Friday, April 16, 2010

தியாகராஜ கிருதி - ஸி1வ ஸி1வ - ராகம் பந்துவராளி - Siva Siva - Raga Pantuvarali

பல்லவி
ஸி1வ ஸி11ஸி1வயன ராதா3 ஓரி

2அனுபல்லவி
4வ ப4ய பா34லனணசுகோ ராதா3 (ஸி1)

சரணம்
சரணம் 1
3காமாது3 தெக3 கோஸி பர
பா4மல பருல த4னமுல ரோஸி
பாமரத்வமுனெட3பா3ஸி அதி
4நேமமுதோ பி3ல்வார்சன ஜேஸி (ஸி1)


சரணம் 2
ஸஜ்ஜன க3ணமுல காஞ்சி ஓரி
5முஜ்-ஜக3தீ3ஸ்1வருலனி மதினெஞ்சி
6லஜ்ஜாது3 தொலகி3ஞ்சி தன
7ஹ்ரு2ஜ்-ஜலஜமுனனு தா பூஜிஞ்சி (ஸி1)


சரணம் 3
ஆக3மமுல நுதியிஞ்சி ப3ஹு
பா3கு3 லேனி பா4ஷலு சாலிஞ்சி
பா43வதுலதோ போஷிஞ்சி 8வர
த்யாக3ராஜ
ஸன்னுதுட3னியெஞ்சி (ஸி1)


பொருள் - சுருக்கம்
அன்பர்காள்!

 • 'சிவ சிவ சிவ' யெனலாகாதா?
 • (அதனால்) பிறவி அச்சமெனும் தொல்லைகளை அடக்கலாகாதா?

  • இச்சை ஆகியவற்றினை அற வீழ்த்தி,
  • பிற மாதர், பிறர் செல்வத்தினை வெறுத்தொதுக்கி,
  • அறிவீனத்தினை யொழித்து,
  • மிக்கு நியமத்துடன் வில்வ அருச்சனை செய்து,

 • 'சிவ சிவ சிவ' யெனலாகாதா?

  • நன்மக்களின் இணக்கம் கொண்டு,
  • (சிவன்) மூவுலகங்களின் ஈசனென மனத்தினிலெண்ணி,
  • நாணம் முதலானவற்றை விடுத்து,
  • தனது இதயக் கமலத்தினில் தான் (அவனைத்) தொழுது,

 • 'சிவ சிவ சிவ' யெனலாகாதா?

  • ஆகமங்களைப் போற்றி,
  • முற்றிலும் பயனற்ற சொற்கள் போதுமென்று,
  • பாகவதர்களுடன் (கூடி) (இறைவனை) கொண்டாடி,
  • தியாகராசன் சிறக்கப் போற்றும் மேலோனெனக் கருதி,

 • 'சிவ சிவ சிவ' யெனலாகாதா?பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸி1வ/ ஸி1வ/ ஸி1வ/-அன ராதா3/ ஓரி/
'சிவ/ சிவ/ சிவ'/ எனலாகாதா,/ அன்பர்காள்/


அனுபல்லவி
4வ/ ப4ய/ பா34லனு/-அணசுகோ ராதா3/ (ஸி1)
(அதனால்) பிறவி/ அச்சமெனும்/ தொல்லைகளை/ அடக்கலாகாதா/


சரணம்
சரணம் 1
காம/-ஆது3ல/ தெக3/ கோஸி/ பர/
இச்சை/ ஆகியவற்றினை/ அற/ வீழ்த்தி/ பிற/

பா4மல/ பருல/ த4னமுல/ ரோஸி/
மாதர்/ பிறர்/ செல்வத்தினை/ வெறுத்தொதுக்கி/

பாமரத்வமுனு/-எட3பா3ஸி/ அதி/
அறிவீனத்தினை/ யொழித்து/ மிக்கு/

நேமமுதோ/ பி3ல்வ/-அர்சன/ ஜேஸி/ (ஸி1)
நியமத்துடன்/ வில்வ/ அருச்சனை/ செய்து/ சிவ சிவ...


சரணம் 2
ஸஜ்ஜன க3ணமுல/ காஞ்சி/ ஓரி/
நன்மக்களின்/ இணக்கம் கொண்டு/ அன்பர்காள்/

மூடு3/-ஜக3த்/-ஈஸ்1வருலு/-அனி/ மதினி/-எஞ்சி/
(சிவன்) மூன்று/ உலகங்களின்/ ஈசன்/ என/ மனத்தினில்/ எண்ணி/

லஜ்ஜா/-ஆது3ல/ தொலகி3ஞ்சி/ தன/
நாணம்/ முதலானவற்றை/ விடுத்து/ தனது/

ஹ்ரு2த்/-ஜலஜமுனனு/ தா/ பூஜிஞ்சி/ (ஸி1)
இதய/ கமலத்தினில்/ தான்/ (அவனைத்) தொழுது/ சிவ சிவ...


சரணம் 3
ஆக3மமுல/ நுதியிஞ்சி/ ப3ஹு/
ஆகமங்களை/ போற்றி/ முற்றிலும்/

பா3கு3/ லேனி/ பா4ஷலு/ சாலிஞ்சி/
பயன்/ அற்ற/ சொற்கள்/ போதுமென்று/

பா43வதுலதோ/ போஷிஞ்சி/ வர/
பாகவதர்களுடன் (கூடி)/ (இறைவனை) கொண்டாடி/ மேலோன்/

த்யாக3ராஜ/ ஸன்னுதுடு3/-அனி/-எஞ்சி/ (ஸி1)
தியாகராசன்/ சிறக்கப் போற்றுவோன்/ என/ கருதி/ சிவ சிவ...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
சில புத்தகங்களில், இப்பாடலின் ராகம் 'காமவர்த்தினி' என்று கொடுக்கப்பட்டுள்ளது.

1 - ஸி1வயன ராதா3 ஓரி - ஸி1வயன ராதா3.

2 - அனுபல்லவி - சில புத்தகங்களில், அனுபல்லவி, பல்லவியின்
இரண்டாவது வரியாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

8 - வர த்யாக3ராஜ - ஓரி த்யாக3ராஜ.

Top

மேற்கோள்கள்
3 - காமாது3 - இச்சைகள் ஆகியவை - இச்சை முதலான உட்பகை ஆறு.

4 - நேமமுதோ - நியமத்துடன் - 'பதஞ்சலி யோக சூத்திர'த்தினில் (II.32) கூறப்படும் நியமங்களாவன - தூய்மை, மகிழ்ச்சி, தவம், ஓதல், இறைப்பற்று.

6 - லஜ்ஜாது3 - நாணம் முதலானவை - இறைவனின் நாமம் உரைப்பதற்கு நாணம் கூடாதென. பாகவதர்களின் பஜனையில், தியான ச்லோகத்தில், இறைவனின் வாக்கு -

"நாணத்தினை விட்டு, எவன் எனது நாமங்களை எவ்வமயமும் உரைக்கின்றானோ,
அவன், தொண்டர்களின் இணக்கத்தினைப் பெற்று, என்னுடைய பதத்தினை அடைகின்றான்."

Top

7 - ஹ்ரு2ஜ்-ஜலஜமுனனு - இதயக் கமலத்தினில் - ஆதி சங்கரர் இயற்றிய 'சிவானந்த லஹரி'யில் (9) கூறப்பட்டது -

"ஆழந்த ஏரிகளிலும், மனிதர்களற்ற கொடிய காடுகளிலும்,
பரந்த மலைகளிலும் திரிவர், மலர்களுக்காக, முட்டாள்கள்;
ஏ உமை மணாளா! உனக்குத் தனதோர் இதயக் கமலத்தினை அர்ப்பித்து,
களிப்புடனிருக்க மக்கள் அறிந்திலர், ஏனோ? அந்தோ!"
(ஸ்வாமி தபஸ்யானந்தாவின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்)

Top

விளக்கம்
5 - முஜ்-ஜக3தீ3ஸ்1வருலனி - மூவுலகங்களின் ஈசன் - சில புத்தகங்களில், இதனை, இதற்கு முன் வரும், 'நன்மக்களை'க் குறிப்பதாகக் கொள்ளப்பட்டுள்ளது. 'ஈஸ்1வருலு' என்று பன்மையில் இருப்பதனால், அப்படிக் கொள்ளப்பட்டிருக்கலாம். ஆனால், தமிழைப் போலவே, தெலுங்கிலும், மரியாதைப் பன்மையுண்டு. இவ்விடத்தில், இஃது, மரியாதைப் பன்மையாகும். மேலும், இதனை அடுத்துவரும், 'தனது இதயக்கமலத்தினில் தொழுது' என்பதனால், இது 'சிவனை'யே குறிக்கும்.

ஆகமங்களைப் போற்றி - ஆகமங்களின் நெறியில் இறைவனைப் போற்றி.

Top


Updated on 17 Apr 2010

No comments: