Tuesday, December 7, 2010

தியாகராஜ கிருதி - மோஸ போகு - ராகம் கௌ3ளிபந்து - Mosa Poku - Raga Gaulipantu

பல்லவி
மோஸ போகு வினவே
ஸத்-ஸஹவாஸமு விட3வகே

அனுபல்லவி
தா3ஸ ஜனார்தி ஹருனி ஸ்ரீ ராமுனி
வாஸவ ஹ்ரு23ய நிவாஸுனி தெலியக (மோ)

சரணம்
சரணம் 1
1அல்பாஸ்1ரயமுன கல்கு3 வெஸனமுலு
2கல்பாந்தரமைன போது3 ஸே1
தல்ப ஸ1யனுனி நெர நம்மிதே
ஸங்கல்பமெல்லனீடே3ருனு மனஸா (மோ)


சரணம் 2
4ன தருணுலகாஸி1ஞ்சுடெல்ல
வெனுக தனுவுகலஸடே கானி
மனஸு சேத ஸேவ்யுனி தலசிதே
ஸு-மன ஸத்வமுனொஸகு3னே மனஸா (மோ)


சரணம் 3
கௌ3ரவ ஹீன த4னிகுல காசுடயு
நேரமுலகெட3மௌனு கானி
கா3ரவிஞ்சு த்யாக3ராஜ ஹ்ரு23-
யாகா3ருனி லோகாதா4ருனி தலசக (மோ)


பொருள் - சுருக்கம்
மனமே!

  • கேளாயடி!
  • மோசம் போகாதே; நல்லிணக்கத்தை விடாதேயடி!

  • அடியார்களின் இடர் களைவோனை, இராமனை, வாசவன் இதயத்துறைவோனைத் தெரிந்துகொள்ளாது மோசம் போகாதே.

    • அற்பப் புகலினால் உண்டாகும் துன்பங்கள் கற்பங்கள் பலவானாலும் தொலையாது;
    • அரவு அணையில் துயில்வோனை முழுதும் நம்பினால், நினைத்தவையெல்லாம் ஈடேறும்;

    • செல்வம், மற்றும் பெண்டிருக்கு ஆசைப்படுவதெல்லாம், பின்னர் உடலுக்கு இளைப்பேயன்றி,
    • உள்ளத்தினால், வணங்கத்தக்கோனை நினைத்தால், உள்ளத் தூய்மையினை வழங்கிடுவானே;

    • கௌரவமற்ற செல்வந்தரிடம் காத்துக்கிடத்தல், தவறுகளுக்கு இடமாகும்;
    • எனவே தியாகராசனின் இதயத்தில் குடிகொண்டோனைக் காதலிப்பாய்;


  • உலகத்தின் ஊன்றுகோலினை நினையாது மோசம் போகாதே.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
மோஸ/ போகு/ வினவே/
மோசம்/ போகாதே/ கேளாயடி/

ஸத்/-ஸஹவாஸமு/ விட3வகே/
நல்/-இணக்கத்தை/ விடாதேயடி/


அனுபல்லவி
தா3ஸ ஜன/-ஆர்தி/ ஹருனி/ ஸ்ரீ ராமுனி/
அடியார்களின்/ இடர்/ களைவோனை/ ஸ்ரீ ராமனை/

வாஸவ/ ஹ்ரு23ய/ நிவாஸுனி/ தெலியக/ (மோ)
வாசவன்/ இதயத்து/ உறைவோனை/ தெரிந்துகொள்ளாது/ மோசம்...


சரணம்
சரணம் 1
அல்ப/-ஆஸ்1ரயமுன/ கல்கு3/ வெஸனமுலு/
அற்ப/ புகலினால்/ உண்டாகும்/ துன்பங்கள்/

கல்ப-அந்தரமு/-ஐன/ போது3/ ஸே1ஷ/
கற்பங்கள் பல/ ஆனாலும்/ தொலையாது/ (அரவு) சேடன்/

தல்ப/ ஸ1யனுனி/ நெர/ நம்மிதே/
அணையில்/ துயில்வோனை/ முழுதும்/ நம்பினால்/

ஸங்கல்பமு/-எல்லனு/-ஈடே3ருனு/ மனஸா/ (மோ)
நினைத்தவை/ யெல்லாம்/ ஈடேறும்/ மனமே/


சரணம் 2
4ன/ தருணுலகு/-ஆஸி1ஞ்சுட/-எல்ல/
செல்வம்/ (மற்றும்) பெண்டிருக்கு/ ஆசைப்படுவது/ எல்லாம்/

வெனுக/ தனுவுகு/-அலஸடே/ கானி/
பின்னர்/ உடலுக்கு/ இளைப்பே/ யன்றி/

மனஸு சேத/ ஸேவ்யுனி/ தலசிதே/
உள்ளத்தினால்/ வணங்கத்தக்கோனை/ நினைத்தால்/

ஸு-மன/ ஸத்வமுனு/-ஒஸகு3னே/ மனஸா/ (மோ)
உள்ள/ தூய்மையினை/ வழங்கிடுவானே/ மனமே,/


சரணம் 3
கௌ3ரவ/ ஹீன/ த4னிகுல/ காசுடயு/
கௌரவம்/ அற்ற/ செல்வந்தரிடம்/ காத்துக்கிடத்தல்/

நேரமுலகு/-எட3மௌனு/ கானி/
தவறுகளுக்கு/ இடமாகும்/ எனவே/

கா3ரவிஞ்சு/ த்யாக3ராஜ/ ஹ்ரு23ய/-
காதலிப்பாய்/ தியாகராசனின்/ இதயத்தில்/

ஆகா3ருனி/ லோக/-ஆதா4ருனி/ தலசக/ (மோ)
குடிகொண்டோனை/ உலகத்தின்/ ஊன்றுகோலினை/ நினையாது/ மோசம்...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்
2 - கல்ப - கற்பம் - பிரமனுக்கு ஒரு நாள் - மனிதரின் 43200 கோடி ஆண்டுகள்
Top

விளக்கம்
1 - அல்பாஸ்1ரயமு - அற்பப் புகல் - 3-வது சரணத்தில் கூறிய செல்வந்தர்களைக் குறிக்கும்.

வாசவன் - இந்திரன்
Top


Updated on 07 Dec 2010

2 comments:

Govindaswamy said...

திரு கோவிந்தன் அவ்ர்களுக்கு
சரணம் 1 ல் அல்ப ஆஸ்ரயமுன என்பதற்கு அற்ப புகலினால் என்றும் ஆங்கிலத்தில் resorting to petty supports என்றும் பொருள் கொடுத்துள்ளீர். இது அவ்வளவு தெளிவாக இல்லையென்று கருதுகிறேன். இராமனைத் தவிர மற்ற எந்தக் கடவுளரிடமும் புகலிடம் தேடவேண்டாம் என்று தானே தியாகராஜர் கூறுகிறார். அவ்வாறெனின் ‘சிறு கடவுளரிடம் புகலிடம் பெறுதலால் விளையும் துயரம்’ என்று பொருள் கூறலாமா?
In English can the meaning be given as ‘ seeking refuge with petty gods’
வணக்கம்
கோவிந்தசாமி

V Govindan said...

திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,

'அற்பப் புகல்' என்பதனால் தியாகராஜர் 'செல்வந்தர்களை'க் குறிப்பதாக நான் விளக்கம் கொடுத்துள்ளேன்.

தியாகராஜர், ஷண்மத பேதங்களுக்கு எதிரானவர். அதனால், மற்ற கடவுளரை, 'அற்பப் புகல்' என்று கூறமாட்டார். அவருக்கு இஷ்ட தெய்வம், 'ராமன்'; ஆனால் மற்ற தெய்வங்களை அவர் இழிவு செய்ததில்லை.

வணக்கம்,

கோவிந்தன்.