நளின லோசன நின்னு கா3க அன்யுல 1நம்மி
நர ஜன்மமீடே3ருனா
அனுபல்லவி
ஜலஜாப்த குல பூ4ஷண ஸு-பா4ஷண
ஸஜ்ஜன போஷண ஜனக ஸுதா ரமண (ந)
சரணம்
சரணம் 1
2கொங்க3வண்டி த்4யானமு ஜேஸிதே தன
கோரிக கொன-ஸாகு3னா
3தொ3ங்க3 மக3னி ப4க்தி மீர நம்மிதே மஞ்சி
த்3ரோவ ஜூப நேர்சுனா
4க3ங்க3 லோனி ஒட3னு நம்மி ப4வ
ஸாக3ரமு தா3ட வச்சுனா
5நங்க3 நாசுல 6ஸ1ரணமனுட சேத
7அனங்கு3டு3 ஞானோபதே3ஸ1மு ஜேஸுனா (ந)
சரணம் 2
பரம வந்த்4யகு பாலு பெருகு3 போஸிதே
சண்டி பாலு கலுக3 நேர்சுனா
நெர த4னமுலு 8தா3யாது3லகிச்சிதே
நெனரு மாட கல்கு3னா
எருவு வேஸி9யூஸர பூ4மி வித்திதே-
நேமைன ப2லிஞ்சுனா
வரமைன பேரு கலுகு3 10க3ங்க3-ராவிகி
வந்த3னமொனரிஞ்சிதே ப்3ரோவ நேர்சுனா (ந)
சரணம் 3
ஸொக3ஸைன 11பூ3ருகு3லனு பெஞ்சிதே
ஸு-ரஸ ப2லமுலிச்சுனா
பா4க்3யமு க3ல 12திருமஞ்ஜன விப4வமு
13பரிசாரகுலகப்3பு3னா
ராக3 லோப4முலதோ தபமு ஜேஸிதே
பர க3தி கலுக3 நேர்சுனா
த்யாக3ராஜ ஸன்னுத ஸத்3-கு3ண
ஸத்ய ஸ்வரூப நிர்விகார பராத்பர (ந)
பொருள் - சுருக்கம்
கமலக்கண்ணா! பரிதி குலத்தின் அணிகலனே! இனிய சொல்லோனே! நல்லோரைப் பேணுவோனே! சனகன் மகள் கேள்வா! தியாகராசனால் போற்றப் பெற்றோனே! நற்குணத்தோனே! மெய்யுருவத்தோனே! மாற்றமற்றோனே! பராபரனே!
- உன்னையன்றி மற்றவரை நம்பி மனிதப்பிறவி யீடேறுமா?
- நாரை போன்ற தியானம் செய்தால், தனது கோரிக்கை நிறைவேறுமா?
- கள்ளப் புருடனை மிக்கு பற்றுடன் நம்ப, நல்வழி காட்ட நேருமா?
- கங்கையிலுள்ள ஓடத்தை நம்பி, பிறவிக் கடலைத் தாண்டலாகுமா?
- பாசாங்காக, சரணமென்றவுடன், அனங்கனா ஞானோபதேசம் செய்வான்?
- முற்றும் வந்திக்கு பாலும் தயிரும் ஊட்டினால், தாய்ப்பால் சுரக்க நேருமா?
- மிக்கு செல்வம் பங்காளிகளுக்கு ஈய்ந்தாலும், கனிவான சொல் கிடைக்குமா?
- எருவிட்டு, உவர் நிலத்தில் விதைத்தால், ஏதும் விளையுமா?
- சிறந்த பெயருடைய, பூவரசத்திற்கு வந்தனம் செய்தால், அருள் புரியுமா?
- சொகுசான இலவமரத்தினை வளர்த்தால், சாறு நிறைப் பழங்கள் தருமா?
- பேறு நிறை, திருமஞ்சன விபவம், ஏவலாளிகளுக்கு நண்ணுமா?
- பற்று மற்றும் கஞ்சத்தனங்களுடன் தவமியற்ற, பர கதி கிடைக்க நேருமா?
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நளின/ லோசன/ நின்னு/ கா3க/ அன்யுல/ நம்மி/
கமல/ கண்ணா/ உன்னை/ யன்றி/ மற்றவரை/ நம்பி/
நர/ ஜன்மமு/-ஈடே3ருனா/
மனித/ பிறவி/ யீடேறுமா/
அனுபல்லவி
ஜலஜ/-ஆப்த/ குல/ பூ4ஷண/ ஸு-பா4ஷண/
கமல/ நண்பன் (பரிதி)/ குலத்தின்/ அணிகலனே/ இனிய சொல்லோனே/
ஸஜ்ஜன/ போஷண/ ஜனக/ ஸுதா/ ரமண/ (ந)
நல்லோரை/ பேணுவோனே/ சனகன்/ மகள்/ கேள்வா/
சரணம்
சரணம் 1
கொங்க3வண்டி/ த்4யானமு/ ஜேஸிதே/ தன/
நாரை போன்ற/ தியானம்/ செய்தால்/ தனது/
கோரிக/ கொன-ஸாகு3னா/
கோரிக்கை/ நிறைவேறுமா/
தொ3ங்க3/ மக3னி/ ப4க்தி/ மீர/ நம்மிதே/ மஞ்சி/
கள்ள/ புருடனை/ பற்று/ மிக/ நம்ப/ நல்/-
த்3ரோவ/ ஜூப/ நேர்சுனா/
வழி/ காட்ட/ நேருமா/
க3ங்க3/ லோனி/ ஒட3னு/ நம்மி/ ப4வ/
கங்கையில் (உள்ள)/ ஓடத்தை/ நம்பி/ பிறவி/
ஸாக3ரமு/ தா3ட/ வச்சுனா/
கடலை/ தாண்டல்/ ஆகுமா/
நங்க3 நாசுல/ ஸ1ரணமு/-அனுட/ சேத/
பாசாங்காக/ சரணம்/ என்ற/ உடன்/
அனங்கு3டு3/ ஞான/-உபதே3ஸ1மு/ ஜேஸுனா/ (ந)
அனங்கன்/ ஞான/ உபதேசம்/ செய்வானா/
சரணம் 2
பரம/ வந்த்4யகு/ பாலு/ பெருகு3/ போஸிதே/
முற்றும்/ வந்திக்கு/ பாலும்/ தயிரும்/ ஊட்டினால்/
சண்டி/ பாலு/ கலுக3/ நேர்சுனா/
தாய்/ பால்/ சுரக்க/ நேருமா/
நெர/ த4னமுலு/ தா3யாது3லகு/-இச்சிதே/
மிக்கு/ செல்வம்/ பங்காளிகளுக்கு/ ஈய்ந்தாலும்/
நெனரு/ மாட/ கல்கு3னா/
கனிவான/ சொல்/ கிடைக்குமா/
எருவு/ வேஸி/-ஊஸர/ பூ4மி/ வித்திதே/
எருவு/ இட்டு/ உவர்/ நிலத்தில்/ விதைத்தால்/
ஏமைன/ ப2லிஞ்சுனா/
ஏதும்/ விளையுமா/
வரமைன/ பேரு/ கலுகு3/ க3ங்க3-ராவிகி/
சிறந்த/ பெயர்/ உடைய/ பூவரசத்திற்கு/
வந்த3னமு/-ஒனரிஞ்சிதே/ ப்3ரோவ/ நேர்சுனா/ (ந)
வந்தனம்/ செய்தால்/ அருள்/ புரியுமா/
சரணம் 3
ஸொக3ஸைன/ பூ3ருகு3லனு/ பெஞ்சிதே/
சொகுசான/ இலவமரத்தினை/ வளர்த்தால்/
ஸு-ரஸ/ ப2லமுலு/-இச்சுனா/
சாறு நிறை/ பழங்கள்/ தருமா/
பா4க்3யமு/ க3ல/ திருமஞ்ஜன/ விப4வமு/
பேறு/ நிறை/ திருமஞ்சன/ விபவம்/
பரிசாரகுலகு/-அப்3பு3னா/
ஏவலாளிகளுக்கு/ நண்ணுமா/
ராக3/ லோப4முலதோ/ தபமு/ ஜேஸிதே/
பற்று (மற்றும்)/ கஞ்சத்தனங்களுடன்/ தவம்/ இயற்ற/
பர/ க3தி/ கலுக3/ நேர்சுனா/
பர/ கதி/ கிடைக்க/ நேருமா/
த்யாக3ராஜ/ ஸன்னுத/ ஸத்3-கு3ண/
தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/ நற்குணத்தோனே/
ஸத்ய/ ஸ்வரூப/ நிர்விகார/ பராத்பர/ (ந)
மெய்/ உருவத்தோனே/ மாற்றமற்றோனே/ பராபரனே/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - நம்மி - நம்ம
6 - ஸ1ரணமனுட - ஸ1ரணனுட
9 - ஊஸர பூ4மி - ஊஷர பூ4மி : 'ஊஸர' என்பது 'ஊஷர' என்ற வடமொழி சொல்லின் தெலுங்கு திரிபு.
13 - பரிசாரகுலகப்3பு3னா - பரிசாரகுலப்3பு3னா : 'பரிசாரகுலகப்3பு3னா' என்பதுதான் சரியாகும்
Top
மேற்கோள்கள்
விளக்கம்
2 - கொங்க3வண்டி த்4யானமு - நாரை, மீன் பிடிக்கவேண்டி, அசையாமல் நீரில் நிற்கின்றது. அப்படி சுயநலத்திற்காகவும், வெளியுலகுக்காகவும் தியானிப்பதனால் தனது நிசமான கோரிக்கைகள் எங்ஙனம் ஈடேறும் என்று தியாகராஜர் கேட்கிறார்.
3 - தொ3ங்க3 மக3னி - தெலுங்கில் 'தொ3ங்க3' என்ற சொல்லுக்கு 'திருடன்' என்று பொருள். இதனை வைத்து, சில புத்தகங்களில் 'திருட்டுத் தொழிலுடைய கணவன்' என்ற பொருள் கொள்ளப் பட்டுள்ளது. ஆனால் 'தொ3ங்க3 மக3டு3' என சேர்த்துத்தான் பொருள் கொள்ளவேண்டும். 'தொ3ங்க3 மக3டு3' என்பதற்கு 'கள்ள புருஷன்' என்று பொருள்.
இந்து மதத்தில் தாம்பத்திய உறவு, பிறவிப்பயனை யடைவதற்கு ஒரு சாதனமாக கருதப்படுகின்றது. 'துர்கா ஸப்த ஸ1தி'யில் (அர்க1லா ஸ்தோத்திரம், செய்யுள் 22) கூறப்படுவதாவது -
"கடினமான பிறவிக்கடலைத் தாண்டுதற்கு, இனியவளும், மனதறிந்து நடப்பவளுமாகிய உயர்ந்த குடும்பத்தில் பிறந்த மனைவியை அருள்வாய் எனக்கு."
அப்படியின்றி, வரம்பு மீறி நடக்கும் பெண்ணுக்கு, நல்வழி, கள்ளப் புருஷன் எங்ஙனம் காட்டமுடியும், என்று தியாகராஜர் கேட்கின்றார்.
Top
4- க3ங்க3 லோனி ஒட3 - 'ராம' எனும் நாமம் பிரணவத்திற்கு ஈடான, பிறவிக்கடலைத் தாண்டுவிக்கும் 'ஓடம்' (தாரகம்) எனப்படும். எனவே, கங்கையிலுள்ள ஓடம், எப்படி பிறவிக் கடலைத் தாண்டுவிக்கும் என்று தியாகராஜர் கேட்கின்றார்.
5 - நங்க3 நாசுல - இந்த தெலுங்கு சொல்லுக்கு 'ஒன்றும் அறியாதது போன்று பாசாங்கு செய்தல்' என்று பொருள். புத்தகங்களில் கொடுக்கப்பட்டுள்ள 'தீய பெண்மணி' மற்றும் 'விலைமாது' என்ற பொருட்கள் சரியாகாது.
Top
7 - அனங்கு3டு3 ஞானோபதே3ஸ1மு ஜேஸுனா - மெய்யறிவு பெறுதற்கு குருவின் கருணை இன்றியமையாதது. தகுந்த சீடனுக்கே குரு உபதேசம் செய்வார். அங்ஙனமின்றி, சீடன் பாசாங்கு செய்தால், குருவின் கருணை கிடைக்காது. அதனால், ' அனங்கனா (காமன்) அவனுக்கு (சீடனுக்கு) உபதேசம் செய்வான்?' என்று தியாகராஜர் கேலியாகக் கேட்கின்றார்.
8 - தா3யாது3லகிச்சிதே - தன்னுடைய பங்காளிகளிடம் தியாகராஜர் மிகவும் துயரம் அனுபவித்ததனை பல கீர்த்தனைகளில் குறிப்பிடுகின்றார்.
Top
10 - க3ங்க3-ராவி - 'ராவி' என்ற தெலுங்கு சொல்லுக்கு 'அரச மரம்' என்று பொருள். 'ராவி' என்று வழங்கும் மற்றொரு மரம் 'க3ங்க3 ராவி'; தமிழில் இதனை 'பூவரசம்' என்று அழைப்பர். 'அரச மரம்' இந்து மதத்தினருக்கு மிகவும் உயர்ந்ததொன்று. அம்மரத்தினை, நமது பெண்டிர் பூசி்த்து, 'ஸௌமாங்கல்யம்' எனப்படும் தாம்பத்தியத்தின் சீரும் சிறப்பும் அடைவதாக நம்மவர் கருதுவர். ஆனால் 'பூவரச மரம்' எதற்கும் பயன்படாததோர் மரமாகும். பெயர் மட்டும் உயர்ந்ததாக இருந்தால், அதனால் பயன் கிடைக்காது என்பதற்கு, 'க3ங்க3 ராவி' ஒர் உதாரணம். இதனைத் தான் தியாகராஜர் சுட்டுகின்றார்.
அரச மரத்தினைப் பற்றி கீதையில் (அத்தியாயம் 10) கண்ணன் கூறுவது - "மரங்களில் நான் அரச மரம்."
மேலும், அத்தியாயம் 15-லும் (செய்யுள் 1) மற்றும் கடோபநிடதத்திலும் (II.iii.1) சம்சாரத்தினை தலைகீழாக (வேர் மேலும் கிளைகள் கீழும்) நிற்கும் அரசமரமென்று உதாரணம் கூறப்பட்டுள்ளது.
அரச மரத்தினைப் பற்றி மேலும் அறிய நோக்கவும்
Top
11 - பூ3ருகு3லனு - இலவமரத்திற்கு பழம் கிடையாது. தமிழில் 'இலவு காத்த கிளி' என்றொரு வழக்குண்டு. இலவங்காய் பழுக்குமென ஒர் கிளி காத்திருந்ததாம். அதனைத்தான் தியாகராஜர் குறிப்பிடுகின்றார். 'தவறானவர்களை அண்டினால் பயன் கிடைக்காது' என்று பல்லவியில் கூறப்பட்டதற்கு இஃதோர் விளக்கமாகும்.
12 - திருமஞ்ஜன விப4வமு - நாடகம் பார்ப்பவர்களுக்குக் கிடைக்கும் ஆனந்தம் நடிகருக்குக் கிடையாது. ஓர் தொழில் போன்று, இறைவனுக்குத் திருமஞ்சனம் செய்விப்போரைவிட, அந்த காட்சியினைக் காண்பவருக்குத்தான் பேறு என்று தியாகராஜர் கூறுகின்றார்.
வந்தி - மலடி
விபவம் - மகத்துவம்
ஏவலாளிகள் - திருமஞ்சன நீராட்டுவோர் முதலானோர்
பர கதி - மோக்கம்
Top
Updated on 16 Feb 2009
No comments:
Post a Comment