Wednesday, September 15, 2010

தியாகராஜ கிருதி - ப்ரொத்3து3 பொய்யெனு - ராகம் தோடி - Proddu Poyyenu - Raga Todi

பல்லவி
1ப்ரொத்3து3 பொய்யெனு ஸ்ரீ ராமுனி
பூனி ப4ஜிம்பவே மனஸா

அனுபல்லவி
நித்3து3ர சேத கொன்னாள்ளு விஷய
பு3த்3து4ல சேத கொன்னாள்ளு ஓ மனஸா (ப்ரொ)

சரணம்
சரணம் 1
ப்ரொத்3து3ன லேசி 2த்ரி-தாபமுலனு நருல
பொக3டி3 பொக3டி3 கொன்னாள்ளு 3பட்டி-
யெத்3து3
ரீதி கன்ன 4தாவுல பு4ஜியிஞ்சி
ஏமி தெலியக கொன்னாள்ளு
முத்3து33 தோசு ப4வ ஸாக3ரமுன
முனிகி3 தேலுசு கொன்னாள்ளு
பத்3து3 மாலின பாமர ஜனுலதோ வெர்ரி
பலுகுலாடு3சு கொன்னாள்ளு ஓ மனஸா (ப்ரொ)


சரணம் 2
முத3முன த4ன தனயாகா3ரமுலு ஜூசி
மத3மு சேத கொன்னாள்ளு அந்து3
செத3ரினயந்த 5ஸோ1கார்ணவ க3துடை3
ஜாலி ஜெந்து3டயு கொன்னாள்ளு-
யெத3டி பச்ச ஜூசி தாள லேக
தானிலனு திருகு3ட கொன்னாள்ளு
6முதி3 மதி3 தப்பின வ்ரு2த்34 தனமுசே
முந்து3 வெனுக தெலியகயே கொன்னாள்ளு (ப்ரொ)


சரணம் 3
யாகா3தி3 கர்மமு ஸேயவலெனனு-
யலஸட சேத கொன்னாள்ளு அந்து3
ராக3 லோப4முலதோனபராத4முல ஜேஸி
ராஜஸமுன கொன்னாள்ளு
பா3கு33 நாம கீர்தனமுலு ஸேயுடே
பா4க்3யமனக கொன்னாள்ளு
த்யாக3ராஜ நுதுடை3ன ஸ்ரீ ராமுனி
தத்வமு தெலியகயே கொன்னாள்ளு (ப்ரொ)


பொருள் - சுருக்கம்
ஓ மனமே!

  • பொழுது போனது;
  • இராமனை விரதம் பூண்டுத் தொழுவாய்.

    • உறக்கத்துடன் சில நாள்;
    • விடய எண்ணங்களுடன் சில நாள்;

    • காலையெழுந்து, மூவாசையினால் மனிதர்களைப் புகழ்ந்து புகழ்ந்துச் சில நாள்;
    • பட்டி மாடு போன்று, கண்ட இடங்களில் உண்டு, ஏதுமறியாது சில நாள்;
    • அழகாகத் தோன்றும் பிறவிக் கடலினில் மூழ்கி, மிதந்துச் சில நாள்;
    • முறை தவறிய தீய மக்களுடன், மூடத்தனமான உரைகளாடிச் சில நாள்;

    • களிப்புடன், செல்வம், மக்கள், வீடுகளை நோக்கி, செருக்குடன் சில நாள்;
    • அதனில் சிந்திய அத்தனைத் துயரக்கடலில் உழல்வோனாகி, துன்பமடைதல் சில நாள்;
    • எதிர்ப் பச்சையினை கண்டு, பொறுக்க மாட்டாது, தான் உலகினில் திரிதல் சில நாள்;
    • முடிவில், அறிவு தவறிய முதுமையுடன் முன்பின் தெரியாமலே சில நாள்;

    • வேள்வி முதலிய கருமங்கள் இயற்ற வேணுமெனும் அலைச்சல்களுடன் சில நாள்;
    • அதனில் பற்று, பேராசைகளுடன் குற்றங்களிழைத்து, இராசத குணத்துடன் சிலநாள்;
    • சிறக்க, (இறைவனின்) நாம கீர்த்தனை செய்தலே பேறெனாது சில நாள்;
    • தியாகராசன் போற்றுவோனாகிய, இராமனின் தத்துவம் அறியாமலே சில நாள்;


  • பொழுது போனது;
  • இராமனை விரதம் பூண்டுத் தொழுவாய்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ப்ரொத்3து3/ பொய்யெனு/ ஸ்ரீ ராமுனி/
பொழுது/ போனது/ ஸ்ரீ ராமனை/

பூனி/ ப4ஜிம்பவே/ மனஸா/
விரதம் பூண்டு/ தொழுவாய்/ மனமே/


அனுபல்லவி
நித்3து3ர சேத/ கொன்னாள்ளு/ விஷய/
உறக்கத்துடன்/ சில நாள்/ விடய/

பு3த்3து4ல சேத/ கொன்னாள்ளு/ ஓ மனஸா/ (ப்ரொ)
எண்ணங்களுடன்/ சில நாள்/ ஓ மனமே/ பொழுது...


சரணம்
சரணம் 1
ப்ரொத்3து3ன/ லேசி/ த்ரி-தாபமுலனு/ நருல/
காலை/ எழுந்து/ மூவாசையினால்/ மனிதர்களை/

பொக3டி3/ பொக3டி3/ கொன்னாள்ளு/ பட்டி/
புகழ்ந்து/ புகழ்ந்து/ சில நாள்/ பட்டி/

எத்3து3/ ரீதி/ கன்ன/ தாவுல/ பு4ஜியிஞ்சி/
மாடு/ போன்று/ கண்ட/ இடங்களில்/ உண்டு/

ஏமி/ தெலியக/ கொன்னாள்ளு/
ஏதும்/ அறியாது/ சில நாள்/

முத்3து33/ தோசு/ ப4வ/ ஸாக3ரமுன/
அழகாக/ தோன்றும்/ பிறவி/ கடலினில்/

முனிகி3/ தேலுசு/ கொன்னாள்ளு/
மூழ்கி/ மிதந்து/ சில நாள்/

பத்3து3/ மாலின/ பாமர/ ஜனுலதோ/ வெர்ரி/
முறை/ தவறிய/ தீய/ மக்களுடன்/ மூடத்தனமான/

பலுகுலு-ஆடு3சு/ கொன்னாள்ளு/ ஓ மனஸா/ (ப்ரொ)
உரைகளாடி/ சில நாள்/ ஓ மனமே/ பொழுது...


சரணம் 2
முத3முன/ த4ன/ தனய/-ஆகா3ரமுலு/ ஜூசி/
களிப்புடன்/ செல்வம்/ மக்கள்/ வீடுகளை/ நோக்கி/

மத3மு/ சேத/ கொன்னாள்ளு/ அந்து3/
செருக்குடன்/ சில நாள்/ அதனில்/

செத3ரின/-அந்த/ ஸோ1க/-அர்ணவ/ க3துடை3/
சிந்திய/ அத்தனை/ துயர/ கடலில்/ உழல்வோனாகி/

ஜாலி/ ஜெந்து3டயு/ கொன்னாள்ளு/
துன்பம்/ அடைதல்/ சில நாள்/

எத3டி/ பச்ச/ ஜூசி/ தாள/ லேக/
எதிர்/ பச்சையினை/ கண்டு/ பொறுக்க/ மாட்டாது/

தானு/-இலனு/ திருகு3ட/ கொன்னாள்ளு/
தான்/ உலகினில்/ திரிதல்/ சில நாள்/

முதி3/ மதி3/ தப்பின/ வ்ரு2த்34 தனமுசே/
முடிவில் (முதுமையில்)/ அறிவு/ தவறிய/ முதுமையுடன்/

முந்து3/ வெனுக/ தெலியகயே/ கொன்னாள்ளு/ (ப்ரொ)
முன்/ பின்/ தெரியாமலே/ சில நாள்/ பொழுது...


சரணம் 3
யாக3/-ஆதி3/ கர்மமு/ ஸேயவலெனு/-அனு/
வேள்வி/ முதலிய/ கருமங்கள்/ இயற்ற வேணும்/ எனும்/

அலஸட சேத/ கொன்னாள்ளு/ அந்து3/
அலைச்சல்களுடன்/ சில நாள்/ அதனில்/

ராக3/ லோப4முலதோனு/-அபராத4முல/ ஜேஸி/
பற்று/ பேராசைகளுடன்/ குற்றங்கள்/ இழைத்து/

ராஜஸமுன/ கொன்னாள்ளு/
இராசத குணத்துடன்/ சிலநாள்/

பா3கு33/ நாம/ கீர்தனமுலு/ ஸேயுடே/
சிறக்க/ (இறைவனின்) நாம/ கீர்த்தனை/ செய்தலே/

பா4க்3யமு/-அனக/ கொன்னாள்ளு/
பேறு/ எனாது/ சில நாள்/

த்யாக3ராஜ/ நுதுடை3ன/ ஸ்ரீ ராமுனி/
தியாகராசன்/ போற்றுவோனாகிய/ ஸ்ரீ ராமனின்/

தத்வமு/ தெலியகயே/ கொன்னாள்ளு/ (ப்ரொ)
தத்துவம்/ அறியாமலே/ சில நாள்/ பொழுது...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
4 - தாவுல - தாவுன.

Top

மேற்கோள்கள்

விளக்கம்
1 - ப்ரொத்3து3 பொய்யெனு - பல்லவியில் இச்சொல்லுக்கு 'காலம் கடந்துவிட்டது' என்ற பொருள் படும். அனுபல்லவி மற்றும் சரணங்களிலுள்ள 'கொன்னாள்ளு' என்ற சொல்லுடன் இணைத்துப் பொருள் கொள்கையில், 'காலம் கடத்திவிட்டாய்' என்றும் பொருள்படும்.

2 - த்ரி-தாபமுலனு - மூவாசை - மூன்று துயரங்கள் (ஆத்யாத்மிக-ஆதிபௌதிக-ஆதிதைவீக) என்றும் கொள்ளலாம்

Top

3 - பட்டி எத்3து3 - புத்தகங்களில், இதற்கு, 'திரியும் காளை' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. 'எத்3து3' என்ற சொல், 'காளை' எனப் பொருள்படும். ஆனால், 'பட்டி' என்ற தெலுங்கு சொல்லுக்கு 'திரிதல்' என்ற பொருளில்லை. தியாகராஜர், தமது 'எடுல ப்3ரோதுவோ' என்ற சக்ரவாக கீர்த்தனையிலும், இதே சொற்களைப் பயன்படுத்துகின்றார். அந்த கீர்த்தனையிலும், இவ்விடத்திலும், 'திரியும் காளை' என்ற பொருள் பொருந்தும். தமிழ்ச் சொல்லாகிய 'பட்டி' அத்தகைய பொருள் தரும். எனவே, தியாகராஜர், 'பட்டி' என்ற தமிழ்ச்சொல்லினைப் பயன்படுத்தியுள்ளார் என்று நான் கருதுகின்றேன்.

தென்னிந்தியாவில், சிவன் கோவிலுக்கு, காளைக் கன்றினை மக்கள் அளிப்பது வழக்கம். அக்காளை, 'கோவில் காளை' எனப்படும். அதன்மீது முத்திரையொன்றும் குத்தப்படும். அக்காளை, தன்னிஷ்டப்படித் திரியும். அது, எங்கு உணவு கிடைத்தாலும் உண்ணும். அத்தகைய பொருளும் இவ்விடம் பொருந்தும். ஆனால், 'பட்டி' என்ற சொல்லினால் 'கோவில் காளை' என்ற பொருள் கொள்ள இயலாது.

Top

5 - ஸோ1கார்ணவ க3துடை3 (ஸோ1க அர்ணவ க3துடை3) - இச்சொல்லினை, 'ஸோ1க அர்ண அவக3துடை3' என்றும் பிரிக்கலாம். ஆனால், 'அவக3துடை3' என்ற சொல் நேர் மாறான பொருள் தருதலால், அது பொருந்தாது.

6 - முதி3 மதி3 தப்பின வ்ரு2த்34 தனமுசே - 'முதி3' மற்றும், அடுத்து வரும், 'வ்ரு2த்34 தனமு' என்ற இரு சொற்களுக்கும், 'முதுமை' என்றுதான் பொருள். எனவே, 'முதி3' என்ற சொல்லுக்கு 'முடிவில்' என்ற பொருள் கொள்ளப்பட்டது.

Top

பொழுது போனது - காலம் கடந்தது
விடயம் - புலன் நுகர்ச்சி
மூவாசை - மனைவி, மக்கள், செல்வம்
எதிர்ப் பச்சை - மற்றவரின் செழிப்பு
பற்று, பேராசைகள் - காமம் முதலிய உட்பகைவர் அறுவர்.
இராசதம் - முக்குணங்களிலொன்று
இராமனின் தத்துவம் - இராமன் பரம்பொருளென

Top


Updated on 16 Sep 2010

2 comments:

Govindaswamy said...

அன்புள்ள திரு கோவிந்தன் அவர்களே
சரணம் 2 ல் யெத3டி பச்ச ஜூசி என்பதற்கு ””’எதிர்ப் பச்சையினை கண்டு என்று பொருள் கொடுத்துள்ளீர். இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது வழக்கிலுள்ளது. அக்கரைப்பச்சை என்பது சரியாக இருக்கும் என்று நான் எண்ணுகிறேன்.
- பட்டி எத்3து3 - 'எடுல ப்3ரோதுவோ' என்ற சக்ரவாக கீர்த்தனையில் நீங்கள் பட்டி கொட்டு என்பதை வட்டி கொட்டு என்று எடுத்துக்கொண்டுள்ளீர். கோவில்காளை என்பது சரியென்று நான் எண்ணுகிறேன்.
வணக்கம்
கோவிந்தசாமி

V Govindan said...

திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,

தியாகராஜர் கூறும் 'எத3டி பச்ச' என்பது அண்டையிலுள்ளோரைப் பார்த்து பொறாமைப் படுவதைக் குறிப்பதாகும். 'அக்கரைப் பச்சை'யென்பது இல்லாத ஒன்றை இருப்பதாகக் கொள்வதாகும். எனவே 'எத3டி பச்ச' என்பதனை 'அக்கரைப் பச்சை' யென்பது சரியாகாது.

தியாகராஜர் உபயோகிக்கும் 'பட்டி எத்3து3' என்ற சொல் திரியும் காளையைக் குறிக்கும். 'வட்டி கொட்3டு' என்பது பயனற்றுப் போன மாட்டினைக் குறிக்கும். 'கோவில் காளை' என்ற பொருள் ஏன் கொள்ள இயலாது என்று விளக்கியுள்ளேன்.

வணக்கம்
கோவிந்தன்