ஜய மங்க3ளம் நித்ய ஸு1ப4 மங்க3ளம்
அனுபல்லவி
மங்க3ளம் மங்க3ளம் மா ராம சந்த்3ருனகு
மங்க3ளம் மங்க3ளம் மாத4வுனகு (ஜய)
சரணம்
சரணம் 1
நிஜ தா3ஸ பாலுனகு நித்ய ஸ்வரூபுனகு
அஜ ருத்3ர வினுதுனகு நக3 த4ருனகு (ஜய)
சரணம் 2
நித்யமை ஸத்யமை நிர்மலம்பை3ன
ஆதி3த்ய குல திலகுனகு தீ4ருனகுனு (ஜய)
சரணம் 3
ராஜாதி4ராஜுனகு ரவி கோடி தேஜுனகு
த்யாக3ராஜ நுதுனகு ராம ரத்னமுனகு (ஜய)
பொருள் - சுருக்கம்
- ஜய மங்களம்; என்றும் சுப மங்களம்.
- மங்களம் மங்களம், எமது இராம சந்திரனுக்கு,
- மங்களம் மங்களம், மாதவனுக்கு
- உண்மை அடியாரைப் பேணுவோனுக்கு,
- அழிவற்ற உருவத்தோனுக்கு,
- பிரமன், சிவனால் போற்றப் பெற்றோனுக்கு,
- மலையைச் சுமந்தோனுக்கு,
- நித்தியமாகி, சத்தியமாகி, நிர்மலமாகிய, பகலவன் குலத் திலகனுக்கு,
- தீரனுக்கு,
- அரசர்க்கரசனுக்கு,
- கோடி பரிதி ஒளியுடையோனுக்கு,
- தியாகராசனால் போற்றப் பெற்றோனுக்கு,
- இராம இரத்தினத்திற்கு,
- ஜய மங்களம்; என்றும் சுப மங்களம்.
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஜய/ மங்க3ளம்/ நித்ய/ ஸு1ப4/ மங்க3ளம்/
ஜய/ மங்களம்/ என்றும்/ சுப/ மங்களம்/
அனுபல்லவி
மங்க3ளம்/ மங்க3ளம்/ மா/ ராம/ சந்த்3ருனகு/
மங்களம்/ மங்களம்/ எமது/ இராம/ சந்திரனுக்கு/
மங்க3ளம்/ மங்க3ளம்/ மாத4வுனகு/ (ஜய)
மங்களம்/ மங்களம்/ மாதவனுக்கு/ ஜய மங்களம்...
சரணம்
சரணம் 1
நிஜ/ தா3ஸ/ பாலுனகு/ நித்ய/ ஸ்வரூபுனகு/
உண்மை/ அடியாரைப்/ பேணுவோனுக்கு/ அழிவற்ற/ உருவத்தோனுக்கு/
அஜ/ ருத்3ர/ வினுதுனகு/ நக3/ த4ருனகு/ (ஜய)
பிரமன்/ சிவனால்/ போற்றப் பெற்றோனுக்கு/ மலையை/ சுமந்தோனுக்கு/ ஜய மங்களம்...
சரணம் 2
நித்யமை/ ஸத்யமை/ நிர்மலம்பை3ன/
நித்தியமாகி/ சத்தியமாகி/ நிர்மலமாகிய/
ஆதி3த்ய/ குல/ திலகுனகு/ தீ4ருனகுனு/ (ஜய)
பகலவன்/ குல/ திலகனுக்கு/ தீரனுக்கும்/ ஜய மங்களம்...
சரணம் 3
ராஜ/-அதி4ராஜுனகு/ ரவி/ கோடி/ தேஜுனகு/
அரசர்க்கு/ அரசனுக்கு/ பரிதி/ கோடி/ ஒளியுடையோனுக்கு/
த்யாக3ராஜ/ நுதுனகு/ ராம/ ரத்னமுனகு/ (ஜய)
தியாகராசனால்/ போற்றப் பெற்றோனுக்கு/ இராம/ இரத்தினத்திற்கு/ ஜய மங்களம்...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
சில புத்தகங்களில் அனுபல்லவி முதலாவது சரணமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
விளக்கம்
இப்பாடல் 'பிரகலாத பக்தி விஜயம்' என்றும் நாட்டிய நாடகத்தின் கடைசி பாடலாகும்.
Top
Updated on 29 Jun 2009
No comments:
Post a Comment