Showing posts with label Jaya Mangalam. Show all posts
Showing posts with label Jaya Mangalam. Show all posts

Friday, December 17, 2010

தியாகராஜ கிருதி - ஜய மங்களம் - ராகம் நாத நாமக்ரிய - Jaya Mangalam - Raga Nada Namakriya

பல்லவி
ஜய மங்க3ளம் நித்ய ஸு14 மங்க3ளம்

சரணம்
சரணம் 1
மங்க3ளம் அவனி ஸுதா நாது2னிகி
மங்க3ளம் அரவிந்தா3க்ஷுனிகி
மங்க3ளம் அத்3பு4த சாரித்ருனிகி
மங்க3ளம் ஆதி3 தே3வுனிகி (ஜய)


சரணம் 2
ஸுந்த3ர வத3னுனிகி ஸு-தே3ஹுனிகி
ப்3ரு2ந்தா3ரக க3ண வந்த்3யுனிகி
மந்த3ர த4ருனிகி மன
மாத4வுனிகி ஸு142லது3னிகி (ஜய)


சரணம் 3
இன குலமுன வெலஸின ராமுனிகி
ஜனக வசன பரிபாலுனிகி
மனஸிஜ கோடி லாவண்யுனிகி
கனக ஸிம்ஹாஸன நிலயுனிகி (ஜய)


சரணம் 4
மந்தா3னில போ4ஜ ஸ1யனுனிகி
1மந்தா3கினீ வர ஜனகுனிகி
மந்த3 ஜனக ஸ1த ஸங்காஸு1னிகி
2மந்தா3 ரூபுனிகி ஹரிகி (ஜய)


சரணம் 5
இந்த்3ராத்3யஷ்ட தி3கீ31 நுதுனிகி
சந்த்3ராதி3த்ய ஸு-நயனுனிகி
3ஜேந்த்3ருனி ஸம்ரக்ஷிஞ்சின ராம
சந்த்3ருனிகி ஜக3த்3ரூபுனிகி (ஜய)


சரணம் 6
ராஜ ஸே12ர ப்ரியுனிகி 3மௌனி
ராஜ ராஜ
பூஜிதுனிகி த்யாக3-
ராஜ வினுதுனிகி வர 43
ராஜாதி3
4க்த வரது3னிகி (ஜய)


பொருள் - சுருக்கம்
  • ஜய மங்களம்.
  • என்றும் சுப மங்களம்.

  • மங்களம், புவியின் மகள் மணாளனுக்கு!
  • மங்களம், கமலக் கண்ணனுக்கு!
  • மங்களம், வியத்தகு நடத்தை யுடையோனுக்கு!
  • மங்களம், முதற்கடவுளுக்கு!

    • எழில் முகத்தோனுக்கு,
    • நல்லுடலோனுக்கு,
    • வானோர்கள் வணங்குவோனுக்கு,
    • மந்தர மலை சுமந்தோனுக்கு,
    • எமது மாதவனுக்கு,
    • நற்பயன் அருள்வோனுக்கு,

    • பரிதி குலத்தில் தோன்றிய இராமனுக்கு,
    • தந்தை சொல் காத்தவனுக்கு,
    • மதனர் கோடி நிகர் எழிலுடையோனுக்கு,
    • தங்க சிங்காதனத்தில் அமர்வோனுக்கு,

    • மென் காற்றுண்போன் அணையோனுக்கு,
    • மந்தாகினியை ஈன்ற புனிதனுக்கு,
    • சனியை யீன்றோன் (பரிதி) நூறு உதித்தாற்போன்றோனுக்கு,
    • மந்தார (தரு) உருவினனுக்கு,
    • அரிக்கு,

    • இந்திரன் முதலாக எண்-திசைமன்னர் போற்றுவோனுக்கு,
    • மதி, பரிதிக் கண்களோனுக்கு,
    • கரியரசனைக் காத்த இராம சந்திரனுக்கு,
    • பல்லுலக உருவத்தோனுக்கு,

    • பிறைசூடிக்கு இனியோனுக்கு,
    • முனிவரிற் சிறந்தோர் மற்றும் அரசர்கள் தொழுவோனுக்கு,
    • தியாகராசன் போற்றுவோனுக்கு,
    • உயர் கரி யரசன் முதலான தொண்டருக்கருள்வோனுக்கு,

  • ஜய மங்களம்.
  • என்றும் சுப மங்களம்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஜய/ மங்க3ளம்/ நித்ய/ ஸு14/ மங்க3ளம்/
ஜய/ மங்களம்/ என்றும்/ சுப/ மங்களம்/


சரணம்
சரணம் 1
மங்க3ளம்/ அவனி/ ஸுதா/ நாது2னிகி/
மங்களம்/ புவியின்/ மகள்/ மணாளனுக்கு/

மங்க3ளம்/ அரவிந்த3/-அக்ஷுனிகி/
மங்களம்/ கமல/ கண்ணனுக்கு/

மங்க3ளம்/ அத்3பு4த/ சாரித்ருனிகி/
மங்களம்/ வியத்தகு/ நடத்தை யுடையோனுக்கு/

மங்க3ளம்/ ஆதி3/ தே3வுனிகி/ (ஜய)
மங்களம்/ முதற்/ கடவுளுக்கு/


சரணம் 2
ஸுந்த3ர/ வத3னுனிகி/ ஸு-தே3ஹுனிகி/
எழில்/ முகத்தோனுக்கு/ நல்லுடலோனுக்கு/

ப்3ரு2ந்தா3ரக க3ண/ வந்த்3யுனிகி/
வானோர்கள்/ வணங்குவோனுக்கு/

மந்த3ர/ த4ருனிகி/ மன/
மந்தர மலை/ சுமந்தோனுக்கு/ எமது/

மாத4வுனிகி/ ஸு14/ ப2லது3னிகி/ (ஜய)
மாதவனுக்கு/ நற்/ பயன் அருள்வோனுக்கு/ ஜய மங்களம்...


சரணம் 3
இன/ குலமுன/ வெலஸின/ ராமுனிகி/
பரிதி/ குலத்தில்/ தோன்றிய/ இராமனுக்கு/

ஜனக/ வசன/ பரிபாலுனிகி/
தந்தை/ சொல்/ காத்தவனுக்கு/

மனஸிஜ/ கோடி/ லாவண்யுனிகி/
மதனர்/ கோடி (நிகர்)/ எழிலுடையோனுக்கு/

கனக/ ஸிம்ஹாஸன/ நிலயுனிகி/ (ஜய)
தங்க/ சிங்காதனத்தில்/ அமர்வோனுக்கு/ ஜய மங்களம்...


சரணம் 4
மந்த3/-அனில/ போ4ஜ/ ஸ1யனுனிகி/
மென்/ காற்று/ உண்போன்/ அணையோனுக்கு/

மந்தா3கினீ/ வர/ ஜனகுனிகி/
மந்தாகினி/ புனித/ ஈன்றோனுக்கு/

மந்த3/ ஜனக/ ஸ1த/ ஸங்காஸு1னிகி/
சனியை/ யீன்றோன் (பரிதி)/ நூறு/ உதித்தாற்போன்றோனுக்கு/

மந்தா3ர/ ரூபுனிகி/ ஹரிகி/ (ஜய)
மந்தார (தரு)/ உருவினனுக்கு/ அரிக்கு/ ஜய மங்களம்...


சரணம் 5
இந்த்3ர/-ஆதி3/-அஷ்ட/ தி3க்/-ஈஸ1/ நுதுனிகி/
இந்திரன்/ முதலாக/ எண்/-திசை/ மன்னர்/ போற்றுவோனுக்கு/

சந்த்3ர/-ஆதி3த்ய/ ஸு-நயனுனிகி/
மதி/ பரிதி/ கண்களோனுக்கு/

3ஜ/-இந்த்3ருனி/ ஸம்ரக்ஷிஞ்சின/ ராம/
கரி/ யரசனை/ காத்த/ இராம/

சந்த்3ருனிகி/ ஜக3த்/-ரூபுனிகி/ (ஜய)
சந்திரனுக்கு/ பல்லுலக/ உருவத்தோனுக்கு/ ஜய மங்களம்...


சரணம் 6
ராஜ/ ஸே12ர/ ப்ரியுனிகி/ மௌனி/
பிறை/ சூடிக்கு/ இனியோனுக்கு/ முனிவரிற்/

ராஜ/ ராஜ/ பூஜிதுனிகி/
சிறந்தோர்/ (மற்றும்) அரசர்கள்/ தொழுவோனுக்கு/

த்யாக3ராஜ/ வினுதுனிகி/ வர/ க3ஜ/
தியாகராசன்/ போற்றுவோனுக்கு/ உயர்/ கரி/

ராஜ/-ஆதி3/ ப4க்த/ வரது3னிகி/ (ஜய)
யரசன்/ முதலான/ தொண்டருக்கு/ அருள்வோனுக்கு/ ஜய மங்களம்...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்
1 - மந்தா3கினீ - மந்தாகினி - கங்கையின் மற்றொரு பெயர்

2 - மந்தா3 - மந்தார தரு - பாற்கடல் கடைந்த போது தோன்றிய ஐந்து மரங்களில் ஒன்றாகிய, விரும்பியதருளும் வானோர் தரு.

Top

விளக்கம்
3 - மௌனி ராஜ ராஜ - இதனை, 'மௌனி ராஜ' மற்றும் 'ராஜ' என்றோ, 'மௌனி' மற்றும் 'ராஜ ராஜ' என்றோ பொருள் கொள்ளலாம். முதலிற் கூறிய முறையில் இங்கு பொருள் கொள்ளப்பட்டது. 'மௌனி ராஜ' என்பதற்கு 'வால்மீகி' என்றும் பொருள் கொள்ளலாம்.

4 - 3ஜ ராஜ - கரியரசன் - ஐந்தாவது சரணத்திலும், இதே சொல் வருகின்றது. ஆனால், இதற்கு வேறு ஏதும் பொருள் கொள்வதற்கு இடமில்லை.

புவியின் மகள் - சீதை
மென் காற்றுண்போன் - பாம்பு - சேடனைக் குறிக்கும்
பிறைசூடி - சிவன்
கரியரசன் - கஜேந்திரன்

Top


Updated on 18 Dec 2010

Wednesday, October 13, 2010

தியாகராஜ கிருதி - ஜய மங்க3ளம் - ராகம் க4ண்டா - Jaya Mangalam - Raga Ghanta

பல்லவி
1ஜய மங்க3ளம் நித்ய ஸு14 மங்க3ளம்

சரணம்
சரணம் 1
கருணா ரஸாக்ஷாய காமாரி வினுதாய
2தருணாருணாதி ஸுந்த3ர பதா3
நிருபம ஸ1ரீராய நிகி2லாக3ம சராய
ஸுர வினுத சரிதாய ஸு-வ்ரதாய (ஜய)


சரணம் 2
குந்த3 ஸம ரத3னாய கும்ப4ஜ ஸு-கே3யாய
மந்த3ராக34ராய மாத4வாய
கந்த3ர்ப ஜனகாய காமித ஸு-ப2லதா3
ப்3ரு2ந்தா3ரகாராதி பீ4-கராய (ஜய)


சரணம் 3
ஸர்வ லோக ஹிதாய ஸாகேத ஸத3னாய
நிர்விகாராய மானித கு3ணாய
ஸார்வபௌ4மாய போஷித த்யாக3ராஜாய
நிர்வாண ப2லதா3ய நிர்மலாய (ஜய)


பொருள் - சுருக்கம்
  • ஜய மங்களம்! என்றும் சுபமங்களம்!

    • கருணை ரசக் கண்களோனுக்கு,
    • காமன் பகைவன் புகழ்வோனுக்கு,
    • இளங்காலைப் பரிதி நிகர், சிவந்த, மிக்கெழில் திருவடியோனுக்கு,
    • ஒப்பற்ற உடலோனுக்கு,
    • அனைத்தாகமங்கள் உள்ளுறைவோனுக்கு,
    • அமரர் புகழும் ஒழுக்கத்தோனுக்கு,
    • நல் விரதத்தோனுக்கு,

    • முல்லை நிகர் பற்களோனுக்கு,
    • குட முனியால் பாடப் பெற்றோனுக்கு,
    • மந்தர மலை சுமந்தோனுக்கு,
    • மது (யாதவ) குலத்தோன்றலுக்கு (அல்லது) இலக்குமி மணாளனுக்கு,
    • காமனை யீன்றோனுக்கு,
    • விரும்பிய நற்பயன் அருள்வோனுக்கு,
    • வானோர் பகைவருக்கு அச்சமூட்டுவோனுக்கு,

    • அனைத்துலகிற்கும் இனியோனுக்கு,
    • அயோத்தி நகருறைவோனுக்கு,
    • மாற்றமற்றோனுக்கு,
    • மதிக்கப் பெற்ற பண்புகளுடைத்தோனுக்கு,
    • அனைத்தண்டம் ஆள்வோனுக்கு,
    • தியாகராசனைப் பேணுவோனுக்கு,
    • முத்திப் பயனருள்வோனுக்கு,
    • களங்கமற்றோனுக்கு,

  • ஜய மங்களம்! என்றும் சுபமங்களம்!







பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஜய/ மங்க3ளம்/ நித்ய/ ஸு14/ மங்க3ளம்/
ஜய/ மங்களம்/ என்றும்/ சுப/ மங்களம்/


சரணம்
சரணம் 1
கருணா/ ரஸ/-அக்ஷாய/ காம/-அரி/ வினுதாய/
கருணை/ ரச/ கண்களோனுக்கு/ காமன்/ பகைவன்/ புகழ்வோனுக்கு/

தருண/-அருண/-அதி/ ஸுந்த3ர/ பதா3ய/
இளங்/ காலை பரிதி/ (நிகர், சிவந்த,) மிக்கெழில்/ திருவடியோனுக்கு/

நிருபம/ ஸ1ரீராய/ நிகி2ல/-ஆக3ம/ சராய/
ஒப்பற்ற/ உடலோனுக்கு/ அனைத்து/ ஆகமங்கள்/ உள்ளுறைவோனுக்கு/

ஸுர/ வினுத/ சரிதாய/ ஸு-வ்ரதாய/ (ஜய)
அமரர்/ புகழும்/ ஒழுக்கத்தோனுக்கு/ நல் விரதத்தோனுக்கு/ ஜய...


சரணம் 2
குந்த3/ ஸம/ ரத3னாய/ கும்ப4ஜ/ ஸு-கே3யாய/
முல்லை/ நிகர்/ பற்களோனுக்கு/ குட முனியால்/ பாடப் பெற்றோனுக்கு/

மந்த3ர/-அக3/ த4ராய/ மாத4வாய (மா/-த4வாய)/
மந்தர/ மலை/ சுமந்தோனுக்கு/ மது (யாதவ) குலத்தோன்றலுக்கு (இலக்குமி/ மணாளனுக்கு/)

கந்த3ர்ப/ ஜனகாய/ காமித/ ஸு-ப2லதா3ய/
காமனை/ யீன்றோனுக்கு/ விரும்பிய/ நற்பயன் அருள்வோனுக்கு/

ப்3ரு2ந்தா3ரக/-அராதி/ பீ4-கராய/ (ஜய)
வானோர்/ பகைவருக்கு/ அச்சமூட்டுவோனுக்கு/ ஜய...


சரணம் 3
ஸர்வ/ லோக/ ஹிதாய/ ஸாகேத/ ஸத3னாய/
அனைத்து/ உலகிற்கும்/ இனியோனுக்கு/ அயோத்தி நகர்/ உறைவோனுக்கு/

நிர்விகாராய/ மானித/ கு3ணாய/
மாற்றமற்றோனுக்கு/ மதிக்கப் பெற்ற/ பண்புகளுடைத்தோனுக்கு/

ஸார்வபௌ4மாய/ போஷித/ த்யாக3ராஜாய/
அனைத்தண்டம் ஆள்வோனுக்கு/ பேணுவோனுக்கு/ தியாகராசனை/

நிர்வாண/ ப2லதா3ய/ நிர்மலாய/ (ஜய)
முத்தி/ பயனருள்வோனுக்கு/ களங்கமற்றோனுக்கு/ ஜய...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ஜய மங்க3ளம் நித்ய ஸு14 மங்க3ளம் - சில புத்தகங்களில் இச்சொற்கள் இருமுறை கொடுக்கப்பட்டுள்ளது.

2 - தருணாருணாதி - தருணாருணாராதி : பிற்கூறியது 'தருண+அருண+அராதி' என்று பிரிக்கப்படும். இவ்விடத்தில், 'அராதி' (பகைவன்) என்ற சொல்லுக்குப் பொருளேதும் இல்லை. எனவே 'தருணாருணாதி' ஏற்கபட்டது.

Top

மேற்கோள்கள்

விளக்கம்
கருணை ரசம் - நவரசங்களிலொன்று
காமன் பகைவன் - சிவன்
குட முனி - அகத்தியர்
மாற்றமற்றோன் - பரம்பொருளைக் குறிக்கும்.

Top


Updated on 13 Oct 2010

Monday, June 29, 2009

தியாகராஜ கிருதி - ஜய மங்க3ளம் - ராகம் மோஹனம் - Jaya Mangalam - Raga Mohanam

பல்லவி
ஜய மங்க3ளம் நித்ய ஸு14 மங்க3ளம்

அனுபல்லவி
மங்க3ளம் மங்க3ளம் மா ராம சந்த்3ருனகு
மங்க3ளம் மங்க3ளம் மாத4வுனகு (ஜய)

சரணம்
சரணம் 1
நிஜ தா3ஸ பாலுனகு நித்ய ஸ்வரூபுனகு
அஜ ருத்3ர வினுதுனகு நக34ருனகு (ஜய)


சரணம் 2
நித்யமை ஸத்யமை நிர்மலம்பை3
ஆதி3த்ய குல திலகுனகு தீ4ருனகுனு (ஜய)


சரணம் 3
ராஜாதி4ராஜுனகு ரவி கோடி தேஜுனகு
த்யாக3ராஜ நுதுனகு ராம ரத்னமுனகு (ஜய)


பொருள் - சுருக்கம்
  • ஜய மங்களம்; என்றும் சுப மங்களம்.

  • மங்களம் மங்களம், எமது இராம சந்திரனுக்கு,

  • மங்களம் மங்களம், மாதவனுக்கு

    • உண்மை அடியாரைப் பேணுவோனுக்கு,

    • அழிவற்ற உருவத்தோனுக்கு,

    • பிரமன், சிவனால் போற்றப் பெற்றோனுக்கு,

    • மலையைச் சுமந்தோனுக்கு,

    • நித்தியமாகி, சத்தியமாகி, நிர்மலமாகிய, பகலவன் குலத் திலகனுக்கு,

    • தீரனுக்கு,

    • அரசர்க்கரசனுக்கு,

    • கோடி பரிதி ஒளியுடையோனுக்கு,

    • தியாகராசனால் போற்றப் பெற்றோனுக்கு,

    • இராம இரத்தினத்திற்கு,

  • ஜய மங்களம்; என்றும் சுப மங்களம்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஜய/ மங்க3ளம்/ நித்ய/ ஸு14/ மங்க3ளம்/
ஜய/ மங்களம்/ என்றும்/ சுப/ மங்களம்/


அனுபல்லவி
மங்க3ளம்/ மங்க3ளம்/ மா/ ராம/ சந்த்3ருனகு/
மங்களம்/ மங்களம்/ எமது/ இராம/ சந்திரனுக்கு/

மங்க3ளம்/ மங்க3ளம்/ மாத4வுனகு/ (ஜய)
மங்களம்/ மங்களம்/ மாதவனுக்கு/ ஜய மங்களம்...


சரணம்
சரணம் 1
நிஜ/ தா3ஸ/ பாலுனகு/ நித்ய/ ஸ்வரூபுனகு/
உண்மை/ அடியாரைப்/ பேணுவோனுக்கு/ அழிவற்ற/ உருவத்தோனுக்கு/

அஜ/ ருத்3ர/ வினுதுனகு/ நக3/ த4ருனகு/ (ஜய)
பிரமன்/ சிவனால்/ போற்றப் பெற்றோனுக்கு/ மலையை/ சுமந்தோனுக்கு/ ஜய மங்களம்...


சரணம் 2
நித்யமை/ ஸத்யமை/ நிர்மலம்பை3ன/
நித்தியமாகி/ சத்தியமாகி/ நிர்மலமாகிய/

ஆதி3த்ய/ குல/ திலகுனகு/ தீ4ருனகுனு/ (ஜய)
பகலவன்/ குல/ திலகனுக்கு/ தீரனுக்கும்/ ஜய மங்களம்...


சரணம் 3
ராஜ/-அதி4ராஜுனகு/ ரவி/ கோடி/ தேஜுனகு/
அரசர்க்கு/ அரசனுக்கு/ பரிதி/ கோடி/ ஒளியுடையோனுக்கு/

த்யாக3ராஜ/ நுதுனகு/ ராம/ ரத்னமுனகு/ (ஜய)
தியாகராசனால்/ போற்றப் பெற்றோனுக்கு/ இராம/ இரத்தினத்திற்கு/ ஜய மங்களம்...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
சில புத்தகங்களில் அனுபல்லவி முதலாவது சரணமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

விளக்கம்
இப்பாடல் 'பிரகலாத பக்தி விஜயம்' என்றும் நாட்டிய நாடகத்தின் கடைசி பாடலாகும்.

Top


Updated on 29 Jun 2009