Monday, June 29, 2009

தியாகராஜ கிருதி - எவருரா நினு வினா - ராகம் மோஹனம் - Evarura Ninu Vina - Raga Mohanam

பல்லவி
எவருரா நினு வினா க3தி மாகு

அனுபல்லவி
1ஸவன ரக்ஷக நித்யோத்ஸவ ஸீதா பதி (எவரு)

சரணம்
சரணம் 1
ராதா3 நாது3பை நீ த3ய வின
ராதா3 முர வைரி காதா33ய பல்க
ராதா3யிதி3 மரியாதா3 நாதோ
வாத3மா நே பே43மா மாகு (எவரு)


சரணம் 2
2ராக நன்னேச ந்யாயமா
பராகா நேனண்டே ஹேயமா ராம
ராகா ஸ1ஸி1 முக2 நீகாஸி1ஞ்சிதி
ஸாகுமா புண்ய ஸ்1லோகமா மாகு (எவரு)


சரணம் 3
3ஸ்ரீஸா1ரி க3ணாராதிவி
நாதா31 தெலியக போதிவி
4ஆபகே3ஸா1ர்சித பாலிதேஸ1 5நா
ப்ரகாஸ1மா
ஸ்வப்ரகாஸ1மா மாகு (எவரு)


சரணம் 4
ராஜா பி3கு3 நீகேலரா த்யாக3-
ராஜார்சித 6தாள ஜாலரா ராம
ஈ ஜாலமு ஸேய ராஜ ப்3ரோவ
ஸங்கோசமா ஸுர பூ4ஜமா மாகு (எவரு)


பொருள் - சுருக்கம்
  • வேள்வி காத்தோனே! என்றும் திருவிழாவே! சீதைக் கேள்வா!

  • இராமா!

  • முழுமதி வதனத்தோனே! புகழத் தக்கோனே!

  • மாமணாளா! வருணனால் தொழப்பெற்றோனே! ஈசனைக் காப்போனே! எனது (வாழ்வின்) ஒளியே! தன்னொளியோனே!

  • அரசே! தியாகராசனால் தொழப்பெற்றோனே! (தொண்டரின்) வானோர் தருவே!

    • வாராதோ, என்மீது உனது தயை? கேளாயோ? முர வைரியன்றோ? கருணையுடன் பகரலாகாதோ? இது மரியாதையோ? என்னுடன் வாதமோ? நான் வேறோ?

    • வாராது, என்னை ஏய்த்தல் நியாயமோ? அசட்டையோ? நானென்றால் வெறுப்போ? உனக்காசைப்பட்டேன்; நிறைவேற்றுவாய்.

    • நீ பகைவரை யழிப்பவனன்றோ! எனது ஆசையை அறிந்திலை.

    • முறைப்பு உனக்கேனய்யா? தாளவியலேனய்யா; இந்த தாமதம் செய்ய ஒப்புகின்றாயோ? காப்பதற்கு கூச்சமோ?

    • எமக்கு யாரய்யா உன்னையன்றி கதி?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
எவருரா/ நினு/ வினா/ க3தி/ மாகு/
யாரய்யா/ உன்னை/ யன்றி/ கதி/ யெமக்கு/


அனுபல்லவி
ஸவன/ ரக்ஷக/ நித்ய/-உத்ஸவ/ ஸீதா/ பதி/ (எவரு)
வேள்வி/ காத்தோனே/ என்றும்/ திருவிழாவே/ சீதை/ கேள்வா/


சரணம்
சரணம் 1
ராதா3/ நாது3பை/ நீ/ த3ய/
வாராதோ/ என்மீது/ உனது/ தயை/

வின ராதா3/ முர/ வைரி/ காதா3/ த3ய/
கேளாயோ/முர/ வைரி/ யன்றோ/ கருணையுடன்/

பல்க ராதா3/-இதி3/ மரியாதா3/ நாதோ/
பகரலாகாதோ/ இது/ மரியாதையோ/ என்னுடன்/

வாத3மா/ நே/ பே43மா/ மாகு/ (எவரு)
வாதமோ/ நான்/ வேறோ/ எமக்கு/ யாரய்யா...


சரணம் 2
ராக/ நன்னு/-ஏச/ ந்யாயமா/
வாராது/ என்னை/ ஏய்த்தல்/ நியாயமோ/

பராகா/ நேனு/-அண்டே/ ஹேயமா/ ராம/
அசட்டையோ/ நான்/ என்றால்/ வெறுப்போ/ இராமா/

ராகா/ ஸ1ஸி1/ முக2/ நீகு/-ஆஸி1ஞ்சிதி/
முழு/ மதி/ வதனத்தோனே/ உனக்கு/ ஆசைப்பட்டேன்/

ஸாகுமா/ புண்ய ஸ்1லோகமா/ மாகு/ (எவரு)
நிறைவேற்றுவாய்/ புகழத் தக்கோனே/ எமக்கு/ யாரய்யா...


சரணம் 3
ஸ்ரீ/-ஈஸ1/-அரி க3ண/-அராதிவி/
மா/ மணாளா/ (நீ) பகைவரை/ யழிப்பவனன்றோ/

நாது3/-ஆஸ1/ தெலியக போதிவி/
எனது/ ஆசையை/ அறிந்திலை/

ஆபக3/-ஈஸ1/-அர்சித/ பாலித/-ஈஸ1/ நா/
நதிகள்/ தலைவன் (வருணனால்)/ தொழப்பெற்றோனே/ காப்போனே/ ஈசனை/ எனது/

ப்ரகாஸ1மா/ ஸ்வ-ப்ரகாஸ1மா/ மாகு/ (எவரு)
(வாழ்வின்) ஒளியே/ தன்னொளியோனே/ எமக்கு/ யாரய்யா...


சரணம் 4
ராஜா/ பி3கு3/ நீகு/-ஏலரா/
அரசே/ முறைப்பு/ உனக்கு/ ஏனய்யா/

த்யாக3ராஜ/-அர்சித/ தாள/ ஜாலரா/ ராம/
தியாகராசனால்/ தொழப்பெற்றோனே/ தாள/ இயலேனய்யா/ இராமா/

ஈ/ ஜாலமு/ ஸேய/ ராஜ/ ப்3ரோவ/
இந்த/ தாமதம்/ செய்ய/ ஒப்புகின்றாயோ/ காப்பதற்கு/

ஸங்கோசமா/ ஸுர/ பூ4ஜமா/ மாகு/ (எவரு)
கூச்சமோ/ (தொண்டரின்) வானோர்/ தருவே/ எமக்கு/ யாரய்யா...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ஸவன - ஸவ : இரண்டு சொற்களுக்கும் பொருளொன்றுதான்.

2 - ராக நன்னேச - ராக நின்னேச : இவ்விடம் 'நன்னேச' என்பதுதான் சரியான சொல்லாகும்.

5 - நா ப்ரகாஸ1மா - நவ காஸ1மா : 'காச' என்பது சமஸ்கிருத அகராதியின்படி 'நாணலை'க் குறிக்கும். தமிழகராதியின்படி 'காச' என்பது 'காய' என்றும் வழங்கும். விஷ்ணுவுக்கு, 'காசாம்பூ (காயாம்பூ) மேனியன்' என்றும் பெயருண்டு.

கம்ப ராமாயணத்தில், கம்பர் ராமனை 'காயாம்பூ நிறத்தவன்' என்று கூறுகின்றார்.

ஈழம், முல்லைத்தீவினில், காயாம்பூவுக்கு, 'முல்லை' என்றும் பெயருண்டு'.

6 - தாள ஜாலரா ராம - தாள ஜாலரா ராஜ.

Top

மேற்கோள்கள்

விளக்கம்
3 - அரி க3ண அராதிவி - பகைவரை யழிப்பவன் - உட்பகை அறுவரென்றும் கொள்ளலாம்

உட்பகை அறுவர் - காமம், சினம், கருமித்தனம், மயக்கம், செருக்கு, பொறாமை

4 - ஆபகே3ஸா1ர்சித - நதிகளின் தலைவனால் தொழப்பெற்றவன். பொதுவாக, 'வருணன்' (கடலரசன்) நதிகளின் தலைவனெப்படுவான். ஆனால், திருவையாற்றினில், இறைவனுக்கு (சிவனுக்கு) 'ஐயாறப்பன்' (பஞ்சாபகேசன்) என்று பெயர் உண்டு. அங்ஙனமானால், 'சிவனால் தொழப்பெற்றோனே' என்றும பொருள் கொள்ளலாம்.

திருவிழா - கொண்டாட்டம் - அடியார்க்கு

முரன் - கண்ணனால் கொல்லப்பட்ட அரக்கன்

தாமதம் செய்ய - 'பிடிவாதம் செய்ய' என்றும் கொள்ளலாம்.

வானோர் தரு - விரும்பியதை வழங்கும் கற்ப தரு

Top


Updated on 29 Jun 2009

No comments: