Showing posts with label Mohanam Raga. Show all posts
Showing posts with label Mohanam Raga. Show all posts

Wednesday, July 15, 2009

தியாகராஜ கிருதி - வேத3 வாக்யமனி - ராகம் மோஹனம் - Veda Vaakyamani - Raga Mohanam - Nauka Charitram

பல்லவி
1வேத3 வாக்யமனியெஞ்சிரியீ
2வெலது3லெல்ல ஸம்மதிஞ்சிரி

சரணம்
சரணம் 1
சீரலன்னியு வத3லிஞ்சிரியெந்தோ
ஸிக்3கு3 சேதனந்து3னுஞ்சிரி (வேத3)


சரணம் 2
அந்து3ன நிலுவக போயெனு மேனு-
லந்த3ரிகி 3தடு3வனாயெனு (வேத3)


சரணம் 3
4கனுகொந்து3ரோயனி ஸரகு3ன பாலிண்ட்3
கரமுல 5மூய மருகு3னா (வேத3)


சரணம் 4
மானமுலனு மூஸுகொந்து3ரோ தம
ப்ராணமுலனு 6காசுகொந்து3ரோ (வேத3)


சரணம் 5
செலுல 7நோரெண்ட33னாயெனு நீரு
8சிலு சிலுமனியெக்குவாயெனு (வேத3)


சரணம் 6
வல்வலு கானக போயெனு ஸதுல
வத3னமுலடு ஸ்ருக்கனாயெனு (வேத3)


சரணம் 7
கரகி3 கரகி3யங்க3லார்சிரி 9செலுலு
கமலாக்ஷுனுரமுன ஜேர்சிரி (வேத3)


சரணம் 8
கனுல காடுக நீரு காரகா3 ஜூசி
காந்துடெ3ந்தோ முத்3து3 காரக3 (வேத3)


சரணம் 9
ரமணுல மத3மெல்ல ஜரிகெ3னு த்யாக3-
ராஜ நுதுனி மதி3 கரகெ3னு (வேத3)


பொருள் - சுருக்கம்
  • மறைச் சொல்லென எண்ணினர்; இப்பெண்டிர் யாவரும் சம்மதித்தனர்;

  • சேலைகள் யாவற்றினையும் அவிழ்த்தனர், மிக்கு வெட்கத்துடன்; அங்கு (படகின் ஓட்டையில்) இட்டனர்;

  • அங்கு (அவை) நிலைக்காமற் போயின; யாவரின் உடல்களும் நனையலாயின;

  • (பிறர்) காண்பரோயென விரைவாக மார்பகங்களைக் கரங்களினால் மூட, மறையுமோ?

  • மானத்தினை மறைத்துக் கொள்வரோயன்றி தமது உயிரினைக் காத்துக்கொள்வரோ?

  • பெண்களின் நாக்கு வறளலாயிற்று; நீர் சிலு சிலுவென மிகலாயிற்று;

  • ஆடைகள் காணாமற்போயின; பெண்களின் வதனங்களப்படி சுருங்கலாயின;

  • உருகியுருகிக் கதறலாயினர்; மகளிர் கமலக்கண்ணனை மார்போடணைத்தனர்;

  • (பெண்கள்) கண்களின் அஞ்சனம் நீராகப் பெருகக் கண்டு கண்ணாளன் (முகம்) மிக்கு எழில் சொரிய;

  • பெண்களின் செருக்கெல்லாம் கரைந்தது; தியாகராசனால் போற்றப் பெற்றோனின் மனதுருகியது.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
வேத3/ வாக்யமு/-அனி/-எஞ்சிரி/-ஈ/
மறை/ சொல்/ என/ எண்ணினர்/ இந்த/

வெலது3லு/-எல்ல/ ஸம்மதிஞ்சிரி/
பெண்டிர்/ யாவரும்/ சம்மதித்தனர்/


சரணம்
சரணம் 1
சீரலு/-அன்னியு/ வத3லிஞ்சிரி/-எந்தோ/
சேலைகள்/ யாவற்றினையும்/ அவிழ்த்தனர்/ மிக்கு/

ஸிக்3கு3 சேதனு/-அந்து3ன/-உஞ்சிரி/ (வேத3)
வெட்கத்துடன்/ அங்கு (படகின் ஓட்டையில்)/ இட்டனர்/


சரணம் 2
அந்து3ன/ நிலுவக/ போயெனு/ மேனுலு/-
அங்கு/ (அவை) நிலைக்காமற்/ போயின/ உடல்கள்/

அந்த3ரிகி/ தடு3வனு-ஆயெனு/ (வேத3)
யாவருக்கும்/ நனையலாயின/


சரணம் 3
கனுகொந்து3ரோ/-அனி/ ஸரகு3ன/ பாலிண்ட்3ல/
(பிறர்) காண்பரோ/ என/ விரைவாக/ மார்பகங்களை/

கரமுல/ மூய/ மருகு3னா/ (வேத3)
கரங்களினால்/ மூட/ மறையுமோ/


சரணம் 4
மானமுலனு/ மூஸுகொந்து3ரோ/ தம/
மானத்தினை/ மறைத்துக் கொள்வரோ/ (அன்றி) தமது/

ப்ராணமுலனு/ காசுகொந்து3ரோ/ (வேத3)
உயிரினை/ காத்துக்கொள்வரோ/


சரணம் 5
செலுல/ நோரு/-எண்ட33னு-ஆயெனு/ நீரு/
பெண்களின்/ நாக்கு/ வறளலாயிற்று/ நீர்/

சிலு/ சிலு/-அனி/-எக்குவ-ஆயெனு/ (வேத3)
சிலு/ சிலு/ வென/ மிகலாயிற்று/


சரணம் 6
வல்வலு/ கானக/ போயெனு/ ஸதுல/
ஆடைகள்/ காணாமற்/ போயின/ பெண்களின்/

வத3னமுலு/-அடு/ ஸ்ருக்கனு-ஆயெனு/ (வேத3)
வதனங்கள்/ அப்படி/ சுருங்கலாயின/


சரணம் 7
கரகி3/ கரகி3/-அங்க3லார்சிரி/ செலுலு/
உருகி/ உருகி/ கதறலாயினர்/ மகளிர்/

கமல/-அக்ஷுனி/-உரமுன/ ஜேர்சிரி/ (வேத3)
கமல/ கண்ணனை/ மார்போடு/ அணைத்தனர்/


சரணம் 8
கனுல/ காடுக/ நீரு/ காரகா3/ ஜூசி/
(பெண்கள்) கண்களின்/ அஞ்சனம்/ நீராக/ பெருக/ கண்டு/

காந்துடு3/-எந்தோ/ முத்3து3/ காரக3/ (வேத3)
கண்ணாளன்/ (முகம்) மிக்கு/ எழில்/ சொரிய/


சரணம் 9
ரமணுல/ மத3மு/-எல்ல/ ஜரிகெ3னு/
பெண்களின்/ செருக்கு/ எல்லாம்/ கரைந்தது/

த்யாக3ராஜ/ நுதுனி/ மதி3/ கரகெ3னு/ (வேத3)
தியாகராசனால்/ போற்றப் பெற்றோனின்/ மனது/ உருகியது/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - வெலது3லெல்ல - பொலதுலெல்ல - 'வெலதி3', 'பொலதி' இரண்டுமே பெண்களைக் குறிக்கும். எதுகை மோனையின்படி, 'வெலது3லெல்ல' சரியெனப் படுகின்றது.

3 - தடு3வனாயெனு - எல்லா புத்தகங்களிலும், 'தட3வனாயெனு' என்று கொடுக்கப்பட்டுள்ளது. தெலுங்கில், 'தட3வு' (தமிழ் சொல்லுக்கு ஈடானது), மற்றும் 'தடு3வு' (தடி3யு) (நனைதல்) என இரண்டு சொற்கள் உள்ளன. இவ்விடத்தில், 'நனைதல்' என்ற பொருளுடைய சொல்லே பொருந்தும். எனவே 'தட3வனாயெனு' பொருந்தாது. 'தடு3வனாயெனு' அல்லது 'தடி3யனாயெனு' என்றிருக்கவேண்டும்.

4 - கனுகொந்து3ரோயனி - கனுகொந்து3னோயனி : 'கனுகொந்து3னோயனி' இவ்விடத்தில் பொருந்தாது.

5 - மூய - மூஸிதே

6 - காசுகொந்து3ரோ - ப்3ரோசுகொந்து3ரோ

7 - எண்ட33னாயெனு - எண்டனாயெனு

9 - செலுலு - செலுனி : 'செலுனி' பொருந்தாது.

Top

மேற்கோள்கள்

விளக்கம்
1 - வேத3 வாக்ய - மறைச் சொல்லென - தட்டமுடியாதது

8 - சிலு சிலுமனி - சிலு சிலுவென - நீர் ஓட்டையினில் புகும் ஒலி

'நௌக சரித்திரம்' (ஓடக்கதை) எனும் நாட்டிய நாடகத்தினில் வரும் பாடல் இது.

பாடலின் பின்னணி - ஆய்ச்சியர்கள் கண்ணனை யமுனை நதிக்கரையில் சந்தித்து, எல்லோருமாக ஓடத்தில் பயணம் செய்கின்றனர். கண்ணனை சந்தித்த களிப்பில், ஆய்ச்சியர் கண்ணனை தமது சொத்தாக நினைத்து செருக்கடைகின்றனர். அவர்களுடைய செருக்கினை யடக்க, கண்ணன் புயலை உண்டாக்குகின்றான். புயலில் படகு தத்தளிக்கின்றது. படகினில் ஓட்டை விழுந்து தண்ணீர் உள்ளே புகுகின்றது. கண்ணன் தனக்கு உடல் நலம் குன்றியதாகப் பாசாங்கு செய்கின்றான். அதனால் தாங்கள் எப்படி கரை சேர்வது, கண்ணனை எங்ஙனம் உயிர்காப்பது என பெருங்கவலை கொள்கின்றனர். அதற்கு, கண்ணன் படகின் ஓட்டையை அடைக்க அவர்கள் யாவருடைய ரவிக்கைகளையும் அவிழ்த்து ஓட்டையில் திணிக்கச்சொல்கின்றான். ஆய்ச்சியர் அங்ஙனமே செய்தும் ரவிக்கைகளெல்லாம் நீரில் அடித்துக்கொண்டு போய்விடுகின்றன. கண்ணன் அவர்களை தங்களுடைய சேலைகளையும் அவிழ்த்து ஓட்டையை அடைக்கும்படி கூறுகின்றான். இதற்குமேல் இந்தப் பாடல்.

கமலக்கண்ணன் - கண்ணன்

தியாகராசனால் போற்றப் பெற்றோன் - கண்ணன்

Top


Updated on 15 Jul 2009

Monday, July 13, 2009

தியாகராஜ கிருதி - ராம ராம ராம ராமாயனி - ராகம் மோஹனம் - Rama Rama Rama Ramaayani - Raga Mohanam

பல்லவி
1ராம ராம ராம ராமாயனினந்த
2ராஜபு ஜூபேலரா ஓ ராம

சரணம்
சரணம் 1
ஏடி ஜன்மமிதி3 3ஏடிகி ப்3ரதுகு ராம
ஏமெஞ்சுகொன்னாவோ ஓ ராம (ராம)


சரணம் 2
ஆடலைன நாது3 பாடல வினுசு
மாடலாட3வெந்து3கோ ஓ ராம (ராம)


சரணம் 3
ஸரிவாரிலோ நன்னு கருண ஜூசி நாது3
கரமு பட்டவெந்து3கோ ஓ ராம (ராம)


சரணம் 4
ஆஸகொன்ன நாது3 கா3ஸி தீர்ப லேக
வாஸியேமி 4கல்கெ3னோ ஓ ராம (ராம)


சரணம் 5
3யதோ நனு ஸே1ஷ ஸ1யன இந்த3ரிலோன
நயமு ஸேய தக்குவா ஓ ராம (ராம)


சரணம் 6
பதித பாவன நீகு ஹிதுலைன வாரி
ஜத-கூ33க போதினா ஓ ராம (ராம)


சரணம் 7
நாடி ப4க்துலு நீகேடி வாவுலோ கொஞ்ச
பாடி லேக போயெனா ஓ ராம (ராம)


சரணம் 8
அல நாடு3 நீ வாரு கொலிசினடுல நாது3
தலபு கா3க போயெனா ஓ ராம (ராம)


சரணம் 9
ப்3ரோசி ப்3ரோவகனு ஜூசி ஜூட3கனு
ஏசுடகே தோசெனா ஓ ராம (ராம)


சரணம் 10
ஓ ஜக33வன ஸரோஜ நயன த்யாக3-
ராஜ ரக்ஷக ஸுகு3ண ஓ ராம (ராம)


பொருள் - சுருக்கம்
ஓ இராமா! அரவணைத் துயில்வோனே! வீழ்ந்தோரை புனிதப் படுத்துவோனே! ஓ உலகத்தைக் காப்போனே! கமலக் கண்ணா! தியாகராசனைக் காப்போனே! நற்குணத்தோனே!

  • இராமா, இராமா, இராமா, இராமாயென்றதும் அரச பார்வை ஏனய்யா?

  • என்ன வாழ்க்கையிது? எதற்கிந்த பிழைப்பு? என்ன எண்ணியுள்ளாயோ?

  • கேளிக்கையான எனது பாடல்களைக் கேட்டுக்கொண்டே சொல் பகராயேனோ?

  • நிகரானவரில் என்னைக் கருணித்து, எனது கைப் பற்றாயேனோ?

  • (உன்மீது) ஆசை கொண்ட எனது துயரம் தீர்க்காது, வாசியென்ன நேர்ந்ததோ?

  • தயையுடன், என்னை, இவர்கள் நடுவில் பரிவு காட்ட, குறைவாமோ?

  • உனக்கு வேண்டியோரின் கூட்டு சேராமற் போனேனோ?

  • அன்றைய தொண்டர்கள் உனக்கென்ன சொந்தமோ? சிறிதளவு அக்கறையுமில்லாமற் போனதோ?

  • முன்னாளில் உன்னவர்கள் (உன்னைப்) புகழ்ந்தது போன்று எனது எண்ணங்கள் இல்லாமற்போனதோ?

  • காத்தும், காவாமலும், பார்த்தும், பாராமலும் ஏமாற்றுதற்கே தோன்றியதோ?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ராம/ ராம/ ராம/ ராமா/-அனின-அந்த/
இராமா/ இராமா/ இராமா/ இராமா/ என்றதும்/

ராஜபு/ ஜூபு/-ஏலரா/ ஓ ராம/
அரச/ பார்வை/ ஏனய்யா/ ஓ இராமா/


சரணம்
சரணம் 1
ஏடி/ ஜன்மமு/-இதி3/ ஏடிகி/ ப்3ரதுகு/ ராம/
என்ன/ வாழ்க்கை/ இது/ எதற்கு/ (இந்த) பிழைப்பு/ இராமா/

ஏமி/-எஞ்சுகொன்னாவோ/ ஓ ராம/ (ராம)
என்ன/ எண்ணியுள்ளாயோ/ ஓ இராமா/


சரணம் 2
ஆடலைன/ நாது3/ பாடல/ வினுசு/
கேளிக்கையான/ எனது/ பாடல்களை/ கேட்டுக்கொண்டே/

மாடலாட3வு/-எந்து3கோ/ ஓ ராம/ (ராம)
சொல் பகராய்/ ஏனோ/ ஓ இராமா/


சரணம் 3
ஸரிவாரிலோ/ நன்னு/ கருண ஜூசி/ நாது3/
நிகரானவரில்/ என்னை/ கருணித்து/ எனது/

கரமு/ பட்டவு/-எந்து3கோ/ ஓ ராம/ (ராம)
கை/ பற்றாய்/ ஏனோ/ ஓ இராமா/


சரணம் 4
ஆஸகொன்ன/ நாது3/ கா3ஸி/ தீர்ப லேக/
(உன்மீது) ஆசை கொண்ட/ எனது/ துயரம்/ தீர்க்காது/

வாஸி/-ஏமி/ கல்கெ3னோ/ ஓ ராம/ (ராம)
வாசி/ என்ன/ நேர்ந்ததோ/ ஓ இராமா/


சரணம் 5
3யதோ/ நனு/ ஸே1ஷ/ ஸ1யன/ இந்த3ரிலோன/
தயையுடன்/ என்னை/ அரவணை/ துயில்வோனே/ இவர்கள் நடுவில்/

நயமு/ ஸேய/ தக்குவா/ ஓ ராம/ (ராம)
பரிவு/ காட்ட/ குறைவாமோ/ ஓ இராமா/


சரணம் 6
பதித/ பாவன/ நீகு/ ஹிதுலைன வாரி/
வீழ்ந்தோரை/ புனிதப் படுத்துவோனே/ உனக்கு/ வேண்டியோரின்/

ஜத/-கூ33க/ போதினா/ ஓ ராம/ (ராம)
கூட்டு/ சேராமற்/ போனேனோ/ ஓ இராமா/


சரணம் 7
நாடி/ ப4க்துலு/ நீகு/-ஏடி/ வாவுலோ/ கொஞ்ச/
அன்றைய/ தொண்டர்கள்/ உனக்கு/ என்ன/ சொந்தமோ/ சிறிதளவு/

பாடி/ லேக/ போயெனா/ ஓ ராம/ (ராம)
அக்கறையும்/ இல்லாமல்/ போனதோ/ ஓ இராமா/


சரணம் 8
அல/ நாடு3/ நீ வாரு/ கொலிசின/-அடுல/ நாது3/
முந்தைய/ நாளில்/ உன்னவர்கள்/ (உன்னைப்) புகழ்ந்தது/ போன்று/ எனது/

தலபு/ கா3க/ போயெனா/ ஓ ராம/ (ராம)
எண்ணங்கள்/ இல்லாமற்/ போனதோ/ ஓ இராமா/


சரணம் 9
ப்3ரோசி/ ப்3ரோவகனு/ ஜூசி/ ஜூட3கனு/
காத்தும்/ காவாமலும்/ பார்த்தும்/ பாராமலும்/

ஏசுடகே/ தோசெனா/ ஓ ராம/ (ராம)
ஏமாற்றுதற்கே/தோன்றியதோ/ ஓ இராமா/


சரணம் 10
ஓ/ ஜக3த்/-அவன/ ஸரோஜ/ நயன/ த்யாக3ராஜ/
ஓ/ உலகத்தை/ காப்போனே/ கமல/ கண்ணா/ தியாகராசனை/

ரக்ஷக/ ஸுகு3ண/ ஓ ராம/ (ராம)
காப்போனே/ நற்குணத்தோனே/ ஓ இராமா/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ராம ராம ராம ராமா - ராம ராம ராம ராம

2 - ராஜபு - ராஜாபு

3 - ஏடிகி - ஏடி

4 - கல்கெ3னோ - கலிகெ3னோ

Top

மேற்கோள்கள்

விளக்கம்
2 - ராஜபு ஜூபு - அரச பார்வை - (அன்பின்றி) அதிகாரத்துடன் நோக்கல்

வாசி - சௌக்கியம்

Top


Updated on 14 Jul 2009

Sunday, July 12, 2009

தியாகராஜ கிருதி - ராமா நினு நம்மின - ராகம் மோஹனம் - Rama Ninu Nammina - Raga Mohanam

பல்லவி
1ராமா 2நினு நம்மின வாரமு
காமா ஸகல லோகாபி4(ராம)

அனுபல்லவி
பாமர ஜன தூ3ர வர கு3
க்4ரு2ணாபாங்க3 ஸு1பா4ங்க3
3முனி ஹ்ரு23ப்3 ப்4ரு2ங்க3 (ராம)

சரணம்
சரணம் 1
வாலாயமுகா3னு ரானு
ஜாகே3ல ஸுகு3ண ஸ்ரீ த31ரத2
ந்ரு2பால ஹ்ரு23யானந்த3 கர 4ஸ்ரீ
லோல
பால வெலயுமிக
பா2ல லோசன ஹ்ரு23-
யாலயாப்த ஜன பால கனக மய
சேலயிக பராகேலயிபுடு3
மம்மேல நீது3 மனஸேல ராது3 (ராம)


சரணம் 2
நீவே க3தியண்டினி கானி
நே வேரேமியெருக3னு முந்த3
ராவே நீ பத3 பங்கஜ ப4க்தி-
நீவே பா4வஜாரி நுத
தே3வ நீது3 பத3 ஸேவா ப2லமு மமு
காவுனே பதித
பாவன 5த்ரி-த31 நாத2 நீய முனி
ஜீவனானிஸ1மு ப்3ரோவவேல ஸ்ரீ ராம (ராம)


சரணம் 3
தா4ரா த4ர நிப4 தே3
ஜனாதா4ர து3ரிதாக4 ஜலத3
ஸமீர த்யாக3ராஜ ஹ்ரு23-
யாகா3ர ஸார ஹீன
ஸம்ஸாரமந்து3 வேஸாரி நின்னு
மனஸார நம்முகொன 6நேர லேனி நே-
நூரகயிக 7விசாரமந்து3டகு
மேர காது3 ஸ்ரீ ராம (ராம)


பொருள் - சுருக்கம்
  • இராமா! பல்லுலகிற்கும் களிப்பூட்டுவோனே!

  • இழிந்த மக்களினின்றும் தூரமானவனே! நற்குணத்தோனே! கருணை கடைக்கண்ணோனே! நல்லுடலுறுப்புக்களோனே! முனிவரிதயக் கமலத்தின் வண்டே!

  • நற்பண்புகளோனே! தசரத மன்னனின் இதயத்தினை மகிழ்விப்போனே! இலக்குமியிடம் திளைப்போனே! நெற்றிக் கண்ணனின் இதயத் துறையே! சேர்ந்தோரைக் காப்போனே! பொன்மயமான ஆடைகளோனே!

  • காமன் பகைவனால் போற்றப் பெற்றோனே! தேவா! வீழ்ந்தோரைப் புனிதப்படுத்துவோனே! முப்பத்து மூவர் தலைவனை ஆள்வோனே! முனிவர்களின் வாழ்வே!

  • கார்முகில் நிகருடலோனே! மக்களுக்கு ஆதாரமானவனே! கொடிய பாவங்களெனும் முகிலை விரட்டும் புயலே! தியாகராசனின் இதயத்துறையே!


    • உன்னை நம்பினவனன்றோ?

    • தவறாது வரத் தாமதமேனோ? எம்மிடை ஒளிர்வாயினி; இனியும் அசட்டையேனோ? இவ்வமயம் எம்மையாள உனது மனதேன் வாராதோ?

    • நீயே புகலென்றேனே யன்றி நான் வேறேது மறியேன்; எதிரில் வாராயய்யா; உனது திருவடிக் கமலத்தின் பற்றினைத் தாராயய்யா; உனது திருவடிச் சேவையின் பயன் எம்மைக் காக்குமே; எப்போழ்தும் எம்மைக் காவாயேனோ?

    • சாரமற்ற உலக வாழ்வினில் களைப்புற்று உன்னை மனதார நம்பிக்கொள்ள நேராத நான் வீணாகயினித் துயருறல் முறையன்று.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ராமா/ நினு/ நம்மின வாரமு/
இராமா/ உன்னை/ நம்பினவன்/

காமா/ ஸகல லோக/-அபி4(ராம)/
அன்றோ/ பல்லுலகிற்கும்/ களிப்பூட்டுவோனே/


அனுபல்லவி
பாமர/ ஜன/ தூ3ர/ வர கு3ண/
இழிந்த/ மக்களினின்றும்/ தூரமானவனே/ நற்குணத்தோனே/

க்4ரு2ணா/-அபாங்க3/ ஸு14/-அங்க3/
கருணை/ கடைக்கண்ணோனே/ நல்/ உடலுறுப்புக்களோனே/

முனி/ ஹ்ரு2த்/-அப்3ஜ/ ப்4ரு2ங்க3/ (ராம)
முனிவர்/ இதய/ கமலத்தின்/ வண்டே/


சரணம்
சரணம் 1
வாலாயமுகா3னு/ ரானு/
தவறாது/ வர/

ஜாகு3/-ஏல/ ஸுகு3ண/ ஸ்ரீ த31ரத2/
தாமதம்/ ஏனோ/ நற்பண்புகளோனே/ ஸ்ரீ தசரத/

ந்ரு2பால/ ஹ்ரு23ய/-ஆனந்த3 கர/ ஸ்ரீ/
மன்னனின்/ இதயத்தினை/ மகிழ்விப்போனே/ இலக்குமியிடம்/

லோல/ பால/ வெலயுமு/-இக/
திளைப்போனே/ எம்மிடை/ ஒளிர்வாய்/ இனி/

பா2ல/ லோசன/ ஹ்ரு23ய/-
நெற்றி/ கண்ணனின்/ இதயத்து/

ஆலய/-ஆப்த ஜன/ பால/ கனக/ மய/
உறையே/ சேர்ந்தோரை/ காப்போனே/ பொன்/ மயமான/

சேல/-இக/ பராகு/-ஏல/-இபுடு3/
ஆடைகளோனே/ இனியும்/ அசட்டை/ ஏனோ/ இவ்வமயம்/

மம்மு/-ஏல/ நீது3/ மனஸு/-ஏல/ ராது3/ (ராம)
எம்மை/ ஆள/ உனது/ மனது/ ஏன்/ வாராதோ/


சரணம் 2
நீவே/ க3தி/-அண்டினி/ கானி/
நீயே/ புகல்/ என்றேனே/ அன்றி/

நே/ வேரு/-ஏமி/-எருக3னு/ முந்த3ர/
நான்/ வேறு/ ஏதும்/ அறியேன்/ எதிரில்/

ராவே/ நீ/ பத3/ பங்கஜ/ ப4க்தினி/-
வாராயய்யா/ உனது/ திருவடி/ கமலத்தின்/ பற்றினை/

ஈவே/ பா4வஜ/-அரி/ நுத/
தாராயய்யா/ காமன்/ பகைவனால்/ போற்றப் பெற்றோனே/

தே3வ/ நீது3/ பத3/ ஸேவா/ ப2லமு/ மமு/
தேவா/ உனது/ திருவடி/ சேவையின்/ பயன்/ எம்மை/

காவுனே/ பதித/
காக்குமே/ வீழ்ந்தோரை/

பாவன/ த்ரி-த31/ நாத2/ நீய/ முனி/
புனிதப்படுத்துவோனே/ முப்பத்து (மூவர்)/ தலைவனை/ ஆள்வோனே/ முனிவர்களின்/

ஜீவன/-அனிஸ1மு/ ப்3ரோவவு/-ஏல/ ஸ்ரீ ராம/ (ராம)
வாழ்வே/ எப்போழ்தும்/ எம்மை/ காவாய்/ ஏனோ/ ஸ்ரீ ராமா/


சரணம் 3
தா4ரா த4ர/ நிப4/ தே3ஹ/
கார்முகில்/ நிகர்/ உடலோனே/

ஜன/-ஆதா4ர/ து3ரித/-அக4/ ஜலத3/
மக்களுக்கு/ ஆதாரமானவனே/ கொடிய/ பாவங்களெனும்/ முகிலை/

ஸமீர/ த்யாக3ராஜ/ ஹ்ரு23ய/-
(விரட்டும்) புயலே/ தியாகராசனின்/ இதயத்து/

ஆகா3ர/ ஸார/ ஹீன/
உறையே/ சாரம்/ அற்ற/

ஸம்ஸாரமந்து3/ வேஸாரி/ நின்னு/
உலக வாழ்வினில்/ களைப்புற்று/ உன்னை/

மனஸார/ நம்முகொன/ நேர லேனி/ நேனு/-
மனதார/ நம்பிக்கொள்ள/ நேராத/ நான்/

ஊரக/-இக/ விசாரமு/-அந்து3டகு/
வீணாக/ இனி/ துயர்/ உறுதல்/

மேர/ காது3/ ஸ்ரீ ராம/ (ராம)
முறை/ அன்று/ ஸ்ரீ ராமா/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ராமா - ராம.

2 - நினு - நின்னு.

3 - முனி ஹ்ரு23ப்3 - முனி ஹ்ரு23யாப்3ஜ.

4 - ஸ்ரீ லோல - லோல : 'ஸ்ரீ' என்ற சொல்லில்லாது, 'லோல' என்ற சொல்லுக்குப் பொருள் கூறவியலாது.

Top

மேற்கோள்கள்
5 - த்ரி-த31 நாத2 - முப்பத்து மூவர் - தேவர்கள் : முப்பத்து மூவர் தலைவன் - இந்திரன்

Top

விளக்கம்
6 - நேர லேனி - 'நேரு' என்ற தெலுங்கு சொல்லுக்கு 'அறிதல்' என்றும் பொருளாகும். எனவே, '(நம்பிக்கொள்ள) நேராத' என்பதனை- '(நம்பிக்கொள்ள) அறியாத' என்றும் கொள்ளலாம்.

7 - அந்து3டகு - எல்லா புத்தகங்களிலும் இங்ஙனமே கொடுக்கப்பட்டுள்ளது. ஆயினும், இவ்விடத்தில், 'அந்து3ட' என்பதே சரியான சொல்லாகப் படுகின்றது.

காமன் பகைவன் - சிவன்

Top


Updated on 12 Jul 2009

Thursday, July 9, 2009

தியாகராஜ கிருதி - மோஹன ராம - ராகம் மோஹனம் - Mohana Rama - Raga Mohanam

பல்லவி
1மோஹன ராம முக2 ஜித ஸோம
முத்3து33 பல்குமா

அனுபல்லவி
மோஹன ராம மொத3டி தை3வமா
மோஹமு நீபை மொனஸியுன்னதி3ரா (மோஹன)

சரணம்
24ர மனுஜாவதார மஹிம வினி
ஸுர 3கின்னர 4கிம்புருஷ 5வித்3யாத4
ஸுர பதி விதி4 விபா4கர 6சந்த்3ராது3லு
கரகு3சு ப்ரேமதோ
வர ம்ரு23 7பக்ஷி வானர தனுவுலசே
8கி3ரினி வெலயு ஸீதா வர சிர காலமு
9கு3ரி தப்பக மை மரசி ஸேவிஞ்சிரி
வர த்யாக3ராஜ வரதா3கி2ல ஜக3ன்-(மோஹன)


பொருள் - சுருக்கம்
(மதி) மயங்கச் செய்யும் இராமா! மதியை வெல்லும் முகத்தோனே! முதற் கடவுளே! மலையில் ஒளிரும், சீதையின் கேள்வா! உயர் தியாகராசனுக்கருள்வோனே! அகில உலகத்தினையும் (மதி) மயங்கச் செய்யும் இராமா!
  • இனிமையாகப் பகர்வாய்!

  • மயக்கம் உன்மீது ஏற்பட்டுள்ளதய்யா;

    • புவியில் (உனது) மனித அவதார மகிமையினைச் செவிமடுத்து,

    • சுரர், கின்னரர், கிம்புருடர், வித்தியாதரர், வானோர் தலைவன், பிரமன், பகலவன், சந்திரன் முதலானோர்,

    • உருகி, காதலுடன்,

    • உயர், மிருக, பறவை, வானர உடல்களுடன்,

    • பல காலம்,

    • குறி தப்பாது,

    • மெய்ம்மறந்து, சேவித்தனர்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
மோஹன/ ராம/ முக2/ ஜித/ ஸோம/
(மதி) மயங்கச் செய்யும்/ இராமா/ முகத்தில்/ வெல்வோனே/ மதியை/

முத்3து33/ பல்குமா/
இனிமையாக/ பகர்வாய்/


அனுபல்லவி
மோஹன/ ராம/ மொத3டி/ தை3வமா/
(மதி) மயங்கச் செய்யும்/ இராமா/ முதற்/ கடவுளே/

மோஹமு/ நீபை/ மொனஸி/-உன்னதி3ரா/ (மோஹன)
மயக்கம்/ உன்மீது/ ஏற்பட்டு/ உள்ளதய்யா/


சரணம்
4ர/ மனுஜ/-அவதார/ மஹிம/ வினி/
புவியில்/ (உனது) மனித/ அவதார/ மகிமையினை/ செவிமடுத்து/

ஸுர/ கின்னர/ கிம்புருஷ/ வித்3யாத4ர/
சுரர்/ கின்னரர்/ கிம்புருடர்/ வித்தியாதரர்/

ஸுர/ பதி/ விதி4/ விபா4கர/ சந்த்3ர/-ஆது3லு/
வானோர்/ தலைவன்/ பிரமன்/ பகலவன்/ சந்திரன்/ முதலானோர்/

கரகு3சு/ ப்ரேமதோ/
உருகி/ காதலுடன்/

வர/ ம்ரு23/ பக்ஷி/ வானர/ தனுவுலசே/
உயர்/ மிருக/ பறவை/ வானர/ உடல்களுடன்/

கி3ரினி/ வெலயு/ ஸீதா/ வர/ சிர/ காலமு/
மலையில்/ ஒளிரும்/ சீதையின்/ கேள்வா/ பல/ காலம்/

கு3ரி/ தப்பக/ மை/ மரசி/ ஸேவிஞ்சிரி/
குறி/ தப்பாது/ மெய்/ மறந்து/ சேவித்தனர்/

வர/ த்யாக3ராஜ/ வரத3/-அகி2ல/ ஜக3த்/-(மோஹன)
உயர்/ தியாகராசனுக்கு/ அருள்வோனே/ அகில/ உலகத்தினையும்/ (மதி) மயங்கச் செய்யும்...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்
2 - 4ர மனுஜாவதார - புவியில் மனித அவதார - வால்மீகி ராமாயணம், பால காண்டம், அத்தியாயம் 17 - எந்தெந்த வானோருக்கு, யார் யார் பிறந்தனர் என்ற விவரம் காணவும்.

3 - கின்னர - கின்னரர் - தேவருள் ஒரு பாலர் - குதிரை முகமும் மனித உடலுமுடையோர்.

4 - கிம்புருஷ - கிம்புருடர் - ஏமகூடத்தில் வசிக்கும் குபேரனின் சேவகர்கள்.

5 - வித்3யாத4 - வித்தியாதரர் - சிவ கணங்கள்

Top

8 - கி3ரினி வெலயு - மலையில் ஒளிரும் - வாலியைக் கொன்றபின், மழைக் காலம் முடிவடையும் வரை, இராமனும், இலக்குவனும், 'ப்ரஸ்ரவண கிரி' என்ற மலையில் தங்கினர். ஆனால், தியாகராஜர், தன்னுடைய 'கி3ரிபை நெலகொன்ன' என்ற கீர்த்தனையில், 'மலையில் ஒளிரும் இராமன்' என்று திரும்பவும் குறிப்பிடுகின்றார். அவ்விடத்தில் 'கிரி' என்பது 'சுவேல மலை'யைக் குறிக்கும் என்று கூறப்பட்டுள்ளது'.

"கந்த புராணத்தில், 'சுவேல மலை ராமனை' சாகுந் தறுவாயில், நினைந்தால், வைகுண்டம் கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இது தியாகராஜ ஸ்வாமிகளுக்குத் தெரியும். எனவே, அவர் (தியாகராஜர்) கடைசி காலத்தில், அந்த ராமனை தியானித்து, இந்த கீர்த்தனையை இயற்றினார்."

"ராமன் சுவேல மலை மீதேறி இலங்கை நகரினை பார்வையிட்டான்." - வால்மீகி ராமாயணம், யுத்த காண்டம், அத்தியாயம் 38 நோக்கவும்.

9 - கு3ரி தப்பக - குறி தவறாது. விஷ்ணு, ராமனாக அவதரிக்கப் போவது பற்றி வானோருக்கு, பிரமன் கூறுவதனை, வால்மீகி ராமாயணம், பால காண்டம், அத்தியாயம் 17-ல் நோக்கவும்.

Top

விளக்கம்
1 - மோஹன - மாட்சிமையினைக் குறிக்கும்.

6 - சந்த்3 - சந்திரனுக்குப் பிறந்தது யாரென வால்மீகி ராமாயணத்தில் ஏதும் கூறப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை.

7 - பக்ஷி - வால்மீகி ராமாயணத்தில் 'ஜடாயு' மற்றும் 'சம்பாதி' என்ற இரண்டு கழுகுகள் கூறப்படுகின்றன. இவ்விருவரும் சோதரர்கள். 'ஜடாயு' சீதையை, ராவணன் கவர்ந்து செல்கையில், அவனுடன் போரிட்டு மாண்டவன். 'சம்பாதி', அனுமன் முதலானோருக்கு, சீதை, அசோக வனத்தினில் இருப்பதைக் கண்டு உரைத்தான்.

ஜடாயு, தன்னை, 'தசரதனின் நண்பன்' என ராமனிடம் அறிமுகப்படுத்திக்கொள்கின்றான். எனவே 'ஜடாயு' மற்றும் 'சம்பாதி'யின் பிறப்பு, ராமாவதாரத்திற்கு முற்பட்டதாகத் தோன்றுகின்றது.

சுரர் - வானோர்

Top


Updated on 09 Jul 2009

Tuesday, July 7, 2009

தியாகராஜ கிருதி - மாடி மாடகி - ராகம் மோஹனம் - Maati Maatiki - Raga Mohanam

பல்லவி
மாடி மாடிகி தெல்ப வலெனா முனி
மானஸார்சித சரண ராமய்ய நீதோ

அனுபல்லவி
1ஸூடிகொ3க்கடே மாட சாலதா3
நாடி மொத3லுகொனி ஸாடி லேனி நீதோ (மாடி)

சரணம்
சரணம் 1
பங்கஜ வத32ஸரஸ வினோத3
3ஸங்கடமுல வேக3மே தீர்ப ராதா3
1ங்கர ப்ரிய ஸர்வாந்தர்யாமிவி காதா3
இங்க நா மதி3 நீகு தெலியக3 லேதா3 (மாடி)


சரணம் 2
கருணா ஸாக34பரிபூர்ண நீகு
ஸரி வேல்புலு லேரனுசுனீவரகு
மொர பெட்டின நாபையேல பராகு
வருலு ஜூதுரு 5பா4ண்ட3முனகொக்க மெதுகு (மாடி)


சரணம் 3
ஸ்1ரு2ங்கா3ர ஸே126ஸுர வைரி ராஜ
4ங்க3 ஸுஜன ஹ்ரு2த்குமுத34-ராஜ
7மங்க3ள கர ரூப ஜித ரதி ராஜ
83ங்கா3 ஜனக பாலித த்யாக3ராஜ (மாடி)


பொருள் - சுருக்கம்
  • முனிவர் உள்ளங்களில் தொழப்படும் திருவடியோனே! இராமய்யா!

  • தாமரை வதனத்தோனே! திருவிளையாடலில் திளைப்போனே! சங்கரனுக்கு இனியோனே!

  • கருணைக் கடலே! முழுமுதலே!

  • வனப்பின் சிகரமே! வானோர் பகைவர் அரசனை யழித்தோனே! நல்லோரிதயக் குமுதத்தின் மதியே! மங்களமருளும் உருவத்தோனே! (எழிலில்) மதனை வென்றோனே! கங்கையை தோற்றுவித்தவனே! தியாகராசனைப் பேணுவோனே!


    • உன்னிடம் திரும்பத் திரும்ப தெரிவிக்க வேணுமோ?

    • நேராக ஒரே சொல் போதாதோ? அன்று முதல் நிகரற்ற உன்னிடம் திரும்பத் திரும்ப தெரிவிக்க வேணுமோ?

    • நெருக்கடிகளை விரைவாக தீர்க்கலாகாதா? யாவரின் உள்ளியங்குவோன் அன்றோ? இன்னமும் எனதுள்ளம் உனக்குத் தெரியவில்லையோ?

    • உனக்கு நிகர் தெய்வங்களிலரென இதுவரை முறையிட்ட என் மீதேன் அசட்டை? மேலோர் நோக்குவர்; பானைக்கு ஒரு சோறு (பதம்).



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
மாடி/ மாடிகி/ தெல்ப/ வலெனா/ முனி/
திரும்ப/ திரும்ப/ தெரிவிக்க/ வேணுமோ/ முனிவர்/

மானஸ/-அர்சித/ சரண/ ராமய்ய/ நீதோ/
உள்ளங்களில்/ தொழப்படும்/ திருவடியோனே/ இராமய்யா/ உன்னிடம்/


அனுபல்லவி
ஸூடிக3/-ஒக்கடே/ மாட/ சாலதா3/
நேராக/ ஒரே/ சொல்/ போதாதோ/

நாடி/ மொத3லுகொனி/ ஸாடி/ லேனி/ நீதோ/ (மாடி)
அன்று/ முதலாக/ நிகர்/ அற்ற/ உன்னிடம்/ திரும்பத் திரும்ப...


சரணம்
சரணம் 1
பங்கஜ/ வத3ன/ ஸரஸ/ வினோத3/
தாமரை/ வதனத்தோனே/ திருவிளையாடலில்/ திளைப்போனே/

ஸங்கடமுல/ வேக3மே/ தீர்ப ராதா3/
நெருக்கடிகளை/ விரைவாக/ தீர்க்கலாகாதா/

1ங்கர/ ப்ரிய/ ஸர்வ/-அந்தர்யாமிவி/ காதா3/
சங்கரனுக்கு/ இனியோனே/ யாவரின்/ உள்ளியங்குவோன்/ அன்றோ/

இங்க/ நா/ மதி3/ நீகு/ தெலியக3 லேதா3/ (மாடி)
இன்னமும்/ எனது/ உள்ளம்/ உனக்கு/ தெரியவில்லையோ/


சரணம் 2
கருணா/ ஸாக3ர/ பரிபூர்ண/ நீகு/
கருணை/ கடலே/ முழுமுதலே/ உனக்கு/

ஸரி/ வேல்புலு/ லேரு/-அனுசுனு/-ஈவரகு/
நிகர்/ தெய்வங்கள்/ இலர்/ என/ இதுவரை/

மொர/ பெட்டின/ நாபை/-ஏல/ பராகு/
முறை/ யிட்ட/ என் மீது/ ஏன்/ அசட்டை/

வருலு/ ஜூதுரு/ பா4ண்ட3முனகு/-ஒக்க/ மெதுகு/ (மாடி)
மேலோர்/ நோக்குவர்/ பானைக்கு/ ஒரு/ சோறு (பதம்)/;


சரணம் 3
ஸ்1ரு2ங்கா3ர/ ஸே12ர/ ஸுர/ வைரி/ ராஜ/
வனப்பின்/ சிகரமே/ வானோர்/ பகைவர்/ அரசனை/

4ங்க3/ ஸுஜன/ ஹ்ரு2த்/-குமுத3/ ப4-/ராஜ/
அழித்தோனே/ நல்லோர்/ இதய/ குமுதத்தின்/ தாரை/ அதிபன் (மதியே)/

மங்க3ள/ கர/ ரூப/ ஜித/ ரதி/ ராஜ/
மங்களம்/ அருளும்/ உருவத்தோனே/ (எழிலில்) வென்றோனே/ ரதி/ பதி (மதனை)/

3ங்கா3/ ஜனக/ பாலித/ த்யாக3ராஜ/ (மாடி)
கங்கையை/ தோற்றுவித்தவனே/ பேணுவோனே/ தியாகராசனை/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ஸூடிகொ3க்கடே மாட - நூடிகொ3க்கடே மாட - பிற்குறிப்பிட்ட சொல் சரியெனத் தோன்றவில்லை.

3 - ஸங்கடமுல - ஸங்கடமுலனு

Top

மேற்கோள்கள்
4 - பரிபூர்ண - இச்சொல் 'முழுமுதல்' என மொழிபெயர்க்கப்பட்டாலும், இச்சொல்லுக்கு சரியான விளக்கம் கூறுதல் கடினம். 'ஓம் பூர்ணமத3:' என்று தொடங்கும் உபநிடத செய்யுளின் விளக்கத்தினை நோக்கவும்.

8 - 3ங்கா3 ஜனக - வாமனாராக விஷ்ணு அவதரித்தவமயம் அவருடைய திருவடியிலிருந்து கங்கை தோன்றியதென பாகவத புராணம், (8-வது புத்தகம், 21-வது அத்தியாயம்) கூறும்.

கங்கை நதியினைப் பற்றி விவரங்களுக்கு, வால்மீகி ராமாயணம், பால காண்டம், அத்தியாயங்கள் 42 மூதல் 44 நோக்கவும். கங்கையின் கதை

Top

விளக்கம்
2 - ஸரஸ வினோத3 - இவ்விடம் இச்சொற்களின் பொருளென்ன என்பது சரிவரப் புரியவில்லை. ஆயினும் இங்கு, (படைத்தல், காத்தல், அழித்தல் என்னும்) 'திருவிளையாடலில் திளைப்போன்' என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

5 - பா4ண்ட3முனகொக்க மெதுகு - பானைக்கு ஒரு சோறு பதம். 'உன்னுடை செயலை மேலோர் நோக்குகின்றனர்; நீ தொண்டர்களை காக்கும் விதம் என்ன என்பதனை, என்னைக் காப்பதனைக் கொண்டு, மேலோர் தெரிந்துகொள்வர்', என்று தியாகராஜர் இறைவனிடம் கூறுகின்றார்.

6 - ஸுர வைரி ராஜ - வானோர் பகைவர் அரசன் - இராவணன்

7 - மங்க3ள கர ரூப ஜித ரதி ராஜ - 'ரூப' என்ற சொல்லினை 'மங்கள கர' என்ற சொல்லுடனோ (மங்களம் அருளும் உருவத்தோன் என), அல்லது 'ஜித ரதி ராஜ' என்பதுடனோ (உருவத்தில் மதனை வென்றோன் என) சேர்க்கலாம்.

Top


Updated on 07 Jul 2009

Saturday, July 4, 2009

தியாகராஜ கிருதி - ப4வ நுத - ராகம் மோஹனம் - Bhava Nuta - Raga Mohanam

பல்லவி
4வ நுத நா ஹ்ரு23யமுன ரமிம்புமு ப33லிக தீர

அனுபல்லவி
4வ தாரக நாதோ ப3ஹு பல்கின ப33லிக தீர கமல ஸம்(ப4வ)

சரணம்
சரணம் 1
பவன ஸுத ப்ரிய தனகை திரிகி3ன ப33லிக தீர
4வனமு ஜேரி நனு வெரபிஞ்சின ப33லிக தீர கமல ஸம்(ப4வ)


சரணம் 2
வரமகு3 நைவேத்3யமுலனு ஜேயனி ப33லிக தீர
1பரவ லேக 2ஸரி போயினட்டாடி333லிக தீர கமல ஸம்(ப4வ)


சரணம் 3
ப்ரப3ல ஜேஸி நனு 3ப்3ரோசெத3வனுகொன்ன33லிக தீர
ப்ரபு4 நீவு த்யாக3ராஜுனிகி ப33லிக தீர 4கமல ஸம்(ப4வ)


பொருள் - சுருக்கம்
சிவனால் போற்றப் பெற்றோனே! பிறவிக்கடலைக் கடத்துவிப்போனே! பிரமனால் போற்றப் பெற்றோனே! வாயு மைந்தனுக்கினியோனே!
  • தலைவன் நீயே தியாகராசனுக்கு;

  • எனது இதயத்தினில் இளைப்பாறுவாய், களைப்புத் தீர;

  • என்னுடன் மிக்கு பகர்ந்த களைப்புத் தீர, எனது இதயத்தினில் இளைப்பாறுவாய்;

  • எனக்காக திரிந்த களைப்புத் தீர, இல்லத்தினை அடைந்து என்னை வியப்புறச் செய்த களைப்புத் தீர, எனது இதயத்தினில் இளைப்பாறுவாய்;

  • உயர் நிவேதனங்களை (நான்) தயாரிக்காத களைப்புத் தீர, படையாது, சரிதானென்று, உரையாடிய களைப்புத் தீர, எனது இதயத்தினில் இளைப்பாறுவாய்;

  • பிரபலப் படுத்தி என்னைக் காத்தனை; எண்ணிய களைப்புத் தீர, எனது இதயத்தினில் இளைப்பாறுவாய்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
4வ/ நுத/ நா/ ஹ்ரு23யமுன/ ரமிம்புமு/ ப33லிக/ தீர/
சிவனால்/ போற்றப் பெற்றோனே/ எனது/ இதயத்தினில்/ இளைப்பாறுவாய்/ களைப்பு/ தீர/


அனுபல்லவி
4வ/ தாரக/ நாதோ/ ப3ஹு/ பல்கின/ ப33லிக/ தீர/ கமல ஸம்(ப4வ)/
பிறவிக்கடலை/ கடத்துவிப்போனே/ என்னுடன்/ மிக்கு/ பகர்ந்த/ களைப்பு/ தீர/ (மலரோன்) பிரமனால்/...


சரணம்
சரணம் 1
பவன/ ஸுத/ ப்ரிய/ தனகை/ திரிகி3ன/ ப33லிக/ தீர/
வாயு/ மைந்தனுக்கு/ இனியோனே/ எனக்காக/ திரிந்த/ களைப்பு/ தீர/

4வனமு/ ஜேரி/ நனு/ வெரபிஞ்சின/ ப33லிக/ தீர/ கமல ஸம்(ப4வ)/
இல்லத்தினை/ அடைந்து/ என்னை /வியப்புறச் செய்த/ களைப்பு/ தீர/ (மலரோன்) பிரமனால்/...


சரணம் 2
வரமகு3/ நைவேத்3யமுலனு/ ஜேயனி/ ப33லிக/ தீர/
உயர்/ நிவேதனங்களை/ (நான்) தயாரிக்காத/ களைப்பு/ தீர/

பரவ லேக/ ஸரி போயினட்டு/-ஆடி3ன/ ப33லிக/ தீர/ கமல ஸம்(ப4வ)/
படையாது/ சரிதானென்று/ உரையாடிய/ களைப்பு/ தீர/ (மலரோன்) பிரமனால்/...


சரணம் 3
ப்ரப3ல/ ஜேஸி/ நனு/ ப்3ரோசெத3வு/-அனுகொன்ன/ ப33லிக/ தீர/
பிரபல/ படுத்தி/ என்னை/ காத்தனை/ எண்ணிய/ களைப்பு/ தீர/

ப்ரபு4/ நீவு/ த்யாக3ராஜுனிகி/ ப33லிக/ தீர/ கமல ஸம்(ப4வ)/
தலைவன்/ நீயே/ தியாகராசனுக்கு/ களைப்பு/ தீர/ (மலரோன்) பிரமனால்/...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
3 - ப்3ரோசெத3வனுகொன்ன - ப்3ரோசெனனுகொன்ன : 'ப்3ரோசெனனுகொன்ன' தவறாகும்.

4 - கமல ஸம்(ப4வ) - ஜலஜ ஸம்(ப4வ)

Top

மேற்கோள்கள்

விளக்கம்
1 - பரவ லேக - 'பரவ' என்ற சொல்லுக்கு இரண்டு அடிகள் உண்டு - 'பரசு' (படைத்தல்) என்றும், 'பரனா' ('பரவா'யில்லை என்ற தமிழ் சொல்வழக்குக்கு ஈடான) 'பரவா' என்றும்.

இரு விதமான பொருள்களுமே இங்கு பொருநதும். ஆனால், 'பரவா' (தமிழுக்கு ஈடான 'பரவா'யில்லை) என்ற சொல்லுக்கு, கடைசி உயிர் மெய்யெழுத்து, 'வா' என்றிருக்க வேண்டும். எல்லா புத்தகங்களிலும் 'பரவ' என்றே கொடுத்திருப்பதனால், 'படைத்தல்' என்ற பொருளில் ஏற்கப்பட்டு மொழி பெயர்க்கப் பட்டது.

Top

2 - ஸரி போயினட்டு - சரிதானென்று - தான் செய்வது தவறென உணராது

3 - அனுகொன்ன - எண்ணிய - பிரபலப் படுத்தி காக்க எண்ணியது - இறைவன் எண்ணியது நிறைவேறும். விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில், இறைவனுக்கு 'ஸத்ய ஸங்கல்ப' (நிறைவேறப்படும் எண்ணமுடையவன்) என்று ஓர் பெயராகும். இதனை 'சித்தம்' என்றும் கூறுவர்

தலைசிறந்த, ஹரிகதை உரையாளர், திருவாளர் பாலகிருஷ்ண சாஸ்திரிகள், தன்னுடைய 'தியாகராஜ ராமாயணத்தில்' கூறவது என்னவென்றால் - 'ஓர் நாள் மாலை, தியாகராஜரின் வீட்டுக்கு, ஒரு முதிய தம்பதியும், உடன் ஓரு துறவியும், வந்தனர். அவர்களுடன், தியாகராஜர், இரவு முழுவதும் பேசிக் கொண்டிருந்தார். ஆனால், அவர்களுக்கு சரிவர ஏதும் விருந்தோம்பல் செய்யவில்லை. மறுநாள் காலை, அம்மூவரும் புறப்பட்டு சென்ற போது, பின்புறமாக, அங்கு, ராமன், சீதை மற்றும் அனுமன் செல்வதைக் கண்டார். அவர்களுக்கு சரிவர விருந்தோம்பல் செய்யத்தவறிவிட்டேனே என்று தியாகராஜர் மனம் நொந்து, இப்பாடலைப் பாடினார்.'

படையாது - நிவேதனங்களினை

Top


Updated on 04 Jul 2009

Thursday, July 2, 2009

தியாகராஜ கிருதி - நனு பாலிம்ப - ராகம் மோஹனம் - Nanu Paalimpa - Raga Mohanam

பல்லவி
நனு பாலிம்ப நட3சி வச்சிதிவோ
நா ப்ராண 1நாத2

அனுபல்லவி
வனஜ நயன 2மோமுனு ஜூசுட
ஜீவனமனி நெனருன மனஸு மர்மமு தெலிஸி (நனு)

சரணம்
3ஸுர பதி நீல மணி நிப4 தனுவுதோ
உரமுன முத்யபு ஸருல சயமுதோ
கரமுன ஸ1ர கோத3ண்ட3 காந்திதோ
4ரணி தனயதோ த்யாக3ராஜார்சித (நனு)


பொருள் - சுருக்கம்
எனதுயிர்த் தலைவா! தியாகராசனால் தொழப் பெற்றோனே!
  • என்னைப் பேணுதற்கென நடந்து வந்தனையோ?

  • கமலக் கண்களுடைய (உனது) வதனத்தினைக் காண்பதே பிழைப்பெனும், எனதுள்ளத்தின் மருமத்தினைத் தெரிந்து, கனிவுடன், என்னைப் பேணுதற்கென நடந்து வந்தனையோ?

    • இந்திர நீலமணி நிகர் உடலுடனும்,

    • மார்பில் முத்துச் சரத் திரள்களுடனும்,

    • கரங்களில் அம்புகள் மற்றும் கோதண்டத்தின் ஒளியுடனும்,

    • புவிமகளுடனும்,

  • என்னைப் பேணுதற்கென நடந்து வந்தனையோ?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நனு/ பாலிம்ப/ நட3சி/ வச்சிதிவோ/
என்னை/ பேணுதற்கென/ நடந்து/ வந்தனையோ/

நா/ ப்ராண/ நாத2/
எனது/ உயிர்/ தலைவா/


அனுபல்லவி
வனஜ/ நயன/ மோமுனு/ ஜூசுட/
கமல/ கண்களுடைய/ (உனது) வதனத்தினை/ காண்பதே/

ஜீவனமு/-அனி/ நெனருன/ மனஸு/ மர்மமு/ தெலிஸி/ (நனு)
பிழைப்பு/ எனும்/ கனிவுடன்/ (எனது) உள்ளத்தின்/ மருமத்தினை/ தெரிந்து/ என்னை...


சரணம்
ஸுர/ பதி/ நீல/ மணி/ நிப4/ தனுவுதோ/
வானோர்/ தலைவன் (இந்திர)/ நீல/ மணி/ நிகர்/ உடலுடனும்/

உரமுன/ முத்யபு/ ஸருல/ சயமுதோ/
மார்பில்/ முத்து/ சர/ திரள்களுடனும்/

கரமுன/ ஸ1ர/ கோத3ண்ட3/ காந்திதோ/
கரங்களில்/ அம்புகள்/ (மற்றும்) கோதண்டத்தின்/ ஒளியுடனும்/

4ரணி/ தனயதோ/ த்யாக3ராஜ/-அர்சித/ (நனு)
புவி/ மகளுடனும்/ தியாகராசனால்/ தொழப் பெற்றோனே/ என்னை..


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - நாத2 - நாதா2

2 - மோமுனு - மோமுன

Top

மேற்கோள்கள்

விளக்கம்
3 - ஸுர பதி நீல மணி - இந்திர நீல மணி - நீலக்கல் - 'இந்திர' என்பதற்கு பதிலாக, தியாகராஜர் 'ஸுர பதி' (வானோர் தலைவன்) என்று பயன்படுத்தியுள்ளார்.


Updated on 04 Mar 2011

Wednesday, July 1, 2009

தியாகராஜ கிருதி - த3ய ரானி - ராகம் மோஹனம் - Daya Raani - Raga Mohanam

பல்லவி
3ய ரானி த3ய ரானி தா31ரதீ2 ராம

சரணம்
சரணம் 1
விவரிம்ப தரமா 1ரகு4வீரானந்த3மு (த3ய)


சரணம் 2
தலசிதே மேனெல்ல புலகரிஞ்செனு ராம (த3ய)


சரணம் 3
கனுகொனனானந்த3மை கன்னீரு நிண்டெ3னு (த3ய)


சரணம் 4
ஆஸிஞ்சு வேள ஜக3மந்த த்ரு2ணமாயெனு (த3ய)


சரணம் 5
சரண கௌகி3லி வேள செலகி3 மை மரசெனு (த3ய)


சரணம் 6
செந்தனுண்ட33 நாது3 சிந்தலு தொலகெ3னு (த3ய)


சரணம் 7
மர்ம ஹீனுல கூட3 2கர்மமனனய்யெனு (த3ய)


சரணம் 8
3தனகை ஸ்ரீ ராமாவதாரமெத்திதிவோ (த3ய)


சரணம் 9
நாவண்டி தா3ஸுல ப்3ரோவ வெட3லிதிவோ (த3ய)


சரணம் 10
மூடு3 மூர்துலகாதி3 மூலமு நீவே ராம (த3ய)


சரணம் 11
ஸ்ரீ த்யாக3ராஜுனி செலிகாடு3 நீவே ராம (த3ய)


பொருள் - சுருக்கம்
தாசரதீ, இராமா! இரகுவீரா!
  • தயை வரட்டும்; தயை வரட்டும்;

  • விவரிக்க இயலுமா, ஆனந்தத்தினை?

  • (உன்னை) நினைத்தாலே உடலெல்லாம் புல்லரித்தது;

  • (உன்னைக் ) காண, ஆனந்தமாகி, கண்ணீர் நிறைந்தது;

  • (உன்னை) காமுறும் வேளை, உலகமெல்லாம் துரும்பானது;

  • திருவடிகளை அணைத்தவமயம், ஒளிர்ந்து, மெய்ம்மறந்தது;

  • (நீ) அருகிலிருக்க, எனது கவலைகள் தொலைந்தன;

  • (உனது) மருமம் அறியாதவரைக் கூடுதலும் கருமமெனலாயிற்று;

  • எனக்காக இராமனாக அவதரித்தாயோ?

  • என்னைப் போன்ற தொண்டர்களைக் காக்க எழுந்தருளினாயோ?

  • மும்மூர்த்திகளுக்கும் ஆதிமூலம் நீயே;

  • தியாகராசனின் உற்ற நண்பன் நீயே.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
3ய/ ரானி/ த3ய/ ரானி/ தா31ரதீ2/ ராம/
தயை/ வரட்டும்/ தயை/ வரட்டும்/ தாசரதீ/ இராமா/


சரணம்
சரணம் 1
விவரிம்ப/ தரமா/ ரகு4வீர/-ஆனந்த3மு/ (த3ய)
விவரிக்க/ இயலுமா/ இரகுவீரா/ ஆனந்தத்தினை/


சரணம் 2
தலசிதே/ மேனு/-எல்ல/ புலகரிஞ்செனு/ ராம. (த3ய)
(உன்னை) நினைத்தாலே/ உடல்/ எல்லாம்/ புல்லரித்தது/ இராமா/


சரணம் 3
கனுகொன/-ஆனந்த3மை/ கன்னீரு/ நிண்டெ3னு/ (த3ய)
(உன்னைக் ) காண/ ஆனந்தமாகி/ கண்ணீர்/ நிறைந்தது/


சரணம் 4
ஆஸிஞ்சு/ வேள/ ஜக3மு/-அந்த/ த்ரு2ணமு/-ஆயெனு/ (த3ய)
(உன்னை) காமுறும்/ வேளை/ உலகம்/ எல்லாம்/ துரும்பு/ ஆனது/


சரணம் 5
சரண/ கௌகி3லி/ வேள/ செலகி3/ மை/ மரசெனு/ (த3ய)
திருவடிகளை/ அணைத்த/ அமயம்/ ஒளிர்ந்து/ மெய்/ மறந்தது/


சரணம் 6
செந்தனு/-உண்ட33/ நாது3/ சிந்தலு/ தொலகெ3னு/ (த3ய)
(நீ) அருகில்/ இருக்க/ எனது/ கவலைகள்/ தொலைந்தன/


சரணம் 7
மர்ம/ ஹீனுல/ கூட3/ கர்மமு/-அனனு/-அய்யெனு/ (த3ய)
(உனது) மருமம்/ அறியாதவரை/ கூடுதலும்/ கருமம்/ எனல்/ ஆயிற்று/


சரணம் 8
தனகை/ ஸ்ரீ ராம/-அவதாரமு-எத்திதிவோ/ (த3ய)
எனக்காக/ ஸ்ரீ ராமனாக/ அவதரித்தாயோ/


சரணம் 9
நாவண்டி/ தா3ஸுல/ ப்3ரோவ/ வெட3லிதிவோ/ (த3ய)
என்னைப் போன்ற/ தொண்டர்களை/ காக்க/ எழுந்தருளினாயோ/


சரணம் 10
மூடு3/ மூர்துலகு/-ஆதி3/ மூலமு/ நீவே/ ராம/ (த3ய)
மூன்று/ மூர்த்திகளுக்கும்/ ஆதி/ மூலம்/ நீயே/ இராமா/


சரணம் 11
ஸ்ரீ த்யாக3ராஜுனி/ செலிகாடு3/ நீவே/ ராம/ (த3ய)
ஸ்ரீ தியாகராசனின்/ உற்ற நண்பன்/ நீயே/ இராமா/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ஆனந்த3மு - ஆனந்த3முனு

2 - கர்மமனனய்யெனு - கர்மமனனைதினி

Top

மேற்கோள்கள்

விளக்கம்
3 - தனகை ஸ்ரீ ராமாவதாரமெத்திதிவோ - எனக்காக ராமனாக அவதரித்தாயோ? இப்பாடல் பிரகலாதன் அரியினை நோக்கிப் பாடுவதாக. எனவே, இங்கு ராமாவதாரம் பற்றி கூறப்படுவது வியப்பாக இருந்தாலும், தியாகராஜர், இந்த மாதிரி பல பாடல்களில், தான் பிரகலாதனாகவே மாறி, தன்னுள்ளப்பாங்கினை வெளிப்படுத்துகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அன்றி, பிரகலாதனே, தியாகராஜனாக உருக்கொண்டானோ, என்று வியக்குமளவுக்கு பாடல்களின் அமைப்பு உள்ளது.

இப்பாடல் 'பிரகலாத பக்தி விஜயம்' எனும் நாட்டிய நாடகத்தின் அங்கமாகும்.

தாசரதீ - தசரதன் மைந்தன்
கருமம் - விரும்பாத, ஆயின் தள்ளவியலாத, செயல்

Top


Updated on 01 Jul 2009

Monday, June 29, 2009

தியாகராஜ கிருதி - ஜய மங்க3ளம் - ராகம் மோஹனம் - Jaya Mangalam - Raga Mohanam

பல்லவி
ஜய மங்க3ளம் நித்ய ஸு14 மங்க3ளம்

அனுபல்லவி
மங்க3ளம் மங்க3ளம் மா ராம சந்த்3ருனகு
மங்க3ளம் மங்க3ளம் மாத4வுனகு (ஜய)

சரணம்
சரணம் 1
நிஜ தா3ஸ பாலுனகு நித்ய ஸ்வரூபுனகு
அஜ ருத்3ர வினுதுனகு நக34ருனகு (ஜய)


சரணம் 2
நித்யமை ஸத்யமை நிர்மலம்பை3
ஆதி3த்ய குல திலகுனகு தீ4ருனகுனு (ஜய)


சரணம் 3
ராஜாதி4ராஜுனகு ரவி கோடி தேஜுனகு
த்யாக3ராஜ நுதுனகு ராம ரத்னமுனகு (ஜய)


பொருள் - சுருக்கம்
  • ஜய மங்களம்; என்றும் சுப மங்களம்.

  • மங்களம் மங்களம், எமது இராம சந்திரனுக்கு,

  • மங்களம் மங்களம், மாதவனுக்கு

    • உண்மை அடியாரைப் பேணுவோனுக்கு,

    • அழிவற்ற உருவத்தோனுக்கு,

    • பிரமன், சிவனால் போற்றப் பெற்றோனுக்கு,

    • மலையைச் சுமந்தோனுக்கு,

    • நித்தியமாகி, சத்தியமாகி, நிர்மலமாகிய, பகலவன் குலத் திலகனுக்கு,

    • தீரனுக்கு,

    • அரசர்க்கரசனுக்கு,

    • கோடி பரிதி ஒளியுடையோனுக்கு,

    • தியாகராசனால் போற்றப் பெற்றோனுக்கு,

    • இராம இரத்தினத்திற்கு,

  • ஜய மங்களம்; என்றும் சுப மங்களம்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஜய/ மங்க3ளம்/ நித்ய/ ஸு14/ மங்க3ளம்/
ஜய/ மங்களம்/ என்றும்/ சுப/ மங்களம்/


அனுபல்லவி
மங்க3ளம்/ மங்க3ளம்/ மா/ ராம/ சந்த்3ருனகு/
மங்களம்/ மங்களம்/ எமது/ இராம/ சந்திரனுக்கு/

மங்க3ளம்/ மங்க3ளம்/ மாத4வுனகு/ (ஜய)
மங்களம்/ மங்களம்/ மாதவனுக்கு/ ஜய மங்களம்...


சரணம்
சரணம் 1
நிஜ/ தா3ஸ/ பாலுனகு/ நித்ய/ ஸ்வரூபுனகு/
உண்மை/ அடியாரைப்/ பேணுவோனுக்கு/ அழிவற்ற/ உருவத்தோனுக்கு/

அஜ/ ருத்3ர/ வினுதுனகு/ நக3/ த4ருனகு/ (ஜய)
பிரமன்/ சிவனால்/ போற்றப் பெற்றோனுக்கு/ மலையை/ சுமந்தோனுக்கு/ ஜய மங்களம்...


சரணம் 2
நித்யமை/ ஸத்யமை/ நிர்மலம்பை3ன/
நித்தியமாகி/ சத்தியமாகி/ நிர்மலமாகிய/

ஆதி3த்ய/ குல/ திலகுனகு/ தீ4ருனகுனு/ (ஜய)
பகலவன்/ குல/ திலகனுக்கு/ தீரனுக்கும்/ ஜய மங்களம்...


சரணம் 3
ராஜ/-அதி4ராஜுனகு/ ரவி/ கோடி/ தேஜுனகு/
அரசர்க்கு/ அரசனுக்கு/ பரிதி/ கோடி/ ஒளியுடையோனுக்கு/

த்யாக3ராஜ/ நுதுனகு/ ராம/ ரத்னமுனகு/ (ஜய)
தியாகராசனால்/ போற்றப் பெற்றோனுக்கு/ இராம/ இரத்தினத்திற்கு/ ஜய மங்களம்...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
சில புத்தகங்களில் அனுபல்லவி முதலாவது சரணமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

விளக்கம்
இப்பாடல் 'பிரகலாத பக்தி விஜயம்' என்றும் நாட்டிய நாடகத்தின் கடைசி பாடலாகும்.

Top


Updated on 29 Jun 2009

தியாகராஜ கிருதி - எவருரா நினு வினா - ராகம் மோஹனம் - Evarura Ninu Vina - Raga Mohanam

பல்லவி
எவருரா நினு வினா க3தி மாகு

அனுபல்லவி
1ஸவன ரக்ஷக நித்யோத்ஸவ ஸீதா பதி (எவரு)

சரணம்
சரணம் 1
ராதா3 நாது3பை நீ த3ய வின
ராதா3 முர வைரி காதா33ய பல்க
ராதா3யிதி3 மரியாதா3 நாதோ
வாத3மா நே பே43மா மாகு (எவரு)


சரணம் 2
2ராக நன்னேச ந்யாயமா
பராகா நேனண்டே ஹேயமா ராம
ராகா ஸ1ஸி1 முக2 நீகாஸி1ஞ்சிதி
ஸாகுமா புண்ய ஸ்1லோகமா மாகு (எவரு)


சரணம் 3
3ஸ்ரீஸா1ரி க3ணாராதிவி
நாதா31 தெலியக போதிவி
4ஆபகே3ஸா1ர்சித பாலிதேஸ1 5நா
ப்ரகாஸ1மா
ஸ்வப்ரகாஸ1மா மாகு (எவரு)


சரணம் 4
ராஜா பி3கு3 நீகேலரா த்யாக3-
ராஜார்சித 6தாள ஜாலரா ராம
ஈ ஜாலமு ஸேய ராஜ ப்3ரோவ
ஸங்கோசமா ஸுர பூ4ஜமா மாகு (எவரு)


பொருள் - சுருக்கம்
  • வேள்வி காத்தோனே! என்றும் திருவிழாவே! சீதைக் கேள்வா!

  • இராமா!

  • முழுமதி வதனத்தோனே! புகழத் தக்கோனே!

  • மாமணாளா! வருணனால் தொழப்பெற்றோனே! ஈசனைக் காப்போனே! எனது (வாழ்வின்) ஒளியே! தன்னொளியோனே!

  • அரசே! தியாகராசனால் தொழப்பெற்றோனே! (தொண்டரின்) வானோர் தருவே!

    • வாராதோ, என்மீது உனது தயை? கேளாயோ? முர வைரியன்றோ? கருணையுடன் பகரலாகாதோ? இது மரியாதையோ? என்னுடன் வாதமோ? நான் வேறோ?

    • வாராது, என்னை ஏய்த்தல் நியாயமோ? அசட்டையோ? நானென்றால் வெறுப்போ? உனக்காசைப்பட்டேன்; நிறைவேற்றுவாய்.

    • நீ பகைவரை யழிப்பவனன்றோ! எனது ஆசையை அறிந்திலை.

    • முறைப்பு உனக்கேனய்யா? தாளவியலேனய்யா; இந்த தாமதம் செய்ய ஒப்புகின்றாயோ? காப்பதற்கு கூச்சமோ?

    • எமக்கு யாரய்யா உன்னையன்றி கதி?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
எவருரா/ நினு/ வினா/ க3தி/ மாகு/
யாரய்யா/ உன்னை/ யன்றி/ கதி/ யெமக்கு/


அனுபல்லவி
ஸவன/ ரக்ஷக/ நித்ய/-உத்ஸவ/ ஸீதா/ பதி/ (எவரு)
வேள்வி/ காத்தோனே/ என்றும்/ திருவிழாவே/ சீதை/ கேள்வா/


சரணம்
சரணம் 1
ராதா3/ நாது3பை/ நீ/ த3ய/
வாராதோ/ என்மீது/ உனது/ தயை/

வின ராதா3/ முர/ வைரி/ காதா3/ த3ய/
கேளாயோ/முர/ வைரி/ யன்றோ/ கருணையுடன்/

பல்க ராதா3/-இதி3/ மரியாதா3/ நாதோ/
பகரலாகாதோ/ இது/ மரியாதையோ/ என்னுடன்/

வாத3மா/ நே/ பே43மா/ மாகு/ (எவரு)
வாதமோ/ நான்/ வேறோ/ எமக்கு/ யாரய்யா...


சரணம் 2
ராக/ நன்னு/-ஏச/ ந்யாயமா/
வாராது/ என்னை/ ஏய்த்தல்/ நியாயமோ/

பராகா/ நேனு/-அண்டே/ ஹேயமா/ ராம/
அசட்டையோ/ நான்/ என்றால்/ வெறுப்போ/ இராமா/

ராகா/ ஸ1ஸி1/ முக2/ நீகு/-ஆஸி1ஞ்சிதி/
முழு/ மதி/ வதனத்தோனே/ உனக்கு/ ஆசைப்பட்டேன்/

ஸாகுமா/ புண்ய ஸ்1லோகமா/ மாகு/ (எவரு)
நிறைவேற்றுவாய்/ புகழத் தக்கோனே/ எமக்கு/ யாரய்யா...


சரணம் 3
ஸ்ரீ/-ஈஸ1/-அரி க3ண/-அராதிவி/
மா/ மணாளா/ (நீ) பகைவரை/ யழிப்பவனன்றோ/

நாது3/-ஆஸ1/ தெலியக போதிவி/
எனது/ ஆசையை/ அறிந்திலை/

ஆபக3/-ஈஸ1/-அர்சித/ பாலித/-ஈஸ1/ நா/
நதிகள்/ தலைவன் (வருணனால்)/ தொழப்பெற்றோனே/ காப்போனே/ ஈசனை/ எனது/

ப்ரகாஸ1மா/ ஸ்வ-ப்ரகாஸ1மா/ மாகு/ (எவரு)
(வாழ்வின்) ஒளியே/ தன்னொளியோனே/ எமக்கு/ யாரய்யா...


சரணம் 4
ராஜா/ பி3கு3/ நீகு/-ஏலரா/
அரசே/ முறைப்பு/ உனக்கு/ ஏனய்யா/

த்யாக3ராஜ/-அர்சித/ தாள/ ஜாலரா/ ராம/
தியாகராசனால்/ தொழப்பெற்றோனே/ தாள/ இயலேனய்யா/ இராமா/

ஈ/ ஜாலமு/ ஸேய/ ராஜ/ ப்3ரோவ/
இந்த/ தாமதம்/ செய்ய/ ஒப்புகின்றாயோ/ காப்பதற்கு/

ஸங்கோசமா/ ஸுர/ பூ4ஜமா/ மாகு/ (எவரு)
கூச்சமோ/ (தொண்டரின்) வானோர்/ தருவே/ எமக்கு/ யாரய்யா...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ஸவன - ஸவ : இரண்டு சொற்களுக்கும் பொருளொன்றுதான்.

2 - ராக நன்னேச - ராக நின்னேச : இவ்விடம் 'நன்னேச' என்பதுதான் சரியான சொல்லாகும்.

5 - நா ப்ரகாஸ1மா - நவ காஸ1மா : 'காச' என்பது சமஸ்கிருத அகராதியின்படி 'நாணலை'க் குறிக்கும். தமிழகராதியின்படி 'காச' என்பது 'காய' என்றும் வழங்கும். விஷ்ணுவுக்கு, 'காசாம்பூ (காயாம்பூ) மேனியன்' என்றும் பெயருண்டு.

கம்ப ராமாயணத்தில், கம்பர் ராமனை 'காயாம்பூ நிறத்தவன்' என்று கூறுகின்றார்.

ஈழம், முல்லைத்தீவினில், காயாம்பூவுக்கு, 'முல்லை' என்றும் பெயருண்டு'.

6 - தாள ஜாலரா ராம - தாள ஜாலரா ராஜ.

Top

மேற்கோள்கள்

விளக்கம்
3 - அரி க3ண அராதிவி - பகைவரை யழிப்பவன் - உட்பகை அறுவரென்றும் கொள்ளலாம்

உட்பகை அறுவர் - காமம், சினம், கருமித்தனம், மயக்கம், செருக்கு, பொறாமை

4 - ஆபகே3ஸா1ர்சித - நதிகளின் தலைவனால் தொழப்பெற்றவன். பொதுவாக, 'வருணன்' (கடலரசன்) நதிகளின் தலைவனெப்படுவான். ஆனால், திருவையாற்றினில், இறைவனுக்கு (சிவனுக்கு) 'ஐயாறப்பன்' (பஞ்சாபகேசன்) என்று பெயர் உண்டு. அங்ஙனமானால், 'சிவனால் தொழப்பெற்றோனே' என்றும பொருள் கொள்ளலாம்.

திருவிழா - கொண்டாட்டம் - அடியார்க்கு

முரன் - கண்ணனால் கொல்லப்பட்ட அரக்கன்

தாமதம் செய்ய - 'பிடிவாதம் செய்ய' என்றும் கொள்ளலாம்.

வானோர் தரு - விரும்பியதை வழங்கும் கற்ப தரு

Top


Updated on 29 Jun 2009

Sunday, June 28, 2009

தியாகராஜ கிருதி - எந்து3கோ பா3க3 - ராகம் மோஹனம் - Enduko Baaga - Raga Mohanam

பல்லவி
எந்து3கோ பா33 தெலியது3

அனுபல்லவி
அந்த3கா33 1ஸ்ரீ ராம ஈ தனு-
வஸ்தி2ரமனியீ கலி மானவுல(கெந்து3கோ)

சரணம்
சரணம் 1
3ட்டிக3 ராள்ளனு கட்டின 2க்3ரு2ஹமுலு
மட்டு மிதமு லேனட்டி 3பரிஜனுலு
சுட்டுகொன்ன நிஜ சுட்டாலகொருல
பட்டுலகதி2துலகு
பெட்ட லேக தம பொட்ட ஸாகு-
கொன்னட்டி 4தே3ஹமுலு ரெட்டு ஸஞ்சுலனு
கட்டின த4னமுல பெட்டெல தோட3னு
பெட்டி பொய்யே மட்டு கனுங்கொ3னி (எந்து3கோ)


சரணம் 2
கல்லலாடி3 கடு3பு பல்லமு நிம்புட-
கெல்லவாரி த4னமெல்ல ஜேர்சுகொனி
பல்லவாத4ருலனெல்ல கனி 5ஸு1னகபு
பில்லல வலெ திரிகி3-
வொள்ள ரோக3முலு கொள்ளகா3 தக3
தொல்லி பைகமுலு மெல்ல ஜார ஜனு-
லெல்ல தூ3ர பரமெல்ல பார பு4வி
மள்ளி புட்டு ப2லமெல்ல கனுங்கொ3னி (எந்து3கோ)


சரணம் 3
வஞ்சகுலனனுஸரிஞ்சினயலமட-
யிஞ்சுகைன ஸைரிஞ்ச லேக தம
ஸஞ்சித கர்மமுலஞ்சு தெலிஸி
6வேரெஞ்சு வாரல ஜூசி
7மஞ்சு வலெ ப்ரதி-ப2லிஞ்சு ஸம்பத3-
லஞ்சு கோரகனு மஞ்சி த்யாக3-
ராஜஞ்சிதமுக3 பூஜிஞ்சு நுதிஞ்சு
ப்ரபஞ்ச நாது2னி ப4ஜிஞ்சுதா3மனுசு (எந்து3கோ)


பொருள் - சுருக்கம்
அழகனே, இராமா!
  • ஏனோ நன்கு தெரியாது?
  • இவ்வுடல் நிலையற்றதென இக்கலி மானிடர்களுக்கு ஏனோ நன்கு தெரியாது?


    • கெட்டியாக கற்களினால் கட்டிய வீடுகளும்,

    • மட்டு மிதமற்றதெனும் பரிசனங்களும்,

    • சூழ்ந்துள்ள உண்மையான சுற்றத்தினருக்கும், பிறர் மக்களுக்கும், விருந்தினருக்கும் ஈயாது, தமது வயிற்றினை நிரப்பி வளர்த்த அத்தகைய உடலும்,

    • சாக்குப் பைகளில் கட்டிய செல்வப் பெட்டகங்களுடனும்,

  • விட்டு வைத்து ஏகும் வரையினைக் கண்டுகொண்டும், ஏனோ நன்கு தெரியாது?


    • பொய்ப் பகன்று, வயிற்றுக் குழியினை நிரப்புதற்கு, பிறர் சொத்துக்களையெல்லாம் சேர்த்துக்கொண்டு,

    • மொட்டிதழ் பெண்டிரைக் கண்டு, நாய்க் குட்டிகளைப் போன்று திரிந்து,

      • உடலை நோய்கள் கொள்ளையாகப் பீடிக்க,

      • முந்தைய சொத்துக்களெல்லாம் மெள்ள கரைய,

      • மக்கள் யாவரும் தூற்ற,

      • பரமெல்லாம் நழுவ,

  • புவியில் மீண்டும் பிறக்கும் பயன்களைக் கண்டுகொண்டும், ஏனோ நன்கு தெரியாது?


    • வஞ்சகர்களை அனுசரித்தலின் துன்பத்தினைக் கொஞ்சமும் தாளாது,

    • தமது முந்தைய வினைகளெனத் தெரிந்து,

    • வேறெண்ணுவோரை நோக்கி,

    • பனித்துளி போன்று பிரதிபலிக்கும் சம்பத்துக்கள் என, (அவற்றினை) விழையாது,

  • சீரிய தியாகராசன் பணிவுடன் தொழும், போற்றும் உலகத் தலைவனை (நாமும்) வழிபடுவோமென, ஏனோ நன்கு தெரியாது?



பல்லவி
எந்து3கோ/ பா33/ தெலியது3/
ஏனோ/ நன்கு/ தெரியாது/


அனுபல்லவி
அந்த3கா33/ ஸ்ரீ ராம/ ஈ/ தனுவு/-
அழகனே/ ஸ்ரீ ராமா/ இந்த/ உடல்/

அஸ்தி2ரமு/-அனி/-ஈ/ கலி/ மானவுலகு/-(எந்து3கோ)
நிலையற்றது/ என/ இந்த/ கலி/ மானிடர்களுக்கு/ ஏனோ...


சரணம்
சரணம் 1
3ட்டிக3/ ராள்ளனு/ கட்டின/ க்3ரு2ஹமுலு/
கெட்டியாக/ கற்களினால்/ கட்டிய/ வீடுகளும்/

மட்டு/ மிதமு/ லேனி/-அட்டி/ பரிஜனுலு/
மட்டு/ மிதம்/ அற்றது/ எனும்/ பரிசனங்களும்/

சுட்டுகொன்ன/ நிஜ/ சுட்டாலகு/-ஒருல/
சூழ்ந்துள்ள/ உண்மையான/ சுற்றத்தினருக்கும்/ பிறர்/

பட்டுலகு/-அதி2துலகு/
மக்களுக்கும்/ விருந்தினருக்கும்/

பெட்ட லேக/ தம/ பொட்ட/ ஸாகு-கொன்ன-/
ஈயாது/ தமது/ வயிற்றினை/ நிரப்பி வளர்த்த/

அட்டி/ தே3ஹமுலு/ ரெட்டு/ ஸஞ்சுலனு/
அத்தகைய/ உடலும்/ சாக்கு/ பைகளில்/

கட்டின/ த4னமுல/ பெட்டெல தோட3னு/
கட்டிய/ செல்வ/ பெட்டகங்களுடனும்/

பெட்டி/ பொய்யே/ மட்டு/ கனுங்கொ3னி/ (எந்து3கோ)
விட்டு வைத்து/ ஏகும்/ வரையினை/ கண்டுகொண்டும்/ ஏனோ...


சரணம் 2
கல்லலு/-ஆடி3/ கடு3பு/ பல்லமு/ நிம்புடகு/-
பொய்/ பகன்று/ வயிற்று/ குழியினை/ நிரப்புதற்கு/

எல்லவாரி/ த4னமு/-எல்ல/ ஜேர்சுகொனி/
பிறர்/ சொத்துக்களை/ யெல்லாம்/ சேர்த்துக்கொண்டு/

பல்லவ-அத4ருலனு/-எல்ல/ கனி/ ஸு1னகபு/
மொட்டிதழ் பெண்டிரை/ எல்லாம்/ கண்டு/ நாய்/

பில்லல/ வலெ/ திரிகி3/-
குட்டிகளை/ போன்று/ திரிந்து/

ஒள்ள/ ரோக3முலு/ கொள்ளகா3/ தக3ல/
உடலை/ நோய்கள்/ கொள்ளையாக/ பீடிக்க/

தொல்லி/ பைகமுலு/ மெல்ல/ ஜார/ ஜனுலு/
முந்தைய/ சொத்துக்களெல்லாம்/ மெள்ள/ கரைய/ மக்கள்/

எல்ல/ தூ3ர/ பரமு/-எல்ல/ பார/ பு4வி/
யாவரும்/ தூற்ற/ பரம்/ எல்லாம்/ நழுவ/ புவியில்/

மள்ளி/ புட்டு/ ப2லமு/-எல்ல/ கனுங்கொ3னி/ (எந்து3கோ)
மீண்டும்/ பிறக்கும்/ பயன்களை/ எல்லாம்/ கண்டுகொண்டும்/ ஏனோ...


சரணம் 3
வஞ்சகுலனு/-அனுஸரிஞ்சின/-அலமட/-
வஞ்சகர்களை/ அனுசரித்தலின்/ துன்பத்தினை/

இஞ்சுகைன/ ஸைரிஞ்ச லேக/ தம/
கொஞ்சமும்/ தாளாது/ தமது/

ஸஞ்சித/ கர்மமுலு/அஞ்சு/ தெலிஸி/
முந்தைய/ வினைகள்/ என/ தெரிந்து/

வேரு/-எஞ்சு வாரல/ ஜூசி/
வேறு/ எண்ணுவோரை/ நோக்கி/

மஞ்சு/ வலெ/ ப்ரதி-ப2லிஞ்சு/ ஸம்பத3லு/-
பனித்துளி/ போன்று/ பிரதிபலிக்கும்/ சம்பத்துக்கள்/

அஞ்சு/ கோரகனு/ மஞ்சி/ த்யாக3ராஜு/-
என/ (அவற்றினை) விழையாது/ சீரிய/ தியாகராசன்/

அஞ்சிதமுக3/ பூஜிஞ்சு/ நுதிஞ்சு/
பணிவுடன்/ தொழும்/ போற்றும்/

ப்ரபஞ்ச/ நாது2னி/ ப4ஜிஞ்சுதா3மு/-அனுசு/ (எந்து3கோ)
உலக/ தலைவனை/ (நாமும்) வழிபடுவோம்/ என/ ஏனோ...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ஸ்ரீ ராம - ஸ்ரீ ராம ஸ்ரீ ராம

2 - க்3ரு2ஹமுலு - க்3ரு2ஹமுல

3 - பரிஜனுலு - பரிஜனுல

4 - தே3ஹமுலு - தே3ஹமுல

5 - ஸு1னகபு - ஸு1னக

Top

மேற்கோள்கள்

விளக்கம்
6 - வேரெஞ்சு வாரல - வேறெண்ணுவோர் - உலகோரினின்றும் மாறுபட்ட முறையில் எண்ணும் இறைவனின் தொண்டர்கள்

7 - மஞ்சு வலெ ப்ரதி-ப2லிஞ்சு - பனி போன்று பிரதிபலிக்கும் - சூரியன் எழுந்த சிறிது நேரத்திலேயே அந்த பனி விலகும் தன்மையது. அது போன்றே நிலையற்றது செல்வமும்.

பரிசனம் - சுற்றம், சேவகர்.

மக்கள் - குழந்தைகள்

விட்டு வைத்து ஏகும் - விட்டு வைத்து உடல் நீக்கும்

பரம் - கடவுள், அவ்வுலகம்

Top


Updated on 28 Jun 2009