ஸ்ரீ ராம ஜய ராம ஸ்1ரு2ங்கா3ர ராம
சரணம்
சரணம் 1
கா3ரவமுன ப்3ரோவு கருணா ஸமுத்3ர (ஸ்ரீ)
சரணம் 2
நா லோனி ஜாலி நீகேல தோசது3ரா (ஸ்ரீ)
சரணம் 3
மனஸிச்சி நாதோனு 1மாடாடு3னதெ3புடு3 (ஸ்ரீ)
சரணம் 4
தாளனீ வேளனிக ஜாலமா ராம (ஸ்ரீ)
சரணம் 5
ப3லிமினி வலசிதே சலமா ஓ ராம (ஸ்ரீ)
சரணம் 6
ஈ ஸௌக்2யமீ பா4க்3யமெந்தை3ன க3லதா3 (ஸ்ரீ)
சரணம் 7
2ஜபமேமோ தபமேமோ அபராத4மேமோ (ஸ்ரீ)
சரணம் 8
பங்கஜ நயன நா 3குங்கும நீவே (ஸ்ரீ)
சரணம் 9
அவனிஜாதி4ப நா ஸொக3ஸெவரிதே3 ராம (ஸ்ரீ)
சரணம் 10
நீவு நிமிஷமு லேனி பா4வுகமேலே (ஸ்ரீ)
சரணம் 11
4தோஷிம்பகென்னாள்ளு தோசுனே ராம (ஸ்ரீ)
சரணம் 12
எல்ல ஸௌக்2யமுலு மனஸொல்லதே3 ராம (ஸ்ரீ)
சரணம் 13
பாயகா3 மேனு 5ஸக3மாயெனே ராம (ஸ்ரீ)
சரணம் 14
ஈயந்த3மீ சந்த3மெந்தை3ன க3லதா3 (ஸ்ரீ)
சரணம் 15
கூர்சு வெதலார்சு கட3 தேர்சவே ராம (ஸ்ரீ)
சரணம் 16
மிக்கிலி ம்ரொக்கி சே ஜிக்கிதி ராம (ஸ்ரீ)
சரணம் 17
ராஜில்லு ஸ்ரீ த்யாக3ராஜாதி3 வினுத (ஸ்ரீ)
பொருள் - சுருக்கம்
இராமா! எழிலான இராமா! கருணைக் கடலே! பங்கயற்கண்ணா! புவிமகள் கேள்வா! ஒளிரும், தியாகராசன் ஆகியோரால் போற்றப் பெற்றோனே!
- பல்லாண்டு!
- அன்புடன் காப்பாய்.
- எனதுள்ளத் துயர் உனக்கேன் தோன்றாதய்யா?
- மனந்திறந்து என்னோடு பேசுவதெப்போது?
- தாளேனிவ்வேளை; இன்னும் தாமதமா?
- ஆழக் காதலித்தாலும், தயக்கமோ?
- இந்த இன்பமும், இந்த பேறும் எங்காவதுண்டா?
- செபமென்னவோ? தவமென்னவோ? இது குற்றமோ?
- எனது குங்குமம் நீயே!
- எனது சொகுசு எவருடையதே?
- நீ நிமிடமும் இல்லாத பேறேனோ?
- மகிழ்விக்க எப்போது தோன்றும் (உனக்கு)?(அல்லது)
- (உன்னை) மகிழ்விக்காது எத்தனை நாள் தள்ளுவேனோ?
- எந்த இன்பத்தையும் எனது மனது விரும்பாதே.
- பிரிந்ததனால் மேனி பகுதியானதே.
- இவ்வெழில், இச்செம்மை எங்காகிலுமுண்டா?
- இணைவாய், துயர் தீர்ப்பாய், கடைத் தேற்றுவாய்.
- மிக்கு தொழுது, (உன்) கையில் சிக்கினேன்.
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸ்ரீ ராம/ ஜய/ ராம/ ஸ்1ரு2ங்கா3ர/ ராம/
ஸ்ரீ ராமா/ பல்லாண்டு/ இராமா/ எழிலான/ இராமா/
சரணம்
சரணம் 1
கா3ரவமுன/ ப்3ரோவு/ கருணா/ ஸமுத்3ர/ (ஸ்ரீ)
அன்புடன்/ காப்பாய்/ கருணை/ கடலே/
சரணம் 2
நா/ லோனி/ ஜாலி/ நீகு/-ஏல/ தோசது3ரா/ (ஸ்ரீ)
எனது/ உள்ள/ துயர்/ உனக்கு/ ஏன்/ தோன்றாதய்யா/
சரணம் 3
மனஸு/-இச்சி/ நாதோனு/ மாடாடு3னதி3/-எபுடு3/ (ஸ்ரீ)
மனம்/ திறந்து/ என்னோடு/ பேசுவது/ எப்போது/
சரணம் 4
தாளனு/-ஈ/ வேள/-இக/ ஜாலமா/ ராம/ (ஸ்ரீ)
தாளேன்/ இந்த/ வேளை/ இன்னும்/ தாமதமா/ இராமா/
சரணம் 5
ப3லிமினி/ வலசிதே/ சலமா/ ஓ ராம/ (ஸ்ரீ)
ஆழ/ காதலித்தாலும்/ தயக்கமோ/ ஓ இராமா/
சரணம் 6
ஈ/ ஸௌக்2யமு/-ஈ/ பா4க்3யமு/-எந்தை3ன/ க3லதா3/ (ஸ்ரீ)
இந்த/ இன்பமும்/, இந்த/ பேறும்/ எங்காவது/ உண்டா/
சரணம் 7
ஜபமு/-ஏமோ/ தபமு/-ஏமோ/ அபராத4மு/-ஏமோ/ (ஸ்ரீ)
செபம்/ என்னவோ/ தவம்/ என்னவோ/ குற்றம்/ என்னவோ/
சரணம் 8
பங்கஜ/ நயன/ நா/ குங்கும/ நீவே/ (ஸ்ரீ)
பங்கய/ கண்ணா/ எனது/ குங்குமம்/ நீயே/
சரணம் 9
அவனிஜா/-அதி4ப/ நா/ ஸொக3ஸு/-எவரிதே3/ ராம/ (ஸ்ரீ)
புவிமகள்/ கேள்வா/ எனது/ சொகுசு/ எவருடையதே/ இராமா/
சரணம் 10
நீவு/ நிமிஷமு/ லேனி/ பா4வுகமு/-ஏலே/ (ஸ்ரீ)
நீ/ நிமிடமும்/ இல்லாத/ பேறு/ ஏனோ?
சரணம் 11
தோஷிம்பக/-என்னாள்ளு. தோசுனே/ ராம/ (ஸ்ரீ)
மகிழ்விக்க/ எப்போது/ தோன்றும்/ இராமா/ (அல்லது)
(உன்னை) மகிழ்விக்காது/ எத்தனை நாள்/ தள்ளுவேனோ/ இராமா/
சரணம் 12
எல்ல/ ஸௌக்2யமுலு/ மனஸு/-ஒல்லதே3/ ராம/ (ஸ்ரீ)
எந்த/ இன்பத்தையும்/ மனது/ விரும்பாதே/ இராமா/
சரணம் 13
பாயகா3/ மேனு/ ஸக3மாயெனே/ ராம/ (ஸ்ரீ)
பிரிந்ததனால்/ மேனி/ பகுதியானதே/ இராமா/
சரணம் 14
ஈ/-அந்த3மு/-ஈ/ சந்த3மு/-எந்தை3ன/ க3லதா3/ (ஸ்ரீ)
இந்த/ எழில்/ இந்த/ செம்மை/ எங்காகிலும்/ உண்டா?
சரணம் 15
கூர்சு/ வெதலு/-ஆர்சு/ கட3 தேர்சவே/ ராம/ (ஸ்ரீ)
இணைவாய்/ துயர்/ தீர்ப்பாய்/ கடைத் தேற்றுவாய்/ இராமா/
சரணம் 16
மிக்கிலி/ ம்ரொக்கி/ சே/ ஜிக்கிதி/ ராம/ (ஸ்ரீ)
மிக்கு/ தொழுது/ கையில்/ சிக்கினேன்/ இராமா/
சரணம் 17
ராஜில்லு/ ஸ்ரீ த்யாக3ராஜ/-ஆதி3/ வினுத/ (ஸ்ரீ)
ஒளிரும்/ ஸ்ரீ தியாகராசன்/ ஆகியோரால்/ போற்றப் பெற்றோனே/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - மாடாடு3னதெ3புடு3 - மாடாடே3தெ3புடு3
3 - குங்கும - குங்குமமு
5 - ஸக3மாயெனே - ஸக3மாயெனோ : 'ஸக3மாயெனே' - சரியாகும்
Top
மேற்கோள்கள்
விளக்கம்
இப்பாடல் பிரகலாத பக்தி விஜயம் என்ற நாடகத்தில் பிரகலாதன் பாடுவதாக அமைந்துள்ளது.
2 - ஜபமேமோ தபமேமோ அபராத4மேமோ - ஜெபமென்னவோ? தவமென்னவோ? - இவை அறியேன் என - மிகவும் சுருக்கமாக கொடுக்கப்பட்டுள்ள இந்த சரணத்திற்கு, சரியான பொருள் கூறுதல் கடினம். என் சிற்றறிவுக்கு எட்டியவரை இதற்கு பொருள் எழுதியுள்ளேன். தவறிருந்தால் மன்னிக்கவும்.
3 - குங்கும - எனது குங்குமம் - சுமங்கலியின் சின்னம் - இப்பாடல் நாயகி பாவத்தில் (இறைவன் நாயகனாக) அமைந்துள்ளது. ஒரு சுமங்கலிப் பெண்ணுக்கு, குங்குமம் மிகவும் முக்கியமான ஆபரணப் பொருளாகும்.
4 - தோஷிம்பகென்னாள்ளு தோசுனே - மகிழ்விக்க எப்போது தோன்றும் - இதற்குப்பின் வரும் 15-வது சரணத்தில் பிரகலாதன் (தியாகராஜர்) இறைவனைத் தன்னுடன் இணைய வேண்டுகின்றார். 12-வது சரணத்தில் உலக இன்பங்களை எனது மனம் விரும்பாது என்கின்றார். இவையிரண்டினையும் இணைத்து நோக்குகையில், இறைவன் தன்னை மகிழ்விக்க பிரகலாதன் (தியாகராஜர்) விழைவது தெரிகின்றது. அதன்படி பொருள் கொள்ளப்பட்டது.
எல்லா புத்தகங்களிலும் 'தோசுனே' (தோன்றுமோ) என்று கொடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சொல் (தோசுனே) 'தோத்ஸுனே' என்றும் எழுதப்படும். இந்தச் சொல்லினின்றும் சிறிது வேறுபட்ட, 'தோஸ்துனே' என்ற சொல்லுக்கு, (நாளைத்) 'தள்ளுதல்', (காலத்தைப்) 'போக்குதல்' என்று பொருளாகும். அங்ஙனம், சொற்பிழை ஏற்பட்டிருக்குமேயாகில், இந்த சரணத்திற்கு, '(உன்னை) மகிழ்விக்காது எத்தனை நாள் தள்ளுவேனே' என்று பொருள் கொள்ளலாம்.
Top
Updated on 23 Oct 2011
No comments:
Post a Comment