Showing posts with label Madhyamavati Raga. Show all posts
Showing posts with label Madhyamavati Raga. Show all posts

Tuesday, February 24, 2009

தியாகராஜ கிருதி - ஸ்ரீ ராம ஜய ராம - ராகம் மத்4யமாவதி - Sri Rama Jaya Rama - Madhyamavati Raga

பல்லவி
ஸ்ரீ ராம ஜய ராம ஸ்1ரு2ங்கா3ர ராம

சரணம்
சரணம் 1
கா3ரவமுன ப்3ரோவு கருணா ஸமுத்3ர (ஸ்ரீ)


சரணம் 2
நா லோனி ஜாலி நீகேல தோசது3ரா (ஸ்ரீ)


சரணம் 3
மனஸிச்சி நாதோனு 1மாடாடு3னதெ3புடு3 (ஸ்ரீ)


சரணம் 4
தாளனீ வேளனிக ஜாலமா ராம (ஸ்ரீ)


சரணம் 5
3லிமினி வலசிதே சலமா ஓ ராம (ஸ்ரீ)


சரணம் 6
ஈ ஸௌக்2யமீ பா4க்3யமெந்தை3ன க3லதா3 (ஸ்ரீ)


சரணம் 7
2ஜபமேமோ தபமேமோ அபராத4மேமோ (ஸ்ரீ)


சரணம் 8
பங்கஜ நயன நா 3குங்கும நீவே (ஸ்ரீ)


சரணம் 9
அவனிஜாதி4ப நா ஸொக3ஸெவரிதே3 ராம (ஸ்ரீ)


சரணம் 10
நீவு நிமிஷமு லேனி பா4வுகமேலே (ஸ்ரீ)


சரணம் 11
4தோஷிம்பகென்னாள்ளு தோசுனே ராம (ஸ்ரீ)


சரணம் 12
எல்ல ஸௌக்2யமுலு மனஸொல்லதே3 ராம (ஸ்ரீ)


சரணம் 13
பாயகா3 மேனு 5ஸக3மாயெனே ராம (ஸ்ரீ)


சரணம் 14
ஈயந்த3மீ சந்த3மெந்தை3ன க3லதா3 (ஸ்ரீ)


சரணம் 15
கூர்சு வெதலார்சு கட3 தேர்சவே ராம (ஸ்ரீ)


சரணம் 16
மிக்கிலி ம்ரொக்கி சே ஜிக்கிதி ராம (ஸ்ரீ)


சரணம் 17
ராஜில்லு ஸ்ரீ த்யாக3ராஜாதி3 வினுத (ஸ்ரீ)


பொருள் - சுருக்கம்
இராமா! எழிலான இராமா! கருணைக் கடலே! பங்கயற்கண்ணா! புவிமகள் கேள்வா! ஒளிரும், தியாகராசன் ஆகியோரால் போற்றப் பெற்றோனே!

    பல்லாண்டு!
  • அன்புடன் காப்பாய்.
  • எனதுள்ளத் துயர் உனக்கேன் தோன்றாதய்யா?
  • மனந்திறந்து என்னோடு பேசுவதெப்போது?
  • தாளேனிவ்வேளை; இன்னும் தாமதமா?
  • ஆழக் காதலித்தாலும், தயக்கமோ?
  • இந்த இன்பமும், இந்த பேறும் எங்காவதுண்டா?
  • செபமென்னவோ? தவமென்னவோ? இது குற்றமோ?
  • எனது குங்குமம் நீயே!
  • எனது சொகுசு எவருடையதே?
  • நீ நிமிடமும் இல்லாத பேறேனோ?
  • மகிழ்விக்க எப்போது தோன்றும் (உனக்கு)?(அல்லது)
  • (உன்னை) மகிழ்விக்காது எத்தனை நாள் தள்ளுவேனோ?
  • எந்த இன்பத்தையும் எனது மனது விரும்பாதே.
  • பிரிந்ததனால் மேனி பகுதியானதே.
  • இவ்வெழில், இச்செம்மை எங்காகிலுமுண்டா?
  • இணைவாய், துயர் தீர்ப்பாய், கடைத் தேற்றுவாய்.
  • மிக்கு தொழுது, (உன்) கையில் சிக்கினேன்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸ்ரீ ராம/ ஜய/ ராம/ ஸ்1ரு2ங்கா3ர/ ராம/
ஸ்ரீ ராமா/ பல்லாண்டு/ இராமா/ எழிலான/ இராமா/


சரணம்
சரணம் 1
கா3ரவமுன/ ப்3ரோவு/ கருணா/ ஸமுத்3ர/ (ஸ்ரீ)
அன்புடன்/ காப்பாய்/ கருணை/ கடலே/


சரணம் 2
நா/ லோனி/ ஜாலி/ நீகு/-ஏல/ தோசது3ரா/ (ஸ்ரீ)
எனது/ உள்ள/ துயர்/ உனக்கு/ ஏன்/ தோன்றாதய்யா/


சரணம் 3
மனஸு/-இச்சி/ நாதோனு/ மாடாடு3னதி3/-எபுடு3/ (ஸ்ரீ)
மனம்/ திறந்து/ என்னோடு/ பேசுவது/ எப்போது/


சரணம் 4
தாளனு/-ஈ/ வேள/-இக/ ஜாலமா/ ராம/ (ஸ்ரீ)
தாளேன்/ இந்த/ வேளை/ இன்னும்/ தாமதமா/ இராமா/


சரணம் 5
3லிமினி/ வலசிதே/ சலமா/ ஓ ராம/ (ஸ்ரீ)
ஆழ/ காதலித்தாலும்/ தயக்கமோ/ ஓ இராமா/


சரணம் 6
ஈ/ ஸௌக்2யமு/-ஈ/ பா4க்3யமு/-எந்தை3ன/ க3லதா3/ (ஸ்ரீ)
இந்த/ இன்பமும்/, இந்த/ பேறும்/ எங்காவது/ உண்டா/


சரணம் 7
ஜபமு/-ஏமோ/ தபமு/-ஏமோ/ அபராத4மு/-ஏமோ/ (ஸ்ரீ)
செபம்/ என்னவோ/ தவம்/ என்னவோ/ குற்றம்/ என்னவோ/


சரணம் 8
பங்கஜ/ நயன/ நா/ குங்கும/ நீவே/ (ஸ்ரீ)
பங்கய/ கண்ணா/ எனது/ குங்குமம்/ நீயே/


சரணம் 9
அவனிஜா/-அதி4ப/ நா/ ஸொக3ஸு/-எவரிதே3/ ராம/ (ஸ்ரீ)
புவிமகள்/ கேள்வா/ எனது/ சொகுசு/ எவருடையதே/ இராமா/


சரணம் 10
நீவு/ நிமிஷமு/ லேனி/ பா4வுகமு/-ஏலே/ (ஸ்ரீ)
நீ/ நிமிடமும்/ இல்லாத/ பேறு/ ஏனோ?


சரணம் 11
தோஷிம்பக/-என்னாள்ளு. தோசுனே/ ராம/ (ஸ்ரீ)
மகிழ்விக்க/ எப்போது/ தோன்றும்/ இராமா/ (அல்லது)
(உன்னை) மகிழ்விக்காது/ எத்தனை நாள்/ தள்ளுவேனோ/ இராமா/


சரணம் 12
எல்ல/ ஸௌக்2யமுலு/ மனஸு/-ஒல்லதே3/ ராம/ (ஸ்ரீ)
எந்த/ இன்பத்தையும்/ மனது/ விரும்பாதே/ இராமா/


சரணம் 13
பாயகா3/ மேனு/ ஸக3மாயெனே/ ராம/ (ஸ்ரீ)
பிரிந்ததனால்/ மேனி/ பகுதியானதே/ இராமா/


சரணம் 14
ஈ/-அந்த3மு/-ஈ/ சந்த3மு/-எந்தை3ன/ க3லதா3/ (ஸ்ரீ)
இந்த/ எழில்/ இந்த/ செம்மை/ எங்காகிலும்/ உண்டா?


சரணம் 15
கூர்சு/ வெதலு/-ஆர்சு/ கட3 தேர்சவே/ ராம/ (ஸ்ரீ)
இணைவாய்/ துயர்/ தீர்ப்பாய்/ கடைத் தேற்றுவாய்/ இராமா/


சரணம் 16
மிக்கிலி/ ம்ரொக்கி/ சே/ ஜிக்கிதி/ ராம/ (ஸ்ரீ)
மிக்கு/ தொழுது/ கையில்/ சிக்கினேன்/ இராமா/


சரணம் 17
ராஜில்லு/ ஸ்ரீ த்யாக3ராஜ/-ஆதி3/ வினுத/ (ஸ்ரீ)
ஒளிரும்/ ஸ்ரீ தியாகராசன்/ ஆகியோரால்/ போற்றப் பெற்றோனே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - மாடாடு3னதெ3புடு3 - மாடாடே3தெ3புடு3

3 - குங்கும - குங்குமமு

5 - ஸக3மாயெனே - ஸக3மாயெனோ : 'ஸக3மாயெனே' - சரியாகும்

Top

மேற்கோள்கள்

விளக்கம்
இப்பாடல் பிரகலாத பக்தி விஜயம் என்ற நாடகத்தில் பிரகலாதன் பாடுவதாக அமைந்துள்ளது.

2 - ஜபமேமோ தபமேமோ அபராத4மேமோ - ஜெபமென்னவோ? தவமென்னவோ? - இவை அறியேன் என - மிகவும் சுருக்கமாக கொடுக்கப்பட்டுள்ள இந்த சரணத்திற்கு, சரியான பொருள் கூறுதல் கடினம். என் சிற்றறிவுக்கு எட்டியவரை இதற்கு பொருள் எழுதியுள்ளேன். தவறிருந்தால் மன்னிக்கவும்.

3 - குங்கும - எனது குங்குமம் - சுமங்கலியின் சின்னம் - இப்பாடல் நாயகி பாவத்தில் (இறைவன் நாயகனாக) அமைந்துள்ளது. ஒரு சுமங்கலிப் பெண்ணுக்கு, குங்குமம் மிகவும் முக்கியமான ஆபரணப் பொருளாகும்.

4 - தோஷிம்பகென்னாள்ளு தோசுனே - மகிழ்விக்க எப்போது தோன்றும் - இதற்குப்பின் வரும் 15-வது சரணத்தில் பிரகலாதன் (தியாகராஜர்) இறைவனைத் தன்னுடன் இணைய வேண்டுகின்றார். 12-வது சரணத்தில் உலக இன்பங்களை எனது மனம் விரும்பாது என்கின்றார். இவையிரண்டினையும் இணைத்து நோக்குகையில், இறைவன் தன்னை மகிழ்விக்க பிரகலாதன் (தியாகராஜர்) விழைவது தெரிகின்றது. அதன்படி பொருள் கொள்ளப்பட்டது.

எல்லா புத்தகங்களிலும் 'தோசுனே' (தோன்றுமோ) என்று கொடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சொல் (தோசுனே) 'தோத்ஸுனே' என்றும் எழுதப்படும். இந்தச் சொல்லினின்றும் சிறிது வேறுபட்ட, 'தோஸ்துனே' என்ற சொல்லுக்கு, (நாளைத்) 'தள்ளுதல்', (காலத்தைப்) 'போக்குதல்' என்று பொருளாகும். அங்ஙனம், சொற்பிழை ஏற்பட்டிருக்குமேயாகில், இந்த சரணத்திற்கு, '(உன்னை) மகிழ்விக்காது எத்தனை நாள் தள்ளுவேனே' என்று பொருள் கொள்ளலாம்.

Top


Updated on 23 Oct 2011

Monday, February 23, 2009

தியாகராஜ கிருதி - ஸ1ரணு ஸ1ரணனுசு - ராகம் மத்4யமாவதி - Saranu Sarananucu - Raga Madhyamavati

பல்லவி
1ரணு ஸ1ரணனுசு மொரலிடி3ன நா
கி3ரமுலன்னி பரியாசகமௌனா

அனுபல்லவி
1ரஜ நயன பரம புருஷ
நின்னனுஸரணதோ கருணதோ மரி மரி (ஸ1)

சரணம்
சரணம் 1
1ரமு தரம தரமு கா3
1காகாஸுருடு3 ஸுருலனாயெ வேட3 கா3னு
31ரத2 வர குமாருனி பா3ணமனுசுனு
வெரசி ஜரக3 மரல தானு கனி
கா33ர-ப3டி3 ஸரகு3ன ஸ1ரணனு மாத்ரமு
நிருவுக3னு ரஜத கி3ரி நாதா2து3லு
வரமகு3 பி3ருது3ன ஸரஸத மெச்சனு
கருணனு ஸ்தி2ரமுக3 வரமிச்சின நினு (ஸ1)


சரணம் 2
முனுபு மனஸுனனஸூயலனு தபோ-
4னுடு3 வினயமுனனு 2த்3ரௌபதி3னி
ஸோ14னமு க4னமுக3 நிஜமுன ஸேய த்3ரு24-
முனனு தன மதி3னி ஸ1ரணனகா3னே
கனிகரமுன வேக3ன நீவெந்தோ
சனுவுன முனுலு ஸு-ஜனுலு ஸுராஸுர
3ணமுலவனி பால நருலு பொக333னு
வனஜ நயன லகு4வுன ப்3ரோசின நினு (ஸ1)


சரணம் 3
மதி3னி பெ33ரு 3ஸு-த3தினி கனி நீது3
பத3முலு த3யனு த4ரலோனு ப்3ரோசே
4கத3ரா மத3 ஜன த3ளனாபக4ன ஜித
மத3ன பு34 ஜன த4ன த்யாக3ராஜ
ஹ்ரு23ய குமுத3 ஜலஜ 54ர ஸம்ஹரணாரி
3மன ஸத3மல ரத3ன முனி மனோ-
ஸத3ன ஸு143 நனு முத3முன ப்3ரோவுமு
ஸத3யுட3 6கொத3வலனத3லிம்புமு நினு (ஸ1)


பொருள் - சுருக்கம்
    கமலக் கண்ணா! பரம்பொருளே! செருக்குடையோரை வீழ்த்துவோனே! உடல் (அழகில்) மதனை வெல்வோனே! அறிஞர்களின் செல்வமே! தியாகராசன் இதயக் குமுதத்தின் மதியே! புவியைச் சுருட்டிய கைவனை மாய்த்தோனே! தூய பற்களோனே! முனிவர் மனத்துறையே! மங்கலமருள்வோனே! கருணையுள்ளத்தோனே!

  • உன்னைப் பின்பற்றி, இரந்து, திரும்பத்திரும்ப, சரணம் சரணமென முறையிட்ட எனது சொற்கள் யாவும் கேலியாமோ?


    • அம்பு விரட்ட, சமாளிக்கவியலாது, காகாசுரன் வானோரை வேண்டலாயிற்று;

    • ஆயின், தசரதனின் உயர் மைந்தனின் (ராமனின்) பாணமென பயந்து (வானோர்) ஒதுங்க,

    • மீளவும் தம்மைக் கண்டு, அச்சமுற்று, விரைவாக, சரணென்றவுடனே,

    • தீர்மானித்து, பனி மலை நாதர் முதலானோர், உயர்ந்த விருதினை இனிமையாக மெச்ச,

    • கருணையுடன், உறுதியாக, (காகாசுரனின் உயிரைக் காத்து) வரமளித்த உன்னை சரணம் சரணமென முறையிட்ட எனது சொற்கள் யாவும் கேலியாமோ?


    • முன்பு, மனதில் காழ்ப்புடன், தவச் செல்வன், (துருவாச முனி) பணிவுடன், துரோபதையை சோதனை, கடினமாக, நிசமாகச் செய்ய,

    • (அவள்) திடமாக, தன்னுள்ளத்தினில், சரணென்றவுடனே,

    • கனிவுடன், விரைவாக, நீ எவ்வளவோ அன்பாக, முனிவர்கள், நல்லோர், வானோர், அரக்கர் கூட்டங்கள், புவியாள்வோர், மற்றும், மக்கள் புகழ,

    • எளிதாகக் காத்த உன்னை சரணம் சரணமென முறையிட்ட எனது சொற்கள் யாவும் கேலியாமோ?


    • உள்ளத்தினில் கலங்கிய வனிதையை (அகலிகையை) கண்டுனது திருவடிகள் தயவாகப் புவியில் காத்தனவன்றோ?


  • என்னை மகிழ்வுடன் காப்பாய்,

  • எனது குறைகளை விரட்டுவாய்;




பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
1ரணு/ ஸ1ரணு/-அனுசு/ மொரலு-இடி3ன/ நா/
சரணம்/ சரணம்/ என/ முறையிட்ட/ எனது/

கி3ரமுலு/-அன்னி/ பரியாசகமு-ஔனா/
சொற்கள்/ யாவும்/ கேலியாமோ/


அனுபல்லவி
1ரஜ/ நயன/ பரம புருஷ/
கமல/ கண்ணா/ பரம்பொருளே/

நின்னு/-அனுஸரணதோ/ கருணதோ/ மரி மரி/ (ஸ1)
உன்னை/ பின்பற்றி/ இரந்து/ திரும்பத்திரும்ப/ சரணம்...


சரணம்
சரணம் 1
1ரமு/ தரம/ தரமு/ கா3க/
அம்பு/ விரட்ட/ சமாளிக்க/ இயலாது/

காக-அஸுருடு3/ ஸுருலனு/-ஆயெ வேட3/ கா3னு/
காகாசுரன்/ வானோரை/ வேண்டலாயிற்று/ ஆயின்/

31ரத2/ வர/ குமாருனி/ பா3ணமு/-அனுசுனு/
தசரதனின்/ உயர்/ மைந்தனின்/ பாணம்/ என/

வெரசி/ ஜரக3/ மரல/ தானு/ கனி/
பயந்து/ (வானோர்) ஒதுங்க/ மீளவும்/ தம்மை/ கண்டு/

கா33ர-ப3டி3/ ஸரகு3ன/ ஸ1ரணு/-அனு/ மாத்ரமு/
அச்சமுற்று/ விரைவாக/ சரண்/ என்ற/ உடனே/

நிருவுக3னு/ ரஜத/ கி3ரி/ நாத2/-ஆது3லு/
தீர்மானித்து/ பனி/ மலை/ நாதர்/ முதலானோர்/

வரமகு3/ பி3ருது3ன/ ஸரஸத/ மெச்சனு/
உயர்ந்த/ விருதினை/ இனிமையாக/ மெச்ச/

கருணனு/ ஸ்தி2ரமுக3/ வரமு/-இச்சின/ நினு/ (ஸ1)
கருணையுடன்/ உறுதியாக/ வரம்/ அளித்த/ உன்னை/ சரணம்...


சரணம் 2
முனுபு/ மனஸுன/-அஸூயலனு/ தபோ/-
முன்பு/ மனதில்/ காழ்ப்புடன்/ தவ/

4னுடு3/ வினயமுனனு/ த்3ரௌபதி3னி/
செல்வன்/ பணிவுடன்/ துரோபதையை/

ஸோ14னமு/ க4னமுக3/ நிஜமுன/ ஸேய/
சோதனை/ கடினமாக/ நிசமாக/ செய்ய/ (அவள்)

த்3ரு24முனனு/ தன/ மதி3னி/ ஸ1ரணு/-அனகா3னே/
திடமாக/ தன்/ உள்ளத்தினில்/ சரண்/ என்றவுடனே/

கனிகரமுன/ வேக3ன/ நீவு/-எந்தோ/
கனிவுடன்/ விரைவாக/ நீ/ எவ்வளவோ/

சனுவுன/ முனுலு/ ஸு-ஜனுலு/ ஸுர/-அஸுர/
அன்பாக/ முனிவர்கள்/ நல்லோர்/ வானோர்/ அரக்கர்/

3ணமுலு/-அவனி/ பால/ நருலு/ பொக333னு/
கூட்டங்கள்/ புவி/ ஆள்வோர்/ (மற்றும்) மக்கள்/ புகழ/

வனஜ/ நயன/ லகு4வுன/ ப்3ரோசின/ நினு/ (ஸ1)
கமல/ கண்ணா/ எளிதாக/ காத்த/ உன்னை/ சரணம்...


சரணம் 3
மதி3னி/ பெ33ரு/ ஸு-த3தினி/ கனி/ நீது3/
உள்ளத்தினில்/ கலங்கிய/ வனிதையை/ கண்டு/ உனது/

பத3முலு/ த3யனு/ த4ரலோனு/ ப்3ரோசே/
திருவடிகள்/ தயவாக/ புவியில்/ காத்தன/

கத3ரா/ மத3 ஜன/ த3ளன/-அபக4ன/ ஜித/
வன்றோ/ செருக்குடையோரை/ வீழ்த்துவோனே/ உடல் (அழகில்)/ வெல்வோனே/

மத3ன/ பு34 ஜன/ த4ன/ த்யாக3ராஜ/
மதனை/ அறிஞர்களின்/ செல்வமே/ தியாகராசன்/

ஹ்ரு23ய/ குமுத3/ ஜலஜ/ த4ர/ ஸம்ஹரண/-அரி/
இதய/ குமுதத்தின்/ மதியே/ புவியை/ சுருட்டிய/ பகைவனை/

3மன/ ஸத3மல/ ரத3ன/ முனி/ மனோ/-
மாய்த்தோனே/ தூய/ பற்களோனே/ முனிவர்/ மனத்துள்/

ஸத3ன/ ஸு143/ நனு/ முத3முன/ ப்3ரோவுமு/
உறையே/ மங்கலமருள்வோனே/ என்னை/ மகிழ்வுடன்/ காப்பாய்/

ஸத3யுட3/ கொத3வலனு/-அத3லிம்புமு/ நினு/ (ஸ1)
கருணையுள்ளத்தோனே/ (எனது) குறைகளை/ விரட்டுவாய்/ உன்னை/ சரணம்...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

4 - கத3ரா - எல்லா புத்தகங்களிலும் 'கத3ர' என்று கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இது ஒரு கேள்வியாகையால் இச்சொல் நெடிலில் (கத3ரா) முடியவேண்டும்.

Top

மேற்கோள்கள்

1 - காகாஸுருடு3 - காகாசுரன் - காக்கையரக்கன் - வால்மீகி ராமாயணம், சுந்தர காண்டம், அத்தியாயம் 38 நோக்கவும்.

2 - த்3ரௌபதி3னி - மகாபாரதம், 3-வது புத்தகம், வன பர்வம் - த்ரௌபதி ஹரண பர்வம் (Section CCLXI) நோக்கவும். வேதங்கள், புராணங்கள் ஆகியவற்றின் ஆங்கல மொழிபெயர்ப்பு

3 - ஸு-த3தினி - அகலியை - வால்மீகி ராமாயணம், பால காண்டம், அத்தியாயம் 48 நோக்கவும்.

5 - 4ர ஸம்ஹரண - புவியைச் சுருட்டிய பகைவன் - இரணியாட்சன் - பாகவத புராணம், 3-வது புத்தகம், அத்தியாயங்கள் 17 - 19 நோக்கவும்.

Top

விளக்கம்

6 - கொத3வலனத3லிம்புமு - கொத3வலனு அத3லிம்புமு - புத்தகங்களில் இதனை 'குற்றங்களை மன்னிப்பாய்' எனவும், 'தேவைகளை பூர்த்தி செய்வாய்' எனவும் பொருள் கொள்ளப்பட்டுள்ளது. 'கொத3வ' என்ற சொல்லுக்கு 'தேவைகள்' என்றும் 'குறைகள்' என்றும் பொருளுண்டு. 'அத3லிம்பு' என்ற சொல்லுக்கு 'அச்சமூட்டுவாய்' என்றும் 'கடிந்துகொள்வாய்' என்றும் பொருளுண்டு. சுற்றிவளைத்து, இதற்கு 'தேவகளை பூர்த்தி செய்வாய்' என பொருள் கொள்ளலாம். ஆனால் 'குற்றங்களை மன்னிப்பாய்' என பொருள் கொள்வது கடினமாகும். தியாகராஜர், தன்னுடைய சுகபோகங்களுக்காக எதனையும் இறைவனிடம் வேண்டியது கிடையாது. இறைவனை, அவனுடைய வழிபாட்டிற்காக மட்டுமே பொருட்களை அவர் கோருவார். இந்த கிருதியில், இறைவனிடம் சரணம் புக வேண்டுகின்றார். அப்படி சரணம் கிடைக்குமுன், தொண்டனுடைய குற்றங்குறைகளை இறைவன் களையவேண்டும். அதனைத்தான் இங்கு வேண்டுகின்றார் என நான் நினைக்கின்றேன். அதன்படி, 'எனது குறைகளை விரட்டுவாய்' என இங்கு பொருள் கொள்ளப்பட்டது.

தசரதனின் உயர் மைந்தன் - இராமன்
வரமளித்த - காக்காசுரனின் உயிரைக் காத்து
தவச் செல்வன் - துருவாச முனி
வனிதை - அகலியை

Top


Updated on 23 Feb 2009

Sunday, February 22, 2009

தியாகராஜ கிருதி - வேங்கடேஸ1 - ராகம் மத்4யமாவதி - Venkatesa - Raga Madhyamavati

பல்லவி
1வேங்கடேஸ1 நினு ஸேவிம்பனு பதி3
வேல 2கனுலு காவலெனய்ய

அனுபல்லவி
பங்கஜாக்ஷ பரிபாலித முனி ஜன
பா4வுகமகு3 தி3வ்ய ரூபமுனு கொன்ன (வேங்க)

சரணம்
சரணம் 1
எக்குவ நீவனி 3தி3க்குல 4பொக33
அக்கர கொனி மதி3 ஸொக்கி கனுகொ3
நிக்கமு நீவே க்3ரக்குன ப்3ரோவு
தளுக்கனி மெரஸே சக்க தனமு க3ல (வேங்க)


சரணம் 2
ஏ நோமு ப2லமோ நீ நாமாம்ரு2
பானமு அனு 5ஸோபானமு தொ3ரிகெனு
ஸ்ரீ நாயக பரமானந்த3 நீ ஸரி
கானமு ஸோ1பா4யமானாங்க்4ரு2லு க3ல (வேங்க)


சரணம் 3
யோகி3 ஹ்ரு23ய நீவே க3தியனு ஜன
பா43தே4ய வர போ4கீ311யன
பா43வத ப்ரிய த்யாக3ராஜ நுத
நாகா3சலமுபை பா3கு33 நெலகொன்ன (வேங்க)


பொருள் - சுருக்கம்
  • மங்களமான, தெய்வீக உருவமேற்றுக்கொண்ட வேங்கடேசா! தளுக்கென மின்னும் களையுடை வேங்கடேசா! மங்கலமான திருவடிகளையுடை வேங்கடேசா! சேடாத்திரி மீது நன்கு நிலைபெற்ற வேங்கடேசா!

  • பங்கயற் கண்ணா! முனிவர்களைப் பேணுவோனே! திருமகள் நாயகா! பரமானந்தமே! யோகியர் இதயத்துறையே! நீயே கதியெனும் மக்களுக்கு உகந்தவையருளும் உயர் அரவரசன் மேற்றுயில்வோனே! பாகவதர்களுக்கினியோனே! தியாகராசனால் போற்றப் பெற்றோனே!


    • உன்னை சேவிக்க பதினாயிரம் கண்கள் வேணுமய்யா;

    • மேலோன் நீயென நாற்றிசையும் புகழ, அக்கறை கொண்டு, மனது சொக்கி, கண்டுகொள்ள உண்மை நீயே;

    • எந்த நோன்பின் பயனோ, உனது நாம அமிழ்து பருகலெனும் ஏணி கிடைத்தது;

    • உனக்கீடு காணோம்;

    • விரைவினில் காப்பாய்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
வேங்கடேஸ1/ நினு/ ஸேவிம்பனு/
வேங்கடேசா/ உன்னை/ சேவிக்க/

பதி3 வேல/ கனுலு/ காவலெனு/-அய்ய/
பதினாயிரம்/ கண்கள்/ வேணும்/ அய்யா/


அனுபல்லவி
பங்கஜ/-அக்ஷ/ பரிபாலித/ முனி ஜன/
பங்கயற்/ கண்ணா/ பேணுவோனே/ முனிவர்களை/

பா4வுகமகு3/ தி3வ்ய/ ரூபமுனு/ கொன்ன/ (வேங்க)
மங்களமான/ தெய்வீக/ உருவம்/ ஏற்றுக்கொண்ட/ வேங்கடேசா...


சரணம்
சரணம் 1
எக்குவ/ நீவு/-அனி/ தி3க்குல/ பொக33/
மேலோன்/ நீ/ என/ நாற்றிசையும்/ புகழ/

அக்கர/ கொனி/ மதி3/ ஸொக்கி/ கனுகொ3ன/
அக்கறை/ கொண்டு/ மனது/ சொக்கி/ கண்டுகொள்ள/

நிக்கமு/ நீவே/ க்3ரக்குன/ ப்3ரோவு/
உண்மை/ நீயே/ விரைவினில்/ காப்பாய்/

தளுக்கு/-அனி/ மெரஸே/ சக்க தனமு/ க3ல/ (வேங்க)
தளுக்கு/ என/ மின்னும்/ களை/ உடை/ வேங்கடேசா....


சரணம் 2
ஏ/ நோமு/ ப2லமோ/ நீ/ நாம/-அம்ரு2த/
எந்த/ நோன்பின்/ பயனோ/ உனது/ நாம/ அமிழ்து/

பானமு/ அனு/ ஸோபானமு/ தொ3ரிகெனு/
பருகல்/ எனும்/ ஏணி/ கிடைத்தது/

ஸ்ரீ/ நாயக/ பரம/-ஆனந்த3/ நீ/ ஸரி/
திருமகள்/ நாயகா/ பரம/ ஆனந்தமே/ உனக்கு/ ஈடு/

கானமு/ ஸோ1பா4யமான/-அங்க்4ரு2லு/ க3ல/ (வேங்க)
காணோம்/ மங்கலமான/ திருவடிகளை/ யுடை/ வேங்கடேசா...


சரணம் 3
யோகி3/ ஹ்ரு23ய/ நீவே/ க3தி/-அனு/ ஜன/
யோகியர்/ இதயத்துறையே/ நீயே/ கதி/ யெனும்/ மக்களுக்கு/

பா43தே4ய/ வர/ போ4கி3/-ஈஸ1/ ஸ1யன/
உகந்தவையருளும்/ உயர்/ அரவு/ அரசன்/ மேற்றுயில்வோனே/

பா43வத/ ப்ரிய/ த்யாக3ராஜ/ நுத/
பாகவதர்களுக்கு/ இனியோனே/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/

நாக3-அசலமு/ பை/ பா3கு33/ நெலகொன்ன/ (வேங்க)
சேடாத்திரி/ மீது/ நன்கு/ நிலைபெற்ற/ வேங்கடேசா...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

சில புத்தகங்ககளில், பல்லவி, அனுபல்லவி மற்றும் எல்லா சரணங்களின் கடைசியல் 'ஸ்ரீ' என்ற பதம் கொடுக்கப்பட்டுள்ளது.

1 - வேங்கடேஸ1 - வெங்கடேஸ1 : 'வேங்கடம்' என்பது தமிழ்ச்சொல். திருமலையானின் ஸுப்ரபாதத்தினில் அவனை 'வேங்கடாசல பதே தவ ஸுப்ரபாதம்' என்றுதான் கூறப்படுகின்றது. எதுகை-மோனை வகையில் நோக்கினாலும், இரண்டாவது வரியில் வரும் 'வேல' என்ற சொல்லினால், முதல் வரியில், 'வேங்கட' என்றுதானிருக்க வேண்டும்.

2 - கனுலு - கன்னுலு : இரண்டு சொற்களுக்கும் ஒரு பொருளே.

3 - தி3க்குல - தி3க்குலு

4 - பொக33 - பொக333

Top

மேற்கோள்கள்

விளக்கம்

5 - ஸோபானமு - ஏணிப்படி - இச்சொல் பக்தி நூல்களிலும் ஞான நூல்களிலும் காணப்படுகின்றன.

ஸ்வாமி தேசிகனின் பரம பத ஸோபானம் நோக்கவும்.

ஆதி சங்கரரின் ஸோபான பஞ்சகம் எனப்படும் உபதேச பஞ்சகம் விளக்கம் மற்றும் செய்யுட்களும் பொருளும் நோக்கவும்.

முத்துஸ்வாமி தீக்ஷிதர் தனது 'பார்வதி பரமேஸ்வரௌ' என்ற கீர்த்தனையில் அவர்களை (பார்வதி பரமேஸ்வரர்களை) 'ஸோபான மார்க3 முக்2யாதா4ரௌ' (சோபான மார்க்கத்தின் முக்கியமான ஆதாரம்) என்கிறார்.

வைகுண்ட ஏகாதசியன்று இரவு விழித்திருந்து 'பாம்பு ஏணி'யெனப்படும் 'பரம பத ஸோபானம்' விளையாடுவர். பரம பத சோபானம் - படம் காண்க.

சேடாத்திரி - வேங்கடேச பெருமாளின் கோயிலுள்ள மலை

Top


Updated on 22 Feb 2009

Saturday, February 21, 2009

தியாகராஜ கிருதி - விநாயகுனி - ராகம் மத்4யமாவதி - Vinaayakuni - Raga Madhyamavati

பல்லவி
வினாயகுனி வலெனு ப்3ரோவவே நினு
வினா வேல்புலெவரம்மா

அனுபல்லவி
அனாத2 ரக்ஷகி ஸ்ரீ காமாக்ஷி
ஸு-ஜனாக4 மோசனி ஸ1ங்கரி ஜனனி (வி)

சரணம்
சரணம் 1
1நராத4முலகுனு வராலொஸக3-
2நுண்ட்3ரமுலை பூ4-ஸுராதி3 தே3வதலு
3ராயிடி3னி ஜெந்த3 ராது33
ஜூட3 ராதா3 4காஞ்சீ புராதி3 நாயகி (வி)


சரணம் 2
5பிதாமஹுடு3 ஜன ஹிதார்த2மை
நின்னு தா தெலிய வேட3 தாளிமி க3
அவதாரமெத்தியிகனு தாமஸமு
ஸேய தாள ஜாலமு நதார்தி ஹாரிணி (வி)


சரணம் 3
புரான த3யசே 6கி3ராலு மூகுனிகி
ரா ஜேஸி
ப்3ரோசு ராஜ த4ரி
த்யாக3ராஜுனி ஹ்ரு237ஸரோஜமேலின
ராம ஸோத3ரி 8பரா ஸ1க்தி நனு (வி)


பொருள் - சுருக்கம்
    அனாதைகளைக் காப்பவளே! காமாட்சி! நல்லோர் பாவம் களைபவளே! மங்களமருளும் தாயே! காஞ்சிபுரத் தலைவியே! பணிந்தோர் துயர் களைபவளே! பிறையணிபவளே! தியாகராசனின் இதயக் கமலத்தினை யாளும் இராமனின் சோதரியே! பரா சக்தியே!

  • உன்னையன்றி கடவுளர் யாரம்மா?

  • மனிதரில் இழிந்தோருக்கு (நீ) வரங்களளிக்க, வெந்து, அந்தணரும், தேவர்கள் மற்றோரும் துயருறலாகாது; தயை செய்யலாகாதா?

  • தாதை, மக்களின் நன்மைக்காக, உன்னைத் தானறிய வேண்ட, அமைதியான வடிவெடுத்து, இனியும் தாமதம் செய்தால் தாளவியலோம்;

  • முன்பு, தயவுடன், பேச்சு மூங்கைக்கு வரச்செய்தருளினாய்;

  • என்னை விநாயகனைப் போன்று காப்பாயம்மா.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
வினாயகுனி/ வலெனு/ ப்3ரோவவே/ நினு/
விநாயகனை/ போன்று/ காப்பாயம்மா/ உன்னை/

வினா/ வேல்புலு/-எவரு/-அம்மா/
அன்றி/ கடவுளர்/ யார்/ அம்மா/


அனுபல்லவி
அனாத2/ ரக்ஷகி/ ஸ்ரீ காமாக்ஷி/
அனாதைகளை/ காப்பவளே/ ஸ்ரீ காமாட்சி/

ஸு-ஜன/-அக4/ மோசனி/ ஸ1ங்கரி/ ஜனனி/ (வி)
நல்லோர்/ பாவம்/ களைபவளே/ மங்களமருளும்/ தாயே/


சரணம்
சரணம் 1
நர/-அத4முலகுனு/ வராலு/-ஒஸக3னு/-
மனிதரில்/ இழிந்தோருக்கு/ (நீ) வரங்கள்/ அளிக்க/

உண்ட்3ரமுலை/ பூ4-ஸுர/-ஆதி3/ தே3வதலு/
வெந்து/ அந்தணரும்/ மற்றோரும்/ தேவர்கள்/

ராயிடி3னி/ ஜெந்த3 ராது3/ த3ய/
துயர்/ உறலாகாது/ தயை/

ஜூட3 ராதா3/ காஞ்சீ/ புர/-ஆதி3 நாயகி/ (வி)
செய்யலாகாதா/ காஞ்சி/ புர/ தலைவியே/


சரணம் 2
பிதாமஹுடு3/ ஜன/ ஹித-அர்த2மை/
தாதை/ மக்களின்/ நன்மைக்காக/

நின்னு/ தா/ தெலிய/ வேட3/ தாளிமி க3ல/
உன்னை/ தான்/ அறிய/ வேண்ட/ அமைதியான/

அவதாரமு/-எத்தி/-இகனு/ தாமஸமு/
வடிவு/ எடுத்து/ இனியும்/ தாமதம்/

ஸேய/ தாள/ ஜாலமு/ நத/-ஆர்தி/ ஹாரிணி/ (வி)
செய்தால்/ தாள/ இயலோம்/ பணிந்தோர்/ துயர்/ களைபவளே/


சரணம் 3
புரான/ த3யசே/ கி3ராலு/ மூகுனிகி/
முன்பு/ தயவுடன்/ பேச்சு/ மூங்கைக்கு/

ரா ஜேஸி/ ப்3ரோசு/ ராஜ/ த4ரி/
வரச்செய்து/ அருளிய/ பிறை/ அணிபவளே/

த்யாக3ராஜுனி/ ஹ்ரு23ய/ ஸரோஜமு/-ஏலின/
தியாகராசனின்/ இதய/ கமலத்தினை/ யாளும்/

ராம/ ஸோத3ரி/ பரா/ ஸ1க்தி/ நனு/ (வி)
இராமனின்/ சோதரியே/ பரா/ சக்தியே/ என்னை/ விநாயகனை..


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - உண்ட்3ரமுலை - எல்லா புத்தகங்களிலும் 'உண்ட3ராமுலை' என கொடுக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் அப்படிப்பட்ட சொல் ஏதும் இருப்பதாகத் தோன்றவில்லை. கிட்டத்தட்ட அதேமாதிரி சொற்களாவன - 'உண்ட்3ரமு' மற்றும் 'உண்ட்3ராயி'. இது தமிழில் 'கொழுக்கட்டை' என்று அழைக்கப்படும், விநாயகருக்குப் பிரியமான இனிப்புப் பண்டம். இது அரிசி மாவினால் செய்து இட்லி மாதிரி வேகவைப்படுவது. விநாயகரைப் பற்றிக் கூறும் இந்த பாடலில், தியாகராஜர், இந்த பண்டத்தின் பெயரை கேலியாகவும், ஆயின் பொருத்தமாகவும் பயன்படுத்துகின்றார்.

3 - ராயிடி3னி - எல்லா புத்தகங்களிலும் 'ராயடி3னி' என்று கொடுக்கப்பட்டுள்ளது. சரியான தெலுங்கு சொல் 'ராயிடி3னி' யாகும்.

Top

6 - கி3ராலு மூகுனிகி ரா ஜேஸி - எல்லா புத்தகங்களிலும் 'கி3ராலு மாகுனிகி ரா ஜேஸி' என்று கொடுக்கப்பட்டுள்ளது. 'கி3ராலு' என்றால் 'பேச்சு' என்று பொருள்படும்; 'மாகு' என்ற தெலுங்கு சொல்லுக்கு 'மரம்' என்று பொருள். 'மூக' என்ற வடமொழி, மற்றும் தெலுங்கு சொல்லுக்கு 'ஊமை' என்று பொருள். காமாட்சி 'மூக கவி' என்ற ஊமைக்குப் பேசும் திறனருளி அவனை பெரும் தொண்டனாகவும் கவியாகவும் மாற்றியதாக காஞ்சியின் தல வரலாறு கூறும். எனவே இங்கு சரியான சொல் 'மூகுனிகி' ஆகும் 'மாகுனிகி' அல்ல.

மூக பஞ்ச ஸ1தி

மூக கவியினைப் பற்றி காஞ்சி மாமுளிவரின் விளக்கம்.

முத்துஸ்வாமி தீட்சிதர் தமது 'ஸ்ரீ கமலாம்பி3கயா கடாக்ஷிதோஹம்' என்ற சங்கராபரண கீர்த்தனையில் கூறுவது 'ஊமைக்குப் பேச்சு அருளியவளே' என்று;

ஸௌந்தர்ய லஹரியில் (செய்யுள் 98) 'ஊமையையும் கவியாக்கும் காரணத்தினால்...' என்று கூறப்படுகின்றது.

7- ஸரோஜமேலின - ஸரோஜமேலைன : 'ஸரோஜமேலின' என்பது சரியாகும்.

Top

மேற்கோள்கள்
8 - பரா ஸ1க்தி - இது அம்பாளின் ஒரு சிறப்பான பெயராகும். லலிதா ஸஹஸ்ரநாமத்தினில் அம்பாளுக்கு 'பரா', 'பஸ்1யந்தி', 'மத்4யமா' 'வைக2ரீ' என்ற பெயர்களுண்டு. 'வைக2ரீ' என்பது நம் வாயிலிருந்து ஒலியாக வெளிப்படும் சொல்லின் வடிவமாகும். இங்ஙனம் ஓலி வடிவமாக வெளிப்படுவதற்கு முன், 'பரா', 'பஸ்1யந்தி', 'மத்4யமா' என்ற மூன்று நிலைகள் உள்ளதாக சான்றோர் கூறுவர். இது குறித்து காஞ்சி மாமுனிவரின் விளக்கம் நோக்குக.

Top

விளக்கம்
1 - நராத4முலகுனு வராலொஸக3 - 'இழிந்தோருக்கு வரங்களளிக்க' - என்று எந்த நிகழ்ச்சியினை தியாகராஜர் குறிப்பிடுகின்றார் என்று தெரியவில்லை.

4 - காஞ்சீ புராதி3 நாயகி - 'காஞ்சீ புர ஆதி3 நாயகி' - காமாட்சி காஞ்சீபுரத்திற்கு தலையாய கடவுள் என புராணங்கள் கூறும். எனவே இந்த அடைமொழி 'காஞ்சீ புர அதி4 நாயகி' என்றிருக்கவேண்டும் என எனது சிற்றறிவிற்குத் தோன்றுகின்றது. ஆனால், எல்லா புத்தகங்களிலும் 'காஞ்சீ புர ஆதி3 நாயகி' என்று கொடுக்கப்பட்டுள்ளதால் அங்ஙனமே இங்கும் கொடுக்கப்பட்டது.

5 - பிதாமஹுடு3 - தாதை, மக்களின் நன்மைக்காக, உன்னைத் தானறிய வேண்ட, அமைதியான வடிவெடுத்து... - முன்னொரு காலத்தில், காமாட்சி, மிகவும் கொடுங்கோப வடிவுடை காளியாக இருந்ததாக தல வரலாறு கூறும். இந்த கோபத்தினை ஆதி சங்கராச்சாரியார், ஸ்ரீசக்ரம் அமைத்து, சாந்தப் படுத்தியதாக சில இடங்களில் கூறப்படுகின்றது. காமாட்சியை, துர்வாச முனிவரும், பிரமனும் வழிபட்டதாகவும் கூறப்படும். இது குறித்து முரண்பாடான கருத்துக்கள் உள்ளன. கீழ்க்கண்ட வலைத்தளங்களை நோக்கவும்.
kAmAkshi-1;
kAmAkshi-2;
kAmAkshi-3;
kAmAkshi-4;
kAmAkshi-5.

தாதை - பிரமன்

மூங்கை - ஊமை
Top


Updated on 22 Feb 2009

Friday, February 20, 2009

தியாகராஜ கிருதி - ராம ஸமயமு - ராகம் மத்4யமாவதி - Rama Samayamu - Raga Madhyamavati

பல்லவி
ராம ஸமயமு ப்3ரோவரா நா பாலி தை3வமா

அனுபல்லவி
ராம த3னுஜ க3ண பீ4ம நவ க4
ஸ்1யாம ஸந்ததமு நாம கீர்தனமு
ஏமரகனு அதி நேமமு
ஜேஸே மஹாத்முலகு காமித ப2லத3 (ரா)

சரணம்
சரணம் 1
தா3ந்த 1ஸம்ரக்ஷணாக3மாந்த சர
பா43வதாந்தரங்க3 சர ஸ்ரீ
காந்த கமனீய 2கு3ணாந்தகாந்தக
ஹிதாந்த ரஹித முனி
சிந்தனீய வேதா3ந்த வேத்3
ஸாமந்த ராஜ நுத
3யாந்த பா4ந்த நிஸா1ந்த
ஸு-கருணா ஸ்வாந்த நீகிதி3 (ரா)


சரணம் 2
ப்3ரு2ந்தா3ரகாதி3 முனி ப்3ரு2ந்தா3ர்சித
4பாதா3ரவிந்த3 5ஸத்34க்த
ஜீவானந்த3 கர ஸூர்ய குல சந்த3னாரி ஹர
6நந்த3காயுத4
ஸனந்த3னாதி3 நுத குந்த3 ரத3ன வர
மந்த3ர த4
கோ3விந்த3 முகுந்த3 ஸந்தே3ஹமு
நீகெந்து3கு நாபை (ரா)


சரணம் 3
ஈ ஜக3தினி நீவவ்யாஜ கருணா மூர்திவனி
பூஜ ஜேஸிதி 73ஜ ராஜ ரக்ஷக த்யாக3-
ராஜ வந்தி3த இப4 ராஜ வந்த3ன ப2ணி
ராஜ ஸ1யன வினரா ஜக3த்பதீ
பூ4ஜா நாயக ராஜித மகுட
4ராஜ ஸன்னுத ஸு-ராஜயிபுடே3 (ரா)


பொருள் - சுருக்கம்
இராமா! என் பங்கிற் தெய்வமே!
  • அரக்கர்களுக்கு அச்சமூட்டுவோனே! கார்முகில் நீல வண்ணா! எவ்வமயமும் (உனது) நாம கீர்த்தனத்தினை ஏமாறாது, மிக்கு நியமத்துடன் செய்யும் சான்றோர்களுக்கு, வேண்டிய பயனளிப்போனே!

  • இருடியரைக் காப்போனே! ஆகமங்களிலுறையே! நற்றொண்டருள்ளத்துறையே! மாமணாளா! கவரும் பண்பினனே! நமனுக்கு நமனின் நண்பனே! முடிவற்றோனே! முனிவரால் தியானிக்கப்படுவோனே! வேதாந்தத்தினை யறிந்தோனே! சிற்றரசரால் வணங்கப்பெற்றோனே! இராமனெனும் இருள் நீக்கியே! நற்கருணை இதயத்தோனே!

  • வானோர், முனிவர்கள் ஆகியோரால் தொழப்பெற்ற திருவடித் தாமரையோயோனே! நற்றொண்டரின் சீவனே! களிப்பருள்வோனே! சூரிய குலத் திலகமே! பகைவரை அழிப்போனே! நந்தகமெனும் வாளுடையோனே! சனந்தனர் முதலானோரால் துதிக்கப்பெற்றோனே! முல்லைப் பற்களோனே! உயர் மந்தரத்தினை சுமந்தோனே! கோவிந்தா! முகுந்தா!

  • கரியரசனைக் காத்தோனே! தியாகராசனால் தொழப்பெற்றோனே! கரியரசனால் வணங்கப்பெற்றோனே! அரவரசன் மேற்றுயில்வோனே! உலகத்தலைவா! புவிமகள் நாயகா! ஒளிரும் மகுடத்தை யணிவோனே! பிரமனால் போற்றப் பெற்றோனே! நல்லரசே!

    • கேளாய்;

    • இப்புவியில், நீ நோக்கமற்ற கருணாமூர்த்தியெனத் தொழுதேன்;

    • ஐயம் உனக்கேன் என்மீது?

    • உனக்கிது, இப்போழ்தே சமயம்; காப்பாயய்யா



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ராம/ ஸமயமு/ ப்3ரோவரா/ நா/ பாலி/ தை3வமா/
இராமா/ (இது) சமயம்/ காப்பாயய்யா/ என்/ பங்கிற்/ தெய்வமே/


அனுபல்லவி
ராம/ த3னுஜ க3ண/ பீ4ம/ நவ/ க4ன/
இராமா/ அரக்கர்களுக்கு/ அச்சமூட்டுவோனே/ புது/ கார்முகில்/

ஸ்1யாம/ ஸந்ததமு/ நாம/ கீர்தனமு/
நீல வண்ணா/ எவ்வமயமும்/ (உனது) நாம/ கீர்த்தனத்தினை/

ஏமரகனு/ அதி/ நேமமு/
ஏமாறாது/ மிக்கு/ நியமத்துடன்/

ஜேஸே/ மஹாத்முலகு/ காமித/ ப2லத3/ (ரா)
செய்யும்/ சான்றோர்களுக்கு/ வேண்டிய/ பயனளிப்போனே/


சரணம்
சரணம் 1
தா3ந்த/ ஸம்ரக்ஷண/-ஆக3ம-அந்த/ சர/
இருடியரை/ காப்போனே/ ஆகமங்களில்/ உறையே/

பா43வத/-அந்தரங்க3/ சர/
நற்றொண்டர்/ உள்ளத்துள்/ உறையே!

ஸ்ரீ/ காந்த/ கமனீய/ கு3ண/-அந்தக/-அந்தக/
மா/ மணாளா/ கவரும்/ பண்பினனே/ நமனுக்கு/ நமனின்/

ஹித/-அந்த/ ரஹித/ முனி/
நண்பனே/ முடிவு/ அற்றோனே/ முனிவரால்/

சிந்தனீய/ வேதா3ந்த/ வேத்3ய/
தியானிக்கப்படுவோனே/ வேதாந்தத்தினை/ யறிந்தோனே/

ஸாமந்த ராஜ/ நுத/
சிற்றரசரால்/ போற்றப்பெற்றோனே/

யாந்த/ பா4ந்த/ நிஸா1/-அந்த/
ரா/ ம/ (எனும்) இருள்/ நீக்கியே/

ஸு-கருணா/ ஸ்வாந்த/ நீகு/-இதி3/ (ரா)
நற்கருணை/ இதயத்தோனே/ உனக்கு/ இது/ இராமா....


சரணம் 2
ப்3ரு2ந்தா3ரக/-ஆதி3/ முனி ப்3ரு2ந்த3/-அர்சித/
வானோர்/ ஆகியோர்/ முனிவர்களால்/ தொழப்பெற்ற/

பாத3/-அரவிந்த3/ ஸத்3-ப4க்த/
திருவடி/ தாமரையோனே/ நற்றொண்டரின்/

ஜீவ/-ஆனந்த3/ கர/ ஸூர்ய/ குல/ சந்த3ன/-அரி/ ஹர/
சீவனே/ களிப்பு/ அருள்வோனே/ சூரிய/ குல/ திலகமே/ பகைவரை/ அழிப்போனே/

நந்த3க/-ஆயுத4/
நந்தகமெனும்/ வாளுடையோனே/

ஸனந்த3ன/-ஆதி3/ நுத/ குந்த3/ ரத3ன/ வர/
சனந்தனர்/ முதலானோரால்/ துதிக்கப்பெற்றோனே/ முல்லை/ பற்களோனே/ உயர்/

மந்த3ர/ த4ர/
மந்தரத்தினை/ சுமந்தோனே/

கோ3விந்த3/ முகுந்த3/ ஸந்தே3ஹமு/
கோவிந்தா/ முகுந்தா/ ஐயம்/

நீகு/-எந்து3கு/ நாபை/ (ரா)
உனக்கு/ ஏன்/ என்மீது/


சரணம் 3
ஈ/ ஜக3தினி/ நீவு/-அவ்யாஜ/ கருணா/ மூர்திவி/-அனி/
இந்த/ புவியில்/ நீ/ நோக்கமற்ற/ கருணா/ மூர்த்தி/ யென/

பூஜ ஜேஸிதி/ க3ஜ/ ராஜ/ ரக்ஷக/ த்யாக3ராஜ/
தொழுதேன்/ கரி/ யரசனை/ காத்தோனே/ தியாகராசனால்/

வந்தி3த/ இப4/ ராஜ/ வந்த3ன/
தொழப்பெற்றோனே/ கரி/ யரசனால்/ வணங்கப்பெற்றோனே/

2ணி/ ராஜ/ ஸ1யன/ வினரா/ ஜக3த்/ பதீ/
அரவு/ அரசன்/ (மேல்) துயில்வோனே/ கேளாய்/ உலக/ தலைவா/

பூ4ஜா/ நாயக/ ராஜித/ மகுட/
புவிமகள்/ நாயகா/ ஒளிரும்/ மகுடத்தை/

4ர/-அஜ/ ஸன்னுத/ ஸு-ராஜ/-இபுடே3/ (ரா)
அணிவோனே/ பிரமனால்/ போற்றப் பெற்றோனே/ நல்லரசே/ இப்போழ்தே/ இராமா....


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
4 - பாதா3ரவிந்த3 - பதா3ரவிந்த3

5 - ஸத்34க்த - ஸத்34க்தி : 'ஸத்34க்த' சரியாகும்.

Top

மேற்கோள்கள்
2 - அந்தகாந்தக - நமனுக்கு நமன் - மார்க்கண்டேயனைக் காக்க, யமனை காலால் சிவன் உதைத்த கதை - இச்சம்பவம் திருக்கடையூரில் நடந்ததாக அக்கோயில் தல வரலாறு கூறும் -

6 - நந்த3காயுத4 - திருப்பதி வெங்கடேசப் பெருமானின் தலை சிறந்த தொண்டராகிய 'அன்னமாச்சார்யா' இறைவனின் 'நந்தகம்' எனும் வாளின் அவதாரம் என்று கூறுவர்.

Top

விளக்கம்
1 - ஆக3மாந்த சர - இச்சொல்லுக்கு 'ஆகமங்களில் உள்ளுறைவோன்' என புத்தகங்களில் பொருள் கூறப்பட்டுள்ளது. அது சரியானால், இச்சொல் 'ஆகமாந்தஸ்1சர' என்றிருக்கவேண்டும். ஆயினும் 'அந்த' என்ற சொல்லுக்கு 'உள்ளே' என்று ஒரு பொருளும் உண்டு. எனவே 'ஆகம அந்த சர' சரியாகவும் இருக்கலாம்.

3 - யாந்த பா4ந்த நிஸா1ந்த - 'யாந்த' என்ற சொல் அகராதியில் கிடையாது. இந்த சொற்கள் (செங்கல்பட்டுக்கு அடுத்த) மதுராந்தகத்தில் உள்ள ராமர் கோயிலில் செதுக்கப்பட்டிருப்பதாகவும், நீண்ட நாள் இதற்கு பொருள் தெரியாமல் இருந்ததாகவும், பின்னர் காஞ்சி மாமுனிவரிடம் இதுபற்றி கேட்கப்பட்டதாகவும், அதற்கு அவர் கீழ்க்கண்டவாறு விடையளித்ததாகவும் கூறப்பட்டுள்ளது. அதன்படி -

யாந்த - என்றால் ய-வுக்குப் பின்னர் வரும் 'ர' (ய ர ல வ ...);
பா4ந்த - என்றால் ப4-வுக்குப் பின்னர் வரும் 'ம' (ப ப234 ம);
இரண்டினைடும் சேர்த்து 'ராம' என்று பொருள் கொள்ளவேண்டும் என்று கூறினாராம்.
ஆக இவ்வடைமொழிக்கு 'ராம எனும் இருள் நீக்கி' என்று பொருளாகும்.

7 - 3ஜ ராஜ ரக்ஷக - இப4 ராஜ வந்த3 - எல்லா புத்தகங்களிலும் இங்ஙனமே கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து வரும் இந்த இரண்டு அடைமொழிகளும் கஜேந்திரனைக் குறிக்கும்.இவற்றிற்கு வேறு ஏதும் பொருள் இருப்பதாகத் தெரியவில்லை.

Top

சிற்றரசர் - அண்டையரசர் என்றும் கொள்ளலாம்
மந்தரம் - மந்தர மலை
அரவரசன் - சேடன்
புவிமகள் - சீதை

Top


Updated on 21 Feb 2009

Thursday, February 19, 2009

தியாகராஜ கிருதி - ராம நாமம் ப4ஜரே - ராகம் மத்4யமாவதி - Rama Namam Bhajare - Raga Madhyamavati

பல்லவி
ராம நாமம் ப4ஜரே மானஸ

சரணம்
சரணம் 1
தொ3ங்க3 ரீதி திருக3ங்க3னேல ஸ்ரீ
ரங்க3னி பத3முல கௌகி3லிஞ்சுகொனி (ராம)


சரணம் 2
1எக்கடை3ன ஹரியொக்கட3னுசு மதி3
சக்க தனமு கனி ஸொக்கி ஸந்ததமு (ராம)


சரணம் 3
எந்து3 போக ராகேந்து3 முகு2னி 2தன-
யந்து3
ஜூசி 32லமந்து3 கோரி ஸ்ரீ (ராம)


சரணம் 4
தே3ஹமெத்தி ஸந்தே3ஹ பட3
4வைதே3ஹி பா4க்3யமா தே3ஹி தே3ஹியனி (ராம)


சரணம் 5
ஸாது4 ஸஜ்ஜனுல போ34 சேத ப4
பா34 மான வலெ ஸாத4கம்பு3தோ (ராம)


சரணம் 6
தீ3னுடை35பந்தா2னுடை3 வினுமு-
6அனுராக3முன மேனொஸங்கி3 ஸ்ரீ (ராம)


சரணம் 7
ராக3 ரஹித ஜன பா43தே4யுனி
வினா க3தியெவ்வரே த்யாக3ராஜ நுத (ராம)


பொருள் - சுருக்கம்
மனமே! எளியோனாயினும், மிக்கு வல்லோனாயினும், கேள்மின்!
  • தியாகராசனால் போற்றப் பெற்ற இராம நாமத்தினை பஜனை செய்வாய்;

  • திருடனைப்போன்று திரிவதேன்? திருவரங்கனின் திருவடிகளை யணைத்துக் கொண்டு இராம நாமத்தினை பஜனை செய்வாய்;

  • எங்காகிலும், அரி ஒருவனேயென்று, உள்ளத்தினில் தெளிவுறக் கண்டு, சொக்கி, எவ்வமயமும் இராம நாமத்தினை பஜனை செய்வாய்;

  • எங்கும் செல்லாது, முழுமதி முகத்தோனை தன்னுள் கண்டு, அங்கு (முத்திப்) பயனை விழைந்து, இராம நாமத்தினை பஜனை செய்வாய்;

  • உடலெடுத்து, ஐயப்படாது, 'வைதேகியின் பேறே! அருள்வாய், அருள்வாய்' என இராம நாமத்தினை பஜனை செய்வாய்;

  • சாதுக்கள், நல்லோரின் அறிவுறையுடன், பிறவிக்கடலின் தொல்லைகளைப் பொறுக்க வேணும்; விடாமுயற்சியுடன் இராம நாமத்தினை பஜனை செய்வாய்;

  • அனுராகத்துடன் (இறைவன் தொண்டுக்கு) உடலையளித்து இராம நாமத்தினை பஜனை செய்வாய்;

  • பற்றற்ற மக்களுக்கு உற்றவை யருள்வோனை அன்றி போக் கெவரே? இராம நாமத்தினை பஜனை செய்வாய்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ராம/ நாமம்/ ப4ஜரே/ மானஸ/
இராம/ நாமத்தினை/ பஜனை செய்வாய்/ மனமே/


சரணம்
சரணம் 1
தொ3ங்க3/ ரீதி/ திருக3ங்க3னு/-ஏல/
திருடனை/ போன்று/ திரிவது/ ஏன்/

ஸ்ரீ ரங்க3னி/ பத3முல/ கௌகி3லிஞ்சுகொனி/ (ராம)
திருவரங்கனின்/ திருவடிகளை/ யணைத்துக் கொண்டு/ இராம...


சரணம் 2
எக்கடை3ன/ ஹரி/ ஒக்கடு3/-அனுசு/ மதி3/
எங்காகிலும்/ அரி/ ஒருவனே/ யென்று/ உள்ளத்தினில்/

சக்க தனமு/ கனி/ ஸொக்கி/ ஸந்ததமு/ (ராம)
தெளிவுற/ கண்டு/ சொக்கி/ எவ்வமயமும்/ இராம...


சரணம் 3
எந்து3/ போக/ ராகா-இந்து3/ முகு2னி/
எங்கும்/ செல்லாது/ முழு மதி/ முகத்தோனை/

தன-அந்து3/ ஜூசி/ ப2லமு/-அந்து3/ கோரி/ ஸ்ரீ/ (ராம)
தன்னுள்/ கண்டு/ (முத்திப்) பயனை/ அங்கு/ விழைந்து/ ஸ்ரீ ராம...


சரணம் 4
தே3ஹமு/-எத்தி/ ஸந்தே3ஹ பட3க/
உடல்/ எடுத்து/ ஐயப்படாது/

வைதே3ஹி/ பா4க்3யமா/ தே3ஹி/ தே3ஹி/-அனி/ (ராம)
'வைதேகியின்/ பேறே/ அருள்வாய்/ அருள்வாய்'/ என/ இராம...


சரணம் 5
ஸாது4/ ஸஜ்ஜனுல/ போ34 சேத/ ப4வ/
சாதுக்கள்/ நல்லோரின்/ அறிவுறையுடன்/ பிறவிக்கடலின்/

பா34/ மான/ வலெ/ ஸாத4கம்பு3தோ/ (ராம)
தொல்லைகளை/ பொறுக்க/ வேணும்/ விடாமுயற்சியுடன்/ இராம...


சரணம் 6
தீ3னுடு3/-ஐன/ பந்தா2னுடு3/-ஐன/ வினுமு/-
எளியோன்/ ஆயினும்/ மிக்கு வல்லோன்/ ஆயினும்/ கேள்மின்/

அனுராக3முன/ மேனு/-ஒஸங்கி3/ ஸ்ரீ/ (ராம)
அனுராகத்துடன்/ (இறைவன் தொண்டுக்கு) உடலை/ யளித்து/ ஸ்ரீ ராம...


சரணம் 7
ராக3/ ரஹித/ ஜன/ பா43தே4யுனி/
பற்று/ அற்ற/ மக்களுக்கு/ உற்றவை யருள்வோனை/

வினா/ க3தி/-எவ்வரே/ த்யாக3ராஜ/ நுத/ (ராம)
அன்றி/ போக்கு/ எவரே/ தியாகராசனால்/ போற்றப் பெற்ற/ இராம...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - தனயந்து3 - நீயந்து3

3 - 2லமந்து3 கோரி - ப2லமந்து3 கோரு - ப2லமந்து3 கோர : அனைத்து சரணங்களும் (கடைசி சரணத்தைத் தவிர) பல்லவியுடன், சரணத்தின் கடைசி சொல்லினால் இணைக்கப்படுகின்றது. அதன்படி, 'கோரி' என்ற சொல்மட்டுமே இச்சரணத்தினை பல்லவியுடன் இணைக்கும். எனவே 'ப2லமந்து3 கோரி' ஏற்கப்பட்டது.

4 - பா4க்3யமா - எல்லா புத்தகங்களிலும் இப்படித்தான் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் எனது சிற்றறிவுக்குத் தெரிந்தவரை இது 'பா4க்3யமு தே3ஹி தே3ஹியனி' என்றிருக்கவேண்டும் (வைதேகியின் பேற்றினை அருள்வாய் அருள்வாய் என..). அன்றேல், கடைசியில் வரும் 'தே3ஹி தே3ஹியனி' (அருள்வாய் அருள்வாயென) என்ற சொற்களின் பொருள் முழுமையாக இல்லை. இதுபற்றி மேலும் விளக்கம் கீழே நோக்கவும்.

5 - பந்தா2னுடை3 - பந்தா4னுடை3ன : 'பந்தா2னுடை3ன' - சரியான சொல்லாகும்.

Top

மேற்கோள்கள்
1 - எக்கடை3ன ஹரியொக்கட3னுசு - எங்கும் அரியொருவனே என்று - பகவத்-கீதையில் கண்ணன் (அத்தியாயம் 7, செய்யுள் 19) பகர்ந்த சொற்களினை எதிரொலிக்கின்றார் -

"பல பிறவிகளுக்குப் பின்னர், மெய்யறிவுடையோன், யாவும் வாசுதேவன் (உள்ளுறை இயக்கம்) என்றுணர்ந்து, என்னிடம் அடைக்கல் புகுகின்றான். அத்தகைய சீவன் மிக்கரிதாகும்." (ஸ்வாமி ஸ்வரூபானந்தாவின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்.)

6 - அனுராக3முன - அனுராகம் - இறைவனிடம் கொள்ளும் காதல் - இச்சொல் நாரத பக்தி சூத்திரங்களில் விவரிக்கப்பட்டுள்ளது.

Top

விளக்கம்
4 - வைதே3ஹி பா4க்3யமா - தியாகராஜர் தன்னுடைய 'ஏ வரமடு3கு3து3ரா' என்ற கல்யாணி ராக கீர்த்தனையில் வைதேகியின் பேற்றினை வருணிக்கின்றார் -

"உன்னை எவ்வமயமும் (தனது) இதயக் கோயிலினில் கண்டு, தீய விழைவுகளைக் கைவிட்டு, நீ அவளுக்கு மணாளன் என்ற மோகத்தினையும் மறந்து, 'ஸோஹம்' (அவன் நானே) என்னும் சுகம் வைதேகியின் பாலிருக்க...." (ராமனை, தனக்கு மட்டுமே உரித்தான, கணவனாக அன்றி அனைத்துயிர்களுக்கும் கணவனான பரம்பொருளாக நோக்கும் நிலை)

Top


Updated on 20 Feb 2009

Wednesday, February 18, 2009

தியாகராஜ கிருதி - ராம கதா2 - ராகம் மத்4யமாவதி - Rama Kathaa - Raga Madhyamavati

பல்லவி
ராம கதா2 ஸுதா4 ரஸ பானமொக
ராஜ்யமு ஜேஸுனே

அனுபல்லவி
பா4மா மணி ஜானகி ஸௌமித்ரி
14ரதாது3லதோ பூ4மி வெலயு 2ஸ்ரீ (ராம)

சரணம்
34ர்மாத்3யகி22லத3மே மனஸா
தை4ர்யானந்த3 ஸௌக்2ய நிகேதனமே
கர்ம ப3ந்த4 ஜ்வலனாப்3தி4 4நாவமே
5கலி ஹரமே த்யாக3ராஜ வினுதுட3கு3 (ராம)


பொருள் - சுருக்கம்
மனமே!
    வனிதையருள் மணியாகிய சானகி, இலக்குவன், பரதன் முதலானோருடன் புவியில் விளங்கும், தியாகராசனால் போற்றப் பெற்றோனாகிய, இராமனின் காதையெனும் அமிழ்தச் சாற்றினைப் பருகலோர் அரசாட்சியாகுமே!

  • அறம் முதலாக அனைத்து பயன்களையுமளிக்குமே;

  • தைரியம், ஆனந்தம் மற்றும் சௌக்கியத்தின் இருப்பிடமாகுமே;

  • கருமங்களினால் கட்டுண்ட எரிகடலைக் கடக்கும் படகாகுமே;

  • கலியினை வெல்லுமே.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ராம/ கதா2/ ஸுதா4/ ரஸ/ பானமு/-ஒக/
இராமனின்/ காதையெனும்/ அமிழ்த/ சாற்றினை/ பருகல்/ ஓர்

ராஜ்யமு/ ஜேஸுனே/
அரச/ ஆட்சியாகுமே/


அனுபல்லவி
பா4மா/ மணி/ ஜானகி/ ஸௌமித்ரி/
வனிதையருள்/ மணியாகிய/ சானகி/ சுமித்திரையின் மகன் (இலக்குவன்)/

4ரத/-ஆது3லதோ/ பூ4மி/ வெலயு/ ஸ்ரீ/ (ராம)
பரதன்/ முதலானோருடன்/ புவியில்/ விளங்கும்/ திரு/ இராமனின்...


சரணம்
4ர்ம/-ஆதி3/-அகி2ல/ ப2லத3மே/ மனஸா/
அறம்/ முதலாக/ அனைத்து/ பயன்களையுமளிக்குமே/ மனமே/

தை4ர்ய/-ஆனந்த3/ ஸௌக்2ய/ நிகேதனமே/
தைரியம்/ ஆனந்தம் (மற்றும்)/ சௌக்கியத்தின்/ இருப்பிடமாகுமே/

கர்ம/ ப3ந்த4/ ஜ்வலன/-அப்3தி4/ நாவமே/
கருமங்களினால்/ கட்டுண்ட/ எரி/ கடலில் (கடக்கும்)/ படகாகுமே/

கலி/ ஹரமே/ த்யாக3ராஜ/ வினுதுட3கு3/ (ராம)
கலியினை/ வெல்லுமே/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனாகிய/ இராமனின்...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - ஸ்ரீ - சீதா.
Top

மேற்கோள்கள்
1 - 4ரதாது3லதோ - வால்மீகி ராமாயணம், பால காண்டம், அத்தியாயம் 13-ன் படி, ராமன், விஷ்ணுவின் பகுதியாகவும், பரதன் கால் பகுதியாகவும், லக்ஷ்மணன் மற்றும் சத்துருக்கினன் (ஒவ்வொருவரும்) எட்டிலோர் பாகமாகவும் பிறந்தனர். வாலி, சுக்கிரீவன், அனுமன் முதலான வானரங்கள், தேவர்கள் மற்றும் இருடிகளின் மக்களாவர்.

5 - கலி ஹரமே - அரி பஜனையின் ஓர் செய்யுளில் கூறப்படுவதனை தியாகராஜர் இங்கு சுருக்கமாகக் கூறுகின்றார் -

"இந்த கலியில், மனத்தினால் களங்கப்பட்டவர்களும், தவறான முறையில் ஈட்டப்பட்ட செல்வத்தில் வாழ்பவர்களும், சாத்திரங்களில் கூறப்பட்ட கடமைகளின் வரம்பு மீறி நடப்பவர்களும், தங்களை கோவிந்தனின் நாமத்தினைப் பகர்வதனால் மட்டுமே காத்துக்கொள்ள முடியும்". (தமிழாக்கம்)

Top

விளக்கம்
3 - 4ர்மாத்3யகி2 - அறம் முதலாக - அறம், பொருள், இன்பம், வீடு எனப்படும் புருஷார்த்தங்கள்

4 - நாவமே - 'ராம' என்னும் பெயர் 'ஓம்' எனும் பிரணவத்திற்கீடான பிறவிக் கடலைத் தாண்டுவிக்கும் படகாகும்.

கருமங்களினால் கட்டுண்ட எரி கடல் - புவி வாழ்வெனும் கடல்

Top


Updated on 19 Feb 2009

தியாகராஜ கிருதி - முச்சட - ராகம் மத்4யமாவதி - Mucchata - Raga Madhyamavati

பல்லவி
முச்சட ப்3ரஹ்மாது3லகு தொ3ரகுனா
1முதி3தலார ஜூதாமு ராரே

அனுபல்லவி
பச்சனி தே3ஹினி பரம பாவனினி
பார்வதினி தலசுசுனு ஹருடே3கெ3டு3 (மு)

சரணம்
சரணம் 1
2சில்லர வேல்புல ரீதி நருல கர
பல்லவமுலனு தளுக்கனுசு பி3ருது3-
லெல்ல மெரய நிஜ ப4க்துலு பொக333
உல்லமு ரஞ்ஜில்ல
தெல்லனி மேனுன நிண்டு3 ஸொம்முலதோ
மல்லெ ஹாரமுலு மரி ஸோ1பி4ல்லக3
சல்லனி வேள ஸகல நவ-ரத்னபு
பல்லகிலோ வேஞ்சேஸி வச்சு (மு)


சரணம் 2
ஹிதமைன ஸகல நைவேத்3யம்பு3
ஸம்மதமுன அடு33டு3கு3காரகி3ம்புசு
மிதமு லேனி உபசாரமுலதோ-
நதி ஸந்தோஷமுன ஸததமு
ஜப தபமுலனொனரிஞ்சு
நத ஜனுலகபீ4ஷ்டமுலவ்வாரிக3
வெதகி3யொஸகு3து3னனுசு பஞ்ச நதீ3
பதி வெட3லி ஸொக3ஸு மீரக3 வச்சு (மு)


சரணம் 3
பா43வதுலு ஹரி நாம கீர்தனமு
பா3கு33 ஸு-ஸ்வரமுலதோ விந்த
ராக3முலனாலாபமு ஸேயு
வைபோ43முலனு ஜூசி
நாக3 பூ4ஷணுடு3 கருணா நிதி4யை
வேக3மு ஸகல ஸு-ஜன ரக்ஷணமுன
ஜாக3-ரூகுடை3 கோர்கெலனொஸகு3
3த்யாக3ராஜு தானனுசுனு வச்சு (மு)


பொருள் - சுருக்கம்
பெண்டிரே!

    பச்சை மேனியள், முற்றிலும் தூயவள், பார்வதியை நினைத்துக்கொண்டு, அரன் எழுந்தருளும் காட்சி, பிரமன் முதலானோருக்கும் கிடைக்குமா?

    • சில்லறைக் கடவுளர் போன்று, மனிதர்களின் கைகளில் தளுக்கென விருதுகள் எல்லாம் ஒளிர,

    • உண்மையான தொண்டர்கள் போற்ற உள்ளம் மகிழ,

    • வெண்மேனியில், நிறைய அணிகலன்களுடன், மல்லிகை மாலைகளும் சோபிக்க,

    குளிர்ந்த வேளையில், அனைத்து நவரத்தினப் பல்லக்கியில் எழுந்தருளி வரும் காட்சி, பிரமன் முதலானோருக்கும் கிடைக்குமா?

    • இதமான, அனைத்து படையல்களையும், முழு மனதுடன், ஒவ்வோரடியிலும் ஏற்றுக்கொண்டு,

    • அளவற்ற உபசரணைகளுடனும், மிக்குக் களிப்புடனும்,

    • 'எவ்வமயமும் செப, தவங்களியற்றும் பணிந்தோருக்கு, வேண்டியவற்றை ஏராளமாக, தேடி வழங்குவாம்' என,

    திருவைய்யாற்று ஈசன் புறப்பட்டு, சொகுசு மிக, வரும் காட்சி, பிரமன் முதலானோருக்கும் கிடைக்குமா?

    • பாகவதர்கள் அரி நாம கீர்த்தனங்களை நன்காக, இனிய சுரங்களுடன், புதுமையான ராகங்களில் ஆலாபனை செய்யும் வைபோகத்தினைக் கண்டு,

    • அரவணிந்தோன், கருணைக் கடலாய், விரைவாக, அனைத்து நல்லோரையும் பேணுதற்கு, விழிப்புடையோனாய்,

    'கோரிக்கைகளை வழங்கும் தியாகராசன் யாமே'யென, வரும் காட்சி, பிரமன் முதலானோருக்கும் கிடைக்குமா?


காண்போம், வாரீர்!


பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
முச்சட/ ப்3ரஹ்மா/-ஆது3லகு/ தொ3ரகுனா/
காட்சி/ பிரமன்/ முதலானோருக்கும்/ கிடைக்குமா/

முதி3தலார/ ஜூதாமு/ ராரே/
பெண்டிரே/ காண்போம்/ வாரீர்/


அனுபல்லவி
பச்சனி/ தே3ஹினி/ பரம/ பாவனினி/
பச்சை/ மேனியள்/ முற்றிலும்/ தூயவள்/

பார்வதினி/ தலசுசுனு/ ஹருடு3/-ஏகெ3டு3/ (மு)
பார்வதியை/ நினைத்துக்கொண்டு/ அரன்/ எழுந்தருளும்/ காட்சி...


சரணம்
சரணம் 1
சில்லர/ வேல்புல/ ரீதி/ நருல/
சில்லறை/ கடவுளர்/ போன்று/ மனிதர்களின்/

கர பல்லவமுலனு/ தளுக்கு-அனுசு/ பி3ருது3லு/-
கைகளில்/ தளுக்கென/ விருதுகள்/

எல்ல/ மெரய/ நிஜ/ ப4க்துலு/ பொக333/
எல்லாம்/ ஒளிர/ உண்மையான/ தொண்டர்கள்/ போற்ற/

உல்லமு/ ரஞ்ஜில்ல/
உள்ளம்/ மகிழ/

தெல்லனி/ மேனுன/ நிண்டு3/ ஸொம்முலதோ/
வெண்/ மேனியில்/ நிறைய/ அணிகலன்களுடன்/

மல்லெ/ ஹாரமுலு மரி/ ஸோ1பி4ல்லக3/
மல்லிகை/ மாலைகளும்/ சோபிக்க/

சல்லனி/ வேள/ ஸகல/ நவ-ரத்னபு/
குளிர்ந்த/ வேளையில்/ அனைத்து/ நவரத்தின/

பல்லகிலோ/ வேஞ்சேஸி/ வச்சு/ (மு)
பல்லக்கியில்/ எழுந்தருளி/ வரும்/ காட்சி...


சரணம் 2
ஹிதமைன/ ஸகல/ நைவேத்3யம்பு3ல/
இதமான/ அனைத்து/ படையல்களையும்/

ஸம்மதமுன/ அடு3கு3-அடு3கு3கு/-ஆரகி3ம்புசு/
முழு மனதுடன்/ ஒவ்வோரடியிலும்/ ஏற்றுக்கொண்டு/

மிதமு லேனி/ உபசாரமுலதோனு/-
அளவற்ற/ உபசரணைகளுடனும்/

அதி/ ஸந்தோஷமுன/ ஸததமு/
மிக்கு/ களிப்புடனும்/ 'எவ்வமயமும்/

ஜப/ தபமுலனு/-ஒனரிஞ்சு/
செப/ தவங்கள்/ இயற்றும்/

நத ஜனுலகு/-அபீ4ஷ்டமுலு/-அவ்வாரிக3/
பணிந்தோருக்கு/ வேண்டியவற்றை/ ஏராளமாக/

வெதகி3/-ஒஸகு3து3னு/-அனுசு/ பஞ்ச நதீ3/
தேடி/ வழங்குவாம்'/ என/ திருவைய்யாற்று/

பதி/ வெட3லி/ ஸொக3ஸு/ மீரக3/ வச்சு/ (மு)
ஈசன்/ புறப்பட்டு/ சொகுசு/ மிக/ வரும்/ காட்சி...


சரணம் 3
பா43வதுலு/ ஹரி/ நாம/ கீர்தனமு/
பாகவதர்கள்/ அரி/ நாம/ கீர்த்தனங்களை/

பா3கு33/ ஸு-ஸ்வரமுலதோ/ விந்த/
நன்காக/ இனிய சுரங்களுடன்/ புதுமையான/

ராக3முலனு/-ஆலாபமு/ ஸேயு/
ராகங்களில்/ ஆலாபனை/ செய்யும்/

வைபோ43முலனு/ ஜூசி/
வைபோகத்தினை/ கண்டு/

நாக3/ பூ4ஷணுடு3/ கருணா/ நிதி4யை/
அரவு/ அணிந்தோன்/ கருணை/ கடலாய்/

வேக3மு/ ஸகல/ ஸு-ஜன/ ரக்ஷணமுன/
விரைவாக/ அனைத்து/ நல்லோரையும்/ பேணுதற்கு/

ஜாக3-ரூகுடை3/ கோர்கெலனு/-ஒஸகு3/
விழிப்புடையோனாய்/ 'கோரிக்கைகளை/ வழங்கும்/

த்யாக3ராஜு/ தானு/-அனுசுனு/ வச்சு/ (மு)
தியாகராசன்/ யாமே'/ யென/ வரும்/ காட்சி...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

1 - முதி3தலார - முதி3துலார

2 - சில்லர வேல்புல ரீதி நருல - சல்லரே வேல்புல ரீதி விருல : பிற்குறிப்பிட்ட வேறுபாடு தவறாகும்

Top

மேற்கோள்கள்

விளக்கம்

1 - முதி3தலார - பெண்டிரே! - தியாகராஜர், யாரை 'பெண்டிரே' என்றழைக்கின்றார்? கண்ணனின் பரம பக்தையான மீராவின் வாழ்வில் ஓர் சம்பவம் -

"பிருந்தாவனத்தில் உள்ளது ஓர் ஆண்தான்.

பிருந்தாவனத்தில் நிறைய சாதுக்கள் வசித்து வந்தனர். அவர்களில் 'ஜீவ கோஸ்வாமி' என்பவரும் ஒருவர். அவர் மிக்கு கட்டுப்பாடுடன் வாழ்ந்தவர். அவரை ஒரு பெண்ணின் நிழல் கூட தொடக்கூடாது. அதனால் அவரைக் காண பெண்கள் யாரும் செல்லக் கூடாது. சைதன்ய தேவரின் பக்தி இயக்கத்தினில் சேர்ந்து பக்தி நெறியினை அவர் பரப்பிக் கொண்டிருந்தார்.

சாதுக்களிடம் மிக்குப் பரிவுடைய மீரா அப்பெரியவரைக் காணச் சென்றாள். அவருடைய ஆசிரமத்தின் வாயிலிலேயே அவருடை சீடரால் நிறுத்தப்பட்டாள் மீரா. 'ஸ்வாமிஜி பெண்களைப் பார்க்கமாட்டார்' என்று அந்த சீடர் கூறினார்.

மீரா அதனைச் செவிமடுத்து, நகைத்துச் சொன்னாள் 'பிருந்தாவனத்தில் கண்ணன் ஒருவன் தான் ஆண் மகன் என்று இதுவரை நினைத்திருந்தேன். அவனுக்கு ஒரு போட்டி இருப்பதை இப்போதுதான் உணர்கின்றேன்.' சீடன் இச்சொற்களைத் தனது குருவிடம் கூறியவுடன், அவருக்கு தன்னுடைய இதயத்தினை யாரோ கூர்ந்த ஈட்டியினால் குத்தியது போன்றுணர்ந்தார். குடிலிக்கு வெளியே வந்து, வெறுங்காலுடன் மீராவிடம் சென்று, அவளைக் குடிலுக்குள், அனைத்து மரியாதைகளுடன், அழைத்து வந்தார்.

பக்தி இயக்கத்தினில், மனைவி தன்னுடைய கணவனிடம் கொள்வது போன்ற காதல் இறைவனிடம் கொள்வது சிறந்ததாகக் கருதப்படுகின்றது. இந்நெறியில் உலகத்தில் உள்ள யாவரும் பெண்டிரே - இறைவன் ஒருவனே யாவருக்கும் கணவனாவான். பிருந்தாவனத்தில் யாவரும் கோபியரே - கண்ணன் ஒருவன்தான் ஆண். பால் பாகுபாடு தொண்டர்களுக்குள் கிடையாது." (தமிழாக்கம்) மீராவின் சரிதச் சுருக்கம்.

இதனையொட்டித்தான், அனைத்து பக்தர்களையும், கூட்டாக, 'பெண்டிரே' என்று தியாகராஜர் அழைக்கின்றார். அவருடை கீர்த்தனங்கள் பலவற்றில் இந்த அழைப்பினைக் காணலாம். முக்கியமாக திருவரங்கத்தினில் அவர் பாடிய 'ஜூதாமு ராரே' என்ற பாடல் குறிப்பிடத் தக்கது.

Top

2 - சில்லர வேல்புல ரீதி - சில்லரை தேவதைகள் போன்று - இறைவனுக்குக் குடை பிடித்தும், சாமரம் வீசியும், மற்ற அலங்காரப் பொருட்களை ஏந்தி, கோயில் சிப்பந்திகள் சொகுசாக ஆடைகளுடுத்தி வரும் காட்சி, சில்லரை தேவதைகள் வருவது போன்று தோன்றுவதாக தியாகராஜர் வருணிக்கின்றார்.

3 - த்யாக3ராஜு - இங்கு 'தியாகராஜ' என்பது சிவனைக் குறிக்கும்.

Top


Updated on 18 Feb 2009

Tuesday, February 17, 2009

தியாகராஜ கிருதி - நாது3பை - ராகம் மத்4யமாவதி - Naadupai - Raga Madhyamavati

பல்லவி
நாது3பை பலிகேரு 1நருலு

அனுபல்லவி
வேத3 ஸன்னுத 24வமு வேரு ஜேஸிதினனுசு (நா)

சரணம்
சரணம் 1
3பஞ்ச ஸ1 ஜனக ப்ரபஞ்சமுன க3ல ஸுக2மு
மஞ்சு வலெனனுசு மதி3னெஞ்சிதி கானி
பஞ்சுகொனி த4னமுலார்ஜிஞ்சுகொனி ஸரியெவ்வ-
ரஞ்சு மரி க3தியு லேத3ஞ்சு பல்கிதினா (நா)


சரணம் 2
தி3னமு நித்யோத்ஸவமுனகாஸ ஜெந்தி3தி
நா 4மனஸுன இல்லு ஒகடியனியுண்டி கானி
அனுதி3னமுனொருல மேலுனு ஜூசி தாள
லேகனு ரெண்டு3 ஸேய வலெனனுசு பல்கிதினா (நா)


சரணம் 3
ப்ராணமே பாடியனி மானமே மேலண்டி
கானி ஸ்ரீ ராம பரமானந்த3 ஜலதி4
ஸ்ரீ நாத2 குலமுலோ லேனி தா3ரினி பட்டி
5ஜேனெடு33ரமு நிம்பனொருல பொக3டி3தினா (நா)


சரணம் 4
ஆஜானு-பா3ஹு யுக3 ஸ்ரீ ஜானகீ பதி
பயோஜாக்ஷ ஸ்ரீ த்யாக3ராஜ நுத சரண
ஈ ஜக3திலோ நின்னு பூஜிஞ்சு வாரி-
6நவ்யாஜமுன ப்3ரோசு ஸு-ராஜ நீவாடை3ன (நா)


பொருள் - சுருக்கம்
மறைகளில் போற்றப் பெற்றோனே! ஐங்கணையோனை யீன்றோனே! இராமா! பரமானந்தக் கடலே! மாமணாளா! முழந்தாள் வரை நீளிரு கைகளோனே! சானகி மணாளா! கமலக்கண்ணா! தியாகராசனால் போற்றப் பெற்ற திருவடியோனே! இப்புவியிலுன்னை வழிபடுவோரை, நோக்கம் ஏதுமின்றி, காக்கும் நற்றலைவா!
    குடும்பத்தினை வேறாக்கினேன் என என் மீது (குற்றம்) பகர்ந்தனர், மனிதர்கள்;

  • இப்புவியிலுள்ள சுகங்கள், பனி போன்றதென மனத்தில் எண்ணினேனே யன்றி, பங்கிட்டுக்கொண்டு, சொத்து சேர்த்துக்கொண்டு, ஈடெவர் என்று, பின்னர், கதியிலன் எனப் பகர்ந்தேனா?

  • தினமும், அன்றாட வழிபாட்டிற்கு ஆசைகொண்டேன்; எனது மனத்தினில், வீடு ஒன்றேயென்று இருந்தேனே யன்றி அனுதினமும், மற்றோரின் மேன்மையைக் கண்டு, தாளாது, (வீட்டினை) இரண்டாக்க வேண்டுமெனப் பகர்ந்தேனா?

  • உயிர் எம்மாத்திரமென, மானமே மேலென்றேனே யன்றி, குலத்தினிலில்லாத வழியைப் பற்றி, சாண் வயிற்றினை நிரப்ப, பிறரைப் புகழ்ந்தேனா?


  • உன்னவனாகிய என் மீது (குற்றம்) பகர்ந்தனர், மனிதர்கள்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நாது3/ பை/ பலிகேரு/ நருலு/
என்/ மீது/ (குற்றம்) பகர்ந்தனர்/ மனிதர்கள்/


அனுபல்லவி
வேத3/ ஸன்னுத/ ப4வமு/ வேரு/ ஜேஸிதினி/-அனுசு/ (நா)
மறைகளில்/ போற்றப் பெற்றோனே/ குடும்பத்தினை/ வேறு/ ஆக்கினேன்/ என/ என் மீது...


சரணம்
சரணம் 1
பஞ்ச/ ஸ1ர/ ஜனக/ ப்ரபஞ்சமுன/ க3ல/ ஸுக2மு/
ஐந்து/ கணையோனை/ ஈன்றோனே/ புவியில்/ உள்ள/ சுகங்கள்/

மஞ்சு/ வலெனு/-அனுசு/ மதி3னி/-எஞ்சிதி/ கானி/
பனி/ போன்றது/ என/ மனத்தில்/ எண்ணினேனே/ யன்றி/

பஞ்சுகொனி/ த4னமுலு/-ஆர்ஜிஞ்சுகொனி/ ஸரி/-எவ்வரு/-
பங்கிட்டுக்கொண்டு/ சொத்து/ சேர்த்துக்கொண்டு/ ஈடு/ எவர்/

அஞ்சு/ மரி/ க3தியு/ லேது3/-அஞ்சு/ பல்கிதினா/ (நா)
என்று/ பின்னர்/ கதி/ இலன்/ என/ பகர்ந்தேனா/


சரணம் 2
தி3னமு/ நித்ய/-உத்ஸவமுனகு/-ஆஸ/ ஜெந்தி3தி/
தினமும்/ அன்றாட/ வழிபாட்டிற்கு/ ஆசை/ கொண்டேன்/

நா/ மனஸுன/ இல்லு/ ஒகடி/-அனி/-உண்டி/ கானி/
எனது/ மனத்தினில்/ வீடு/ ஒன்றே/ யென்று/ இருந்தேனே/ யன்றி/

அனுதி3னமுனு/-ஒருல/ மேலுனு/ ஜூசி/ தாள லேகனு/
அனுதினமும்/ மற்றோரின்/ மேன்மையை/ கண்டு/ தாளாது/

ரெண்டு3/ ஸேய/ வலெனு/-அனுசு/ பல்கிதினா/ (நா)
(வீட்டினை) இரண்டு/ ஆக்க/ வேண்டும்/ என/ பகர்ந்தேனா/


சரணம் 3
ப்ராணமு/-ஏ பாடி/-அனி/ மானமே/ மேலு/-அண்டி/
உயிர்/ எம்மாத்திரம்/ என/ மானமே/ மேல்/ என்றேனே/

கானி/ ஸ்ரீ ராம/ பரம-ஆனந்த3/ ஜலதி4/
அன்றி/ ஸ்ரீ ராமா/ பரமானந்த/ கடலே/

ஸ்ரீ/ நாத2/ குலமுலோ/ லேனி/ தா3ரினி/ பட்டி/
மா/ மணாளா/ குலத்தினில்/ இல்லாத/ வழியை/ பற்றி/

ஜேனெடு3/-உத3ரமு/ நிம்பனு/-ஒருல/ பொக3டி3தினா/ (நா)
சாண்/ வயிற்றினை/ நிரப்ப/ பிறரை/ புகழ்ந்தேனா/


சரணம் 4
ஆஜானு/-பா3ஹு/ யுக3/ ஸ்ரீ ஜானகீ/ பதி/
முழந்தாள் வரை நீள்/ கைகள்/ இணையோனே/ ஸ்ரீ ஜானகி/ மணாளா/

பயோஜ/-அக்ஷ/ ஸ்ரீ த்யாக3ராஜ/ நுத/ சரண/
கமல/ கண்ணா/ ஸ்ரீ தியாகராசனால்/ போற்றப் பெற்ற/ திருவடியோனே/

ஈ/ ஜக3திலோ/ நின்னு/ பூஜிஞ்சு வாரினி/-
இந்த/ புவியில்/ உன்னை/ வழிபடுவோரை/

அவ்யாஜமுன/ ப்3ரோசு/ ஸு-ராஜ/ நீவாடை3ன/ (நா)
நோக்கம் ஏதுமின்றி/ காக்கும்/ நற்றலைவா/ உன்னவனாகிய/ என் மீது...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - நருலு - நருலு ஸ்ரீ ராம

4 - மனஸுன இல்லு ஒகடியனி - மனஸுன இல்லு ஒகடனி

5 - ஜேனெடு3 - ஜானெடு3 - தெலுங்கு அகராதியின்படி இரண்டு சொற்களுமே சரியாகும்

Top

மேற்கோள்கள்
3 - பஞ்ச ஸ1 - ஐந்து மலரக்கணையோன் - மன்மதன் - ஐந்து மலர்களாவன - தாமரை, அசோக, மா, மல்லிகை, நீல தாமரை. - இம்மலர்க்கணைகளின் தன்மை யாதென அறிய

6 - அவ்யாஜமுன - நோக்கமின்றி - லலிதா ஸஹஸ்ர நாமத்தில், அம்மையின் பெயர்களிலொன்று - 'அவ்யாஜ கருணா மூர்த்தி' என்பதாகும். படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழிலுக்கும் எந்த விதமான நோக்கமும் கற்பிக்க இயலாது.

Top

விளக்கம்
2 - 4வமு - புத்தகங்களில் இதற்கு 'குடும்பம்' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. அனுபல்லவியிலும் முதல் சரணத்திலும் கூறியவற்றினை நோக்குகையில் அந்த பொருள் பொருந்தும். ஆனால் 'ப4வம்' என்ற வடமொழிச் சொல்லுக்கும் அதன் தெலுங்கு திரிபான 'ப4வமு' என்ற சொல்லுக்கும் 'சம்சாரம்' என்றுதான் பொருள் கொள்ள முடியும்.

தியாகராஜர் தன்னுடைய குறைகளையெல்லாம் அவ்வப்போது இறைவனிடம் நேரிடையாக சொல்வது போன்று பல கீர்த்தனைகளை அமைத்துள்ளார். அவருடைய இந்த மனோபாவத்தினை சாதாரண மக்கள் அறிதல் மிகவும் கடினம். அந்த வகையில், முதல் சரணத்தில் கூறப்பட்ட சொற்களின் உண்மையான நோக்கமென்ன, அவைகளுக்கு இங்கு கூறப்பட்டுள்ள பொருள் சரியானதா என தீர்மானமாக உரைத்தல் இயலாததொன்று. இந்த சரணத்தின் பொருளை வேறு விதமாகவும் கூறலாம். எனவே இங்கு கூறிய பொருள் சரியல்லவென்று யாருக்காவது தோன்றினால் அதற்காக என்னை மன்னிக்கவும்.

இரண்டாக்க - குடும்பத்தினைப் பிரிக்க

Top


Updated on 17 Feb 2009

Monday, February 16, 2009

தியாகராஜ கிருதி - நளின லோசன - ராகம் மத்4யமாவதி - Nalina Lochana - Raga Madhyamavati

பல்லவி
நளின லோசன நின்னு கா3க அன்யுல 1நம்மி
நர ஜன்மமீடே3ருனா

அனுபல்லவி
ஜலஜாப்த குல பூ4ஷண ஸு-பா4ஷண
ஸஜ்ஜன போஷண ஜனக ஸுதா ரமண (ந)

சரணம்
சரணம் 1
2கொங்க3வண்டி த்4யானமு ஜேஸிதே தன
கோரிக கொன-ஸாகு3னா
3தொ3ங்க3 மக3னி4க்தி மீர நம்மிதே மஞ்சி
த்3ரோவ ஜூப நேர்சுனா
43ங்க3 லோனி ஒட3னு நம்மி ப4
ஸாக3ரமு தா3ட வச்சுனா
5நங்க3 நாசுல 61ரணமனுட சேத
7அனங்கு3டு3 ஞானோபதே31மு ஜேஸுனா (ந)


சரணம் 2
பரம வந்த்4யகு பாலு பெருகு3 போஸிதே
சண்டி பாலு கலுக3 நேர்சுனா
நெர த4னமுலு 8தா3யாது3லகிச்சிதே
நெனரு மாட கல்கு3னா
எருவு வேஸி9யூஸர பூ4மி வித்திதே-
நேமைன ப2லிஞ்சுனா
வரமைன பேரு கலுகு3 103ங்க3-ராவிகி
வந்த3னமொனரிஞ்சிதே ப்3ரோவ நேர்சுனா (ந)


சரணம் 3
ஸொக3ஸைன 11பூ3ருகு3லனு பெஞ்சிதே
ஸு-ரஸ ப2லமுலிச்சுனா
பா4க்3யமு க312திருமஞ்ஜன விப4வமு
13பரிசாரகுலகப்3பு3னா
ராக3 லோப4முலதோ தபமு ஜேஸிதே
பர க3தி கலுக3 நேர்சுனா
த்யாக3ராஜ ஸன்னுத ஸத்3-கு3
ஸத்ய ஸ்வரூப நிர்விகார பராத்பர (ந)


பொருள் - சுருக்கம்
கமலக்கண்ணா! பரிதி குலத்தின் அணிகலனே! இனிய சொல்லோனே! நல்லோரைப் பேணுவோனே! சனகன் மகள் கேள்வா! தியாகராசனால் போற்றப் பெற்றோனே! நற்குணத்தோனே! மெய்யுருவத்தோனே! மாற்றமற்றோனே! பராபரனே!
    உன்னையன்றி மற்றவரை நம்பி மனிதப்பிறவி யீடேறுமா?
  • நாரை போன்ற தியானம் செய்தால், தனது கோரிக்கை நிறைவேறுமா?

  • கள்ளப் புருடனை மிக்கு பற்றுடன் நம்ப, நல்வழி காட்ட நேருமா?

  • கங்கையிலுள்ள ஓடத்தை நம்பி, பிறவிக் கடலைத் தாண்டலாகுமா?

  • பாசாங்காக, சரணமென்றவுடன், அனங்கனா ஞானோபதேசம் செய்வான்?

  • முற்றும் வந்திக்கு பாலும் தயிரும் ஊட்டினால், தாய்ப்பால் சுரக்க நேருமா?

  • மிக்கு செல்வம் பங்காளிகளுக்கு ஈய்ந்தாலும், கனிவான சொல் கிடைக்குமா?

  • எருவிட்டு, உவர் நிலத்தில் விதைத்தால், ஏதும் விளையுமா?

  • சிறந்த பெயருடைய, பூவரசத்திற்கு வந்தனம் செய்தால், அருள் புரியுமா?

  • சொகுசான இலவமரத்தினை வளர்த்தால், சாறு நிறைப் பழங்கள் தருமா?

  • பேறு நிறை, திருமஞ்சன விபவம், ஏவலாளிகளுக்கு நண்ணுமா?

  • பற்று மற்றும் கஞ்சத்தனங்களுடன் தவமியற்ற, பர கதி கிடைக்க நேருமா?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நளின/ லோசன/ நின்னு/ கா3க/ அன்யுல/ நம்மி/
கமல/ கண்ணா/ உன்னை/ யன்றி/ மற்றவரை/ நம்பி/

நர/ ஜன்மமு/-ஈடே3ருனா/
மனித/ பிறவி/ யீடேறுமா/


அனுபல்லவி
ஜலஜ/-ஆப்த/ குல/ பூ4ஷண/ ஸு-பா4ஷண/
கமல/ நண்பன் (பரிதி)/ குலத்தின்/ அணிகலனே/ இனிய சொல்லோனே/

ஸஜ்ஜன/ போஷண/ ஜனக/ ஸுதா/ ரமண/ (ந)
நல்லோரை/ பேணுவோனே/ சனகன்/ மகள்/ கேள்வா/


சரணம்
சரணம் 1
கொங்க3வண்டி/ த்4யானமு/ ஜேஸிதே/ தன/
நாரை போன்ற/ தியானம்/ செய்தால்/ தனது/

கோரிக/ கொன-ஸாகு3னா/
கோரிக்கை/ நிறைவேறுமா/

தொ3ங்க3/ மக3னி/ ப4க்தி/ மீர/ நம்மிதே/ மஞ்சி/
கள்ள/ புருடனை/ பற்று/ மிக/ நம்ப/ நல்/-

த்3ரோவ/ ஜூப/ நேர்சுனா/
வழி/ காட்ட/ நேருமா/

3ங்க3/ லோனி/ ஒட3னு/ நம்மி/ ப4வ/
கங்கையில் (உள்ள)/ ஓடத்தை/ நம்பி/ பிறவி/

ஸாக3ரமு/ தா3ட/ வச்சுனா/
கடலை/ தாண்டல்/ ஆகுமா/

நங்க3 நாசுல/ ஸ1ரணமு/-அனுட/ சேத/
பாசாங்காக/ சரணம்/ என்ற/ உடன்/

அனங்கு3டு3/ ஞான/-உபதே31மு/ ஜேஸுனா/ (ந)
அனங்கன்/ ஞான/ உபதேசம்/ செய்வானா/


சரணம் 2
பரம/ வந்த்4யகு/ பாலு/ பெருகு3/ போஸிதே/
முற்றும்/ வந்திக்கு/ பாலும்/ தயிரும்/ ஊட்டினால்/

சண்டி/ பாலு/ கலுக3/ நேர்சுனா/
தாய்/ பால்/ சுரக்க/ நேருமா/

நெர/ த4னமுலு/ தா3யாது3லகு/-இச்சிதே/
மிக்கு/ செல்வம்/ பங்காளிகளுக்கு/ ஈய்ந்தாலும்/

நெனரு/ மாட/ கல்கு3னா/
கனிவான/ சொல்/ கிடைக்குமா/

எருவு/ வேஸி/-ஊஸர/ பூ4மி/ வித்திதே/
எருவு/ இட்டு/ உவர்/ நிலத்தில்/ விதைத்தால்/

ஏமைன/ ப2லிஞ்சுனா/
ஏதும்/ விளையுமா/

வரமைன/ பேரு/ கலுகு3/ க3ங்க3-ராவிகி/
சிறந்த/ பெயர்/ உடைய/ பூவரசத்திற்கு/

வந்த3னமு/-ஒனரிஞ்சிதே/ ப்3ரோவ/ நேர்சுனா/ (ந)
வந்தனம்/ செய்தால்/ அருள்/ புரியுமா/


சரணம் 3
ஸொக3ஸைன/ பூ3ருகு3லனு/ பெஞ்சிதே/
சொகுசான/ இலவமரத்தினை/ வளர்த்தால்/

ஸு-ரஸ/ ப2லமுலு/-இச்சுனா/
சாறு நிறை/ பழங்கள்/ தருமா/

பா4க்3யமு/ க3ல/ திருமஞ்ஜன/ விப4வமு/
பேறு/ நிறை/ திருமஞ்சன/ விபவம்/

பரிசாரகுலகு/-அப்3பு3னா/
ஏவலாளிகளுக்கு/ நண்ணுமா/

ராக3/ லோப4முலதோ/ தபமு/ ஜேஸிதே/
பற்று (மற்றும்)/ கஞ்சத்தனங்களுடன்/ தவம்/ இயற்ற/

பர/ க3தி/ கலுக3/ நேர்சுனா/
பர/ கதி/ கிடைக்க/ நேருமா/

த்யாக3ராஜ/ ஸன்னுத/ ஸத்3-கு3ண/
தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/ நற்குணத்தோனே/

ஸத்ய/ ஸ்வரூப/ நிர்விகார/ பராத்பர/ (ந)
மெய்/ உருவத்தோனே/ மாற்றமற்றோனே/ பராபரனே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

1 - நம்மி - நம்ம

6 - 1ரணமனுட - ஸ1ரணனுட

9 - ஊஸர பூ4மி - ஊஷர பூ4மி : 'ஊஸர' என்பது 'ஊஷர' என்ற வடமொழி சொல்லின் தெலுங்கு திரிபு.

13 - பரிசாரகுலகப்3பு3னா - பரிசாரகுலப்3பு3னா : 'பரிசாரகுலகப்3பு3னா' என்பதுதான் சரியாகும்

Top

மேற்கோள்கள்

விளக்கம்

2 - கொங்க3வண்டி த்4யானமு - நாரை, மீன் பிடிக்கவேண்டி, அசையாமல் நீரில் நிற்கின்றது. அப்படி சுயநலத்திற்காகவும், வெளியுலகுக்காகவும் தியானிப்பதனால் தனது நிசமான கோரிக்கைகள் எங்ஙனம் ஈடேறும் என்று தியாகராஜர் கேட்கிறார்.

3 - தொ3ங்க3 மக3னி - தெலுங்கில் 'தொ3ங்க3' என்ற சொல்லுக்கு 'திருடன்' என்று பொருள். இதனை வைத்து, சில புத்தகங்களில் 'திருட்டுத் தொழிலுடைய கணவன்' என்ற பொருள் கொள்ளப் பட்டுள்ளது. ஆனால் 'தொ3ங்க3 மக3டு3' என சேர்த்துத்தான் பொருள் கொள்ளவேண்டும். 'தொ3ங்க3 மக3டு3' என்பதற்கு 'கள்ள புருஷன்' என்று பொருள்.

இந்து மதத்தில் தாம்பத்திய உறவு, பிறவிப்பயனை யடைவதற்கு ஒரு சாதனமாக கருதப்படுகின்றது. 'துர்கா ஸப்த ஸ1தி'யில் (அர்க1லா ஸ்தோத்திரம், செய்யுள் 22) கூறப்படுவதாவது -

"கடினமான பிறவிக்கடலைத் தாண்டுதற்கு, இனியவளும், மனதறிந்து நடப்பவளுமாகிய உயர்ந்த குடும்பத்தில் பிறந்த மனைவியை அருள்வாய் எனக்கு."

அப்படியின்றி, வரம்பு மீறி நடக்கும் பெண்ணுக்கு, நல்வழி, கள்ளப் புருஷன் எங்ஙனம் காட்டமுடியும், என்று தியாகராஜர் கேட்கின்றார்.

Top

4- 3ங்க3 லோனி ஒட3 - 'ராம' எனும் நாமம் பிரணவத்திற்கு ஈடான, பிறவிக்கடலைத் தாண்டுவிக்கும் 'ஓடம்' (தாரகம்) எனப்படும். எனவே, கங்கையிலுள்ள ஓடம், எப்படி பிறவிக் கடலைத் தாண்டுவிக்கும் என்று தியாகராஜர் கேட்கின்றார்.

5 - நங்க3 நாசுல - இந்த தெலுங்கு சொல்லுக்கு 'ஒன்றும் அறியாதது போன்று பாசாங்கு செய்தல்' என்று பொருள். புத்தகங்களில் கொடுக்கப்பட்டுள்ள 'தீய பெண்மணி' மற்றும் 'விலைமாது' என்ற பொருட்கள் சரியாகாது.

Top

7 - அனங்கு3டு3 ஞானோபதே31மு ஜேஸுனா - மெய்யறிவு பெறுதற்கு குருவின் கருணை இன்றியமையாதது. தகுந்த சீடனுக்கே குரு உபதேசம் செய்வார். அங்ஙனமின்றி, சீடன் பாசாங்கு செய்தால், குருவின் கருணை கிடைக்காது. அதனால், ' அனங்கனா (காமன்) அவனுக்கு (சீடனுக்கு) உபதேசம் செய்வான்?' என்று தியாகராஜர் கேலியாகக் கேட்கின்றார்.

8 - தா3யாது3லகிச்சிதே - தன்னுடைய பங்காளிகளிடம் தியாகராஜர் மிகவும் துயரம் அனுபவித்ததனை பல கீர்த்தனைகளில் குறிப்பிடுகின்றார்.

Top

10 - 3ங்க3-ராவி - 'ராவி' என்ற தெலுங்கு சொல்லுக்கு 'அரச மரம்' என்று பொருள். 'ராவி' என்று வழங்கும் மற்றொரு மரம் 'க3ங்க3 ராவி'; தமிழில் இதனை 'பூவரசம்' என்று அழைப்பர். 'அரச மரம்' இந்து மதத்தினருக்கு மிகவும் உயர்ந்ததொன்று. அம்மரத்தினை, நமது பெண்டிர் பூசி்த்து, 'ஸௌமாங்கல்யம்' எனப்படும் தாம்பத்தியத்தின் சீரும் சிறப்பும் அடைவதாக நம்மவர் கருதுவர். ஆனால் 'பூவரச மரம்' எதற்கும் பயன்படாததோர் மரமாகும். பெயர் மட்டும் உயர்ந்ததாக இருந்தால், அதனால் பயன் கிடைக்காது என்பதற்கு, 'க3ங்க3 ராவி' ஒர் உதாரணம். இதனைத் தான் தியாகராஜர் சுட்டுகின்றார்.

அரச மரத்தினைப் பற்றி கீதையில் (அத்தியாயம் 10) கண்ணன் கூறுவது - "மரங்களில் நான் அரச மரம்."

மேலும், அத்தியாயம் 15-லும் (செய்யுள் 1) மற்றும் கடோபநிடதத்திலும் (II.iii.1) சம்சாரத்தினை தலைகீழாக (வேர் மேலும் கிளைகள் கீழும்) நிற்கும் அரசமரமென்று உதாரணம் கூறப்பட்டுள்ளது.

அரச மரத்தினைப் பற்றி மேலும் அறிய நோக்கவும்

Top

11 - பூ3ருகு3லனு - இலவமரத்திற்கு பழம் கிடையாது. தமிழில் 'இலவு காத்த கிளி' என்றொரு வழக்குண்டு. இலவங்காய் பழுக்குமென ஒர் கிளி காத்திருந்ததாம். அதனைத்தான் தியாகராஜர் குறிப்பிடுகின்றார். 'தவறானவர்களை அண்டினால் பயன் கிடைக்காது' என்று பல்லவியில் கூறப்பட்டதற்கு இஃதோர் விளக்கமாகும்.

12 - திருமஞ்ஜன விப4வமு - நாடகம் பார்ப்பவர்களுக்குக் கிடைக்கும் ஆனந்தம் நடிகருக்குக் கிடையாது. ஓர் தொழில் போன்று, இறைவனுக்குத் திருமஞ்சனம் செய்விப்போரைவிட, அந்த காட்சியினைக் காண்பவருக்குத்தான் பேறு என்று தியாகராஜர் கூறுகின்றார்.

வந்தி - மலடி

விபவம் - மகத்துவம்

ஏவலாளிகள் - திருமஞ்சன நீராட்டுவோர் முதலானோர்

பர கதி - மோக்கம்
Top


Updated on 16 Feb 2009

Sunday, February 15, 2009

தியாகராஜ கிருதி - நகு3 மோமு க3ல வானி - ராகம் மத்4யமாவதி - Nagu Momu Galavaani - Raga Madhyamavati

பல்லவி
நகு3 மோமு க3ல வானி நா மனோ-ஹருனி
ஜக3மேலு ஸூ1ருனி ஜானகீ வருனி

சரணம்
சரணம் 1
தே3வாதி3 தே3வுனி தி3வ்ய ஸுந்த3ருனி
ஸ்ரீ 1வாஸுதே3வுனி ஸீதா ராக4வுனி (நகு3)


சரணம் 2
ஸுக்3ஞான நிதி4னி ஸோம ஸூர்ய லோசனுனி
அக்3ஞான தமமுனு அணசு பா4ஸ்கருனி (நகு3)


சரணம் 3
நிர்மலாகாருனி நிகி2லாக4 ஹருனி
24ர்மாதி3 மோக்ஷம்பு33ய சேயு க4னுனி (நகு3)


சரணம் 4
போ34தோ பலுமாரு பூஜிஞ்சி நே-
நாராதி4ந்து ஸ்ரீ த்யாக3ராஜ ஸன்னுதுனி (நகு3)


பொருள் - சுருக்கம்
  • புன்னகை வதனமுடைத்தோனை,

  • எனதுள்ளம் கவர்ந்தோனை,

  • புவியாளும் சூரனை,

  • சானகி மணாளனை,

  • வானோர் முதலானோருக்கிறைவனை,

  • தெய்வீக சுந்தரனை,

  • வாசுதேவனை,

  • சீதாராகவனை,

  • மெய்யறிவுக் களஞ்சியத்தினை,

  • மதி, பரிதி கண்களோனை,

  • அறிவீனமெனும் இருளினை யடக்கும் பகலவனை,

  • மாசற்ற வடிவினனை,

  • அனைத்து பாவங்களைக் களைவோனை,

  • அறம் முதலாக வீட்டினை யருளும் மேலோனை,

  • தியாகராசனால் சிறக்க போற்றப் பெற்றோனை,

தெரிவுடன், எவ்வமயமும் தொழுது, நான் வழிபடுவேனே!


பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நகு3/ மோமு/ க3ல வானி/ நா/ மனோ/-ஹருனி/
புன்னகை/ வதனம்/ உடைத்தோனை/ எனது/ உள்ளம்/ கவர்ந்தோனை/

ஜக3மு/-ஏலு/ ஸூ1ருனி/ ஜானகீ/ வருனி/
புவி/ யாளும்/ சூரனை/ சானகி/ மணாளனை/


சரணம்
சரணம் 1
தே3வ/-ஆதி3/ தே3வுனி/ தி3வ்ய/ ஸுந்த3ருனி/
வானோர்/ முதலானோருக்கு/ இறைவனை/ தெய்வீக/ சுந்தரனை/

ஸ்ரீ வாஸுதே3வுனி/ ஸீதா/ ராக4வுனி/ (நகு3)
ஸ்ரீ வாசுதேவனை/ சீதா/ ராகவனை/


சரணம் 2
ஸுக்3ஞான/ நிதி4னி/ ஸோம/ ஸூர்ய/ லோசனுனி/
மெய்யறிவு/ களஞ்சியத்தினை/ மதி/ பரிதி/ கண்களோனை/

அக்3ஞான/ தமமுனு/ அணசு/ பா4ஸ்கருனி/ (நகு3)
அறிவீனமெனும்/ இருளினை/ யடக்கும்/ பகலவனை/


சரணம் 3
நிர்மல/-ஆகாருனி/ நிகி2ல/-அக4/ ஹருனி/
மாசற்ற/ வடிவினனை/ அனைத்து/ பாவங்களை/ களைவோனை/

4ர்ம/-ஆதி3/ மோக்ஷம்பு3/ த3ய சேயு/ க4னுனி/ (நகு3)
அறம்/ முதலாக/ வீட்டினை/ யருளும்/ மேலோனை/


சரணம் 4
போ34தோ/ பலுமாரு/ பூஜிஞ்சி/ நேனு/-
தெரிவுடன்/ எவ்வமயமும்/ தொழுது/ நான்/

ஆராதி4ந்து/ ஸ்ரீ த்யாக3ராஜ/ ஸன்னுதுனி/ (நகு3)
வழிபடுவேனே/ ஸ்ரீ தியாகராசனால்/ சிறக்க போற்றப் பெற்றோனை/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்
2 - 4ர்மாதி3 மோக்ஷம்பு3 - அறம் முதலாக - அறம், பொருள், இன்பம், வீடு

விளக்கம்
1 - வாஸுதே3வுனி - யாவரின் உள்ளியக்கமாகவுள்ள பரம்பொருள்.

இப்பாடல் இயற்றப்பெற்ற முறையினை அனுசரித்து, பல்லவி மற்றும் சரணங்கள் 1 - 3 ஆகியவற்றினை, சரணம் 4-உடன் இணைத்தே பாடவேண்டும். அன்றேல் பல்லவி மற்றும் சரணங்கள் 1 - 3 பொருள் முற்றுப் பெறாது.

Top


Updated on 15 Feb 2009

Saturday, February 14, 2009

தியாகராஜ கிருதி - தே3வ ஸ்ரீ தபஸ்தீர்த2 - ராகம் மத்4யமாவதி - Deva Sri Tapasteertha - Raga Madhyamavati

பல்லவி
தே3வ ஸ்ரீ 1தபஸ்தீர்த2 புர நிவாஸ
தே3ஹி ப4க்திமது4னா

அனுபல்லவி
பாவன ப்ரவ்ரு2த்34 ஸ்ரீமதி
ஹ்ரு2த்34வன ஸகல ஜக33வன ஸ்ரீ மஹா (தே3வ)

சரணம்
சரணம் 1
2பாஸ1 ஹஸ்த க3ணேஸ1 ஹரண
3பலாஸ1னாரி நுதேஸ1 வரத3
குஸே11யாரி த4ராஸ1ரேப4
ம்ரு2கே31 4ஸப்த ரு2ஷீஸ1 தே3வ (தே3வ)


சரணம் 2
5நீல க3 ஸுர ஜால நுத நத
பால கி3ரீஸ1 6விஸா1ல பா2
க்ரு2பாலவால ஸு-ஸீ1ல கௌ3ரீ
லோல ஸி1வ மாம் பாலயாத்3பு4த (தே3வ)


சரணம் 3
நாக3 பூஜித 7நாக33னுஜ
ஹராக3 மர்த38 வாக3தி4
வினுதாக3ணித கு3ண ராக3 மத3
தூ3ராக4 ஹர ஸ்ரீ த்யாக3ராஜ (தே3வ)


பொருள் - சுருக்கம்
  • தேவா! திருத்தவத்துறை உறைவோனே!

  • புனித, வல்லமை மிக்க, திருமதி இதயத்தில் உறைவோனே! பல்லுலகையும் காப்போனே! மகாதேவா!

  • சுருக்குக் கயிற்றுப் படை ஈசனை வென்றோனே! ஊனுண்போரின் பகைவனால் போற்றப் பெற்ற ஈசனே! வரதா! கமலப் பகையை யணிவோனே! அரக்கரெனும் களிற்றினுக்குச் சிங்கமே! ஏழிருடியர் இறைவா! தேவதேவா!

  • நீலகண்டனே! வானோரால் போற்றப் பெற்றோனே! பணிவோரைக் காக்கும் மலையீசா! அகன்ற நெற்றியோனே! கருணைக் கடலே! நற்குணத்தோனே! கௌரி மணாளனாகிய சிவனே! அற்புதத் தேவா!

  • அரவு தொழும், கரியரக்கனை அழித்தோனே! மலையை (அரவினை) நசித்தோன் மற்றும் நாவரசனால் போற்றப் பெற்றோனே! எண்ணிறந்த குணங்களோனே! பற்று மற்றும் செருக்கினை விலக்கியோனே! வினையறுப்போனே! இத்தியாகராசனின் தேவா!

    • அருள்வாய், பக்தியினை இவ்வமயமே;

    • என்னைக் காப்பாய்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
தே3வ/ ஸ்ரீ தபஸ்தீர்த2 புர/ நிவாஸ/
தேவா/ திருத்தவத்துறை/ உறைவோனே/

தே3ஹி/ ப4க்திம்/-அது4னா/
அருள்வாய்/ பக்தியினை/ இவ்வமயமே/


அனுபல்லவி
பாவன/ ப்ரவ்ரு2த்34/ ஸ்ரீமதி/
புனித/ வல்லமை மிக்க/ திருமதி/

ஹ்ரு2த்3/-ப4வன/ ஸகல ஜக3த்3/-அவன/ ஸ்ரீ மஹா/ (தே3வ)
இதயத்தில்/ உறைவோனே/ பல்லுலகையும்/ காப்போனே/ ஸ்ரீமகா/ தேவா!


சரணம்
சரணம் 1
பாஸ1 ஹஸ்த/ க3ண/-ஈஸ1/ ஹரண/
சுருக்குக் கயிற்றுப்/ படை/ ஈசனை/ வென்றோனே/

பல/-அஸ1ன/-அரி/ நுத/-ஈஸ1/ வரத3/
ஊன்/ உண்போரின்/ பகைவனால்/ போற்றப் பெற்ற/ ஈசனே/ வரதா/

குஸே11ய/-அரி/ த4ர/-ஆஸ1ர/-இப4/
கமல/ பகையை/ அணிவோனே/ அரக்கரெனும்/ களிற்றினுக்கு/

ம்ரு23-ஈஸ1/ ஸப்த/ ரு2ஷி/-ஈஸ1/ தே3வ/ (தே3வ)
சிங்கமே/ ஏழு/ இருடியர்/ இறைவா/ தேவ/ தேவா!


சரணம் 2
நீல/ க3ள/ ஸுர ஜால/ நுத/ நத/
நீல/ கண்டனே/ வானோரால்/ போற்றப் பெற்றோனே/ பணிவோரை/

பால/ கி3ரி/-ஈஸ1/ விஸா1ல/ பா2ல/
காக்கும்/ மலை/ ஈசா/ அகன்ற/ நெற்றியோனே/

க்ரு2பா/-ஆலவால/ ஸு-ஸீ1ல/ கௌ3ரீ/
கருணை/ கடலே/ நற்குணத்தோனே/ கௌரி/

லோல/ ஸி1வ/ மாம்/ பாலய/-அத்3பு4த/ (தே3வ)
மணாளனாகிய/ சிவனே/ என்னை/ காப்பாய்/ அற்புத/ தேவா!


சரணம் 3
நாக3/ பூஜித/ நாக3/ த3னுஜ/
அரவு/ தொழும்/ கரி/ அரக்கனை/

ஹர/-அக3/ மர்த3ன/ வாக்3/-அதி4ப/
அழித்தோனே/ மலையை (அரவினை)/ நசித்தோன் (மற்றும்)/ நா/ அரசனால்/

வினுத/-அக3ணித/ கு3ண/ ராக3/ மத3/
போற்றப் பெற்றோனே/ எண்ணிறந்த/ குணங்களோனே/ பற்று (மற்றும்)/ செருக்கினை/

தூ3ர/-அக4/ ஹர/ ஸ்ரீ த்யாக3ராஜ/ (தே3வ)
விலக்கியோனே/ வினை/ யறுப்போனே/ ஸ்ரீ தியாகராசனின்/ தேவா


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்
1 - தபஸ்தீர்த2 புர - திருத்தவத்துறை - இன்றைய லால்குடி.

2 - பாஸ1 ஹஸ்த க3ணேஸ1 ஹரண - சுருக்குக் கயிற்றுப் படை ஈசனை வென்றோனே - சுருக்குக் கயிற்றுப் படை - எம தூதர்கள் - அவர்தமீசன் - நமன் - இது மார்க்கண்டேயனைக் காப்பாற்ற சிவன் நமனை காலால் உதைத்த சம்பவத்தினைக் குறிக்கும். மார்க்கண்டேயன்.

4 - ஸப்த ரு2ஷீஸ1 - ஏழிருடியர் இறைவன் - திருத்தவத்துறை அப்பனின் பெயர் - ஏழு ரிஷிகள் - அத்ரி, ஆங்கீ3ரஸ, கௌ3தம, ஜமத3க்3னி, ப4ரத்3வாஜ, வஸி1ஷ்ட, விஸ்1வாமித்ர - (அல்லது) - அகத்தியர், ஆங்கீ3ரஸ, கௌ3தம, காஸ்1யப, புலஸ்த்ய, மார்க்கண்டே3ய, வஸி1ஷ்ட ஆகியோர் (இன்னும் பல வேறுபாடுகளும் உண்டு)

Top

7 - நாக33னுஜ ஹர - கரியரக்கன் - சிவனால் கொல்லப்பட்ட கரி முக அரக்கன்.

8 - அக3 மர்த3 - மலையை நசித்தோன் - இந்திரன் - வால்மீகி ராமாயணம், சுந்தர காண்டத்தில் (அத்தியாயம் 1) - மைனாக மலை தனது கதையினை அனுமனுக்கு வருணிப்பதனை நோக்கவும்

8 - அக3 மர்த3 - அரவினை நசித்தோன் - கண்ணன் - யமுனை நதியில் காளியன் என்ற பாம்பின் தலையின் மீது கண்ணன் நர்த்தனம் செய்ததனைக் குறிக்கும். இந்த தலத்தினில் விஷ்ணு சிவனை வழிபட்டு ஆழி (சக்கராயுதம்) பெற்றதாக தல புராணம் கூறும். எனவே இதுவும் இவ்விடத்தினில் பொருந்தும்

Top

விளக்கம்
2 - பாஸ1 ஹஸ்த க3ணேஸ1 ஹரண - கணபதியும் தனது கையினில் பாசம் வைத்திருக்கின்றார். ஆனால் அடுத்துவரும் 'ஹரண' (வென்ற அல்லது அழித்த) என்ற சொல் கணபதிக்குப் பொருந்தாது.

3 - பலாஸ1 - 'பல' என்ற சொல்லுக்கு 'ஊன்' என்றும் 'இறைச்சி'யென்றும் பொருள். இவ்விடத்தில் ஊனுண்ணும் அரக்கரைக் குறிக்கும் - அரக்கரின் பகைவன் - இந்திரன்

5 - நீல க3 - நீல கண்டன் - ஆலாகால விடமுண்டு அதை தொண்டையிலேயே இருத்திக்கொண்டதனால் சிவனுக்கு அப்பெயர்

Top

6 - விஸா1ல பா2 - சிவன் முக்கண்ணன் ஆகையால் அகன்ற நெற்றியுடையோன்

திருமதி - திருத்தவத்துறை அம்மையின் பெயர்

கமலப் பகை - மதி

மலையீசன் - சிவன்

அரவு தொழும் - அரவு - சேடன்

நாவரசன் - பிரமன்

Top


Updated on 15 Feb 2009

Friday, February 13, 2009

தியாகராஜ கிருதி - எவரிச்சிரிரா - ராகம் மத்4யமாவதி - Evaricchiriraa - Raga Madhyamavati

பல்லவி
எவரிச்சிரிரா ஸ11சாபமுலு
நீகின குலாப்3தி4 சந்த்3

அனுபல்லவி
அவதரிஞ்சு வேளனுண்டெ3னோ லேக
அவனிகேகி3 ஆர்ஜிஞ்சிதிவோ ஸ்ரீ ராம நீ(கெவ)

சரணம்
2ஒகடேஸி பதி3 நூரை வெய்யை
3செகபிகலாடி31த்ருலனணசெனட
விகலுனி காகினி ப்3ரோவ 4த்ரி-மூர்துலு
வெனுக 5தீஸிரட
ஸகல நதீ3 பதிகை 6த்3ருமகுல்யுல
ஸம்ஹரிஞ்செனட
7ப்ரகட கீர்தி கல்கி3 கோத3ண்ட3
பாணி ஸ்ரீ 8த்யாக3ராஜ வினுத நீ(கெவ)


பொருள் - சுருக்கம்
பரிதி குலக்கடலின் மதியே! ஓ இராமா! உலகறிந்த புகழுடைத்த கோதண்டத்தினை ஏந்துவோனே! தியாகராசனால் போற்றப் பெற்றோனே!
  • உனக்கு எவரளித்தனரய்யா, வில்லம்புகள்?

  • அவதரித்த போழ்தே யிருந்தனவோ யன்றி அவனிக்கு வந்தபின் தேட்டினையோ ?

    • ஒன்றெய்ய, பத்து, நூறாகி, ஆயிரமாகி, திகைக்க வைத்து, எதிரிகளை அடக்கினவாம்;

    • ஒற்றைக் கண், காகத்தினைக் காக்க மும்மூர்த்திகளும் பின்வாங்கினராம்;

    • அனைத்து நதிகளின் தலைவனுக்காக துருமகுலத்தினரை யழித்தனவாம்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
எவரு/-இச்சிரிரா/ ஸ1ர/ சாபமுலு/
எவர/ ளித்தனரய்யா/ அம்பு (மற்றும்)/ விற்கள்/

நீகு/-இன/ குல/-அப்3தி4/ சந்த்3ர/
உனக்கு/ பரிதி/ குல/ கடலின்/ மதியே/


அனுபல்லவி
அவதரிஞ்சு/ வேள/-உண்டெ3னோ/ லேக/
அவதரித்த/ போழ்தே/ யிருந்தனவோ/ யன்றி/

அவனிகி/-ஏகி3/ ஆர்ஜிஞ்சிதிவோ/ ஸ்ரீ ராம/ நீகு/-(எவ)
அவனிக்கு/ வந்தபின்/ தேட்டினையோ/ ஸ்ரீ இராமா/ உனக்கு.../


சரணம்
ஒகடி/-ஏஸி/ பதி3/ நூரை/ வெய்யை/
ஒன்று/ எய்ய/ பத்து/ நூறாகி/ ஆயிரமாகி/

செகபிகலாடி3/ ஸ1த்ருலனு/-அணசெனட/
திகைக்க வைத்து/ எதிரிகளை/ அடக்கினவாம்/

விகலுனி/ காகினி/ ப்3ரோவ/ த்ரி-மூர்துலு/
ஒற்றைக் கண்/ காகத்தினை/ காக்க/ மும்மூர்த்திகளும்/

வெனுக தீஸிரட/
பின்வாங்கினராம்/

ஸகல/ நதீ3/ பதிகை/ த்3ருமகுல்யுல/
அனைத்து/ நதிகளின்/ தலைவனுக்காக/ துருமகுலத்தினரை/

ஸம்ஹரிஞ்செனட/
யழித்தனவாம்/

ப்ரகட/ கீர்தி/ கல்கி3ன/ கோத3ண்ட3/
உலகறிந்த/ புகழ்/ உடைத்த/ கோதண்டத்தினை/

பாணி/ ஸ்ரீ த்யாக3ராஜ/ வினுத/ நீகு/-(எவ)
ஏந்துவோனே/ ஸ்ரீ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/ உனக்கு.../


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - சாபமுலு - சாபமு

2 - ஒகடேஸி - ஒகடேஸின

3 - செகபிகலாடி3 - எல்லா புத்தகங்களிலும் 'சகபகலாடி3' என்று கொடுக்கப்பட்டுள்ளது. தெலுங்கில், 'சிகபிக', 'செகபிக' என்று இரண்டு சொற்கள்தான் உள்ளன. 'சிகபிக' என்பதற்கு 'சிதறடித்தல்' என்றும், 'செகபிக' என்பதற்கு 'துன்புறுத்த' என்றும் பொருளாகும். 'செகபிகலாடி3' என்ற சொல்லுக்கு 'துன்புறுத்தி' என பொருளாகும். எனவே 'செகபிகலாடி3' இங்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது. 'துன்புறுத்தி' என்பதற்கு பதிலாக 'திகைக்க வைத்து' என்ற பொருள் கொள்ளப்பட்டது.

5 - தீஸிரட - தீஸினாரட

8 - த்யாக3ராஜ வினுத - த்யாக3ராஜ நுத

Top

மேற்கோள்கள்
2 - ஒகடேஸி பதி3 நூரை வெய்யை - ஓரம்பெய்ய, பத்து, நூறாகி, ஆயிராமாகி - வால்மீகி ராமாயணம், ஆரண்ய காண்டம், அத்தியாயம் 31-ல், ஸுபாஹுவைக் கொன்று, மாரீசனை துரத்தி கடலில் புகச்செய்த ராம பாணத்தினைப் பற்றி் அகம்பனன் ராவணனிடம் பகர்வதனை நோக்கவும்.

வால்மீகி ராமாயணம், யுத்த காண்டம், அத்தியாயம் 93-ல் - ராமன் புரிந்த யுத்தத்தினைப் பற்றி் விவரணையை நோக்கவும்.

"மேற்கூறிய அரக்கர்கள், சில சமயம், ஆயிரமாயிரம் ராமர்களை போர்க்களத்தினில் கண்டனர்; பிற சமயங்களில் ஒரு ராமனையே கண்டனர்." (செய்யுள் 27)

"பகலின் எட்டிலொரு பகுதி நேரத்தினில் (ஒன்றரை மணி), காற்று வேகத்தில் செல்லும் பல விதமான தேர்களையும், பதினெட்டாயிரம் விரைந்து செல்லும் யானைகளையும், பதினாலாயிரம் குதிரைகளையும் , குதிரையேறுவோரையும், இரண்டு லக்ஷம் காற்படையாளிகளயும் கொண்ட, தன் விருப்பப்படி உருமாறும், அரக்கர்களின் படையினை, ராமன் ஒருவனாகவே, தனது தீப்பிழம்புகள் போன்ற, அம்புகளினால் அழித்தான்." (செய்யுள் 31-33)

4 - த்ரி-மூர்துலு - மும்மூர்த்திகள் - வால்மீகி ராமாயணம், ஸுந்தர காண்டம், அத்தியாயம் 38-ல் - காக்கையசுரனைப் பற்றி கூறப்பட்டது -
"இராமனின் பாணத்தினால் துரத்தப்பட்ட காக்கை, பல இடங்களில் அடைக்கலம் தேடி கிடைக்காது, பிரபஞ்சம் முழுவதினியைம் சுற்றினான். இங்ஙனம், மூவுலகங்களிலும் திரிந்தும், தன்னுடை தந்தையாலும் (இந்திரன்), தலைசிறந்த இருடிகளாலும் கைவிடப்பட்டு, கடைசியில் ராமனிடமே சரண் புகுந்தான்." (செய்யுள் 31, 32)

Top

6 - த்3ருமகுல்யுல - துருமகுலத்தோர் - வால்மீகி ராமாயணம், யுத்த காண்டம், அத்தியாயம் 22-ல் கூறப்பட்டது.
பாவிகளும், கொலைகாரர்களும், மிக்கு கொடூரமானவர்களுமான, துருமகுலமெனப்படும் 'மாரு காந்தாரம்' (தற்போதைய ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மார்வார், பிகானீர்) பகுதி வாழும், ஆபீ4ரஸ் (AbhIras) எனப்படுவோரை, ராமன் ஏவிய பிராமாத்திரம் அழித்தது. இந்த பிரமாத்திரத்தினை, முதலில், கடலில் பாலம் அமைக்க உதவி செய்யத் தயங்கிய கடலரசனை நோக்கி ராமன் ஏவினான். ஆனால், கடலரசன் ராமனிடம் சரணடைந்து, அந்த அத்திரத்தினை மேற்கூறிய பகுதியில் செலுத்துமாறு வேண்டினான்.

ஆபீ4ரஸ் (AbhIras) பற்றி மேற்கொண்டு விவரம் அறிய பாகவத புராணம், 2-வது புத்தகம், 4-வது அத்தியாயம் (செய்யுள் 18) நோக்கவும்.
Top

விளக்கம்
7 - ப்ரகட கீர்தி கல்கி3 - உலகறிந்த புகழுடைத்த - இது நேரடியாக ராமனையே குறிக்கலாம். ஆனால், இந்த பாடல் ராமனின் ஆயதங்களைப் புகழந்து கூறுவதனால், இதனை கோதண்டத்திற்கு அடைமொழியாகக் கொள்ளப்பட்டது.

ஒன்றெய்ய - ஓரம்பெய்ய

காகம் - காகாசுரன்

நதிகளுக்குத் தலைவன் - வருணன் - கடலரசன்

அனைத்து நதிகளின் தலைவனுக்காக - கடலரசன் வேண்டுகோளுக்காக
Top


Updated on 14 Feb 2009

Thursday, February 12, 2009

தியாகராஜ கிருதி - அலகலல்லலாட3க3 - மத்4யமாவதி ராகம் - Alakalallalaadaga - Raga Madhyamavati

பல்லவி
அலகலல்லலாட33 கனியா
ராண்முனியெடு பொங்கெ3னோ

அனுபல்லவி
செலுவு மீரக3னு
மாரீசுனி மத3மணசே வேள (அ)

சரணம்
முனி கனு ஸைக3 தெலிஸி ஸி1
4னுவுனு விரிசே ஸமயமுன
த்யாக3ராஜ வினுதுனி மோமுன ரஞ்ஜில்லு (அ)


பொருள் - சுருக்கம்
  • மாரீசனின் செருக்கினை யடக்கும் வேளையிலும்,

  • முனிவரின் கண் சாடையறிந்து, சிவ வில்லினை முறிக்கும் சமயத்திலும்,

தியாகராசனால் போற்றப் பெற்றோனாகிய, இராமனின் முகத்தினில் துலங்கும் சுருளல்கள், எழில் மேலிட, அசைந்தாடக் கண்டு, அவ்வரச முனிவர், விசுவாமித்திரர் எப்படிப் பொங்கினாரோ!


பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
அலகலு/-அல்லலாட33/ கனி/-ஆ/
சுருளல்கள்/ அசைந்தாட/ கண்டு/ அந்த/

ராண்/-முனி/-எடு/ பொங்கெ3னோ/
அரச/ முனிவர்/ எப்படி/ பொங்கினாரோ/


அனுபல்லவி
செலுவு/ மீரக3னு/
எழில்/ மேலிட/

மாரீசுனி/ மத3மு/-அணசே/ வேள/ (அ)
மாரீசனின்/ செருக்கினை/ யடக்கும்/ வேளையில்/ சுருளல்கள்...


சரணம்
முனி/ கனு/ ஸைக3/ தெலிஸி/ ஸி1வ/
முனிவரின்/ கண்/ சாடை/ யறிந்து/ சிவ/

4னுவுனு/ விரிசே/ ஸமயமுன/
வில்லினை/ முறிக்கும்/ சமயத்தில்/

த்யாக3ராஜ/ வினுதுனி/ மோமுன/ ரஞ்ஜில்லு/ (அ)
தியாகராசனால்/ போற்றப் பெற்றோனின்/ முகத்தினில்/ துலங்கும்/ சுருளல்கள்...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்

விளக்கம்
அரச முனிவர் - விசுவாமித்திர முனி

தியாகராசனால் போற்றப் பெற்றோன் - இராமன்.

Top


Updated on 13 Feb 2009

தியாகராஜ கிருதி - அடி3கி3 ஸுக2மு - ராகம் மத்4யமாவதி - Adigi Sukhamu - Raga Madhyamavati

பல்லவி
அடி3கி3 ஸுக2முலெவ்வரனுப4விஞ்சிரிரா
ஆதி3 மூலமா ராம

அனுபல்லவி
ஸட3லனி பாப திமிர கோடி ஸூர்ய
ஸார்வபௌ4ம ஸாரஸாக்ஷ ஸத்3-கு3ண நி(ன்னடி3கி3)

சரணம்
சரணம் 1
ஆஸ்1ரயிஞ்சி வரமடி3கி31ஸீத
அட3விகி போனாயெ

ஆஸ1 ஹரண 2ரக்கஸியிஷ்டமடு33-
நபுடே3 முக்கு போயெ
ஓ ராம நி(ன்னடி3கி3)


சரணம் 2
3வாஸிக3 4நாரத3 மௌனி வரமடு33
வனித ரூபுடா3யெ

ஆஸிஞ்சி 5து3ர்வாஸுட3ன்னமடு33
அபுடே3 மந்த3மாயெ ஓ ராம நி(ன்னடி3கி3)


சரணம் 3
ஸுதுனி வேடு3க ஜூட3 6தே3வகியடு33
7யஸோ13 ஜூட3னாயெ
ஸதுலெல்ல ரதி பி4க்ஷமடு33 வாரி வாரி
8பதுல வீட3னாயெ ஓ ராம நி(ன்னடி3கி3)


சரணம் 4
நீகே த3ய புட்டி ப்3ரோதுவோ ப்3ரோவவோ
நீ கு3ட்டு ப3யலாயெ
ஸாகேத தா4ம ஸ்ரீ த்யாக3ராஜ நுத
ஸ்வாமி ஏடி மாய ஓ ராம நி(ன்னடி3கி3)


பொருள் - சுருக்கம்
ஆதிமூலமே இராமா! அறாத, பாவமெனும் இருள் நீக்கும் கோடி பரிதியே! சார்வபூமனே! கமலக்கண்ணா! நற்குணத்தோனே! அரக்கரையழித்தோனே! சாகேத நகருறையே! தியாகராசனால் போற்றப் பெற்ற இறைவா!
  • உன்னை விழைந்து, சுகத்தினை யெவர் அனுபவித்தனரய்யா?
    • அண்டி, வரம் வேண்டிய சீதை, அடவிக்குப் போகலாயிற்று;

    • அரக்கி விருப்பத்தினை வேண்ட, அப்போழ்தே மூக்கு போனது;

    • புகழ்மிகு நாரத முனி வரம் வேண்ட, வனிதை வடிவினனாகினன்;

    • ஆசைப்பட்டு, துருவாசர் உண்டி வேண்ட, அப்போழ்தே மந்தமாயிற்று;

    • மைந்தனை வேடிக்கை பார்க்க தேவகி விழைய, யசோதை காணலாயிற்று;

    • பெண்டிர் யாவரும் இரதிப்பிச்சை கேட்க, தத்தம் கணவரை வீடலாயிற்று;

  • உனக்கே தயை பிறந்து காப்பாயோ, மாட்டாயோ?

  • உனது இரகசியம் வெளிப்பட்டது;

  • என்ன மாயையிது?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
அடி3கி3/ ஸுக2முலு/-எவ்வரு/-அனுப4விஞ்சிரிரா/
விழைந்து/ சுகத்தினை/ எவர்/ அனுபவித்தனரய்யா/

ஆதி3/ மூலமா/ ராம/
ஆதி/ மூலமே/ இராமா/


அனுபல்லவி
ஸட3லனி/ பாப/ திமிர/ கோடி/ ஸூர்ய/
அறாத/ பாவமெனும்/ இருள் (நீக்கும்)/ கோடி/ பரிதியே/

ஸார்வபௌ4ம/ ஸாரஸ/-அக்ஷ/ ஸத்3-கு3ண/ நின்னு/-(அடி3கி3)
சார்வபூமனே/ கமல/ கண்ணா/ நற்குணத்தோனே/ உன்னை/ விழைந்து...


சரணம்
சரணம் 1
ஆஸ்1ரயிஞ்சி/ வரமு/-அடி3கி3ன/ ஸீத/
அண்டி/ வரம்/ வேண்டிய/ சீதை/

அட3விகி/ போனாயெ/
அடவிக்கு/ போகலாயிற்று/

ஆஸ1/ ஹரண/ ரக்கஸி/-இஷ்டமு/-அடு33/-
அரக்கரை/ யழித்தோனே/ அரக்கி/ விருப்பத்தினை/ வேண்ட/

அபுடே3/ முக்கு/ போயெ/ ஓ ராம/ நின்னு/-(அடி3கி3)
அப்போழ்தே/ மூக்கு/ போனது/; ஓ இராமா/ உன்னை...


சரணம் 2
வாஸிக3/ நாரத3/ மௌனி/ வரமு/-அடு33/
புகழ்மிகு/ நாரத/ முனி/ வரம்/ வேண்ட/

வனித/ ரூபுடா3யெ/
வனிதை/ வடிவினனாகினன்/

ஆஸிஞ்சி/ து3ர்வாஸுடு3/-அன்னமு/-அடு33/
ஆசைப்பட்டு/ துருவாசர்/ உண்டி/ வேண்ட/

அபுடே3/ மந்த3மாயெ/ ஓ ராம/ நின்னு/-(அடி3கி3)
அப்போழ்தே/ மந்தமாயிற்று/ ஓ இராமா/ உன்னை...


சரணம் 3
ஸுதுனி/ வேடு3க/ ஜூட3/ தே3வகி/-அடு33/
மைந்தனை/ வேடிக்கை/ பார்க்க/ தேவகி/ விழைய/

யஸோ13/ ஜூட3னாயெ/
யசோதை/ காணலாயிற்று/

ஸதுலு/-எல்ல/ ரதி/ பி4க்ஷமு/-அடு33/ வாரி வாரி/
பெண்டிர்/ யாவரும்/ இரதி/ பிச்சை/ கேட்க/ தத்தம்/

பதுல/ வீட3னாயெ/ ஓ ராம/ நின்னு/-(அடி3கி3)
கணவரை/ வீடலாயிற்று/ ஓ இராமா/ உன்னை...


சரணம் 4
நீகே/ த3ய/ புட்டி/ ப்3ரோதுவோ/ ப்3ரோவவோ/
உனக்கே/ தயை/ பிறந்து/ காப்பாயோ/ காக்க மாட்டாயோ/

நீ/ கு3ட்டு/ ப3யலாயெ/
உனது/ இரகசியம்/ வெளிப்பட்டது/

ஸாகேத/ தா4ம/ ஸ்ரீ த்யாக3ராஜ/ நுத/
சாகேத/ நகருறையே/ ஸ்ரீ தியாகராசனால்/ போற்றப் பெற்ற/

ஸ்வாமி/ ஏடி/ மாய/ ஓ ராம/ நின்னு/-(அடி3கி3)
இறைவா/ என்ன/ மாயையிது/ ஓ இராமா/ உன்னை...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
8 - பதுல - பதுலெல்ல : இதற்குமுன் வரும் 'வாரி வாரி' (தத்தம்) எனும் சொல்லினால் 'பதுல' என்பது சரியாகும்.

Top

மேற்கோள்கள்
1 - ஸீத அட3விகி போனாயெ - 'ஸரி எவ்வரே மா ஜானகி' என்ற கீர்த்தனையில், ராமனுடன் காட்டிற்குச் சென்று, அங்கு கணவனுக்கு சேவை புரிந்ததை, தியாகராஜர் புகழ்கின்றார். மேலும், சீதை காட்டிற்குச் சென்றது அவளுடைய (சீதையின்) வற்புறுத்தலின் பேரிலேயே. எனவே, ராமனுடன் காட்டில் வனவாசம் செய்ததனை இந்த கீர்த்தனையில் குறிப்பிடுவதாகத் தோன்றவில்லை.

வால்மீகி ராமாயணம், உத்தர காண்டத்தில், கருவுற்றிருந்த சீதையை, ராமன் நாடு கடத்தியதாக கூறப்படுகின்றது. இதைத்தான் தியாகராஜர் இக்கீர்த்தனையில் குறிப்பிடுவதாகத் தோன்றுகின்றது.

இந்த கீர்த்தனை 'நிந்தா ஸ்துதி' எனப்படும் இறைவனை 'இகழ்ந்து புகழும்' வகையைச் சேர்ந்தது. எனவே, தியாகராஜர் சீதை, ராமனுடன் காட்டில் வனவாசம் செய்ததனைக் குறிப்பிடுவதாகக் கொண்டாலும் தவறாகாது.

2 - ரக்கஸி முக்கு போயெ - அரக்கி - சூர்ப்பநகை - இராவணனின் தங்கை - அரக்கி விருப்பம் வேண்ட - சூர்ப்பநகை ராமனை மணக்க வேண்டினாள். வால்மீகி ராமாயணம், ஆரண்ய காண்டம், அத்தியாயங்கள் 17, 18 நோக்கவும்.

Top

4 - நாரத3 வனித ரூபுடா3யெ - நாரத முனி வரம் வேண்ட - இறைவனின் மாயையினை அறிவதற்கு நாரதர் வேண்டினார். இதனை நிறைவேற்றுவதற்காக, கண்ணன் நாரதரை வனிதையாக மாற்றி, மாயை யென்றால் என்னவென்றும், அது எத்தகைய வலிமையுடையது என்பதனையும் உணர்த்தினான். தேவி பாகவதம், 6-வது புத்தகம் - 28,29

5 - து3ர்வாஸுட3ன்னமடு33 - துருவாசர் - பாண்டவரை சோதித்தல் - துரியோதனின் தூண்டுதலின் பேரில், துருவாசர் தனது பெரிய சிஷ்யப் பட்டாளத்துடன் காட்டினில் வசிக்கும் பாண்டவரை சோதிக்க முற்பட்டார். துரோபதை கண்ணனைப் புகலடைந்து காப்பாற்ற வேண்ட, கண்ணன் அட்சய பாத்திரத்தினில் ஒட்டிக் கொண்டிருந்த ஓர் பருக்கையை உண்டு, துருவாசரும் அவருடைய சிஷ்யர்களும் பசியாறச் செய்தான். மகாபாரதம் - வன பர்வம் - த்ரௌபதி ஹரண பர்வம் - பகுதி 261 நோக்கவும். கதைச் சுருக்கம்

6 - தே3வகி - பிறந்த உடனேயே கண்ணன் தேவகியை நீங்கி யசோதையிடம் சென்றான்.

தேவகியும் ருக்மிணியும் கண்ணனின் சிறுபிராயக் குறும்புகளைக் காண விழைந்ததாகவும், அதற்காக தேவர்களின் சிற்பி விஸ்வகர்மா கண்ணன் வெண்ணைத் தாழியுடன் நிற்கும் காட்சியினை உருவாக்கியாதவும் அதுதான் உடுப்பியிலுள்ள பாலகிருஷ்ணன் கோயில் என்றும் கூறப்படுகின்றது. உடுப்பி கோயில் - 1; உடுப்பி கோயில் - 2

Top

7 - யஸோ1 - தன் மகன், கண்ணனின் திருமணத்தைக் காண இயலாத யசோதை, கலியுகத்தில் 'வகுளா தேவி'யாகத் தோன்றி, திருமலை சீனிவாசனுக்குத் திருமணத்தை நடத்தி வைத்ததாக திருப்பதி புராணம் கூறும் - வகுளா தேவி

சீனிவாச கல்யாண ஓவியங்கள்

விளக்கம்
3 - வாஸிக3 - இச்சொல்லுக்கு பல பொருளுண்டு. இங்கு, இச்சொல் 'வசதியாக' என்ற சொல்வழக்குப் பொருள் ஏற்கலாம். ஆயினும் இச்சொல்லிற்கு 'புகழ் பெற்ற' என்ற பொருள் கொள்ளப்பட்டுள்ளது.

Top

8 - பதுல வீட3னாயெ - கோபியர் தத்தம் கணவரை விடலாயிற்று. இச்சம்பவம் குறித்து பரீட்சித்து மன்னன் சுகரைக் கேள்வி கேட்டான். அதற்கு அவர் கூறிய பதிலாவது - 'கண்ணனுடைய மாயையினால் கோபியரின் கணவன்மார்கள் தங்களுடைய மனைவியர் தம்மருகிலேயே இருப்பதாகவே உணர்ந்தனர்'. பாகவத புராணம், 10-வது புத்தகம், அத்தியாயம் 33 நோக்கவும்.

இதற்குமுன், பிரமன் கண்ணனை சோதிக்க, பசுக்களையும், கன்றுகளையும், ஆயர் சிறார்களையும் திருடிச் சென்று ஒரு வருடம் சிறை வைத்திருந்தான். ஆனால், கண்ணன் தன்னுடைய மாயையினால், தானே பசுக்களாகவும், கன்றுகளாகவும், சிறார்களாகவும் மாறி, அந்த பசுக்களையும், அந்த ஆயர்களுடன் ஒரு வருட காலம் மேய்த்திருந்து, கோகுலத்தில் யாருமே அந்தத் திருட்டினைப் பற்றி அறியாத வண்ணம் செய்தான். பாகவத புராணம், 10-வது புத்தகம், அத்தியாயம் 13 நோக்கவும்.

சார்வபூமன் - ஒருவனைப் பணியாதுலகாள்வோன்
மந்தமாயிற்று - பசியற்றது
மைந்தன் - கண்ணன்
இரதிப்பிச்சை - காம நுகர்ச்சி
Top


Updated on 12 Feb 2009