ப4வ நுத நா ஹ்ரு2த3யமுன ரமிம்புமு ப3ட3லிக தீர
அனுபல்லவி
ப4வ தாரக நாதோ ப3ஹு பல்கின ப3ட3லிக தீர கமல ஸம்(ப4வ)
சரணம்
சரணம் 1
பவன ஸுத ப்ரிய தனகை திரிகி3ன ப3ட3லிக தீர
ப4வனமு ஜேரி நனு வெரபிஞ்சின ப3ட3லிக தீர கமல ஸம்(ப4வ)
சரணம் 2
வரமகு3 நைவேத்3யமுலனு ஜேயனி ப3ட3லிக தீர
1பரவ லேக 2ஸரி போயினட்டாடி3ன ப3ட3லிக தீர கமல ஸம்(ப4வ)
சரணம் 3
ப்ரப3ல ஜேஸி நனு 3ப்3ரோசெத3வனுகொன்ன ப3ட3லிக தீர
ப்ரபு4 நீவு த்யாக3ராஜுனிகி ப3ட3லிக தீர 4கமல ஸம்(ப4வ)
பொருள் - சுருக்கம்
சிவனால் போற்றப் பெற்றோனே! பிறவிக்கடலைக் கடத்துவிப்போனே! பிரமனால் போற்றப் பெற்றோனே! வாயு மைந்தனுக்கினியோனே!
- தலைவன் நீயே தியாகராசனுக்கு;
- எனது இதயத்தினில் இளைப்பாறுவாய், களைப்புத் தீர;
- என்னுடன் மிக்கு பகர்ந்த களைப்புத் தீர, எனது இதயத்தினில் இளைப்பாறுவாய்;
- எனக்காக திரிந்த களைப்புத் தீர, இல்லத்தினை அடைந்து என்னை வியப்புறச் செய்த களைப்புத் தீர, எனது இதயத்தினில் இளைப்பாறுவாய்;
- உயர் நிவேதனங்களை (நான்) தயாரிக்காத களைப்புத் தீர, படையாது, சரிதானென்று, உரையாடிய களைப்புத் தீர, எனது இதயத்தினில் இளைப்பாறுவாய்;
- பிரபலப் படுத்தி என்னைக் காத்தனை; எண்ணிய களைப்புத் தீர, எனது இதயத்தினில் இளைப்பாறுவாய்.
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ப4வ/ நுத/ நா/ ஹ்ரு2த3யமுன/ ரமிம்புமு/ ப3ட3லிக/ தீர/
சிவனால்/ போற்றப் பெற்றோனே/ எனது/ இதயத்தினில்/ இளைப்பாறுவாய்/ களைப்பு/ தீர/
அனுபல்லவி
ப4வ/ தாரக/ நாதோ/ ப3ஹு/ பல்கின/ ப3ட3லிக/ தீர/ கமல ஸம்(ப4வ)/
பிறவிக்கடலை/ கடத்துவிப்போனே/ என்னுடன்/ மிக்கு/ பகர்ந்த/ களைப்பு/ தீர/ (மலரோன்) பிரமனால்/...
சரணம்
சரணம் 1
பவன/ ஸுத/ ப்ரிய/ தனகை/ திரிகி3ன/ ப3ட3லிக/ தீர/
வாயு/ மைந்தனுக்கு/ இனியோனே/ எனக்காக/ திரிந்த/ களைப்பு/ தீர/
ப4வனமு/ ஜேரி/ நனு/ வெரபிஞ்சின/ ப3ட3லிக/ தீர/ கமல ஸம்(ப4வ)/
இல்லத்தினை/ அடைந்து/ என்னை /வியப்புறச் செய்த/ களைப்பு/ தீர/ (மலரோன்) பிரமனால்/...
சரணம் 2
வரமகு3/ நைவேத்3யமுலனு/ ஜேயனி/ ப3ட3லிக/ தீர/
உயர்/ நிவேதனங்களை/ (நான்) தயாரிக்காத/ களைப்பு/ தீர/
பரவ லேக/ ஸரி போயினட்டு/-ஆடி3ன/ ப3ட3லிக/ தீர/ கமல ஸம்(ப4வ)/
படையாது/ சரிதானென்று/ உரையாடிய/ களைப்பு/ தீர/ (மலரோன்) பிரமனால்/...
சரணம் 3
ப்ரப3ல/ ஜேஸி/ நனு/ ப்3ரோசெத3வு/-அனுகொன்ன/ ப3ட3லிக/ தீர/
பிரபல/ படுத்தி/ என்னை/ காத்தனை/ எண்ணிய/ களைப்பு/ தீர/
ப்ரபு4/ நீவு/ த்யாக3ராஜுனிகி/ ப3ட3லிக/ தீர/ கமல ஸம்(ப4வ)/
தலைவன்/ நீயே/ தியாகராசனுக்கு/ களைப்பு/ தீர/ (மலரோன்) பிரமனால்/...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
3 - ப்3ரோசெத3வனுகொன்ன - ப்3ரோசெனனுகொன்ன : 'ப்3ரோசெனனுகொன்ன' தவறாகும்.
4 - கமல ஸம்(ப4வ) - ஜலஜ ஸம்(ப4வ)
Top
மேற்கோள்கள்
விளக்கம்
1 - பரவ லேக - 'பரவ' என்ற சொல்லுக்கு இரண்டு அடிகள் உண்டு - 'பரசு' (படைத்தல்) என்றும், 'பரனா' ('பரவா'யில்லை என்ற தமிழ் சொல்வழக்குக்கு ஈடான) 'பரவா' என்றும்.
இரு விதமான பொருள்களுமே இங்கு பொருநதும். ஆனால், 'பரவா' (தமிழுக்கு ஈடான 'பரவா'யில்லை) என்ற சொல்லுக்கு, கடைசி உயிர் மெய்யெழுத்து, 'வா' என்றிருக்க வேண்டும். எல்லா புத்தகங்களிலும் 'பரவ' என்றே கொடுத்திருப்பதனால், 'படைத்தல்' என்ற பொருளில் ஏற்கப்பட்டு மொழி பெயர்க்கப் பட்டது.
Top
2 - ஸரி போயினட்டு - சரிதானென்று - தான் செய்வது தவறென உணராது
3 - அனுகொன்ன - எண்ணிய - பிரபலப் படுத்தி காக்க எண்ணியது - இறைவன் எண்ணியது நிறைவேறும். விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில், இறைவனுக்கு 'ஸத்ய ஸங்கல்ப' (நிறைவேறப்படும் எண்ணமுடையவன்) என்று ஓர் பெயராகும். இதனை 'சித்தம்' என்றும் கூறுவர்
தலைசிறந்த, ஹரிகதை உரையாளர், திருவாளர் பாலகிருஷ்ண சாஸ்திரிகள், தன்னுடைய 'தியாகராஜ ராமாயணத்தில்' கூறவது என்னவென்றால் - 'ஓர் நாள் மாலை, தியாகராஜரின் வீட்டுக்கு, ஒரு முதிய தம்பதியும், உடன் ஓரு துறவியும், வந்தனர். அவர்களுடன், தியாகராஜர், இரவு முழுவதும் பேசிக் கொண்டிருந்தார். ஆனால், அவர்களுக்கு சரிவர ஏதும் விருந்தோம்பல் செய்யவில்லை. மறுநாள் காலை, அம்மூவரும் புறப்பட்டு சென்ற போது, பின்புறமாக, அங்கு, ராமன், சீதை மற்றும் அனுமன் செல்வதைக் கண்டார். அவர்களுக்கு சரிவர விருந்தோம்பல் செய்யத்தவறிவிட்டேனே என்று தியாகராஜர் மனம் நொந்து, இப்பாடலைப் பாடினார்.'
படையாது - நிவேதனங்களினை
Top
Updated on 04 Jul 2009
No comments:
Post a Comment