நாது3பை பலிகேரு 1நருலு
அனுபல்லவி
வேத3 ஸன்னுத 2ப4வமு வேரு ஜேஸிதினனுசு (நா)
சரணம்
சரணம் 1
3பஞ்ச ஸ1ர ஜனக ப்ரபஞ்சமுன க3ல ஸுக2மு
மஞ்சு வலெனனுசு மதி3னெஞ்சிதி கானி
பஞ்சுகொனி த4னமுலார்ஜிஞ்சுகொனி ஸரியெவ்வ-
ரஞ்சு மரி க3தியு லேத3ஞ்சு பல்கிதினா (நா)
சரணம் 2
தி3னமு நித்யோத்ஸவமுனகாஸ ஜெந்தி3தி
நா 4மனஸுன இல்லு ஒகடியனியுண்டி கானி
அனுதி3னமுனொருல மேலுனு ஜூசி தாள
லேகனு ரெண்டு3 ஸேய வலெனனுசு பல்கிதினா (நா)
சரணம் 3
ப்ராணமே பாடியனி மானமே மேலண்டி
கானி ஸ்ரீ ராம பரமானந்த3 ஜலதி4
ஸ்ரீ நாத2 குலமுலோ லேனி தா3ரினி பட்டி
5ஜேனெடு3த3ரமு நிம்பனொருல பொக3டி3தினா (நா)
சரணம் 4
ஆஜானு-பா3ஹு யுக3 ஸ்ரீ ஜானகீ பதி
பயோஜாக்ஷ ஸ்ரீ த்யாக3ராஜ நுத சரண
ஈ ஜக3திலோ நின்னு பூஜிஞ்சு வாரி-
6நவ்யாஜமுன ப்3ரோசு ஸு-ராஜ நீவாடை3ன (நா)
பொருள் - சுருக்கம்
மறைகளில் போற்றப் பெற்றோனே! ஐங்கணையோனை யீன்றோனே! இராமா! பரமானந்தக் கடலே! மாமணாளா! முழந்தாள் வரை நீளிரு கைகளோனே! சானகி மணாளா! கமலக்கண்ணா! தியாகராசனால் போற்றப் பெற்ற திருவடியோனே! இப்புவியிலுன்னை வழிபடுவோரை, நோக்கம் ஏதுமின்றி, காக்கும் நற்றலைவா!
- குடும்பத்தினை வேறாக்கினேன் என என் மீது (குற்றம்) பகர்ந்தனர், மனிதர்கள்;
- இப்புவியிலுள்ள சுகங்கள், பனி போன்றதென மனத்தில் எண்ணினேனே யன்றி, பங்கிட்டுக்கொண்டு, சொத்து சேர்த்துக்கொண்டு, ஈடெவர் என்று, பின்னர், கதியிலன் எனப் பகர்ந்தேனா?
- தினமும், அன்றாட வழிபாட்டிற்கு ஆசைகொண்டேன்; எனது மனத்தினில், வீடு ஒன்றேயென்று இருந்தேனே யன்றி அனுதினமும், மற்றோரின் மேன்மையைக் கண்டு, தாளாது, (வீட்டினை) இரண்டாக்க வேண்டுமெனப் பகர்ந்தேனா?
- உயிர் எம்மாத்திரமென, மானமே மேலென்றேனே யன்றி, குலத்தினிலில்லாத வழியைப் பற்றி, சாண் வயிற்றினை நிரப்ப, பிறரைப் புகழ்ந்தேனா?
உன்னவனாகிய என் மீது (குற்றம்) பகர்ந்தனர், மனிதர்கள்.
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நாது3/ பை/ பலிகேரு/ நருலு/
என்/ மீது/ (குற்றம்) பகர்ந்தனர்/ மனிதர்கள்/
அனுபல்லவி
வேத3/ ஸன்னுத/ ப4வமு/ வேரு/ ஜேஸிதினி/-அனுசு/ (நா)
மறைகளில்/ போற்றப் பெற்றோனே/ குடும்பத்தினை/ வேறு/ ஆக்கினேன்/ என/ என் மீது...
சரணம்
சரணம் 1
பஞ்ச/ ஸ1ர/ ஜனக/ ப்ரபஞ்சமுன/ க3ல/ ஸுக2மு/
ஐந்து/ கணையோனை/ ஈன்றோனே/ புவியில்/ உள்ள/ சுகங்கள்/
மஞ்சு/ வலெனு/-அனுசு/ மதி3னி/-எஞ்சிதி/ கானி/
பனி/ போன்றது/ என/ மனத்தில்/ எண்ணினேனே/ யன்றி/
பஞ்சுகொனி/ த4னமுலு/-ஆர்ஜிஞ்சுகொனி/ ஸரி/-எவ்வரு/-
பங்கிட்டுக்கொண்டு/ சொத்து/ சேர்த்துக்கொண்டு/ ஈடு/ எவர்/
அஞ்சு/ மரி/ க3தியு/ லேது3/-அஞ்சு/ பல்கிதினா/ (நா)
என்று/ பின்னர்/ கதி/ இலன்/ என/ பகர்ந்தேனா/
சரணம் 2
தி3னமு/ நித்ய/-உத்ஸவமுனகு/-ஆஸ/ ஜெந்தி3தி/
தினமும்/ அன்றாட/ வழிபாட்டிற்கு/ ஆசை/ கொண்டேன்/
நா/ மனஸுன/ இல்லு/ ஒகடி/-அனி/-உண்டி/ கானி/
எனது/ மனத்தினில்/ வீடு/ ஒன்றே/ யென்று/ இருந்தேனே/ யன்றி/
அனுதி3னமுனு/-ஒருல/ மேலுனு/ ஜூசி/ தாள லேகனு/
அனுதினமும்/ மற்றோரின்/ மேன்மையை/ கண்டு/ தாளாது/
ரெண்டு3/ ஸேய/ வலெனு/-அனுசு/ பல்கிதினா/ (நா)
(வீட்டினை) இரண்டு/ ஆக்க/ வேண்டும்/ என/ பகர்ந்தேனா/
சரணம் 3
ப்ராணமு/-ஏ பாடி/-அனி/ மானமே/ மேலு/-அண்டி/
உயிர்/ எம்மாத்திரம்/ என/ மானமே/ மேல்/ என்றேனே/
கானி/ ஸ்ரீ ராம/ பரம-ஆனந்த3/ ஜலதி4/
அன்றி/ ஸ்ரீ ராமா/ பரமானந்த/ கடலே/
ஸ்ரீ/ நாத2/ குலமுலோ/ லேனி/ தா3ரினி/ பட்டி/
மா/ மணாளா/ குலத்தினில்/ இல்லாத/ வழியை/ பற்றி/
ஜேனெடு3/-உத3ரமு/ நிம்பனு/-ஒருல/ பொக3டி3தினா/ (நா)
சாண்/ வயிற்றினை/ நிரப்ப/ பிறரை/ புகழ்ந்தேனா/
சரணம் 4
ஆஜானு/-பா3ஹு/ யுக3/ ஸ்ரீ ஜானகீ/ பதி/
முழந்தாள் வரை நீள்/ கைகள்/ இணையோனே/ ஸ்ரீ ஜானகி/ மணாளா/
பயோஜ/-அக்ஷ/ ஸ்ரீ த்யாக3ராஜ/ நுத/ சரண/
கமல/ கண்ணா/ ஸ்ரீ தியாகராசனால்/ போற்றப் பெற்ற/ திருவடியோனே/
ஈ/ ஜக3திலோ/ நின்னு/ பூஜிஞ்சு வாரினி/-
இந்த/ புவியில்/ உன்னை/ வழிபடுவோரை/
அவ்யாஜமுன/ ப்3ரோசு/ ஸு-ராஜ/ நீவாடை3ன/ (நா)
நோக்கம் ஏதுமின்றி/ காக்கும்/ நற்றலைவா/ உன்னவனாகிய/ என் மீது...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - நருலு - நருலு ஸ்ரீ ராம
4 - மனஸுன இல்லு ஒகடியனி - மனஸுன இல்லு ஒகடனி
5 - ஜேனெடு3 - ஜானெடு3 - தெலுங்கு அகராதியின்படி இரண்டு சொற்களுமே சரியாகும்
Top
மேற்கோள்கள்
3 - பஞ்ச ஸ1ர - ஐந்து மலரக்கணையோன் - மன்மதன் - ஐந்து மலர்களாவன - தாமரை, அசோக, மா, மல்லிகை, நீல தாமரை. - இம்மலர்க்கணைகளின் தன்மை யாதென அறிய
6 - அவ்யாஜமுன - நோக்கமின்றி - லலிதா ஸஹஸ்ர நாமத்தில், அம்மையின் பெயர்களிலொன்று - 'அவ்யாஜ கருணா மூர்த்தி' என்பதாகும். படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழிலுக்கும் எந்த விதமான நோக்கமும் கற்பிக்க இயலாது.
Top
விளக்கம்
2 - ப4வமு - புத்தகங்களில் இதற்கு 'குடும்பம்' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. அனுபல்லவியிலும் முதல் சரணத்திலும் கூறியவற்றினை நோக்குகையில் அந்த பொருள் பொருந்தும். ஆனால் 'ப4வம்' என்ற வடமொழிச் சொல்லுக்கும் அதன் தெலுங்கு திரிபான 'ப4வமு' என்ற சொல்லுக்கும் 'சம்சாரம்' என்றுதான் பொருள் கொள்ள முடியும்.
தியாகராஜர் தன்னுடைய குறைகளையெல்லாம் அவ்வப்போது இறைவனிடம் நேரிடையாக சொல்வது போன்று பல கீர்த்தனைகளை அமைத்துள்ளார். அவருடைய இந்த மனோபாவத்தினை சாதாரண மக்கள் அறிதல் மிகவும் கடினம். அந்த வகையில், முதல் சரணத்தில் கூறப்பட்ட சொற்களின் உண்மையான நோக்கமென்ன, அவைகளுக்கு இங்கு கூறப்பட்டுள்ள பொருள் சரியானதா என தீர்மானமாக உரைத்தல் இயலாததொன்று. இந்த சரணத்தின் பொருளை வேறு விதமாகவும் கூறலாம். எனவே இங்கு கூறிய பொருள் சரியல்லவென்று யாருக்காவது தோன்றினால் அதற்காக என்னை மன்னிக்கவும்.
இரண்டாக்க - குடும்பத்தினைப் பிரிக்க
Top
Updated on 17 Feb 2009
No comments:
Post a Comment