Tuesday, January 6, 2009

தியாகராஜ கிருதி - யக்3ஞாது3லு - ராகம் ஜய மனோஹரி - Yajnaadulu - Raga Jaya Manohari

பல்லவி
யக்3ஞாது3லு ஸுக2மனுவாரிகி ஸமுலக்3ஞானுலு க3லரா ஓ மனஸா

அனுபல்லவி
ஸு-க்3ஞான த3ரித்3ர பரம்பருலஸுர சித்துலு ஜீவாத்ம ஹிம்ஸ க3ல (ய)

சரணம்
3ஹு ஜன்மம்பு31வாஸன யுதுலை அஹி விஷ ஸம விஷயாக்ரு2ஷ்டுலை
23ஹிரானனுலை த்யாக3ராஜு ப4ஜியிஞ்சு 3ஸ்ரீ ராமுனி தெலியக (ய)


பொருள் - சுருக்கம்
பிராணிகளைத் துன்புறுத்தும் வேள்விகள் முதலானவை சுகமளிக்குமென்பவருக்கு ஈடான அறிவிலிகள் உளரோ, ஓ மனமே?

(இவர்கள்) மெய்யறிவினில் வறிய பரம்பரையினர்; அரக்க சித்தமுடையோர்.

பல பிறவிகளின் வாசனைகளுடையோராகி, அரவு நச்சுக்கீடான விடயங்களால் ஈர்க்கப்பட்டோராகி, வெளி நோக்குடையோராகி, தியாகராசன் தொழும் இராமனையறியாது வேள்விகள் முதலானவை சுகமளிக்குமென்பவருக்கு ஈடான அறிவிலிகள் உளரோ?


பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
யக்3ஞ/-ஆது3லு/ ஸுக2மு/-அனுவாரிகி/ ஸமுலு/-அக்3ஞானுலு/ க3லரா/ ஓ மனஸா/
வேள்விகள்/ முதலானவை/ சுகம ளிக்கும்/ என்பவருக்கு/ ஈடான அறிவிலிகள்/ உளரோ/ ஓ மனமே/


அனுபல்லவி
ஸு-க்3ஞான/ த3ரித்3ர/ பரம்பருலு/-அஸுர/ சித்துலு/ ஜீவ-ஆத்ம/ ஹிம்ஸ க3ல/ (ய)
மெய்யறிவினில்/ வறிய/ பரம்பரையினர்/ அரக்க/ சித்தமுடையோர்/ பிராணிகளை/ துன்புறுத்தும்/ வேள்விகள்...


சரணம்
3ஹு/ ஜன்மம்பு3ல/ வாஸன/ யுதுலை/ அஹி/ விஷ/ ஸம/ விஷய/-ஆக்ரு2ஷ்டுலை/
பல/ பிறவிகளின்/ வாசனைகள்/ உடையோராகி/ அரவு/ நச்சுக்கு/ ஈடான/ விடயங்களால்/ ஈர்க்கப்பட்டோராகி/

3ஹிர்/-ஆனனுலை/ த்யாக3ராஜு/ ப4ஜியிஞ்சு/ ஸ்ரீ ராமுனி/ தெலியக/ (ய)
வெளி/ நோக்குடையோராகி/ தியாகராசன்/ தொழும்/ ஸ்ரீ ராமனை/ அறியாது/ வேள்விகள்...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்
1 - வாஸன - வாசனைகள் - முற்பிறவிகளில் ஆழமாகப் பதிந்த எண்ணங்களின் தழும்புகள் - 'பதஞ்சலி யோக சூத்திரங்கள், அத்தியாயம் 4, செய்யுட்கள் 8 - 11 நோக்குக.

விளக்கம்
2 - 3ஹிரானன - வெளிநோக்குதல் - உள் நோக்குதற்கெதிரான செயல்கள் - 'லலிதா ஸஹஸ்ர நாம'த்தில் அம்மையின் பெயர்கள் - அந்தர்-முக2 ஸமாராத்4யா - ப3ஹிர்-முக2 ஸுது3ர்லபா4 - "உள் நோக்குப் பார்வை உடையோரால் சிறக்கத் தொழப்பெற்றவள் - வெளி நோக்குப் பார்வை உடையோரால் உணரப் பெறாதவள்".

Top

நம்முடைய பார்வை ஏன் எவ்வமயமும் வெளி நோக்கியே உள்ளது - உள் நோக்கு ஏன் கடினச் செயல் என்பதற்கு கடோபநிஷதச் செய்யுள் 'பராஞ்சி கா2னி' (II.i.1) விளக்கம் நோக்கவும்

3 - ஸ்ரீ ராமுனி தெலியக - இராமனை அறியாது - தியாகராஜர் 'மனவினாலகிஞ்ச' - ராகம் நளின காந்தி - கீர்த்தனையில் இராமனைக் குறித்து மொழிவது -

"கருமத்துப் பாலின் கோட்பாடுகளினால் ஈர்க்கப்பட்டு, பிறவியெனும் அடவியில் உழன்று, (மக்கள்) துயரடையக் கண்டு, மனித அவதாரமெடுத்து, காண்பித்தானே, நன்னடத்தையினை."

விடயங்கள் - புலன் நுகர்ச்சி

Top


Updated on 07 Jan 2009

No comments: