Wednesday, August 25, 2010

தியாகராஜ கிருதி - கட3 தேர - ராகம் தோடி - Kada Tera - Raga Todi

பல்லவி
கட3 தேர ராதா3 மனஸ

அனுபல்லவி
எட3 லேக ப4ஜன ஜேஸி நீ-
யெட3 கல்கு3 1நிஜ3ப்33ரல தெலிஸி (கட3)

சரணம்
2ல சித்த 2லௌகிகமனே
ஸ்1ரு2ங்க2லமந்து333லகனே
உலூக2ல ப3த்3து4னிகி நிஜ தா3ஸுடை3
வெலஸில்லு த்யாக3ராஜு மாட வினி (கட3)


பொருள் - சுருக்கம்
மனமே!

  • தியாகராசனின் சொல்லினைக் கேட்டு கடைத்தேறலாகாதா?
    • இடைவிடாது பஜனை செய்து, உன்னிடம் உள்ள உண்மை, பொய்களினைத் தெரிந்து, கடைத்தேறலாகாதா?
    • இழிந்த எண்ண, உலகியல் எனும் சங்கிலியினில் சிக்காது, உரலில் கட்டுண்டவனின் உண்மைத் தொண்டனாகித் திகழ்வாய்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
கட3/ தேர/ ராதா3/ மனஸ/
கடை/ தேற/ ஆகாதா/ மனமே/


அனுபல்லவி
எட3/ லேக/ ப4ஜன/ ஜேஸி/
இடை/ விடாது/ பஜனை/ செய்து/

நீயெட3/ கல்கு3/ நிஜ/ த3ப்33ரல/ தெலிஸி/ (கட3)
உன்னிடம்/ உள்ள/ உண்மை/ பொய்களினை/ தெரிந்து/ கடைத்தேற...


சரணம்
2ல/ சித்த/ லௌகிகமு/-அனே/
இழிந்த/ எண்ண/ உலகியல்/ எனும்/

ஸ்1ரு2ங்க2லமு-அந்து3/ த33லகனே/
சங்கிலியினில்/ சிக்காது/

உலூக2ல/ ப3த்3து4னிகி/ நிஜ/ தா3ஸுடை3/
உரலில்/ கட்டுண்டவனின்/ உண்மை/ தொண்டனாகி/

வெலஸில்லு/ த்யாக3ராஜு/ மாட/ வினி/ (கட3)
திகழ்வாய்/ தியாகராசனின்/ சொல்லினை/ கேட்டு/ கடைத்தேற...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - நிஜ - நிஜமு - நிஜபு.

Top

மேற்கோள்கள்

விளக்கம்
2 - லௌகிகமு - உலகியல் - உலக நடவடிக்கைகள். புருஷார்த்தங்கள் (த4ர்ம, அர்த2, காம, மோக்ஷ) எனப்படும், அறம், பொருள், இன்பம், மூலமாக, படிப்படியாக, வீடு பெறுதலினை, 'லௌகிகம்' என்று பொதுவாகக் கூறுவர். ஆனால், கீதையில், கண்ணன் அறுதியிட்டுக் கூறிய, 'அனைத்து தர்மங்களையும் விடுத்து என்னையே சரணடைவாய்' என்ற சொற்களினை, தியாகராஜர், இந்த கீர்த்தனையில் எதிரொலிப்பதாகத் தெரிகின்றது

உரலில் கட்டுண்டவன் - கண்ணன்

Top


Updated on 25 Aug 2010

No comments: