Monday, July 13, 2009

தியாகராஜ கிருதி - ராம ராம ராம ராமாயனி - ராகம் மோஹனம் - Rama Rama Rama Ramaayani - Raga Mohanam

பல்லவி
1ராம ராம ராம ராமாயனினந்த
2ராஜபு ஜூபேலரா ஓ ராம

சரணம்
சரணம் 1
ஏடி ஜன்மமிதி3 3ஏடிகி ப்3ரதுகு ராம
ஏமெஞ்சுகொன்னாவோ ஓ ராம (ராம)


சரணம் 2
ஆடலைன நாது3 பாடல வினுசு
மாடலாட3வெந்து3கோ ஓ ராம (ராம)


சரணம் 3
ஸரிவாரிலோ நன்னு கருண ஜூசி நாது3
கரமு பட்டவெந்து3கோ ஓ ராம (ராம)


சரணம் 4
ஆஸகொன்ன நாது3 கா3ஸி தீர்ப லேக
வாஸியேமி 4கல்கெ3னோ ஓ ராம (ராம)


சரணம் 5
3யதோ நனு ஸே1ஷ ஸ1யன இந்த3ரிலோன
நயமு ஸேய தக்குவா ஓ ராம (ராம)


சரணம் 6
பதித பாவன நீகு ஹிதுலைன வாரி
ஜத-கூ33க போதினா ஓ ராம (ராம)


சரணம் 7
நாடி ப4க்துலு நீகேடி வாவுலோ கொஞ்ச
பாடி லேக போயெனா ஓ ராம (ராம)


சரணம் 8
அல நாடு3 நீ வாரு கொலிசினடுல நாது3
தலபு கா3க போயெனா ஓ ராம (ராம)


சரணம் 9
ப்3ரோசி ப்3ரோவகனு ஜூசி ஜூட3கனு
ஏசுடகே தோசெனா ஓ ராம (ராம)


சரணம் 10
ஓ ஜக33வன ஸரோஜ நயன த்யாக3-
ராஜ ரக்ஷக ஸுகு3ண ஓ ராம (ராம)


பொருள் - சுருக்கம்
ஓ இராமா! அரவணைத் துயில்வோனே! வீழ்ந்தோரை புனிதப் படுத்துவோனே! ஓ உலகத்தைக் காப்போனே! கமலக் கண்ணா! தியாகராசனைக் காப்போனே! நற்குணத்தோனே!

  • இராமா, இராமா, இராமா, இராமாயென்றதும் அரச பார்வை ஏனய்யா?

  • என்ன வாழ்க்கையிது? எதற்கிந்த பிழைப்பு? என்ன எண்ணியுள்ளாயோ?

  • கேளிக்கையான எனது பாடல்களைக் கேட்டுக்கொண்டே சொல் பகராயேனோ?

  • நிகரானவரில் என்னைக் கருணித்து, எனது கைப் பற்றாயேனோ?

  • (உன்மீது) ஆசை கொண்ட எனது துயரம் தீர்க்காது, வாசியென்ன நேர்ந்ததோ?

  • தயையுடன், என்னை, இவர்கள் நடுவில் பரிவு காட்ட, குறைவாமோ?

  • உனக்கு வேண்டியோரின் கூட்டு சேராமற் போனேனோ?

  • அன்றைய தொண்டர்கள் உனக்கென்ன சொந்தமோ? சிறிதளவு அக்கறையுமில்லாமற் போனதோ?

  • முன்னாளில் உன்னவர்கள் (உன்னைப்) புகழ்ந்தது போன்று எனது எண்ணங்கள் இல்லாமற்போனதோ?

  • காத்தும், காவாமலும், பார்த்தும், பாராமலும் ஏமாற்றுதற்கே தோன்றியதோ?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ராம/ ராம/ ராம/ ராமா/-அனின-அந்த/
இராமா/ இராமா/ இராமா/ இராமா/ என்றதும்/

ராஜபு/ ஜூபு/-ஏலரா/ ஓ ராம/
அரச/ பார்வை/ ஏனய்யா/ ஓ இராமா/


சரணம்
சரணம் 1
ஏடி/ ஜன்மமு/-இதி3/ ஏடிகி/ ப்3ரதுகு/ ராம/
என்ன/ வாழ்க்கை/ இது/ எதற்கு/ (இந்த) பிழைப்பு/ இராமா/

ஏமி/-எஞ்சுகொன்னாவோ/ ஓ ராம/ (ராம)
என்ன/ எண்ணியுள்ளாயோ/ ஓ இராமா/


சரணம் 2
ஆடலைன/ நாது3/ பாடல/ வினுசு/
கேளிக்கையான/ எனது/ பாடல்களை/ கேட்டுக்கொண்டே/

மாடலாட3வு/-எந்து3கோ/ ஓ ராம/ (ராம)
சொல் பகராய்/ ஏனோ/ ஓ இராமா/


சரணம் 3
ஸரிவாரிலோ/ நன்னு/ கருண ஜூசி/ நாது3/
நிகரானவரில்/ என்னை/ கருணித்து/ எனது/

கரமு/ பட்டவு/-எந்து3கோ/ ஓ ராம/ (ராம)
கை/ பற்றாய்/ ஏனோ/ ஓ இராமா/


சரணம் 4
ஆஸகொன்ன/ நாது3/ கா3ஸி/ தீர்ப லேக/
(உன்மீது) ஆசை கொண்ட/ எனது/ துயரம்/ தீர்க்காது/

வாஸி/-ஏமி/ கல்கெ3னோ/ ஓ ராம/ (ராம)
வாசி/ என்ன/ நேர்ந்ததோ/ ஓ இராமா/


சரணம் 5
3யதோ/ நனு/ ஸே1ஷ/ ஸ1யன/ இந்த3ரிலோன/
தயையுடன்/ என்னை/ அரவணை/ துயில்வோனே/ இவர்கள் நடுவில்/

நயமு/ ஸேய/ தக்குவா/ ஓ ராம/ (ராம)
பரிவு/ காட்ட/ குறைவாமோ/ ஓ இராமா/


சரணம் 6
பதித/ பாவன/ நீகு/ ஹிதுலைன வாரி/
வீழ்ந்தோரை/ புனிதப் படுத்துவோனே/ உனக்கு/ வேண்டியோரின்/

ஜத/-கூ33க/ போதினா/ ஓ ராம/ (ராம)
கூட்டு/ சேராமற்/ போனேனோ/ ஓ இராமா/


சரணம் 7
நாடி/ ப4க்துலு/ நீகு/-ஏடி/ வாவுலோ/ கொஞ்ச/
அன்றைய/ தொண்டர்கள்/ உனக்கு/ என்ன/ சொந்தமோ/ சிறிதளவு/

பாடி/ லேக/ போயெனா/ ஓ ராம/ (ராம)
அக்கறையும்/ இல்லாமல்/ போனதோ/ ஓ இராமா/


சரணம் 8
அல/ நாடு3/ நீ வாரு/ கொலிசின/-அடுல/ நாது3/
முந்தைய/ நாளில்/ உன்னவர்கள்/ (உன்னைப்) புகழ்ந்தது/ போன்று/ எனது/

தலபு/ கா3க/ போயெனா/ ஓ ராம/ (ராம)
எண்ணங்கள்/ இல்லாமற்/ போனதோ/ ஓ இராமா/


சரணம் 9
ப்3ரோசி/ ப்3ரோவகனு/ ஜூசி/ ஜூட3கனு/
காத்தும்/ காவாமலும்/ பார்த்தும்/ பாராமலும்/

ஏசுடகே/ தோசெனா/ ஓ ராம/ (ராம)
ஏமாற்றுதற்கே/தோன்றியதோ/ ஓ இராமா/


சரணம் 10
ஓ/ ஜக3த்/-அவன/ ஸரோஜ/ நயன/ த்யாக3ராஜ/
ஓ/ உலகத்தை/ காப்போனே/ கமல/ கண்ணா/ தியாகராசனை/

ரக்ஷக/ ஸுகு3ண/ ஓ ராம/ (ராம)
காப்போனே/ நற்குணத்தோனே/ ஓ இராமா/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ராம ராம ராம ராமா - ராம ராம ராம ராம

2 - ராஜபு - ராஜாபு

3 - ஏடிகி - ஏடி

4 - கல்கெ3னோ - கலிகெ3னோ

Top

மேற்கோள்கள்

விளக்கம்
2 - ராஜபு ஜூபு - அரச பார்வை - (அன்பின்றி) அதிகாரத்துடன் நோக்கல்

வாசி - சௌக்கியம்

Top


Updated on 14 Jul 2009

No comments: