பல்லவி
எந்த நேர்சின 1எந்த ஜூசின
எந்த வாரலைன 2காந்த தா3ஸுலே
அனுபல்லவி
ஸந்ததம்பு3 3ஸ்ரீ காந்த ஸ்வாந்த
ஸித்3தா4ந்தமைன மார்க3 சிந்த லேனி வா(ரெந்த)
சரணம்
பர ஹிம்ஸ பர பா4மான்ய த4ன
பர மானவாபவாத3
பர ஜீவனாது3லகன்ரு2தமே
பா4ஷிஞ்சேரய்ய த்யாக3ராஜ நுத (எந்த)
பொருள் - சுருக்கம்
தியாகராசனால் போற்றப்பெற்றோனே!
எவ்வமயமும், மாமணாளன் உள்ளுறை சித்தாந்தமாகிய நெறியின் எண்ணமற்றவர், எத்தனை கற்றாலும், எத்தனை கண்டாலும், எத்தகையவராயினும் பெண்டிர்க்கடிமைகளே
பிறரைத் துன்புறுத்தல், பிறன் மனை, பிறர் பொருள், பிற மனிதரைப் பழித்தல், பிறரால் பிழைத்தல் ஆகியவற்றிற்கு மெய்யல்லாதவற்றையே பகர்வராயினரய்யா.
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
எந்த/ நேர்சின/ எந்த/ ஜூசின/
எத்தனை/ கற்றாலும்/ எத்தனை/ கண்டாலும்/
எந்த வாரலு/-ஐன/ காந்த/ தா3ஸுலே/
எத்தகையவர்/ ஆயினும்/ பெண்டிர்க்கு/ அடிமைகளே/
அனுபல்லவி
ஸந்ததம்பு3/ ஸ்ரீ/ காந்த/ ஸ்வாந்த/
எவ்வமயமும்/ மா/ மணாளன்/ உள்ளுறை/
ஸித்3தா4ந்தமு-ஐன/ மார்க3/ சிந்த/ லேனி/ வாரு/
சித்தாந்தமாகிய/ நெறியின்/ எண்ணம்/ அற்றவர்/ எத்தனை ...
சரணம்
பர/ ஹிம்ஸ/ பர/ பா4ம/-அன்ய/ த4ன/
பிறரை/ துன்புறுத்தல்/ பிறன்/ மனை/ பிறர்/ பொருள்/
பர/ மானவ/-அபவாத3/
பிற/ மனிதரை/ பழித்தல்/
பர/ ஜீவன/-ஆது3லகு/-அன்ரு2தமே/
பிறரால்/ பிழைத்தல்/ ஆகியவற்றிற்கு/ மெய்யல்லாதவற்றையே/
பா4ஷிஞ்சேரு/-அய்ய/ த்யாக3ராஜ/ நுத/
பகர்வராயினர்/ அய்யா/ தியாகராசனால்/ போற்றப்பெற்றோனே/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
மேற்கோள்கள்
2காந்த தா3ஸுலே - மாயையின் வயப்பட்டு, யாவும் கடந்த நாரத முனிவரும், பெண்ணாகி, இல்வாழ்வில் உழன்ற கதை தேவி பாகவதம், 6-வது புத்தகம், 28-வது அத்தியாயத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கபீர் தாஸரின் 'மாயா மஹா டக்னி' எனும் பாடலையும் நோக்கவும்.
Top
விளக்கம்
1எந்த ஜூசின - இதனை சில் புத்தகங்களில் 'எத்தனை தல யாத்திரைகள் சென்றாலும்' என்று பொருள் கூறப்பட்டுள்ளது
3ஸ்ரீ காந்த ஸ்வாந்த ஸித்3தா4ந்த - இறைவனிடம் தன்னை ஒப்படைத்தல். ராமகிருஷ்ண பரமஹம்ஸர் இதனை 'இறைவனுக்கு power of attorney கொடுத்தல்' என்று கூறுவார். இது குறித்து 'நாரத பக்தி சூத்திரம்' 19-ல் கூறப்பட்டது -
“இறைவனிடம் சரண் புகுந்து, அவனிடம் தன்னுடைய பணிகள் யாவற்றினையும் அர்ப்பணித்தலும், அவனை மறக்க நேர்ந்தால் ஏற்படும் மிக்கு மன உளைச்சலும் பக்தியின சின்னங்களாகும் என நாரதன் கருதுகின்றேன்”
மாமணாளன் - அரி
உள்ளுறை - உள்ளியக்கமாக
சித்தாந்தம் - முடிந்தமுடிவு
நெறி - இறைவனை எவ்வமயமும் சாட்சியாகக் கொண்டு பணி இயற்றும் நெறி
பிறரால் பிழைத்தல் - பிறரை அண்டி பிழைத்தல்
Top
No comments:
Post a Comment