ஸ1ரணு ஸ1ரணனுசு மொரலிடி3ன நா
கி3ரமுலன்னி பரியாசகமௌனா
அனுபல்லவி
ஸ1ரஜ நயன பரம புருஷ
நின்னனுஸரணதோ கருணதோ மரி மரி (ஸ1)
சரணம்
சரணம் 1
ஸ1ரமு தரம தரமு கா3க
1காகாஸுருடு3 ஸுருலனாயெ வேட3 கா3னு
த3ஸ1ரத2 வர குமாருனி பா3ணமனுசுனு
வெரசி ஜரக3 மரல தானு கனி
கா3ப3ர-ப3டி3 ஸரகு3ன ஸ1ரணனு மாத்ரமு
நிருவுக3னு ரஜத கி3ரி நாதா2து3லு
வரமகு3 பி3ருது3ன ஸரஸத மெச்சனு
கருணனு ஸ்தி2ரமுக3 வரமிச்சின நினு (ஸ1)
சரணம் 2
முனுபு மனஸுனனஸூயலனு தபோ-
த4னுடு3 வினயமுனனு 2த்3ரௌபதி3னி
ஸோ1த4னமு க4னமுக3 நிஜமுன ஸேய த்3ரு2ட4-
முனனு தன மதி3னி ஸ1ரணனகா3னே
கனிகரமுன வேக3ன நீவெந்தோ
சனுவுன முனுலு ஸு-ஜனுலு ஸுராஸுர
க3ணமுலவனி பால நருலு பொக3ட3க3னு
வனஜ நயன லகு4வுன ப்3ரோசின நினு (ஸ1)
சரணம் 3
மதி3னி பெ3த3ரு 3ஸு-த3தினி கனி நீது3
பத3முலு த3யனு த4ரலோனு ப்3ரோசே
4கத3ரா மத3 ஜன த3ளனாபக4ன ஜித
மத3ன பு3த4 ஜன த4ன த்யாக3ராஜ
ஹ்ரு2த3ய குமுத3 ஜலஜ 5த4ர ஸம்ஹரணாரி
த3மன ஸத3மல ரத3ன முனி மனோ-
ஸத3ன ஸு1ப4த3 நனு முத3முன ப்3ரோவுமு
ஸத3யுட3 6கொத3வலனத3லிம்புமு நினு (ஸ1)
பொருள் - சுருக்கம்
- கமலக் கண்ணா! பரம்பொருளே! செருக்குடையோரை வீழ்த்துவோனே! உடல் (அழகில்) மதனை வெல்வோனே! அறிஞர்களின் செல்வமே! தியாகராசன் இதயக் குமுதத்தின் மதியே! புவியைச் சுருட்டிய கைவனை மாய்த்தோனே! தூய பற்களோனே! முனிவர் மனத்துறையே! மங்கலமருள்வோனே! கருணையுள்ளத்தோனே!
- உன்னைப் பின்பற்றி, இரந்து, திரும்பத்திரும்ப, சரணம் சரணமென முறையிட்ட எனது சொற்கள் யாவும் கேலியாமோ?
- அம்பு விரட்ட, சமாளிக்கவியலாது, காகாசுரன் வானோரை வேண்டலாயிற்று;
- ஆயின், தசரதனின் உயர் மைந்தனின் (ராமனின்) பாணமென பயந்து (வானோர்) ஒதுங்க,
- மீளவும் தம்மைக் கண்டு, அச்சமுற்று, விரைவாக, சரணென்றவுடனே,
- தீர்மானித்து, பனி மலை நாதர் முதலானோர், உயர்ந்த விருதினை இனிமையாக மெச்ச,
- கருணையுடன், உறுதியாக, (காகாசுரனின் உயிரைக் காத்து) வரமளித்த உன்னை சரணம் சரணமென முறையிட்ட எனது சொற்கள் யாவும் கேலியாமோ?
- முன்பு, மனதில் காழ்ப்புடன், தவச் செல்வன், (துருவாச முனி) பணிவுடன், துரோபதையை சோதனை, கடினமாக, நிசமாகச் செய்ய,
- (அவள்) திடமாக, தன்னுள்ளத்தினில், சரணென்றவுடனே,
- கனிவுடன், விரைவாக, நீ எவ்வளவோ அன்பாக, முனிவர்கள், நல்லோர், வானோர், அரக்கர் கூட்டங்கள், புவியாள்வோர், மற்றும், மக்கள் புகழ,
- எளிதாகக் காத்த உன்னை சரணம் சரணமென முறையிட்ட எனது சொற்கள் யாவும் கேலியாமோ?
- உள்ளத்தினில் கலங்கிய வனிதையை (அகலிகையை) கண்டுனது திருவடிகள் தயவாகப் புவியில் காத்தனவன்றோ?
- என்னை மகிழ்வுடன் காப்பாய்,
- எனது குறைகளை விரட்டுவாய்;
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸ1ரணு/ ஸ1ரணு/-அனுசு/ மொரலு-இடி3ன/ நா/
சரணம்/ சரணம்/ என/ முறையிட்ட/ எனது/
கி3ரமுலு/-அன்னி/ பரியாசகமு-ஔனா/
சொற்கள்/ யாவும்/ கேலியாமோ/
அனுபல்லவி
ஸ1ரஜ/ நயன/ பரம புருஷ/
கமல/ கண்ணா/ பரம்பொருளே/
நின்னு/-அனுஸரணதோ/ கருணதோ/ மரி மரி/ (ஸ1)
உன்னை/ பின்பற்றி/ இரந்து/ திரும்பத்திரும்ப/ சரணம்...
சரணம்
சரணம் 1
ஸ1ரமு/ தரம/ தரமு/ கா3க/
அம்பு/ விரட்ட/ சமாளிக்க/ இயலாது/
காக-அஸுருடு3/ ஸுருலனு/-ஆயெ வேட3/ கா3னு/
காகாசுரன்/ வானோரை/ வேண்டலாயிற்று/ ஆயின்/
த3ஸ1ரத2/ வர/ குமாருனி/ பா3ணமு/-அனுசுனு/
தசரதனின்/ உயர்/ மைந்தனின்/ பாணம்/ என/
வெரசி/ ஜரக3/ மரல/ தானு/ கனி/
பயந்து/ (வானோர்) ஒதுங்க/ மீளவும்/ தம்மை/ கண்டு/
கா3ப3ர-ப3டி3/ ஸரகு3ன/ ஸ1ரணு/-அனு/ மாத்ரமு/
அச்சமுற்று/ விரைவாக/ சரண்/ என்ற/ உடனே/
நிருவுக3னு/ ரஜத/ கி3ரி/ நாத2/-ஆது3லு/
தீர்மானித்து/ பனி/ மலை/ நாதர்/ முதலானோர்/
வரமகு3/ பி3ருது3ன/ ஸரஸத/ மெச்சனு/
உயர்ந்த/ விருதினை/ இனிமையாக/ மெச்ச/
கருணனு/ ஸ்தி2ரமுக3/ வரமு/-இச்சின/ நினு/ (ஸ1)
கருணையுடன்/ உறுதியாக/ வரம்/ அளித்த/ உன்னை/ சரணம்...
சரணம் 2
முனுபு/ மனஸுன/-அஸூயலனு/ தபோ/-
முன்பு/ மனதில்/ காழ்ப்புடன்/ தவ/
த4னுடு3/ வினயமுனனு/ த்3ரௌபதி3னி/
செல்வன்/ பணிவுடன்/ துரோபதையை/
ஸோ1த4னமு/ க4னமுக3/ நிஜமுன/ ஸேய/
சோதனை/ கடினமாக/ நிசமாக/ செய்ய/ (அவள்)
த்3ரு2ட4முனனு/ தன/ மதி3னி/ ஸ1ரணு/-அனகா3னே/
திடமாக/ தன்/ உள்ளத்தினில்/ சரண்/ என்றவுடனே/
கனிகரமுன/ வேக3ன/ நீவு/-எந்தோ/
கனிவுடன்/ விரைவாக/ நீ/ எவ்வளவோ/
சனுவுன/ முனுலு/ ஸு-ஜனுலு/ ஸுர/-அஸுர/
அன்பாக/ முனிவர்கள்/ நல்லோர்/ வானோர்/ அரக்கர்/
க3ணமுலு/-அவனி/ பால/ நருலு/ பொக3ட3க3னு/
கூட்டங்கள்/ புவி/ ஆள்வோர்/ (மற்றும்) மக்கள்/ புகழ/
வனஜ/ நயன/ லகு4வுன/ ப்3ரோசின/ நினு/ (ஸ1)
கமல/ கண்ணா/ எளிதாக/ காத்த/ உன்னை/ சரணம்...
சரணம் 3
மதி3னி/ பெ3த3ரு/ ஸு-த3தினி/ கனி/ நீது3/
உள்ளத்தினில்/ கலங்கிய/ வனிதையை/ கண்டு/ உனது/
பத3முலு/ த3யனு/ த4ரலோனு/ ப்3ரோசே/
திருவடிகள்/ தயவாக/ புவியில்/ காத்தன/
கத3ரா/ மத3 ஜன/ த3ளன/-அபக4ன/ ஜித/
வன்றோ/ செருக்குடையோரை/ வீழ்த்துவோனே/ உடல் (அழகில்)/ வெல்வோனே/
மத3ன/ பு3த4 ஜன/ த4ன/ த்யாக3ராஜ/
மதனை/ அறிஞர்களின்/ செல்வமே/ தியாகராசன்/
ஹ்ரு2த3ய/ குமுத3/ ஜலஜ/ த4ர/ ஸம்ஹரண/-அரி/
இதய/ குமுதத்தின்/ மதியே/ புவியை/ சுருட்டிய/ பகைவனை/
த3மன/ ஸத3மல/ ரத3ன/ முனி/ மனோ/-
மாய்த்தோனே/ தூய/ பற்களோனே/ முனிவர்/ மனத்துள்/
ஸத3ன/ ஸு1ப4த3/ நனு/ முத3முன/ ப்3ரோவுமு/
உறையே/ மங்கலமருள்வோனே/ என்னை/ மகிழ்வுடன்/ காப்பாய்/
ஸத3யுட3/ கொத3வலனு/-அத3லிம்புமு/ நினு/ (ஸ1)
கருணையுள்ளத்தோனே/ (எனது) குறைகளை/ விரட்டுவாய்/ உன்னை/ சரணம்...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
4 - கத3ரா - எல்லா புத்தகங்களிலும் 'கத3ர' என்று கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இது ஒரு கேள்வியாகையால் இச்சொல் நெடிலில் (கத3ரா) முடியவேண்டும்.
Top
மேற்கோள்கள்
1 - காகாஸுருடு3 - காகாசுரன் - காக்கையரக்கன் - வால்மீகி ராமாயணம், சுந்தர காண்டம், அத்தியாயம் 38 நோக்கவும்.
2 - த்3ரௌபதி3னி - மகாபாரதம், 3-வது புத்தகம், வன பர்வம் - த்ரௌபதி ஹரண பர்வம் (Section CCLXI) நோக்கவும். வேதங்கள், புராணங்கள் ஆகியவற்றின் ஆங்கல மொழிபெயர்ப்பு
3 - ஸு-த3தினி - அகலியை - வால்மீகி ராமாயணம், பால காண்டம், அத்தியாயம் 48 நோக்கவும்.
5 - த4ர ஸம்ஹரண - புவியைச் சுருட்டிய பகைவன் - இரணியாட்சன் - பாகவத புராணம், 3-வது புத்தகம், அத்தியாயங்கள் 17 - 19 நோக்கவும்.
Top
விளக்கம்
6 - கொத3வலனத3லிம்புமு - கொத3வலனு அத3லிம்புமு - புத்தகங்களில் இதனை 'குற்றங்களை மன்னிப்பாய்' எனவும், 'தேவைகளை பூர்த்தி செய்வாய்' எனவும் பொருள் கொள்ளப்பட்டுள்ளது. 'கொத3வ' என்ற சொல்லுக்கு 'தேவைகள்' என்றும் 'குறைகள்' என்றும் பொருளுண்டு. 'அத3லிம்பு' என்ற சொல்லுக்கு 'அச்சமூட்டுவாய்' என்றும் 'கடிந்துகொள்வாய்' என்றும் பொருளுண்டு. சுற்றிவளைத்து, இதற்கு 'தேவகளை பூர்த்தி செய்வாய்' என பொருள் கொள்ளலாம். ஆனால் 'குற்றங்களை மன்னிப்பாய்' என பொருள் கொள்வது கடினமாகும். தியாகராஜர், தன்னுடைய சுகபோகங்களுக்காக எதனையும் இறைவனிடம் வேண்டியது கிடையாது. இறைவனை, அவனுடைய வழிபாட்டிற்காக மட்டுமே பொருட்களை அவர் கோருவார். இந்த கிருதியில், இறைவனிடம் சரணம் புக வேண்டுகின்றார். அப்படி சரணம் கிடைக்குமுன், தொண்டனுடைய குற்றங்குறைகளை இறைவன் களையவேண்டும். அதனைத்தான் இங்கு வேண்டுகின்றார் என நான் நினைக்கின்றேன். அதன்படி, 'எனது குறைகளை விரட்டுவாய்' என இங்கு பொருள் கொள்ளப்பட்டது.
தசரதனின் உயர் மைந்தன் - இராமன்
வரமளித்த - காக்காசுரனின் உயிரைக் காத்து
தவச் செல்வன் - துருவாச முனி
வனிதை - அகலியை
Top
Updated on 23 Feb 2009
No comments:
Post a Comment