Tuesday, December 28, 2010

தியாகராஜ கிருதி - கன்ன தல்லி - ராகம் ஸாவேரி - Kanna Talli - Raga Saveri - Tiruvotriyur Kshetra

பல்லவி
கன்ன தல்லி நீவு நாபால கலுக3
1கா3ஸி செந்த3னேலனம்ம

அனுபல்லவி
வென்னயுண்ட3 நேதிகியெவரைன
வெஸன படு3து3ரா த்ரிபுர ஸுந்த3ரி (க)

சரணம்
சரணம் 1
எல்ல வாரி த4னமுலஸ்1வமுலு மரி
எக்குவைன க3ட்டி மித்3தெ3லன்னியு
கல்ல கானி கன்ன வாருலு
காஞ்சு ஸுக2மு ஸுன்னயனுசுனு
உல்லமுனனு பா33 தெலுஸுகொண்டினி
2ஊரகே4னிகுல 3ஸம்பா4ஷணமு
நேனொல்ல மாயலனி தெலிஸி 4ரஜ்ஜு பை-
யுரக3 பு3த்3தி4
செந்த3னேலேனம்மா நனு (க)


சரணம் 2
5பலுகு மஞ்சி கானி பா3ந்த4வுலு மரி
பா3வ மரது3லக்கலன்ன தம்முலு
கலிமி ஜூசு வாரு லேமினி
கனுல கான ராரு அனுசுனு
தலசுகொன்ன வெனுக வாரி மாயல
தக3ல ஜாலனம்மா மரு மரீசி-
கலனு ஜூசி 6நீரனி ப்4ரமஸி
கந்து3ரா 7ஆதி3 புர விஹாரிணி நனு (க)


சரணம் 3
கனக பூ4ஷணமுல பெட்டி மரியு
ஸொக3ஸு ஜேஸி பாலு போஸி பெஞ்சின
தனுவு ஸதமு காது3 நிர்மல-
தனமிஞ்சுக லேத3னுசுனு
அனுதி3னமொனரிஞ்சு ஸத்-க்ரியல
நீகனி பல்கின த்யாக3ராஜ ரக்ஷகி
வினுமன்னிட நீவனியெரிகி3 வேல்புல
வேரனியெஞ்சுது3ரா த்ரிபுர ஸுந்த3ரி நனு (க)


பொருள் - சுருக்கம்
 • என்னை ஈன்ற தாயே!
 • ஓ திரிபுர சுந்தரி!
 • ஆதி புரத்திலுறைபவளே!
 • தியாகராசனைக் காப்பவளே!

 • கேளம்மா!

 • நீயென் பக்கமிருக்க (நான்) துயரப்படுவதேனம்மா?
 • வெண்ணையிருக்க, நெய்க்கு யாராகிலும் கவலைப்படுவரா?

  • எல்லோருடைய செல்வம், குதிரைகள், மற்றும் மிக்கு கெட்டியான மெத்தை வீடுகள் - இவை யாவும் பொய்யே யன்றி, (இவற்றை) உடையவர்கள் பெறும் சுகம் வெற்றென, உள்ளத்தில் நன்கு தெரிந்துகொண்டேன்;
  • வீணாக, செல்வந்தரின் கூற்றுக்களை நான் வெறுக்கவில்லை;
  • (இவை) மாயையென்றறிந்து, 'பழுதையில் பாம்பு' நோக்கு கொள்வதேனம்மா?

  • மொழி நல்லதல்லாத உறவினர்கள், மற்றும் மைத்துனர்கள், மைத்துனிகள், தமக்கையர், அண்ணன், தம்பியர் (ஆகியோர்), செல்வத்தை நோக்குவோர், வறுமையினைக் கண்ணால் காணமாட்டாரென நினைத்துக்கொண்ட பின்னர், அவர்தம் மாயையில் அகப்பட இயலேனம்மா!
  • மறையும், கானலைக் கண்டு நீரெனத்திகைத்து (உண்மையில்) (நீரினைக்) காண்பரோ?

  • தங்க நகைகள் அணிவித்து, மேலும் அலங்காரம் செய்து, பாலூற்றி வளர்த்த இவ்வுடல் நிலையற்றது, (இதனில்) தூயத் தன்மை சிறிதும் இல்லையென, அனுதினமும் (நான்) செய்யும் நற்பணிகளை உனக்கென உரைத்தேன்.
  • யாவற்றிலும் நீயென்றறிந்து, (பிற) கடவுளரை உன்னின்றும் வேறென எண்ணுவரா?


 • நீயென் பக்கமிருக்க (நான்) துயரப்படுவதேனம்மா?பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
கன்ன/ தல்லி/ நீவு/ நா/ பால/ கலுக3/
ஈன்ற/ தாயே/ நீ/ என்/ பக்கம்/ இருக்க/

கா3ஸி செந்த3னு/-ஏல/-அம்ம/
(நான்) துயரப்படுவது/ ஏன்/ அம்மா/


அனுபல்லவி
வென்ன/-உண்ட3/ நேதிகி/-எவரைன/
வெண்ணை/ யிருக்க/ நெய்க்கு/ யாராகிலும்/

வெஸன படு3து3ரா/ த்ரிபுர/ ஸுந்த3ரி/ (க)
கவலைப்படுவரா/ ஓ திரிபுர/ சுந்தரி/


சரணம்
சரணம் 1
எல்ல வாரி/ த4னமுலு/-அஸ்1வமுலு/ மரி/
எல்லோருடைய/ செல்வம்/ குதிரைகள்/ மற்றும்/

எக்குவைன/ க3ட்டி/ மித்3தெ3லு/-அன்னியு/
மிக்கு/ கெட்டியான/ மெத்தை வீடுகள்/ (இவை) யாவும்/

கல்ல/ கானி/ கன்ன வாருலு/
பொய்யே/ யன்றி/ (இவற்றை) உடையவர்கள்/

காஞ்சு/ ஸுக2மு/ ஸுன்ன/-அனுசுனு/
பெறும்/ சுகம்/ வெற்று/ என/

உல்லமுனனு/ பா33/ தெலுஸுகொண்டினி/
உள்ளத்தில்/ நன்கு/ தெரிந்துகொண்டேன்/

ஊரகே/ த4னிகுல/ ஸம்பா4ஷணமு/
வீணாக/ செல்வந்தரின்/ கூற்றுக்களை/

நேனு/-ஒல்ல/ மாயலு/-அனி/ தெலிஸி/ ரஜ்ஜு பை-/
நான்/ வெறுக்கவில்லை/ (இவை) மாயை/ யென்று/ அறிந்து/ 'பழுதையில்/

உரக3/ பு3த்3தி4/ செந்த3னு/-ஏலே/-அம்மா/ நனு/ (க)
பாம்பு'/ நோக்கு/ கொள்வது/ ஏன்/ அம்மா/ என்னை/ ஈன்ற...


சரணம் 2
பலுகு/ மஞ்சி/ கானி/ பா3ந்த4வுலு/ மரி/
மொழி/ நல்லது/ அல்லாத/ உறவினர்கள்/ மற்றும்/

பா3வ/ மரது3லு/-அக்கலு/-அன்ன/ தம்முலு/
மைத்துனர்கள்/ மைத்துனிகள்/ தமக்கையர்/ அண்ணன்/ தம்பியர்/

கலிமி/ ஜூசு வாரு/ லேமினி/
(ஆகியோர்), செல்வத்தை/ நோக்குவோர்/ வறுமையினை/

கனுல/ கான/ ராரு/ அனுசுனு/
கண்ணால்/ காண/ மாட்டார்/ என/

தலசுகொன்ன/ வெனுக/ வாரி/ மாயல/
நினைத்துக்கொண்ட/ பின்னர்/ அவர்தம்/ மாயையில்/

தக3ல/ ஜாலனு/-அம்மா/ மரு/
அகப்பட/ இயலேன்/ அம்மா/ மறையும்/

மரீசிகலனு/ ஜூசி/ நீரு/-அனி/ ப்4ரமஸி/
கானலை/ கண்டு/ நீர்/ என/ திகைத்து/ (உண்மையில்)

கந்து3ரா/ ஆதி3/ புர/ விஹாரிணி/ நனு/ (க)
(நீரினைக்) காண்பரோ/ ஆதி/ புரத்தில்/ உறைபவளே/ என்னை/ ஈன்ற...


சரணம் 3
கனக/ பூ4ஷணமுல/ பெட்டி/ மரியு/
தங்க/ நகைகள்/ அணிவித்து/ மேலும்/

ஸொக3ஸு/ ஜேஸி/ பாலு/ போஸி/ பெஞ்சின/
அலங்காரம்/ செய்து/ பால்/ ஊற்றி/ வளர்த்த/

தனுவு/ ஸதமு/ காது3/ நிர்மல/ தனமு/-
(இந்த) உடல்/ நிலை/ யற்றது/ (இதனில்) தூய/ தன்மை/

இஞ்சுக/ லேது3/-அனுசுனு/
சிறிதும்/ இல்லை/ யென/

அனுதி3னமு/-ஒனரிஞ்சு/ ஸத்/-க்ரியல/
அனுதினமும்/ (நான்) செய்யும்/ நற்/ பணிகளை/

நீகு/-அனி/ பல்கின/ த்யாக3ராஜ/ ரக்ஷகி/
உனக்கு/ என/ உரைத்த/ தியாகராசனை/ காப்பவளே/

வினுமு/-அன்னிட/ நீவு/-அனி/-எரிகி3/ வேல்புல/
கேளம்மா/ யாவற்றிலும்/ நீ/ என்று/ அறிந்து/ (பிற) கடவுளரை/

வேரு/-அனி/-எஞ்சுது3ரா/ த்ரிபுர/ ஸுந்த3ரி/ நனு/ (க)
(உன்னின்றும்) வேறு/ என/ எண்ணுவரா/ திரிபுர/ சுந்தரி/ என்னை/ ஈன்ற...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - கா3ஸி செந்த3 - கா3ஸி செந்த : தெலுங்கில், 'செந்த3' மற்றும் 'செந்த' என்று இரண்டு தனிச் சொற்கள் வேறுவேறு பொருளுடன் உள்ளன. இவ்விடத்தில், 'செந்த3' என்ற சொல்லே பொருந்தும்.

2 - ஊரகே - ஊரக.

3 - ஸம்பா4ஷணமு - ஸம்பா4ஷண.

6 - நீரனி - நீரனுசு.

Top

மேற்கோள்கள்
4 - ரஜ்ஜு பையுரக3 பு3த்3தி4 - பழுதையில் பாம்பு நோக்கு - இருட்டில் கயிற்றை பாம்பென தவறாக உணர்தல். இது, வேதாந்தத்தில், மெய்யினை, மெய்யல்லாதது எங்ஙனம் மறைக்கின்றது, என்பதனை விளக்கப் பயன்படுத்தும் ஓர் உவமையாகும். இது குறித்து, ஆதி சங்கரரின் 'உபதே31 ஸாஹஸ்ரி'யில் (18-வது அத்தியாயம், 46-வது செய்யுள்) கூறப்பட்டது -

"எங்ஙனம் 'பழுதைப் பாம்பு', (பழுதையெனும்) மெய்யுணர்வு தோன்றுமுன், (பாம்பெனும்) உண்மையோ;
அங்ஙனமே, இவ்வுடலிலுள்ள, மாற்றமற்ற பரமான்மாவும் (மெய்யுணர்வு தோன்றுமுன்) (பிறப்பு இறப்புடைய) சீவான்மா எனப்படும்."
(ஸ்வாமி ஜகதானந்தாவின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்)

'பஞ்ச த3ஸி1' என்ற நூலுக்கு ஸ்வாமி கிருஷ்ணானந்தாவின் விளக்கம் (7-வது அத்தியாயம்) நோக்கவும்

Top

விளக்கம்
5 - பலுகு மஞ்சி கானி - மொழி நல்லதல்லாத. இதனை, உறவினர்கள், மற்றும் மைத்துனர்கள், மைத்துனிகள், தமக்கையர், அண்ணன், தம்பியர் ஆகிய யாவருக்கும் பொருந்துவதாகவும் கொள்ளலாம்.

7 - ஆதி3 புர - சென்னையை அடுத்த திருவொற்றியூர்.

வெற்று - வெறுமை - இல்லாமை

Top


Updated on 28 Dec 2010

No comments: