Thursday, July 9, 2009

தியாகராஜ கிருதி - மோஹன ராம - ராகம் மோஹனம் - Mohana Rama - Raga Mohanam

பல்லவி
1மோஹன ராம முக2 ஜித ஸோம
முத்3து33 பல்குமா

அனுபல்லவி
மோஹன ராம மொத3டி தை3வமா
மோஹமு நீபை மொனஸியுன்னதி3ரா (மோஹன)

சரணம்
24ர மனுஜாவதார மஹிம வினி
ஸுர 3கின்னர 4கிம்புருஷ 5வித்3யாத4
ஸுர பதி விதி4 விபா4கர 6சந்த்3ராது3லு
கரகு3சு ப்ரேமதோ
வர ம்ரு23 7பக்ஷி வானர தனுவுலசே
8கி3ரினி வெலயு ஸீதா வர சிர காலமு
9கு3ரி தப்பக மை மரசி ஸேவிஞ்சிரி
வர த்யாக3ராஜ வரதா3கி2ல ஜக3ன்-(மோஹன)


பொருள் - சுருக்கம்
(மதி) மயங்கச் செய்யும் இராமா! மதியை வெல்லும் முகத்தோனே! முதற் கடவுளே! மலையில் ஒளிரும், சீதையின் கேள்வா! உயர் தியாகராசனுக்கருள்வோனே! அகில உலகத்தினையும் (மதி) மயங்கச் செய்யும் இராமா!
  • இனிமையாகப் பகர்வாய்!

  • மயக்கம் உன்மீது ஏற்பட்டுள்ளதய்யா;

    • புவியில் (உனது) மனித அவதார மகிமையினைச் செவிமடுத்து,

    • சுரர், கின்னரர், கிம்புருடர், வித்தியாதரர், வானோர் தலைவன், பிரமன், பகலவன், சந்திரன் முதலானோர்,

    • உருகி, காதலுடன்,

    • உயர், மிருக, பறவை, வானர உடல்களுடன்,

    • பல காலம்,

    • குறி தப்பாது,

    • மெய்ம்மறந்து, சேவித்தனர்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
மோஹன/ ராம/ முக2/ ஜித/ ஸோம/
(மதி) மயங்கச் செய்யும்/ இராமா/ முகத்தில்/ வெல்வோனே/ மதியை/

முத்3து33/ பல்குமா/
இனிமையாக/ பகர்வாய்/


அனுபல்லவி
மோஹன/ ராம/ மொத3டி/ தை3வமா/
(மதி) மயங்கச் செய்யும்/ இராமா/ முதற்/ கடவுளே/

மோஹமு/ நீபை/ மொனஸி/-உன்னதி3ரா/ (மோஹன)
மயக்கம்/ உன்மீது/ ஏற்பட்டு/ உள்ளதய்யா/


சரணம்
4ர/ மனுஜ/-அவதார/ மஹிம/ வினி/
புவியில்/ (உனது) மனித/ அவதார/ மகிமையினை/ செவிமடுத்து/

ஸுர/ கின்னர/ கிம்புருஷ/ வித்3யாத4ர/
சுரர்/ கின்னரர்/ கிம்புருடர்/ வித்தியாதரர்/

ஸுர/ பதி/ விதி4/ விபா4கர/ சந்த்3ர/-ஆது3லு/
வானோர்/ தலைவன்/ பிரமன்/ பகலவன்/ சந்திரன்/ முதலானோர்/

கரகு3சு/ ப்ரேமதோ/
உருகி/ காதலுடன்/

வர/ ம்ரு23/ பக்ஷி/ வானர/ தனுவுலசே/
உயர்/ மிருக/ பறவை/ வானர/ உடல்களுடன்/

கி3ரினி/ வெலயு/ ஸீதா/ வர/ சிர/ காலமு/
மலையில்/ ஒளிரும்/ சீதையின்/ கேள்வா/ பல/ காலம்/

கு3ரி/ தப்பக/ மை/ மரசி/ ஸேவிஞ்சிரி/
குறி/ தப்பாது/ மெய்/ மறந்து/ சேவித்தனர்/

வர/ த்யாக3ராஜ/ வரத3/-அகி2ல/ ஜக3த்/-(மோஹன)
உயர்/ தியாகராசனுக்கு/ அருள்வோனே/ அகில/ உலகத்தினையும்/ (மதி) மயங்கச் செய்யும்...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்
2 - 4ர மனுஜாவதார - புவியில் மனித அவதார - வால்மீகி ராமாயணம், பால காண்டம், அத்தியாயம் 17 - எந்தெந்த வானோருக்கு, யார் யார் பிறந்தனர் என்ற விவரம் காணவும்.

3 - கின்னர - கின்னரர் - தேவருள் ஒரு பாலர் - குதிரை முகமும் மனித உடலுமுடையோர்.

4 - கிம்புருஷ - கிம்புருடர் - ஏமகூடத்தில் வசிக்கும் குபேரனின் சேவகர்கள்.

5 - வித்3யாத4 - வித்தியாதரர் - சிவ கணங்கள்

Top

8 - கி3ரினி வெலயு - மலையில் ஒளிரும் - வாலியைக் கொன்றபின், மழைக் காலம் முடிவடையும் வரை, இராமனும், இலக்குவனும், 'ப்ரஸ்ரவண கிரி' என்ற மலையில் தங்கினர். ஆனால், தியாகராஜர், தன்னுடைய 'கி3ரிபை நெலகொன்ன' என்ற கீர்த்தனையில், 'மலையில் ஒளிரும் இராமன்' என்று திரும்பவும் குறிப்பிடுகின்றார். அவ்விடத்தில் 'கிரி' என்பது 'சுவேல மலை'யைக் குறிக்கும் என்று கூறப்பட்டுள்ளது'.

"கந்த புராணத்தில், 'சுவேல மலை ராமனை' சாகுந் தறுவாயில், நினைந்தால், வைகுண்டம் கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இது தியாகராஜ ஸ்வாமிகளுக்குத் தெரியும். எனவே, அவர் (தியாகராஜர்) கடைசி காலத்தில், அந்த ராமனை தியானித்து, இந்த கீர்த்தனையை இயற்றினார்."

"ராமன் சுவேல மலை மீதேறி இலங்கை நகரினை பார்வையிட்டான்." - வால்மீகி ராமாயணம், யுத்த காண்டம், அத்தியாயம் 38 நோக்கவும்.

9 - கு3ரி தப்பக - குறி தவறாது. விஷ்ணு, ராமனாக அவதரிக்கப் போவது பற்றி வானோருக்கு, பிரமன் கூறுவதனை, வால்மீகி ராமாயணம், பால காண்டம், அத்தியாயம் 17-ல் நோக்கவும்.

Top

விளக்கம்
1 - மோஹன - மாட்சிமையினைக் குறிக்கும்.

6 - சந்த்3 - சந்திரனுக்குப் பிறந்தது யாரென வால்மீகி ராமாயணத்தில் ஏதும் கூறப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை.

7 - பக்ஷி - வால்மீகி ராமாயணத்தில் 'ஜடாயு' மற்றும் 'சம்பாதி' என்ற இரண்டு கழுகுகள் கூறப்படுகின்றன. இவ்விருவரும் சோதரர்கள். 'ஜடாயு' சீதையை, ராவணன் கவர்ந்து செல்கையில், அவனுடன் போரிட்டு மாண்டவன். 'சம்பாதி', அனுமன் முதலானோருக்கு, சீதை, அசோக வனத்தினில் இருப்பதைக் கண்டு உரைத்தான்.

ஜடாயு, தன்னை, 'தசரதனின் நண்பன்' என ராமனிடம் அறிமுகப்படுத்திக்கொள்கின்றான். எனவே 'ஜடாயு' மற்றும் 'சம்பாதி'யின் பிறப்பு, ராமாவதாரத்திற்கு முற்பட்டதாகத் தோன்றுகின்றது.

சுரர் - வானோர்

Top


Updated on 09 Jul 2009

1 comment:

Balaji Sethuraman said...

Really a nice work. Very useful .

Can you also post the letter by letter notes so that it will be useful to play on instruments.

Thanks