - சுருக்கம்
மதியினைப் பழிக்கும் வதனமுடைத்த, அழகிய பற்களுடை சீதம்மா! இலக்குவா!
இராமனுக்கு இரு பக்கத்திலும் நின்று சேவை செய்யும் அழகினை, கனிவு கூர்ந்த்து, தியாகராசனுக்கு, விரிவாகத் தெரிவிக்கலாகாதா!
உடலினால் வந்தனம் செய்கின்றீர்களா? (அல்லது) அன்புடன் நாம கீர்த்தனை செய்கின்றீர்களா? (அல்லது) உள்ளத்தில் நினைந்து மெய் மறந்துள்ளீர்களா? (கேட்பதற்கு) மன்னிப்பீராக!

பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
பக்கல/ நிலப3டி3/ கொலிசே/ முச்சட/
பக்கத்தில்/ நின்று/ சேவை செய்யும்/ அழகினை/

பா33/ தெல்ப ராதா3/
விரிவாக/ தெரிவிக்கலாகாதா/

அனுபல்லவி
சுக்கல/ ராயனி/ கேரு/ மோமு க3ல/
தாரைகளின்/ மன்னனை/ பழிக்கும்/ வதனமுடைத்த/

ஸு-த3தி/ ஸீதம்ம/ ஸௌமித்ரி/ ராமுனிகி/-இரு/ (ப)
அழகிய பற்களுடை/ சீதம்மா/ சௌமித்திரி/ இராமனுக்கு/ இரு/ பக்கத்திலும்..


சரணம்
தனுவுசே/ வந்த3னமு/-ஒனரிஞ்சுசு-உன்னாரா/
உடலினால்/ வந்தனம்/ செய்கின்றீர்களா/

சனுவுன/ நாம/ கீர்தன/ ஸேயுசு-உன்னாரா/
அன்புடன்/ நாம/ கீர்த்தனை/ செய்கின்றீர்களா/

மனஸுன/ தலசி/ மை/ மரசி-உன்னாரா/
உள்ளத்தில்/ நினைந்து/ மெய்/ மறந்துள்ளீர்களா/

நெனரு/-உஞ்சி/ த்யாக3ராஜுனிதோ/ ஹரி ஹரி/ மீரு/-இரு/ (ப)
கனிவு/ கூர்ந்து/ தியாகராசனுக்கு/ மன்னிப்பீராக/ நீங்கள்/ இரு/ பக்கத்திலும்..

குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்

விளக்கம்
1 - சுக்கல ராயனி கேரு மோமு க3 - மதியைப் பழிக்கும் வதனமுடை - இது இராமனையும் குறிக்கலாம்
2 - ஹரி ஹரி - கேட்பதற்கு மன்னிப்பீராக - வணக்கத்திற்குரியோரிடம், கேட்கவோ, சொல்லவோ தகாதவற்றினைக் கேட்கும்போதும், சொல்லும்போதும் 'ஹரி ஹரி' என்னும் சொற்களினால் மன்னிப்புக் கோருவது வழக்கம்.

தாரைகளின் மன்னன் - மதி
சௌமித்திரி - சுமித்திரையின் மகன் - இலக்குவன்
Top

No comments: