Sunday, June 21, 2009

தியாகராஜ கிருதி - நினு பா3ஸி - ராகம் ப3லஹம்ஸ - Ninu Baasi - Raga Balahamsa

பல்லவி
நினு 1பா3ஸியெடுலுந்து3ரோ
நிர்மலாத்முலௌ ஜனுலு

அனுபல்லவி
அனக4 ஸுபுண்ய அமர வரேண்ய
ஸனக ஸ1ரண்ய ஸத்-காருண்ய (நினு)

சரணம்
கனுலகு சலுவ செவுலகம்ரு2தமு
வினு ரஸனகு ருசி மனஸுகு ஸுக2மு
தனுவுகானந்த3முனு 2கல்க3 ஜேஸே
த்யாக3ராஜ ஹ்ரு2த்3-தா43பூர்ண காம (நினு)


பொருள் - சுருக்கம்
பாவமற்றோனே! நல்வினையோனே! அமரரால் வேண்டப்படுவோனே! சனகரின் புகலே! நற்கருணையோனே! தியாகராசனின் இதயத்துறையே! நிறைவேறும் இச்சைகளோனே!
  • கேளாய்!

  • உன்னைப் பிரிந்து எப்படியிருப்பரோ, தூய உள்ளம் படைத்த மக்கள்!

    • கண்களுக்குக் குளிர்ச்சியும்,

    • செவிகளுக்கு அமிழ்தும்,

    • நாவிற்குச் சுவையும்,

    • மனதிற்குச் சுகமும்,

    • மெய்க்குக் களிப்பினையும் உண்டாகச் செய்யும்,

  • உன்னைப் பிரிந்து எப்படியிருப்பரோ, தூய உள்ளம் படைத்த மக்கள்!



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நினு/ பா3ஸி/-எடுல/-உந்து3ரோ/
உன்னை/ பிரிந்து/ எப்படி/ இருப்பரோ/

நிர்மல/-ஆத்முலௌ/ ஜனுலு/
தூய/ உள்ளம் படைத்த/ மக்கள்/


அனுபல்லவி
அனக4/ ஸுபுண்ய/ அமர/ வரேண்ய/
பாவமற்றோனே/ நல்வினையோனே/ அமரரால்/ வேண்டப்படுவோனே/

ஸனக/ ஸ1ரண்ய/ ஸத்காருண்ய/ (நினு)
சனகரின்/ புகலே/ நற்கருணையோனே/


சரணம்
கனுலகு/ சலுவ/ செவுலகு/-அம்ரு2தமு/
கண்களுக்கு/ குளிர்ச்சியும்/ செவிகளுக்கு/ அமிழ்தும்/

வினு/ ரஸனகு/ ருசி/ மனஸுகு/ ஸுக2மு/
கேளாய்/ நாவிற்கு/ சுவையும்/ மனதிற்கு/ சுகமும்/

தனுவுகு/ஆனந்த3முனு/ கல்க3/ ஜேஸே/
மெய்க்கு/ களிப்பினையும்/ உண்டாக/ செய்யும்/

த்யாக3ராஜ/ ஹ்ரு2த்3/-தா4ம/ பூர்ண/ காம/ (நினு)
தியாகராசனின்/ இதயத்து/ உறையே/ நிறைவேறும்/ இச்சைகளோனே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - பா3ஸியெடுலுந்து3ரோ - பா3ஸியெட்லயுந்து3ரோ - பா3ஸியெட்ல உந்து3ரோ - பா3ஸியெட்ட உந்து3ரோ

2 - கல்க3 ஜேஸே - கல்க3 ஜேயு

3 - பூர்ண காம - பரிபூர்ண

Top

மேற்கோள்கள்
3 - பூர்ண காம - நிறைவேறும் இச்சைகளோனே - இறைவன் நினைத்தவை நிறைவேறப்பெறும் : விஷ்ணு ஸஹஸ்ர நாமம் (653) மற்றும் (253) - 'காமீ' மற்றும் 'ஸித்34 ஸங்கல்ப' ஆகிய சொற்களின் பொருளினை நோக்கவும்.

பாகவத புராணம், 6-வது புத்தகம், 19-வது அத்தியாயம் ('பும்ஸவனம்' என்ற சடங்கினை கடைப்பிடிக்கும் முறை) நோக்கவும்.

"உன்னிடமிருப்பது உனக்குப் போதுமானது. இச்சைகளெல்லாம் நிறைவேறப்பெற்ற (பூர்ண காம) மா மணாளா! உனக்கு வணக்கம்."

கீதையில் (அத்தியாயம் 3, செய்யுள் 22) கண்ணன் உரைப்பது -

"பார்த்தா! எனக்கு ஓரு கடமையும் இல்லை; நான் அடையாததொன்றில்லை; முவ்வுலகத்திலும் நான் அடைய வேண்டியது ஏதும் இல்லை; ஆயினும், நான் பணிகளைத் தொடர்ந்து செய்து வருகின்றேன்."

Top

விளக்கம்

சனகர் - பிரமனின் மைந்தர் நால்வரிலொருவர்

Top


Updated on 21 Jun 2009

No comments: