Thursday, February 12, 2009

தியாகராஜ கிருதி - அடி3கி3 ஸுக2மு - ராகம் மத்4யமாவதி - Adigi Sukhamu - Raga Madhyamavati

பல்லவி
அடி3கி3 ஸுக2முலெவ்வரனுப4விஞ்சிரிரா
ஆதி3 மூலமா ராம

அனுபல்லவி
ஸட3லனி பாப திமிர கோடி ஸூர்ய
ஸார்வபௌ4ம ஸாரஸாக்ஷ ஸத்3-கு3ண நி(ன்னடி3கி3)

சரணம்
சரணம் 1
ஆஸ்1ரயிஞ்சி வரமடி3கி31ஸீத
அட3விகி போனாயெ

ஆஸ1 ஹரண 2ரக்கஸியிஷ்டமடு33-
நபுடே3 முக்கு போயெ
ஓ ராம நி(ன்னடி3கி3)


சரணம் 2
3வாஸிக3 4நாரத3 மௌனி வரமடு33
வனித ரூபுடா3யெ

ஆஸிஞ்சி 5து3ர்வாஸுட3ன்னமடு33
அபுடே3 மந்த3மாயெ ஓ ராம நி(ன்னடி3கி3)


சரணம் 3
ஸுதுனி வேடு3க ஜூட3 6தே3வகியடு33
7யஸோ13 ஜூட3னாயெ
ஸதுலெல்ல ரதி பி4க்ஷமடு33 வாரி வாரி
8பதுல வீட3னாயெ ஓ ராம நி(ன்னடி3கி3)


சரணம் 4
நீகே த3ய புட்டி ப்3ரோதுவோ ப்3ரோவவோ
நீ கு3ட்டு ப3யலாயெ
ஸாகேத தா4ம ஸ்ரீ த்யாக3ராஜ நுத
ஸ்வாமி ஏடி மாய ஓ ராம நி(ன்னடி3கி3)


பொருள் - சுருக்கம்
ஆதிமூலமே இராமா! அறாத, பாவமெனும் இருள் நீக்கும் கோடி பரிதியே! சார்வபூமனே! கமலக்கண்ணா! நற்குணத்தோனே! அரக்கரையழித்தோனே! சாகேத நகருறையே! தியாகராசனால் போற்றப் பெற்ற இறைவா!
  • உன்னை விழைந்து, சுகத்தினை யெவர் அனுபவித்தனரய்யா?
    • அண்டி, வரம் வேண்டிய சீதை, அடவிக்குப் போகலாயிற்று;

    • அரக்கி விருப்பத்தினை வேண்ட, அப்போழ்தே மூக்கு போனது;

    • புகழ்மிகு நாரத முனி வரம் வேண்ட, வனிதை வடிவினனாகினன்;

    • ஆசைப்பட்டு, துருவாசர் உண்டி வேண்ட, அப்போழ்தே மந்தமாயிற்று;

    • மைந்தனை வேடிக்கை பார்க்க தேவகி விழைய, யசோதை காணலாயிற்று;

    • பெண்டிர் யாவரும் இரதிப்பிச்சை கேட்க, தத்தம் கணவரை வீடலாயிற்று;

  • உனக்கே தயை பிறந்து காப்பாயோ, மாட்டாயோ?

  • உனது இரகசியம் வெளிப்பட்டது;

  • என்ன மாயையிது?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
அடி3கி3/ ஸுக2முலு/-எவ்வரு/-அனுப4விஞ்சிரிரா/
விழைந்து/ சுகத்தினை/ எவர்/ அனுபவித்தனரய்யா/

ஆதி3/ மூலமா/ ராம/
ஆதி/ மூலமே/ இராமா/


அனுபல்லவி
ஸட3லனி/ பாப/ திமிர/ கோடி/ ஸூர்ய/
அறாத/ பாவமெனும்/ இருள் (நீக்கும்)/ கோடி/ பரிதியே/

ஸார்வபௌ4ம/ ஸாரஸ/-அக்ஷ/ ஸத்3-கு3ண/ நின்னு/-(அடி3கி3)
சார்வபூமனே/ கமல/ கண்ணா/ நற்குணத்தோனே/ உன்னை/ விழைந்து...


சரணம்
சரணம் 1
ஆஸ்1ரயிஞ்சி/ வரமு/-அடி3கி3ன/ ஸீத/
அண்டி/ வரம்/ வேண்டிய/ சீதை/

அட3விகி/ போனாயெ/
அடவிக்கு/ போகலாயிற்று/

ஆஸ1/ ஹரண/ ரக்கஸி/-இஷ்டமு/-அடு33/-
அரக்கரை/ யழித்தோனே/ அரக்கி/ விருப்பத்தினை/ வேண்ட/

அபுடே3/ முக்கு/ போயெ/ ஓ ராம/ நின்னு/-(அடி3கி3)
அப்போழ்தே/ மூக்கு/ போனது/; ஓ இராமா/ உன்னை...


சரணம் 2
வாஸிக3/ நாரத3/ மௌனி/ வரமு/-அடு33/
புகழ்மிகு/ நாரத/ முனி/ வரம்/ வேண்ட/

வனித/ ரூபுடா3யெ/
வனிதை/ வடிவினனாகினன்/

ஆஸிஞ்சி/ து3ர்வாஸுடு3/-அன்னமு/-அடு33/
ஆசைப்பட்டு/ துருவாசர்/ உண்டி/ வேண்ட/

அபுடே3/ மந்த3மாயெ/ ஓ ராம/ நின்னு/-(அடி3கி3)
அப்போழ்தே/ மந்தமாயிற்று/ ஓ இராமா/ உன்னை...


சரணம் 3
ஸுதுனி/ வேடு3க/ ஜூட3/ தே3வகி/-அடு33/
மைந்தனை/ வேடிக்கை/ பார்க்க/ தேவகி/ விழைய/

யஸோ13/ ஜூட3னாயெ/
யசோதை/ காணலாயிற்று/

ஸதுலு/-எல்ல/ ரதி/ பி4க்ஷமு/-அடு33/ வாரி வாரி/
பெண்டிர்/ யாவரும்/ இரதி/ பிச்சை/ கேட்க/ தத்தம்/

பதுல/ வீட3னாயெ/ ஓ ராம/ நின்னு/-(அடி3கி3)
கணவரை/ வீடலாயிற்று/ ஓ இராமா/ உன்னை...


சரணம் 4
நீகே/ த3ய/ புட்டி/ ப்3ரோதுவோ/ ப்3ரோவவோ/
உனக்கே/ தயை/ பிறந்து/ காப்பாயோ/ காக்க மாட்டாயோ/

நீ/ கு3ட்டு/ ப3யலாயெ/
உனது/ இரகசியம்/ வெளிப்பட்டது/

ஸாகேத/ தா4ம/ ஸ்ரீ த்யாக3ராஜ/ நுத/
சாகேத/ நகருறையே/ ஸ்ரீ தியாகராசனால்/ போற்றப் பெற்ற/

ஸ்வாமி/ ஏடி/ மாய/ ஓ ராம/ நின்னு/-(அடி3கி3)
இறைவா/ என்ன/ மாயையிது/ ஓ இராமா/ உன்னை...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
8 - பதுல - பதுலெல்ல : இதற்குமுன் வரும் 'வாரி வாரி' (தத்தம்) எனும் சொல்லினால் 'பதுல' என்பது சரியாகும்.

Top

மேற்கோள்கள்
1 - ஸீத அட3விகி போனாயெ - 'ஸரி எவ்வரே மா ஜானகி' என்ற கீர்த்தனையில், ராமனுடன் காட்டிற்குச் சென்று, அங்கு கணவனுக்கு சேவை புரிந்ததை, தியாகராஜர் புகழ்கின்றார். மேலும், சீதை காட்டிற்குச் சென்றது அவளுடைய (சீதையின்) வற்புறுத்தலின் பேரிலேயே. எனவே, ராமனுடன் காட்டில் வனவாசம் செய்ததனை இந்த கீர்த்தனையில் குறிப்பிடுவதாகத் தோன்றவில்லை.

வால்மீகி ராமாயணம், உத்தர காண்டத்தில், கருவுற்றிருந்த சீதையை, ராமன் நாடு கடத்தியதாக கூறப்படுகின்றது. இதைத்தான் தியாகராஜர் இக்கீர்த்தனையில் குறிப்பிடுவதாகத் தோன்றுகின்றது.

இந்த கீர்த்தனை 'நிந்தா ஸ்துதி' எனப்படும் இறைவனை 'இகழ்ந்து புகழும்' வகையைச் சேர்ந்தது. எனவே, தியாகராஜர் சீதை, ராமனுடன் காட்டில் வனவாசம் செய்ததனைக் குறிப்பிடுவதாகக் கொண்டாலும் தவறாகாது.

2 - ரக்கஸி முக்கு போயெ - அரக்கி - சூர்ப்பநகை - இராவணனின் தங்கை - அரக்கி விருப்பம் வேண்ட - சூர்ப்பநகை ராமனை மணக்க வேண்டினாள். வால்மீகி ராமாயணம், ஆரண்ய காண்டம், அத்தியாயங்கள் 17, 18 நோக்கவும்.

Top

4 - நாரத3 வனித ரூபுடா3யெ - நாரத முனி வரம் வேண்ட - இறைவனின் மாயையினை அறிவதற்கு நாரதர் வேண்டினார். இதனை நிறைவேற்றுவதற்காக, கண்ணன் நாரதரை வனிதையாக மாற்றி, மாயை யென்றால் என்னவென்றும், அது எத்தகைய வலிமையுடையது என்பதனையும் உணர்த்தினான். தேவி பாகவதம், 6-வது புத்தகம் - 28,29

5 - து3ர்வாஸுட3ன்னமடு33 - துருவாசர் - பாண்டவரை சோதித்தல் - துரியோதனின் தூண்டுதலின் பேரில், துருவாசர் தனது பெரிய சிஷ்யப் பட்டாளத்துடன் காட்டினில் வசிக்கும் பாண்டவரை சோதிக்க முற்பட்டார். துரோபதை கண்ணனைப் புகலடைந்து காப்பாற்ற வேண்ட, கண்ணன் அட்சய பாத்திரத்தினில் ஒட்டிக் கொண்டிருந்த ஓர் பருக்கையை உண்டு, துருவாசரும் அவருடைய சிஷ்யர்களும் பசியாறச் செய்தான். மகாபாரதம் - வன பர்வம் - த்ரௌபதி ஹரண பர்வம் - பகுதி 261 நோக்கவும். கதைச் சுருக்கம்

6 - தே3வகி - பிறந்த உடனேயே கண்ணன் தேவகியை நீங்கி யசோதையிடம் சென்றான்.

தேவகியும் ருக்மிணியும் கண்ணனின் சிறுபிராயக் குறும்புகளைக் காண விழைந்ததாகவும், அதற்காக தேவர்களின் சிற்பி விஸ்வகர்மா கண்ணன் வெண்ணைத் தாழியுடன் நிற்கும் காட்சியினை உருவாக்கியாதவும் அதுதான் உடுப்பியிலுள்ள பாலகிருஷ்ணன் கோயில் என்றும் கூறப்படுகின்றது. உடுப்பி கோயில் - 1; உடுப்பி கோயில் - 2

Top

7 - யஸோ1 - தன் மகன், கண்ணனின் திருமணத்தைக் காண இயலாத யசோதை, கலியுகத்தில் 'வகுளா தேவி'யாகத் தோன்றி, திருமலை சீனிவாசனுக்குத் திருமணத்தை நடத்தி வைத்ததாக திருப்பதி புராணம் கூறும் - வகுளா தேவி

சீனிவாச கல்யாண ஓவியங்கள்

விளக்கம்
3 - வாஸிக3 - இச்சொல்லுக்கு பல பொருளுண்டு. இங்கு, இச்சொல் 'வசதியாக' என்ற சொல்வழக்குப் பொருள் ஏற்கலாம். ஆயினும் இச்சொல்லிற்கு 'புகழ் பெற்ற' என்ற பொருள் கொள்ளப்பட்டுள்ளது.

Top

8 - பதுல வீட3னாயெ - கோபியர் தத்தம் கணவரை விடலாயிற்று. இச்சம்பவம் குறித்து பரீட்சித்து மன்னன் சுகரைக் கேள்வி கேட்டான். அதற்கு அவர் கூறிய பதிலாவது - 'கண்ணனுடைய மாயையினால் கோபியரின் கணவன்மார்கள் தங்களுடைய மனைவியர் தம்மருகிலேயே இருப்பதாகவே உணர்ந்தனர்'. பாகவத புராணம், 10-வது புத்தகம், அத்தியாயம் 33 நோக்கவும்.

இதற்குமுன், பிரமன் கண்ணனை சோதிக்க, பசுக்களையும், கன்றுகளையும், ஆயர் சிறார்களையும் திருடிச் சென்று ஒரு வருடம் சிறை வைத்திருந்தான். ஆனால், கண்ணன் தன்னுடைய மாயையினால், தானே பசுக்களாகவும், கன்றுகளாகவும், சிறார்களாகவும் மாறி, அந்த பசுக்களையும், அந்த ஆயர்களுடன் ஒரு வருட காலம் மேய்த்திருந்து, கோகுலத்தில் யாருமே அந்தத் திருட்டினைப் பற்றி அறியாத வண்ணம் செய்தான். பாகவத புராணம், 10-வது புத்தகம், அத்தியாயம் 13 நோக்கவும்.

சார்வபூமன் - ஒருவனைப் பணியாதுலகாள்வோன்
மந்தமாயிற்று - பசியற்றது
மைந்தன் - கண்ணன்
இரதிப்பிச்சை - காம நுகர்ச்சி
Top


Updated on 12 Feb 2009

No comments: