Monday, February 22, 2010

தியாகராஜ கிருதி - நின்னே ப4ஜன - ராகம் நாட - Ninne Bhajana - Raga Nata

பல்லவி
நின்னே ப4ஜன ஸேயு வாட3னு

அனுபல்லவி
பன்னக3 ஸா1யி பருல வேட3 லேனு (நி)

சரணம்
1ஸ்நானாதி3 ஜப தப யோக3 த்4யான
ஸமாதி4 ஸுக2 ப்ரத3

ஸீதா நாத2 ஸகல லோக பாலக
த்யாக3ராஜ ஸன்னுத (நி)


பொருள் - சுருக்கம்
  • அரவணையோனே! சீதை மணாளா! அனைத்துலகங்களையும் பேணுவோனே! தியாகராசனால் சிறக்கப் போற்றப் பெற்றோனே!

    • உன்னையே பஜனை செய்பவன் (நான்)
    • பிறரை வேண்டேன்;

    • (புனித) நீராடல் முதலாக, செபம், தவம், யோகம், தியானம், சமாதி ஆகியவற்றின் சுகத்தினையருளும் உன்னையே பஜனை செய்பவன் (நான்)



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நின்னே/ ப4ஜன/ ஸேயு வாட3னு/
உன்னையே/ பஜனை/ செய்பவன் (நான்)/


அனுபல்லவி
பன்னக3/ ஸா1யி/ பருல/ வேட3 லேனு/ (நி)
அரவு/ அணையோனே/ பிறரை/ வேண்டேன்/


சரணம்
ஸ்நான/-ஆதி3/ ஜப/ தப/ யோக3/ த்4யான/
(புனித) நீராடல்/ முதலாக/ செபம்/ தவம்/ யோகம்/ தியானம்/

ஸமாதி4/ ஸுக2/ ப்ரத3/
சமாதி (ஆகியவற்றின்)/ சுகத்தினை/ அருளும்/ உன்னையே...

ஸீதா/ நாத2/ ஸகல/ லோக/ பாலக/
சீதை/ மணாளா/ அனைத்து/ உலகங்களையும்/ பேணுவோனே/

த்யாக3ராஜ/ ஸன்னுத/ (நி)
தியாகராசனால்/ சிறக்கப் போற்றப் பெற்றோனே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்
1 - யோக3 த்4யான ஸமாதி4 - அஷ்டாங்க யோகமுறை - யமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாஹாரம், தாரணை, தியானம், சமாதி.

1 - ஸமாதி4 - பதஞ்சலி யோக சூத்திரத்தினில் (I.41) இச்சொல்லின் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது -

வெண்-படிகம், அதனை அடுத்துள்ள பொருளின் நிறத்தினை அடைதல் போன்று, அனைத்து எண்ண அலைகளும் ஓய்ந்த பின், மனம், எதனில் ஒருமிக்கின்றதோ (concentration), அதன் தன்மையினை அடைகின்றது (ஒன்றுகின்றது). அது, ஒரு தூலப்பொருளாகவோ (gross object), அன்றி பொறியாகவோ (ஐம்புலன்கள்), அன்றி அகந்தையாகவோ இருக்கலாம். இங்ஙனம், மனம் ஒன்றிய நிலை 'சமாதி' எனப்படும். (இது சமாதியின் முதல் நிலை எனப்படும்) (ஸ்வாமி பிரபவானந்தாவின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்).

பதஞ்சலி யோக சூத்திரங்கள் - E book நோக்கவும்.

Top

விளக்கம்
1 - ஸ்நானாதி3 ஜப தப - புனித நீராடல் முதலாக செபம், தவம் - இத்தகைய நல்வினைகளினால் உண்டாகும் பயன்கள், எளிதாகவும், நேரிடையாகவும் இறைவனின் பஜனையினால் கிடைக்கின்றது என்று தியாகராஜர் கூறுகின்றார்.

Top


Updated on 22 Feb 2010

No comments: