1ராமா 2நினு நம்மின வாரமு
காமா ஸகல லோகாபி4(ராம)
அனுபல்லவி
பாமர ஜன தூ3ர வர கு3ண
க்4ரு2ணாபாங்க3 ஸு1பா4ங்க3
3முனி ஹ்ரு2த3ப்3ஜ ப்4ரு2ங்க3 (ராம)
சரணம்
சரணம் 1
வாலாயமுகா3னு ரானு
ஜாகே3ல ஸுகு3ண ஸ்ரீ த3ஸ1ரத2
ந்ரு2பால ஹ்ரு2த3யானந்த3 கர 4ஸ்ரீ
லோல பால வெலயுமிக
பா2ல லோசன ஹ்ரு2த3-
யாலயாப்த ஜன பால கனக மய
சேலயிக பராகேலயிபுடு3
மம்மேல நீது3 மனஸேல ராது3 (ராம)
சரணம் 2
நீவே க3தியண்டினி கானி
நே வேரேமியெருக3னு முந்த3ர
ராவே நீ பத3 பங்கஜ ப4க்தி-
நீவே பா4வஜாரி நுத
தே3வ நீது3 பத3 ஸேவா ப2லமு மமு
காவுனே பதித
பாவன 5த்ரி-த3ஸ1 நாத2 நீய முனி
ஜீவனானிஸ1மு ப்3ரோவவேல ஸ்ரீ ராம (ராம)
சரணம் 3
தா4ரா த4ர நிப4 தே3ஹ
ஜனாதா4ர து3ரிதாக4 ஜலத3
ஸமீர த்யாக3ராஜ ஹ்ரு2த3-
யாகா3ர ஸார ஹீன
ஸம்ஸாரமந்து3 வேஸாரி நின்னு
மனஸார நம்முகொன 6நேர லேனி நே-
நூரகயிக 7விசாரமந்து3டகு
மேர காது3 ஸ்ரீ ராம (ராம)
பொருள் - சுருக்கம்
- இராமா! பல்லுலகிற்கும் களிப்பூட்டுவோனே!
- இழிந்த மக்களினின்றும் தூரமானவனே! நற்குணத்தோனே! கருணை கடைக்கண்ணோனே! நல்லுடலுறுப்புக்களோனே! முனிவரிதயக் கமலத்தின் வண்டே!
- நற்பண்புகளோனே! தசரத மன்னனின் இதயத்தினை மகிழ்விப்போனே! இலக்குமியிடம் திளைப்போனே! நெற்றிக் கண்ணனின் இதயத் துறையே! சேர்ந்தோரைக் காப்போனே! பொன்மயமான ஆடைகளோனே!
- காமன் பகைவனால் போற்றப் பெற்றோனே! தேவா! வீழ்ந்தோரைப் புனிதப்படுத்துவோனே! முப்பத்து மூவர் தலைவனை ஆள்வோனே! முனிவர்களின் வாழ்வே!
- கார்முகில் நிகருடலோனே! மக்களுக்கு ஆதாரமானவனே! கொடிய பாவங்களெனும் முகிலை விரட்டும் புயலே! தியாகராசனின் இதயத்துறையே!
- உன்னை நம்பினவனன்றோ?
- தவறாது வரத் தாமதமேனோ? எம்மிடை ஒளிர்வாயினி; இனியும் அசட்டையேனோ? இவ்வமயம் எம்மையாள உனது மனதேன் வாராதோ?
- நீயே புகலென்றேனே யன்றி நான் வேறேது மறியேன்; எதிரில் வாராயய்யா; உனது திருவடிக் கமலத்தின் பற்றினைத் தாராயய்யா; உனது திருவடிச் சேவையின் பயன் எம்மைக் காக்குமே; எப்போழ்தும் எம்மைக் காவாயேனோ?
- சாரமற்ற உலக வாழ்வினில் களைப்புற்று உன்னை மனதார நம்பிக்கொள்ள நேராத நான் வீணாகயினித் துயருறல் முறையன்று.
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ராமா/ நினு/ நம்மின வாரமு/
இராமா/ உன்னை/ நம்பினவன்/
காமா/ ஸகல லோக/-அபி4(ராம)/
அன்றோ/ பல்லுலகிற்கும்/ களிப்பூட்டுவோனே/
அனுபல்லவி
பாமர/ ஜன/ தூ3ர/ வர கு3ண/
இழிந்த/ மக்களினின்றும்/ தூரமானவனே/ நற்குணத்தோனே/
க்4ரு2ணா/-அபாங்க3/ ஸு1ப4/-அங்க3/
கருணை/ கடைக்கண்ணோனே/ நல்/ உடலுறுப்புக்களோனே/
முனி/ ஹ்ரு2த்/-அப்3ஜ/ ப்4ரு2ங்க3/ (ராம)
முனிவர்/ இதய/ கமலத்தின்/ வண்டே/
சரணம்
சரணம் 1
வாலாயமுகா3னு/ ரானு/
தவறாது/ வர/
ஜாகு3/-ஏல/ ஸுகு3ண/ ஸ்ரீ த3ஸ1ரத2/
தாமதம்/ ஏனோ/ நற்பண்புகளோனே/ ஸ்ரீ தசரத/
ந்ரு2பால/ ஹ்ரு2த3ய/-ஆனந்த3 கர/ ஸ்ரீ/
மன்னனின்/ இதயத்தினை/ மகிழ்விப்போனே/ இலக்குமியிடம்/
லோல/ பால/ வெலயுமு/-இக/
திளைப்போனே/ எம்மிடை/ ஒளிர்வாய்/ இனி/
பா2ல/ லோசன/ ஹ்ரு2த3ய/-
நெற்றி/ கண்ணனின்/ இதயத்து/
ஆலய/-ஆப்த ஜன/ பால/ கனக/ மய/
உறையே/ சேர்ந்தோரை/ காப்போனே/ பொன்/ மயமான/
சேல/-இக/ பராகு/-ஏல/-இபுடு3/
ஆடைகளோனே/ இனியும்/ அசட்டை/ ஏனோ/ இவ்வமயம்/
மம்மு/-ஏல/ நீது3/ மனஸு/-ஏல/ ராது3/ (ராம)
எம்மை/ ஆள/ உனது/ மனது/ ஏன்/ வாராதோ/
சரணம் 2
நீவே/ க3தி/-அண்டினி/ கானி/
நீயே/ புகல்/ என்றேனே/ அன்றி/
நே/ வேரு/-ஏமி/-எருக3னு/ முந்த3ர/
நான்/ வேறு/ ஏதும்/ அறியேன்/ எதிரில்/
ராவே/ நீ/ பத3/ பங்கஜ/ ப4க்தினி/-
வாராயய்யா/ உனது/ திருவடி/ கமலத்தின்/ பற்றினை/
ஈவே/ பா4வஜ/-அரி/ நுத/
தாராயய்யா/ காமன்/ பகைவனால்/ போற்றப் பெற்றோனே/
தே3வ/ நீது3/ பத3/ ஸேவா/ ப2லமு/ மமு/
தேவா/ உனது/ திருவடி/ சேவையின்/ பயன்/ எம்மை/
காவுனே/ பதித/
காக்குமே/ வீழ்ந்தோரை/
பாவன/ த்ரி-த3ஸ1/ நாத2/ நீய/ முனி/
புனிதப்படுத்துவோனே/ முப்பத்து (மூவர்)/ தலைவனை/ ஆள்வோனே/ முனிவர்களின்/
ஜீவன/-அனிஸ1மு/ ப்3ரோவவு/-ஏல/ ஸ்ரீ ராம/ (ராம)
வாழ்வே/ எப்போழ்தும்/ எம்மை/ காவாய்/ ஏனோ/ ஸ்ரீ ராமா/
சரணம் 3
தா4ரா த4ர/ நிப4/ தே3ஹ/
கார்முகில்/ நிகர்/ உடலோனே/
ஜன/-ஆதா4ர/ து3ரித/-அக4/ ஜலத3/
மக்களுக்கு/ ஆதாரமானவனே/ கொடிய/ பாவங்களெனும்/ முகிலை/
ஸமீர/ த்யாக3ராஜ/ ஹ்ரு2த3ய/-
(விரட்டும்) புயலே/ தியாகராசனின்/ இதயத்து/
ஆகா3ர/ ஸார/ ஹீன/
உறையே/ சாரம்/ அற்ற/
ஸம்ஸாரமந்து3/ வேஸாரி/ நின்னு/
உலக வாழ்வினில்/ களைப்புற்று/ உன்னை/
மனஸார/ நம்முகொன/ நேர லேனி/ நேனு/-
மனதார/ நம்பிக்கொள்ள/ நேராத/ நான்/
ஊரக/-இக/ விசாரமு/-அந்து3டகு/
வீணாக/ இனி/ துயர்/ உறுதல்/
மேர/ காது3/ ஸ்ரீ ராம/ (ராம)
முறை/ அன்று/ ஸ்ரீ ராமா/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ராமா - ராம.
2 - நினு - நின்னு.
3 - முனி ஹ்ரு2த3ப்3ஜ - முனி ஹ்ரு2த3யாப்3ஜ.
4 - ஸ்ரீ லோல - லோல : 'ஸ்ரீ' என்ற சொல்லில்லாது, 'லோல' என்ற சொல்லுக்குப் பொருள் கூறவியலாது.
Top
மேற்கோள்கள்
5 - த்ரி-த3ஸ1 நாத2 - முப்பத்து மூவர் - தேவர்கள் : முப்பத்து மூவர் தலைவன் - இந்திரன்
Top
விளக்கம்
6 - நேர லேனி - 'நேரு' என்ற தெலுங்கு சொல்லுக்கு 'அறிதல்' என்றும் பொருளாகும். எனவே, '(நம்பிக்கொள்ள) நேராத' என்பதனை- '(நம்பிக்கொள்ள) அறியாத' என்றும் கொள்ளலாம்.
7 - அந்து3டகு - எல்லா புத்தகங்களிலும் இங்ஙனமே கொடுக்கப்பட்டுள்ளது. ஆயினும், இவ்விடத்தில், 'அந்து3ட' என்பதே சரியான சொல்லாகப் படுகின்றது.
காமன் பகைவன் - சிவன்
Top
Updated on 12 Jul 2009