Monday, October 18, 2010

தியாகராஜ கிருதி - நீ சித்தமு நிஸ்1சலமு - ராகம் த4ன்யாஸி - Ni Chittamu Nischalamu - Raga Dhanyasi

பல்லவி
நீ சித்தமு 1நிஸ்1சலமு
நிர்மலமனி
நின்னே நம்மினானு

அனுபல்லவி
நா சித்தமு வஞ்சன சஞ்சலமனி
நன்னு 2விட3னாட3குமி ஸ்ரீ ராம (நீ)

சரணம்
கு3ருவு 3சில்ல கி3ஞ்ஜ கு3ருவே 4ப்4ரமரமு
கு3ருடே3 பா4ஸ்கருடு3 கு3ருடே34த்3ருடு3
கு3ருடே3 உத்தம க3தி கு3ருவு நீவனுகொண்டி
54ரனு தா3ஸுனி ப்3ரோவ த்யாக3ராஜ நுத (நீ)


பொருள் - சுருக்கம்
இராமா! தியாகராசன் போற்றுவோனே!

  • உனது மனம் சலனமற்றது, மாசற்றதென உன்னையே நம்பினேன்.
  • எனது மனம் வஞ்சகமானது, சஞ்சலமானது என என்னை விட்டுவிடாதே.

    • குரு தேற்றாக்கொட்டை;
    • குருவே குளவி;
    • குருவே பகலவன்;
    • குருவே மங்களமானவன்;
    • குருவே உத்தமமான புகல்;

  • குரு நீயெனக் கருதினேன்.

  • புவியில் (இத்)தொண்டனைக் காக்க, உனது மனம் சலனமற்றது, மாசற்றதென உன்னையே நம்பினேன்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நீ/ சித்தமு/ நிஸ்1சலமு/
உனது/ மனம்/ சலனமற்றது/

நிர்மலமு/-அனி/ நின்னே/ நம்மினானு/
மாசற்றது/ என/ உன்னையே/ நம்பினேன்/


அனுபல்லவி
நா/ சித்தமு/ வஞ்சன/ சஞ்சலமு/-அனி/
எனது/ மனம்/ வஞ்சகமானது/ சஞ்சலமானது/ என/

நன்னு/ விட3னு-ஆட3குமி/ ஸ்ரீ ராம/ (நீ)
என்னை/ விட்டுவிடாதே/ ஸ்ரீ ராமா/


சரணம்
கு3ருவு/ சில்ல/ கி3ஞ்ஜ/ கு3ருவே/ ப்4ரமரமு/
குரு/ தேற்றா/ கொட்டை/ குருவே/ குளவி/

கு3ருடே3/ பா4ஸ்கருடு3/ கு3ருடே3/ ப4த்3ருடு3/
குருவே/ பகலவன்/ குருவே/ மங்களமானவன்/

கு3ருடே3/ உத்தம/ க3தி/ கு3ருவு/ நீவு/-அனுகொண்டி/
குருவே/ உத்தமமான/ புகல்/ குரு/ நீயென/ கருதினேன்/

4ரனு/ தா3ஸுனி/ ப்3ரோவ/ த்யாக3ராஜ/ நுத/ (நீ)
புவியில்/ (இத்)தொண்டனை/ காக்க/ தியாகராசன்/ போற்றுவோனே/ உனது...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - நிஸ்1சலமு நிர்மலமனி - நிர்மலமு நிஸ்1சலமனி.

2 - விட3னாட3குமி - விட3னாட3குமீ.

Top

மேற்கோள்கள்
3 - சில்ல கி3ஞ்ஜ - தேற்றாக் கொட்டை (Botanical name - strychnos potatorum) - நீரைத் தெளிவாக்கும் - சீடனின் மனதைத் தெளிவாக்க குரு.

கபீர் தாசரும் இம்மாதிரியே பாடியுள்ளார் - கபீர் தாசரின் செய்யுட்கள் -

"குரு வண்ணான், சீடன் துணி, கடவுளின் பெயர் சவுக்காரம்;
உறுதியெனும் கல்லினில் துவைக்க, ஒப்பற்ற (வெண்மை) ஒளி தோன்றும்." (15)

தேற்றா மரம் - திருவாரூர் தல விருட்சம்

Top

4 - ப்4ரமரமு - bhramara-kITa-nyAya - குளவி - புழு நியாயம் - "குளவி, தன்னினமல்லாத மற்ற புழுக்களைத் தனது கூட்டிற்குக் கொண்டுவந்து, அவற்றினைக் கொட்டிக் கொட்டி, தன்னினமாக்குமென்பர். அதுபோன்று, 'நானே பிரமம்' (aham brahmAsmi) என்று தியானிப்பதனால், சீவான்மா, பிரமமே ஆகின்றான்."

'குளவி, புழுக்களைக் கொட்டிக் கொட்டித் தன்னினமாக்கும்' என்ற நம்பிக்கை, குளவிகளின் முட்டையிடும் தன்மையினைப் பொருத்து இருக்கலாம். குளவிகள் மற்ற புழுக்களின் முட்டைகளைத் தனது இனத்திற்கு உணவாக்குகின்றது. இது ஆங்கிலத்தில் 'parasitize' எனப்படும். குளவி.

Top

விளக்கம்
5 - 4ரனு தா3ஸுனி ப்3ரோவ - புவியில் இத்தொண்டனைக் காக்க - இங்கு, இதனைப் பல்லவியுடன் இணைத்துப் பொருள் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், இதனை, 'கு3ருவு நீவனுகொண்டி' என்பதுடன் இணைத்து, 'புவியில் இத்தொண்டனைக் காக்க, உன்னை குருவெனக் கருதினேன்' என்றும் பொருள் கொள்ளலாம்.

பகலவன் - மன இருளை நீக்க

Top

No comments: