Tuesday, January 25, 2011

தியாகராஜ கிருதி - ஸம்ஸாருலைதே - ராகம் ஸாவேரி - Samsaarulaite - Raga Saveri

பல்லவி
ஸம்ஸாருலைதேனேமய்யா ஸி1கி2
பிஞ்சா2வதம்ஸுடெ3து3டனுண்ட33

அனுபல்லவி
ஹிம்ஸாது3லெல்ல ரோஸி 1ஹம்ஸாது3 கூடி3
ப்ரஸ1ம்ஸ ஜேயுசுனே ப்ரொத்3து3
கம்ஸாரினி நம்முவாரு (ஸம்)

சரணம்
சரணம் 1
ஞான வைராக்3யமுலு ஹீனமைனட்டி ப4
கானனமுன திருகு3 2மானவுலு ஸதா3
2த்4யான யோக3 யுதுலை நீ நாமமு பல்குசு
நானா 3கர்ம ப2லமு தா3னமு ஸேயுவாரு (ஸம்)


சரணம் 2
க்ரூரபு யோசனலு தூ3ரு ஜேஸி தன
தா3ர புத்ருல பரிசாரகுல ஜேஸி
ஸார ரூபுனி பாத3 ஸாரஸ யுக3முல
ஸாரெ-ஸாரெகு மனஸார பூஜிஞ்சுவாரு (ஸம்)


சரணம் 3
பா43வதுல கூடி3 போ43முலெல்ல
ஹரிகே காவிம்புசுனு வீணா கா3னமுலதோ
ஆக3ம சருனி 4ஸ்ரீ ராக3முன பாடு3சு
த்யாக3ராஜ நுதுனி பா3கு33 நம்முவாரு (ஸம்)


பொருள் - சுருக்கம்
அய்யா!

 • இல்லறத்தினர் ஆனால் என்ன, மயிற்பீலி யணிவோன் எதிரிலிருக்க?

   • இம்சை ஆகிய யாவும் வெறுத்து,
   • முற்றுமுணர்ந்தோரைக் கூடி,
   • (இறைவனின்) புகழ் பாடிக்கொண்டு,

  • எவ்வமயமும், கஞ்சனை வதைத்தோனை நம்புவோர்,

   • ஞானம், வைராக்கியம் ஆகியவை யற்ற அத்தகைய, பிறவிக் காட்டினில் திரியும் மனிதர்கள்,
   • எவ்வமயமும், தியானம், யோகம் உடையோராய்,
   • உனது பெயர் உரைத்துக்கொண்டு,

  • பற்பல கருமங்களின் பயன்களை (இறைவனுக்கு) அர்ப்பணிப்போர்,

   • கொடிய எண்ணங்களைத் துறந்து,
   • தனது மனைவி, மக்களை (இறைவனின்) சேவையில் ஈடுபடுத்தி,

  • சார உருவத்தோனின் திருவடிக் கமல இணையினை, எவ்வமயமும், மனதார வழிபடுவோர்,

   • பாகவதர்களைக் கூடி,
   • (உலக) இன்பங்களை யெல்லாம் அரிக்கே அர்ப்பணித்துக்கொண்டு,
   • வீணை இசையுடன், ஆகமங்களில் உறைவோனை, சிறந்த இராகங்களில் பாடிக்கொண்டு,

  • தியாகராசன் போற்றுவோனை, முழுதும் நம்புவோர்,

 • இல்லறத்தினர் ஆனால் என்ன?பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸம்ஸாருலு/-ஐதே/-ஏமி/-அய்யா/ ஸி1கி2/
இல்லறத்தினர்/ ஆனால்/ என்ன/ அய்யா/ மயில்/

பிஞ்ச2/-அவதம்ஸுடு3/-எது3டனு/-உண்ட33/
பீலி/ யணிவோன்/ எதிரில்/ இருக்க/


அனுபல்லவி
ஹிம்ஸ/-ஆது3லு/-எல்ல/ ரோஸி/ ஹம்ஸாது3ல/ கூடி3/
இம்சை/ ஆகிய/ யாவும்/ வெறுத்து/ முற்றுமுணர்ந்தோரை/ கூடி/

ப்ரஸ1ம்ஸ ஜேயுசுனு/-ஏ ப்ரொத்3து3/
(இறைவனின்) புகழ் பாடிக்கொண்டு/ எவ்வமயமும்/

கம்ஸ/-அரினி/ நம்முவாரு/ (ஸம்)
கஞ்சனை/ வதைத்தோனை/ நம்புவோர்/ இல்லறத்தினர்...


சரணம்
சரணம் 1
ஞான/ வைராக்3யமுலு/ ஹீனமு-ஐன/-அட்டி/ ப4வ/
ஞானம்/ வைராக்கியம் ஆகியவை/ யற்ற/ அத்தகைய/ பிறவி/

கானனமுன/ திருகு3/ மானவுலு/ ஸதா3/
காட்டினில்/ திரியும்/ மனிதர்கள்/ எவ்வமயமும்/

த்4யான/ யோக3/ யுதுலை/ நீ/ நாமமு/ பல்குசு/
தியானம்/ யோகம்/ உடையோராய்/ உனது/ பெயர்/ உரைத்துக்கொண்டு/

நானா/ கர்ம/ ப2லமு/ தா3னமு ஸேயுவாரு/ (ஸம்)
பற்பல/ கருமங்களின்/ பயன்களை/ (இறைவனுக்கு) அர்ப்பணிப்போர்/ இல்லறத்தினர்...


சரணம் 2
க்ரூரபு/ யோசனலு/ தூ3ரு ஜேஸி/ தன/
கொடிய/ எண்ணங்களை/ துறந்து/ தனது/

தா3ர/ புத்ருல/ பரிசாரகுல ஜேஸி/
மனைவி/ மக்களை/ இறைவனின்/ சேவையில் ஈடுபடுத்தி/

ஸார/ ரூபுனி/ பாத3/ ஸாரஸ/ யுக3முல/
சார/ உருவத்தோனின்/ திருவடி/ கமல/ இணையினை/

ஸாரெ-ஸாரெகு/ மனஸார/ பூஜிஞ்சுவாரு/ (ஸம்)
எவ்வமயமும்/ மனதார/ வழிபடுவோர்/ இல்லறத்தினர்...


சரணம் 3
பா43வதுல/ கூடி3/ போ43முலு/-எல்ல/
பாகவதர்களை/ கூடி/ (உலக) இன்பங்களை/ யெல்லாம்/

ஹரிகே/ காவிம்புசுனு/ வீணா/ கா3னமுலதோ/
அரிக்கே/ அர்ப்பணித்துக்கொண்டு/ வீணை/ இசையுடன்/

ஆக3ம/ சருனி/ ஸ்ரீ/ ராக3முன/ பாடு3சு/
ஆகமங்களில்/ உறைவோனை/ சிறந்த/ இராகங்களில் (ஸ்ரீ ராகத்தினில்)/ பாடிக்கொண்டு/

த்யாக3ராஜ/ நுதுனி/ பா3கு33/ நம்முவாரு/ (ஸம்)
தியாகராசன்/ போற்றுவோனை/ முழுதும்/ நம்புவோர்/ இல்லறத்தினர்...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - மானவுலு - யோக3 யுதுலை : மானவுடு3 - யோக3 யுதுடை3 : இந்த கீர்த்தனையில், பிற சொற்கள் யாவுமே பன்மையிலிருப்பதனால், 'மானவுலு - யோக3 யுதுலை' என்பது தான் பொருந்தும்.

4 - ஸ்ரீ ராக3முன - ராக3முன.

Top

மேற்கோள்கள்
1 - ஹம்ஸாது3 - முற்றுமுணர்ந்தோர் - 'ஹம்ஸ' என்பது 'அஹம்ஸ' (நான் அவனே) என்பதன் சுருக்கமாகும். சதாசிவ பிரம்மேந்திரர், தமது 'கே2லதி பிண்டா3ண்டே3' என்ற கீர்த்தனையில், 'ஹம்ஸஸ்-ஸோஹம்-ஸோஹம்-ஹம்ஸமிதி' என்று கூறியுள்ளார்.

3 - கர்ம ப2லமு தா3னமு ஸேயுவாரு - கருமத்தின் பயன்களை இறைவனுக்கு அர்ப்பணம் செய்வோர். இது குறித்து, கீதையில் (5-வது அத்தியாயம், 12-வது செய்யுள்), கண்ணன் கூறியது -

"யோக நெறி நிற்பவன், கருமத்தின் பயனைத் துறந்து, உறுதியான மனவமைதி அடைகின்றான்.
அங்ஙனமல்லாதவன், இச்சைகள் காரணமாக, பயனில் ஆசைகொண்டு, தளைக்குள்ளாகின்றான்."
(ஸ்வாமி ஸ்வரூபானந்தாவின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்)

Top

விளக்கம்
2 - த்4யான யோக3 - இதற்கு, தியானம், யோகம் என்று பொருள் கொள்ளப்பட்டது. ஆனால், 'தியான யோகம்' என்றும் இதற்குப் பொருள் கொள்ளலாம்.

4 - ஸ்ரீ ராக3முன - சில புத்தகங்களில், இது, 'ஸ்ரீ ராகம்' எனும் ராகம் என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், இந்த கீர்த்தனையே அந்த ராகத்தினில் இல்லாததனால், இது ஒரு குறிப்பிட்ட ராகத்தினைக் குறிக்குமா என்று, இசை வல்லுனர்கள்தான் விளக்க இயலும்.

மயிற்பீலி யணிவோன் - கண்ணன்
கஞ்சனை வதைத்தோன் - கண்ணன்

Top


Updated on 25 Jan 2011

No comments: