Thursday, July 2, 2009

தியாகராஜ கிருதி - நனு பாலிம்ப - ராகம் மோஹனம் - Nanu Paalimpa - Raga Mohanam

பல்லவி
நனு பாலிம்ப நட3சி வச்சிதிவோ
நா ப்ராண 1நாத2

அனுபல்லவி
வனஜ நயன 2மோமுனு ஜூசுட
ஜீவனமனி நெனருன மனஸு மர்மமு தெலிஸி (நனு)

சரணம்
3ஸுர பதி நீல மணி நிப4 தனுவுதோ
உரமுன முத்யபு ஸருல சயமுதோ
கரமுன ஸ1ர கோத3ண்ட3 காந்திதோ
4ரணி தனயதோ த்யாக3ராஜார்சித (நனு)


பொருள் - சுருக்கம்
எனதுயிர்த் தலைவா! தியாகராசனால் தொழப் பெற்றோனே!
  • என்னைப் பேணுதற்கென நடந்து வந்தனையோ?

  • கமலக் கண்களுடைய (உனது) வதனத்தினைக் காண்பதே பிழைப்பெனும், எனதுள்ளத்தின் மருமத்தினைத் தெரிந்து, கனிவுடன், என்னைப் பேணுதற்கென நடந்து வந்தனையோ?

    • இந்திர நீலமணி நிகர் உடலுடனும்,

    • மார்பில் முத்துச் சரத் திரள்களுடனும்,

    • கரங்களில் அம்புகள் மற்றும் கோதண்டத்தின் ஒளியுடனும்,

    • புவிமகளுடனும்,

  • என்னைப் பேணுதற்கென நடந்து வந்தனையோ?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நனு/ பாலிம்ப/ நட3சி/ வச்சிதிவோ/
என்னை/ பேணுதற்கென/ நடந்து/ வந்தனையோ/

நா/ ப்ராண/ நாத2/
எனது/ உயிர்/ தலைவா/


அனுபல்லவி
வனஜ/ நயன/ மோமுனு/ ஜூசுட/
கமல/ கண்களுடைய/ (உனது) வதனத்தினை/ காண்பதே/

ஜீவனமு/-அனி/ நெனருன/ மனஸு/ மர்மமு/ தெலிஸி/ (நனு)
பிழைப்பு/ எனும்/ கனிவுடன்/ (எனது) உள்ளத்தின்/ மருமத்தினை/ தெரிந்து/ என்னை...


சரணம்
ஸுர/ பதி/ நீல/ மணி/ நிப4/ தனுவுதோ/
வானோர்/ தலைவன் (இந்திர)/ நீல/ மணி/ நிகர்/ உடலுடனும்/

உரமுன/ முத்யபு/ ஸருல/ சயமுதோ/
மார்பில்/ முத்து/ சர/ திரள்களுடனும்/

கரமுன/ ஸ1ர/ கோத3ண்ட3/ காந்திதோ/
கரங்களில்/ அம்புகள்/ (மற்றும்) கோதண்டத்தின்/ ஒளியுடனும்/

4ரணி/ தனயதோ/ த்யாக3ராஜ/-அர்சித/ (நனு)
புவி/ மகளுடனும்/ தியாகராசனால்/ தொழப் பெற்றோனே/ என்னை..


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - நாத2 - நாதா2

2 - மோமுனு - மோமுன

Top

மேற்கோள்கள்

விளக்கம்
3 - ஸுர பதி நீல மணி - இந்திர நீல மணி - நீலக்கல் - 'இந்திர' என்பதற்கு பதிலாக, தியாகராஜர் 'ஸுர பதி' (வானோர் தலைவன்) என்று பயன்படுத்தியுள்ளார்.


Updated on 04 Mar 2011

1 comment:

Unknown said...

great work thanks a lot sir