Tuesday, March 16, 2010

தியாகராஜ கிருதி - ஸ்ரீ ராம ஜய ராம - ராகம் வராளி - Sri Rama Jaya Rama - Raga Varali

பல்லவி
ஸ்ரீ ராம ஜய ராம ஸ்1ரித ஜன ரிபு பீ4
ஸ்1ரு2ங்கா3ர கு3ண தா4ம ஓ ராம

சரணம்
சரணம் 1
சூசின வாரிகி சுலகனகா3 தோச
நன்னேசுடகிக ந்யாயமா ஓ ராம (ஸ்ரீ)


சரணம் 2
து3ர்ஜன பூ4யிஷ்ட2முன தகி3லின நே
ஸஜ்ஜனுடெ3டுலௌது3னோ ஓ ராம (ஸ்ரீ)


சரணம் 3
ஏ தா3ரி போயின 1நா தா3ரிகட்33மு
வாதா3டெ33ரு கானி ஓ ராம (ஸ்ரீ)


சரணம் 4
கலி மானவுலு வெர்ரி சலமுன தத்வமு
தெலிய லேரு ஸுமீ ஓ ராம (ஸ்ரீ)


சரணம் 5
தாமராகு நீரு வித4மு ப்ரபஞ்சமு
தத்வமு காது3 ஸுமீ ஓ ராம (ஸ்ரீ)


சரணம் 6
நேனொகடெஞ்சின நீ மனஸு
வேரகு3டகே நேரமோ தெலிய ஓ ராம (ஸ்ரீ)


சரணம் 7
23ஜ்ஜ முண்ட்3ல மீத3 தகு3லுகொன்ன ப3ட்ட
க்3ரக்குன தீய வஸ1மா ஓ ராம (ஸ்ரீ)


சரணம் 8
அச்சுக34வமுன தகு3லுகொன்ன மதி3
வச்சுனா நீ வத்33கு ஓ ராம (ஸ்ரீ)


சரணம் 9
அஹி ராஜ ஸ1யன நீகனுசு ஜேஸின
பனுலஹிதமுக3 தோசெனா ஓ ராம (ஸ்ரீ)


சரணம் 10
3மஹிஜ ரீதி நன்னு மன்னிஞ்சின நீது3
மஹிமகேமி தக்குவ ஓ ராம (ஸ்ரீ)


சரணம் 11
பா3கு33 ஸததமு நீ கு3ணமுலு பல்கு
த்யாக3ராஜ வினுத ஓ ராம (ஸ்ரீ)


பொருள் - சுருக்கம்
  • இராமா! சார்ந்தோர் பகைவரின் அச்சமே! சிங்காரமான, பண்புகளினுறைவிடமே, ஓ இராமா!
  • அரவரசன் மேற்றுயில்வோனே!
  • சிறக்க, எவ்வமயமும், உனது பண்புகளைச் சொல்லும், தியாகராசனால் போற்றப் பெற்ற, ஓ இராமா!

  • இராமா, போற்றி!

  • காண்போருக்கு அற்பமாகத் தோன்ற, என்னை வாட்டுதற்கினியும் நியாயமா?
  • தீயோர் கும்பலில் அகப்பட்ட நான், நல்லொழுக்கத்தோனாக எவ்விதமாவேனோ?

    • எவ்வழி சென்றாலும், எனது வழிக்கு எதிராக வாதாடினரேயன்றி,
    • கலி மானவர்கள், வெறித்தனமான பிடிவாதத்தினால், உண்மை அறிந்திலர்;
    • தாமரை இலை (மீது) நீர் போன்றது உலகம் - உண்மையன்று - அல்லவா?


  • நானொன்று எண்ண, உனதுள்ளம் வேறாகுதற்கு, என்ன குற்றமோ, அறியேன்;

    • கழங்கு முட்களின் மீது சிக்கிக்கொண்ட துணி, உடனே எடுக்கவியலுமா?
    • அப்படியே, பிறவிக்கடலில் சிக்கிக்கொண்ட மனது, வருமா உனதருகினில் (எளிதினில்)?


  • உனக்கென இயற்றிய பணிகள், இன்னாவையாகத் தோன்றினவா?
  • புவிமகள் போன்று என்னை மன்னித்தால், உனது மகிமைக்கென்ன குறைவு?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸ்ரீ ராம/ ஜய/ ராம/ ஸ்1ரித ஜன/ ரிபு/ பீ4ம/
ஸ்ரீ ராமா/ போற்றி/ இராமா/ சார்ந்தோர்/ பகைவரின்/ அச்சமே/

ஸ்1ரு2ங்கா3ர/ கு3ண/ தா4ம/ ஓ ராம/
சிங்காரமான/ பண்புகளின்/ உறைவிடமே/ ஓ இராமா/


சரணம்
சரணம் 1
சூசின வாரிகி/ சுலகனகா3/ தோச/
காண்போருக்கு/ அற்பமாக/ தோன்ற/

நன்னு/-ஏசுடகு/-இக/ ந்யாயமா/ ஓ ராம/ (ஸ்ரீ)
என்னை/ வாட்டுதற்கு/ இனியும்/ நியாயமா/ ஓ இராமா/


சரணம் 2
து3ர்ஜன/ பூ4யிஷ்ட2முன/ தகி3லின/ நே/
தீயோர்/ கும்பலில்/ அகப்பட்ட/ நான்/

ஸஜ்ஜனுடு3/-எடுல/-ஔது3னோ/ ஓ ராம/ (ஸ்ரீ)
நல்லொழுக்கத்தோனாக/ எவ்விதம்/ ஆவேனோ/ ஓ இராமா/


சரணம் 3
ஏ/ தா3ரி/ போயின/ நா/ தா3ரிகி/-அட்33மு/
எந்த/ வழி/ சென்றாலும்/ எனது/ வழிக்கு/ எதிராக/

வாது3-ஆடெ33ரு/ கானி/ ஓ ராம/ (ஸ்ரீ)
வாதாடினரே/ அன்றி/ ஓ இராமா/

சரணம் 4
கலி/ மானவுலு/ வெர்ரி/ சலமுன/ தத்வமு/
கலி/ மானவர்கள்/ வெறித்தனமான/ பிடிவாதத்தினால்/ உண்மை/

தெலிய லேரு/ ஸுமீ/ ஓ ராம/ (ஸ்ரீ)
அறிந்திலர்/ அல்லவா/ ஓ இராமா/

சரணம் 5
தாமர/-ஆகு/ நீரு/ வித4மு/ ப்ரபஞ்சமு/
தாமரை/ இலை/ (மீது) நீர்/ போன்றது/ உலகம்/

தத்வமு/ காது3/ ஸுமீ/ ஓ ராம/ (ஸ்ரீ)
உண்மை/ அன்று/ அல்லவா/ ஓ இராமா/


சரணம் 6
நேனு/-ஒகடி/-எஞ்சின/ நீ/ மனஸு/
நான்/ ஒன்று/ எண்ண/ உனது/ உள்ளம்/

வேரு/-அகு3டகு/-ஏ/ நேரமோ/ தெலிய/ ஓ ராம/ (ஸ்ரீ)
வேறு/ ஆகுதற்கு/ என்ன/ குற்றமோ/ அறியேன்/ ஓ இராமா/


சரணம் 7
3ஜ்ஜ/ முண்ட்3ல/ மீத3/ தகு3லுகொன்ன/ ப3ட்ட/
கழங்கு/ முட்களின்/ மீது/ சிக்கிக்கொண்ட/ துணி/

க்3ரக்குன/ தீய/ வஸ1மா/ ஓ ராம/ (ஸ்ரீ)
உடனே/ எடுக்க/ இயலுமா/ ஓ இராமா/

சரணம் 8
அச்சுக3/ ப4வமுன/ தகு3லுகொன்ன/ மதி3/
அப்படியே/ பிறவிக்கடலில்/ சிக்கிக்கொண்ட/ மனது/

வச்சுனா/ நீ/ வத்33கு/ ஓ ராம/ (ஸ்ரீ)
வருமா/ உனது/ அருகினில் (எளிதினில்)/ ஓ இராமா/


சரணம் 9
அஹி/ ராஜ/ ஸ1யன/ நீகு/-அனுசு/ ஜேஸின/
அரவு/ அரசன்/ அணையோனே/ உனக்கு/ என/ இயற்றிய/

பனுலு/-அஹிதமுக3/ தோசெனா/ ஓ ராம/ (ஸ்ரீ)
பணிகள்/ இன்னாவையாக/ தோன்றினவா/ ஓ இராமா/


சரணம் 10
மஹிஜ/ ரீதி/ நன்னு/ மன்னிஞ்சின/ நீது3/
புவிமகள்/ போன்று/ என்னை/ மன்னித்தால்/ உனது/

மஹிமகு/-ஏமி/ தக்குவ/ ஓ ராம/ (ஸ்ரீ)
மகிமைக்கு/ என்ன/ குறைவு/ ஓ இராமா/


சரணம் 11
பா3கு33/ ஸததமு/ நீ/ கு3ணமுலு/ பல்கு/
சிறக்க/ எவ்வமயமும்/ உனது/ பண்புகளை/ சொல்லும்/

த்யாக3ராஜ/ வினுத/ ஓ ராம/ (ஸ்ரீ)
தியாகராசனால்/ போற்றப் பெற்ற/ ஓ இராமா/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - நா தா3ரிகட்33மு - நா வாரிகட்33மு : 'நா தா3ரிகட்33மு ' என்பதே சரியாகும்.

Top

மேற்கோள்கள்
2 - 3ஜ்ஜ - கழங்கு - முட்செடி (அம்மானையாடும் காய்கள்)

Top

விளக்கம்
3 - மஹிஜ ரீதி - புவிமகள் போன்று - இதற்கு, இருவிதமாகப் பொருள் கொள்ளலாம். (1) சீதை மன்னிப்பது போன்று, எனவும் (2) சீதையினை நீ மன்னித்தது போன்று, எனவும். ஒரு புத்தகத்தில், முற்கூறிய பொருளும், மற்ற புத்தகங்களில் பிற்கூறிய பொருளும் கொடுக்கப்பட்டுள்ளன. பிற்கூறியது சரியென்றால், இலங்கைப் போர் முடிவில், சீதை தீபுகுதலைக் குறிக்கும்.

தாமரை இலை மீது நீர் - நிலையற்றதென
புவிமகள் - சீதை

Top


Updated on 16 Mar 2010

3 comments:

Radha said...

Dear Sir,
I am extremely delighted to have discovered this blog !!
~
Radha

Govindaswamy said...

திரு கோவிந்தன் அவர்களே
சரணம் 10 - மஹிஜ ரீதி என்பதற்கு இரு பொருள்கள் கொள்ளலாம் என்று கூறியுள்ளீர்.
1- புவிமகள்/ போன்று/ என்னை/ மன்னித்தால்-- சீதை தியாகராஜரை எதற்காக எப்பொழுது மன்னித்தாள்?
2- சீதையை இராமர் மன்னித்தார் என்று பொருள் கொண்டால் சீதை கற்புநெறி தவறினாள் என்றாகும்.

திருப்படி தேவஸ்தான வெளியீட்டில் ”பூ4மி ஜாது3லைன நீ வாரலவலெ நன்னொகிந்த த3யதோ சூசின நீ மஹிமகு தக்குவகு3னா”
என்றுள்ளது.

நான் கொண்ட பொருள் :-
உலகில் பிறந்த உன் மக்களைப்போல் என்னைச் சிறிதளவு தயவுடன் பார்த்தால் உன் புகழ் குறயுமோ.
நன்றி
கோவிந்தசாமி

V Govindan said...

திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,
ராமன் சீதையை 'நீ எங்குவேண்டுமானாலும் போகலாம்' என்று கூறி்யபோதே, சீதையின் அக்னி பரீட்சை தொடங்கிவிட்டது. ராமன் அங்ஙனம் கூறியதும், பின்னர் தன் தந்தையே நேரிடையாக வந்து சொன்னபின், சீதையை ஏற்றுக்கொண்டதும் சரியா, தவறா என்று அலசி உண்மையைக் கண்டுபிடித்தல் இந்த கலி மானவர்களுக்குக் கடினமானதொன்று.

நமதுள்ளத்திற்கு சரியென்று படாததனால் நிகழ்ச்சிகளுக்கு நம்முடைய எண்ணங்களின் வண்ணம் பூசுவது சரியன்று. ராமாயணத்தை எழுதிய வால்மீகி இருடி முக்காலமும் உணர்ந்தவர். எனவே சீதையின் கற்பினைப்பற்றி வாதத்தினில் ஈடுபட நான் விரும்பவில்லை.

திருப்பதி தேவஸ்தான புத்தகத்தில் உள்ள சொற்கள் எந்த புத்தகத்திலும் காணப்படவில்லை.

நேரடியான பொருள் கொள்வதற்கு பதிலாக, நமக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக சுற்றிவளைத்தப் பொருள் கொள்வது சரியென்று எனக்குப்படவில்லை.

வணக்கம்
கோவிந்தன்