Sunday, November 2, 2008

நாத3 லோலுடை3 - ராகம் கல்யாண வசந்தம் - Naada Loludai - Raga Kalyaana Vasanta

பல்லவி
1நாத3 லோலுடை3 ப்3ரஹ்மானந்த3மந்த3வே மனஸா

அனுபல்லவி
ஸ்வாது32ல ப்ரத3 ஸப்த ஸ்வர ராக3 நிசய ஸஹித (நா)

சரணம்
ஹரி ஹராத்ம-பூ4 ஸுர பதி 21ர ஜன்ம3ணேஸா1தி3
வர மௌனுலுபாஸிஞ்ச3 ரே 44 5த்யாக3ராஜு தெலியு (நா)


பொருள் - சுருக்கம்
சுவையான பயன்களையருளும், ஏழ் பதப் பண்களுடன் கூடிய,
தியாகராசன் அறியும், நாதத்தில் திளைப்போனாகி, புவியில் பரமானந்த மெய்துவாய்;

அரி, அரன், தான்தோன்றி, இந்திரன், முருகன், கணபதி முதலானோரும்,
உயர் முனிவர்கள், மற்றோரும் நாதத்தினை வழிபடுவர்.

பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நாத3/ லோலுடை3/ ப்3ரஹ்மானந்த3மு/-அந்த3வே/ மனஸா/
நாதத்தில்/ திளைப்போனாகி/ பரமானந்தம்/ எய்துவாய்/ மனமே/

அனுபல்லவி
ஸ்வாது3/ ப2ல/ ப்ரத3/ ஸப்த/ ஸ்வர/ ராக3 நிசய/ ஸஹித/
சுவையான/ பயன்களை/ அருளும்/ ஏழ்/ பத/ பண்களுடன்/ கூடிய/ நாதத்தில்...

சரணம்
ஹரி/ ஹர/-ஆத்ம-பூ4/ ஸுர/ பதி/ ஸ1ர/ ஜன்ம/ க3ணேஸ1/-ஆதி3/
அரி/ அரன்/ தான்தோன்றி/ வானோர்/ தலைவன்/ சரவணத்தில்/ உதித்தோன்/ கணேசன்/ முதலானோரும்/

வர/ மௌனுலு/-உபாஸிஞ்ச/ ரே/ த4ர/ த்யாக3ராஜு/ தெலியு/
உயர்/ முனிவர்களும்/ வழிபட/ ஏ/ புவியில்/ தியாகராசன்/ அறிந்த/ நாதத்தில்..

குறிப்புக்கள் - (Notes)

வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்

விளக்கம்
1 - நாத3 - நாத யோகம் - நாத வழிபாடு - நாதோபாசனை குறித்து விவரங்கள் அறியவும்

2 - 1ர ஜன்ம - சரவணம் - நாணல் : சரவணத்தில் உதித்தோன் - முருகன். ஸ்வாமி சிவானந்தாவின் முருகன் வழிபாடு - இலவச Download

3 - உபாஸிஞ்ச ரே - இங்கு, விஷ்ணு, சிவன் ஆகிய கடவுளர்களைக் குறித்து சொல்கையில் 'வழிபட்டனர்' என கடந்த காலத்தில் சொல்வது தவறாகும்.

4 - 4 - புவியில் - இவ்விடத்தில் இச்சொல்லின் பொருத்தம் விளங்கவில்லை.

5 - த்யாக3ராஜு தெலியு - இதனை 'கடவுளர் நாதோபாசனை செய்வது தியாகராஜனுக்குத் தெரியும்' என்றோ 'இப்படிப்பட்ட இசையினை தியாகராஜன் அறிவான்' என்றோ பொருள் கொள்ளலாம். ஆனால் பிற்குறித்த பொருள் அதிகம் பொருந்தும்.

தான்தோன்றி - பிரமன்

வானோர் தலைவன் - இந்திரன்
Top

No comments: