Thursday, November 19, 2009

தியாகராஜ கிருதி - நாரத3 கா3ன - ராகம் அடா2ணா - Narada Gana - Raga Athana

பல்லவி
நாரத3 கா3ன லோல நத ஜன பரிபால

அனுபல்லவி
நீரத3 ஸம நீல நிருபம கு3ண ஸீ1ல (நா)

சரணம்
1நீவு லேகயே தனுவுலு நிரதமுகா3 நடு3சுனு
நீவு லேகயே தருவுலு நிக்கமுகா3 மொலுசுனு
நீவு லேகயே வானலு நித்யமுகா3 2குரியுனு
நீவு லேக த்யாக3ராஜு நீ கு3ணமுலனெடு பாடு3னு (நா)


பொருள் - சுருக்கம்
நாரதரின் இசை விரும்பியே! பணிந்தோரைப் பேணுவோனே! கார்முகில் நிகர் நீலவண்ணா! உவமையற்ற குணசீலனே!
  • நீயின்றி எவ்வுடல்கள் என்றும் நடக்கும்?

  • நீயின்றி எம்மரங்கள் திண்ணமாக வளரும்?

  • நீயின்றி எம்மாரிகள் நிலையாகப் பெய்யும்?

  • நீயின்றி தியாகராசன் உனது குணங்களையெங்ஙனம் பாடுவான்?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நாரத3/ கா3ன/ லோல/ நத ஜன/ பரிபால/
நாரதரின்/ இசை/ விரும்பியே/ பணிந்தோரை/ பேணுவோனே/


அனுபல்லவி
நீரத3/ ஸம/ நீல/ நிருபம/ கு3ண/ ஸீ1ல/ (நா)
கார்முகில்/ நிகர்/ நீலவண்ணா/ உவமையற்ற/ குண/ சீலனே/


சரணம்
நீவு/ லேக/-ஏ தனுவுலு/ நிரதமுகா3/ நடு3சுனு/
நீ/ இன்றி/ எவ்வுடல்கள்/ என்றும்/ நடக்கும்/

நீவு/ லேக/-ஏ தருவுலு/ நிக்கமுகா3/ மொலுசுனு/
நீ/ இன்றி/ எம்மரங்கள்/ திண்ணமாக/ வளரும்/

நீவு/ லேக/-ஏ வானலு/ நித்யமுகா3/ குரியுனு/
நீ/ இன்றி/ எம்மாரிகள்/ நிலையாக/ பெய்யும்/

நீவு/ லேக/ த்யாக3ராஜு/ நீ/ கு3ணமுலனு/-எடு/ பாடு3னு/ (நா)
நீ/ இன்றி/ தியாகராசன்/ உனது/ குணங்களை/ எங்ஙனம்/ பாடுவான்/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - குரியுனு - குருசுனு.

மேற்கோள்கள்
1 - நீவு லேக - நீயின்றி - ப்3ரு2ஹதா3ரண்யக உபநிடதம் (download) உரைப்பதனை நோக்கவும் -

"எவன் அனைத்துயிர்களிலும் உறைகின்றானோ, (எவன்) அனைத்துயிர்களின் உள்ளமோ,
எவனை அனைத்துயிர்களும் அறியாவோ, எவனுக்கு அனைத்துயிர்களும் உடலாமோ,
எவன் அனைத்துயிர்களையும் உள்ளிருந்து இயக்குகின்றானோ,
அவனே உனது உள்ளியக்குவோனாம், அழிவற்றோனாம்." (III.vii.15)
(ஸ்வாமி மாதவானந்தாவின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்)

Top


Updated on 19 Nov 2009

No comments: