மாடி மாடிகி தெல்ப வலெனா முனி
மானஸார்சித சரண ராமய்ய நீதோ
அனுபல்லவி
1ஸூடிகொ3க்கடே மாட சாலதா3
நாடி மொத3லுகொனி ஸாடி லேனி நீதோ (மாடி)
சரணம்
சரணம் 1
பங்கஜ வத3ன 2ஸரஸ வினோத3
3ஸங்கடமுல வேக3மே தீர்ப ராதா3
ஸ1ங்கர ப்ரிய ஸர்வாந்தர்யாமிவி காதா3
இங்க நா மதி3 நீகு தெலியக3 லேதா3 (மாடி)
சரணம் 2
கருணா ஸாக3ர 4பரிபூர்ண நீகு
ஸரி வேல்புலு லேரனுசுனீவரகு
மொர பெட்டின நாபையேல பராகு
வருலு ஜூதுரு 5பா4ண்ட3முனகொக்க மெதுகு (மாடி)
சரணம் 3
ஸ்1ரு2ங்கா3ர ஸே1க2ர 6ஸுர வைரி ராஜ
ப4ங்க3 ஸுஜன ஹ்ரு2த்குமுத3 ப4-ராஜ
7மங்க3ள கர ரூப ஜித ரதி ராஜ
8க3ங்கா3 ஜனக பாலித த்யாக3ராஜ (மாடி)
பொருள் - சுருக்கம்
- முனிவர் உள்ளங்களில் தொழப்படும் திருவடியோனே! இராமய்யா!
- தாமரை வதனத்தோனே! திருவிளையாடலில் திளைப்போனே! சங்கரனுக்கு இனியோனே!
- கருணைக் கடலே! முழுமுதலே!
- வனப்பின் சிகரமே! வானோர் பகைவர் அரசனை யழித்தோனே! நல்லோரிதயக் குமுதத்தின் மதியே! மங்களமருளும் உருவத்தோனே! (எழிலில்) மதனை வென்றோனே! கங்கையை தோற்றுவித்தவனே! தியாகராசனைப் பேணுவோனே!
- உன்னிடம் திரும்பத் திரும்ப தெரிவிக்க வேணுமோ?
- நேராக ஒரே சொல் போதாதோ? அன்று முதல் நிகரற்ற உன்னிடம் திரும்பத் திரும்ப தெரிவிக்க வேணுமோ?
- நெருக்கடிகளை விரைவாக தீர்க்கலாகாதா? யாவரின் உள்ளியங்குவோன் அன்றோ? இன்னமும் எனதுள்ளம் உனக்குத் தெரியவில்லையோ?
- உனக்கு நிகர் தெய்வங்களிலரென இதுவரை முறையிட்ட என் மீதேன் அசட்டை? மேலோர் நோக்குவர்; பானைக்கு ஒரு சோறு (பதம்).
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
மாடி/ மாடிகி/ தெல்ப/ வலெனா/ முனி/
திரும்ப/ திரும்ப/ தெரிவிக்க/ வேணுமோ/ முனிவர்/
மானஸ/-அர்சித/ சரண/ ராமய்ய/ நீதோ/
உள்ளங்களில்/ தொழப்படும்/ திருவடியோனே/ இராமய்யா/ உன்னிடம்/
அனுபல்லவி
ஸூடிக3/-ஒக்கடே/ மாட/ சாலதா3/
நேராக/ ஒரே/ சொல்/ போதாதோ/
நாடி/ மொத3லுகொனி/ ஸாடி/ லேனி/ நீதோ/ (மாடி)
அன்று/ முதலாக/ நிகர்/ அற்ற/ உன்னிடம்/ திரும்பத் திரும்ப...
சரணம்
சரணம் 1
பங்கஜ/ வத3ன/ ஸரஸ/ வினோத3/
தாமரை/ வதனத்தோனே/ திருவிளையாடலில்/ திளைப்போனே/
ஸங்கடமுல/ வேக3மே/ தீர்ப ராதா3/
நெருக்கடிகளை/ விரைவாக/ தீர்க்கலாகாதா/
ஸ1ங்கர/ ப்ரிய/ ஸர்வ/-அந்தர்யாமிவி/ காதா3/
சங்கரனுக்கு/ இனியோனே/ யாவரின்/ உள்ளியங்குவோன்/ அன்றோ/
இங்க/ நா/ மதி3/ நீகு/ தெலியக3 லேதா3/ (மாடி)
இன்னமும்/ எனது/ உள்ளம்/ உனக்கு/ தெரியவில்லையோ/
சரணம் 2
கருணா/ ஸாக3ர/ பரிபூர்ண/ நீகு/
கருணை/ கடலே/ முழுமுதலே/ உனக்கு/
ஸரி/ வேல்புலு/ லேரு/-அனுசுனு/-ஈவரகு/
நிகர்/ தெய்வங்கள்/ இலர்/ என/ இதுவரை/
மொர/ பெட்டின/ நாபை/-ஏல/ பராகு/
முறை/ யிட்ட/ என் மீது/ ஏன்/ அசட்டை/
வருலு/ ஜூதுரு/ பா4ண்ட3முனகு/-ஒக்க/ மெதுகு/ (மாடி)
மேலோர்/ நோக்குவர்/ பானைக்கு/ ஒரு/ சோறு (பதம்)/;
சரணம் 3
ஸ்1ரு2ங்கா3ர/ ஸே1க2ர/ ஸுர/ வைரி/ ராஜ/
வனப்பின்/ சிகரமே/ வானோர்/ பகைவர்/ அரசனை/
ப4ங்க3/ ஸுஜன/ ஹ்ரு2த்/-குமுத3/ ப4-/ராஜ/
அழித்தோனே/ நல்லோர்/ இதய/ குமுதத்தின்/ தாரை/ அதிபன் (மதியே)/
மங்க3ள/ கர/ ரூப/ ஜித/ ரதி/ ராஜ/
மங்களம்/ அருளும்/ உருவத்தோனே/ (எழிலில்) வென்றோனே/ ரதி/ பதி (மதனை)/
க3ங்கா3/ ஜனக/ பாலித/ த்யாக3ராஜ/ (மாடி)
கங்கையை/ தோற்றுவித்தவனே/ பேணுவோனே/ தியாகராசனை/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ஸூடிகொ3க்கடே மாட - நூடிகொ3க்கடே மாட - பிற்குறிப்பிட்ட சொல் சரியெனத் தோன்றவில்லை.
3 - ஸங்கடமுல - ஸங்கடமுலனு
Top
மேற்கோள்கள்
4 - பரிபூர்ண - இச்சொல் 'முழுமுதல்' என மொழிபெயர்க்கப்பட்டாலும், இச்சொல்லுக்கு சரியான விளக்கம் கூறுதல் கடினம். 'ஓம் பூர்ணமத3:' என்று தொடங்கும் உபநிடத செய்யுளின் விளக்கத்தினை நோக்கவும்.
8 - க3ங்கா3 ஜனக - வாமனாராக விஷ்ணு அவதரித்தவமயம் அவருடைய திருவடியிலிருந்து கங்கை தோன்றியதென பாகவத புராணம், (8-வது புத்தகம், 21-வது அத்தியாயம்) கூறும்.
கங்கை நதியினைப் பற்றி விவரங்களுக்கு, வால்மீகி ராமாயணம், பால காண்டம், அத்தியாயங்கள் 42 மூதல் 44 நோக்கவும். கங்கையின் கதை
Top
விளக்கம்
2 - ஸரஸ வினோத3 - இவ்விடம் இச்சொற்களின் பொருளென்ன என்பது சரிவரப் புரியவில்லை. ஆயினும் இங்கு, (படைத்தல், காத்தல், அழித்தல் என்னும்) 'திருவிளையாடலில் திளைப்போன்' என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
5 - பா4ண்ட3முனகொக்க மெதுகு - பானைக்கு ஒரு சோறு பதம். 'உன்னுடை செயலை மேலோர் நோக்குகின்றனர்; நீ தொண்டர்களை காக்கும் விதம் என்ன என்பதனை, என்னைக் காப்பதனைக் கொண்டு, மேலோர் தெரிந்துகொள்வர்', என்று தியாகராஜர் இறைவனிடம் கூறுகின்றார்.
6 - ஸுர வைரி ராஜ - வானோர் பகைவர் அரசன் - இராவணன்
7 - மங்க3ள கர ரூப ஜித ரதி ராஜ - 'ரூப' என்ற சொல்லினை 'மங்கள கர' என்ற சொல்லுடனோ (மங்களம் அருளும் உருவத்தோன் என), அல்லது 'ஜித ரதி ராஜ' என்பதுடனோ (உருவத்தில் மதனை வென்றோன் என) சேர்க்கலாம்.
Top
Updated on 07 Jul 2009
No comments:
Post a Comment