Friday, August 20, 2010

தியாகராஜ கிருதி - எந்து3 தா3கி3னாடோ3 - ராகம் தோடி - Endu Daaginaado - Raga Todi

பல்லவி
எந்து3 தா3கி3னாடோ3 ஈட3கு
ரானென்னடு33ய வச்சுனோ ஓ மனஸ

அனுபல்லவி
எந்து3கு சபலமு வினவே நா மனவினி
முந்த3டி வலெ ப4க்துல போஷிஞ்சுட(கெந்து3)

சரணம்
சரணம் 1
அல நாடு3 கனக கஸி1பு நிண்டா3ரு
சலமு ஜேஸி ஸுதுனி ஸகல
பா34ல பெட்டக3 மதி3னி தாளக
நிஸ்1சலுடை3ன ப்ரஹ்லாது3 கொரகு 1கம்ப3மு
லோபலனுண்ட33 லேதா3 2ஆ ரீதி நே(டெ3ந்து3)


சரணம் 2
முனு 3வாரி வாஹ வாஹன தனயுடு3
மத3முன ரவிஜுனி சால கொட்டுட ஜூசி
மனஸு தாள ஜால லேக
ப்ரேமமுன பாலனமு ஸேய 4தாள தருவு
மருகு3
நில்வக3 லேதா3 5ஆ ரீதி நே(டெ3ந்து3)


சரணம் 3
தொலி ஜன்மமுல நாடு3 ஜேஸின
து3ஷ்கர்மமுலனணக3னு ஸேயனாரு
1த்ருலனு பட்டி பொடி3 ஸேயனதி3யு கா3
இலனு சஞ்சல விரஹித நிஜ ப4க்த
ஜனுலனு த்யாக3ராஜுனி ரக்ஷிம்ப நே(டெ3ந்து3)


பொருள் - சுருக்கம்
ஓ மனமே!

  • ஏன் தடுமாற்றம்? கேள், எனது வேண்டுகோளினை.
  • முன்னாள் போன்று, தொண்டர்களைப் பேணுவதற்கு எங்கு ஒளிந்துள்ளானோ! இங்கு வர என்று தயை வருமோ!

    • அன்று, இரணியகசிபு, நிறைய சூழ்ச்சிகள் செய்து, (தனது) மகனுக்கு அனைத்து தொல்லைகளும் இழைக்க, உள்ளத்தினில் பொறுக்காது, உறுதியான பிரகலாதனுக்காக, கம்பத்தின் உள்ளே யிருக்கவில்லையா?
    • முன்னம், முகில் வாகனன் மைந்தன், செருக்கோடு, பரிதி மைந்தனை மிக்குப் புடைக்கக் கண்டு, மனது பொறுக்க இயலாது, கனிவுடன் காப்பதற்கென, பனை மரத்தின் மறைவினில் நிற்கவில்லையா?

  • அவ்வகையில், இன்று எங்கு ஒளிந்துள்ளானோ! இங்கு வர என்று தயை வருமோ!

    • முற்பிறவிகளின் போது செய்த தீய செயல்களை அடக்கவும்,
    • ஆறு உட்பகைவரைப் பற்றித் தூளாக்கவும், அஃதன்றி,
    • இவ்வுலகில் சஞ்சலமற்ற, உண்மையான தொண்டர்களையும், தியாகராசனையும் காக்கவும்,

  • இன்று எங்கு ஒளிந்துள்ளானோ! இங்கு வர என்று தயை வருமோ!



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
எந்து3/ தா3கி3னாடோ3/ ஈட3கு/
எங்கு/ ஒளிந்துள்ளானோ/, இங்கு/

ரானு/-என்னடு3/ த3ய/ வச்சுனோ/ ஓ மனஸ/
வர/ என்று/ தயை/ வருமோ/ ஓ மனமே/


அனுபல்லவி
எந்து3கு/ சபலமு/ வினவே/ நா/ மனவினி/
ஏன்/ தடுமாற்றம்/ கேள்/ எனது/ வேண்டுகோளினை/

முந்த3டி/ வலெ/ ப4க்துல/ போஷிஞ்சுடகு/-(எந்து3)
முன்னாள்/ போன்று/ தொண்டர்களை/ பேணுவதற்கு/ எங்கு...


சரணம்
சரணம் 1
அல நாடு3/ கனக/ கஸி1பு/ நிண்டா3ரு/
அன்று/ இரணிய/ கசிபு/, நிறைய/

சலமு/ ஜேஸி/ ஸுதுனி/ ஸகல/
சூழ்ச்சிகள்/ செய்து/ (தனது) மகனுக்கு/ அனைத்து/

பா34ல/ பெட்டக3/ மதி3னி/ தாளக/
தொல்லைகளும்/ இழைக்க/ உள்ளத்தினில்/ பொறுக்காது/

நிஸ்1சலுடை3ன/ ப்ரஹ்லாது3 கொரகு/ கம்ப3மு/
உறுதியான/ பிரகலாதனுக்காக/ கம்பத்தின்/

லோபல/-உண்ட33 லேதா3/ ஆ ரீதி/ நேடு3/-(எந்து3)
உள்ளே/ யிருக்கவில்லையா/ அவ்வகையில்/ இன்று/ எங்கு...


சரணம் 2
முனு/ வாரி வாஹ/ வாஹன/ தனயுடு3/
முன்னம்/ முகில்/ வாகனன்/ மைந்தன்/

மத3முன/ ரவிஜுனி/ சால/ கொட்டுட/ ஜூசி/
செருக்கோடு/ பரிதி மைந்தனை/ மிக்கு/ புடைக்க/ கண்டு/

மனஸு/ தாள/ ஜால லேக/
மனது/ பொறுக்க/ இயலாது/

ப்ரேமமுன/ பாலனமு ஸேய/ தாள/ தருவு/
கனிவுடன்/ காப்பதற்கென/ பனை/ மரத்தின்/

மருகு3ன/ நில்வக3 லேதா3/ ஆ ரீதி/ நேடு3/-(எந்து3)
மறைவினில்/ நிற்கவில்லையா/ அவ்வகையில்/ இன்று/ எங்கு...


சரணம் 3
தொலி/ ஜன்மமுல/ நாடு3/ ஜேஸின/
முற்/ பிறவிகளின்/ போது/ செய்த/

து3ஷ்/ கர்மமுலனு/-அணக3னு ஸேய/-ஆரு/
தீய/ செயல்களை/ அடக்கவும்/ ஆறு/

1த்ருலனு/ பட்டி/ பொடி3 ஸேய/-அதி3யு/ கா3க/
(உட்)பகைவரை/ பற்றி/ தூளாக்கவும்/ அஃது/ அன்றி/

இலனு/ சஞ்சல/ விரஹித/ நிஜ/
இவ்வுலகில்/ சஞ்சலம்/ அற்ற/ உண்மையான/

4க்த ஜனுலனு/ த்யாக3ராஜுனி/ ரக்ஷிம்ப/ நேடு3/-(எந்து3)
தொண்டர்களையும்/ தியாகராசனையும்/ காக்கவும்/ இன்று/ எங்கு...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - கம்ப3மு - கம்ப4மு : 'கம்ப3மு' என்பதே சரியான தெலுங்குச் சொல்லாகும். அங்ஙனமே ஏற்கப்பட்டது.

2 - ஆ ரீதி - ஆ ரீதிகா3.

5 - ஆ ரீதி - ஆ ரீதிகா3 - ஆ ரீதினி.

Top

மேற்கோள்கள்
3 - வாரி வாஹ வாஹன - மழைமுகில், இந்திரனுக்கு வாகனம் எனப்படும்.

4 - தாள தருவு மருகு3 - பனை மரத்தின் மறைவினில். இது குறித்து, வால்மீகி ராமாயணத்தில் (கிஷ்கிந்தா காண்டம், 14-வது அத்தியாயம், முதல் செய்யுள்) நோக்கவும் -

"அவர்கள் யாவரும் விரைவில் வாலியின் தலைநகரமான கிஷ்கிந்தையை அடைந்து
அடர்ந்த காட்டினில், மரங்களின் பின்னர் தம்மை மறைத்துக்கொண்டுத் தங்கினர்."

Top

விளக்கம்
முகில் வாகனன் - இந்திரன்
முகில் வாகனன் மைந்தன் - வாலி
பரிதி மைந்தன் - சுக்கிரீவன்
தீய செயல்களை - அவற்றின் விளைவுகளையென
உட்பகைவர் அறுவர் - காமம் முதலானவை

Top


Updated on 20 Aug 2010

No comments: