ராம கதா2 ஸுதா4 ரஸ பானமொக
ராஜ்யமு ஜேஸுனே
அனுபல்லவி
பா4மா மணி ஜானகி ஸௌமித்ரி
1ப4ரதாது3லதோ பூ4மி வெலயு 2ஸ்ரீ (ராம)
சரணம்
3த4ர்மாத்3யகி2ல ப2லத3மே மனஸா
தை4ர்யானந்த3 ஸௌக்2ய நிகேதனமே
கர்ம ப3ந்த4 ஜ்வலனாப்3தி4 4நாவமே
5கலி ஹரமே த்யாக3ராஜ வினுதுட3கு3 (ராம)
பொருள் - சுருக்கம்
மனமே!
- வனிதையருள் மணியாகிய சானகி, இலக்குவன், பரதன் முதலானோருடன் புவியில் விளங்கும், தியாகராசனால் போற்றப் பெற்றோனாகிய, இராமனின் காதையெனும் அமிழ்தச் சாற்றினைப் பருகலோர் அரசாட்சியாகுமே!
- அறம் முதலாக அனைத்து பயன்களையுமளிக்குமே;
- தைரியம், ஆனந்தம் மற்றும் சௌக்கியத்தின் இருப்பிடமாகுமே;
- கருமங்களினால் கட்டுண்ட எரிகடலைக் கடக்கும் படகாகுமே;
- கலியினை வெல்லுமே.
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ராம/ கதா2/ ஸுதா4/ ரஸ/ பானமு/-ஒக/
இராமனின்/ காதையெனும்/ அமிழ்த/ சாற்றினை/ பருகல்/ ஓர்
ராஜ்யமு/ ஜேஸுனே/
அரச/ ஆட்சியாகுமே/
அனுபல்லவி
பா4மா/ மணி/ ஜானகி/ ஸௌமித்ரி/
வனிதையருள்/ மணியாகிய/ சானகி/ சுமித்திரையின் மகன் (இலக்குவன்)/
ப4ரத/-ஆது3லதோ/ பூ4மி/ வெலயு/ ஸ்ரீ/ (ராம)
பரதன்/ முதலானோருடன்/ புவியில்/ விளங்கும்/ திரு/ இராமனின்...
சரணம்
த4ர்ம/-ஆதி3/-அகி2ல/ ப2லத3மே/ மனஸா/
அறம்/ முதலாக/ அனைத்து/ பயன்களையுமளிக்குமே/ மனமே/
தை4ர்ய/-ஆனந்த3/ ஸௌக்2ய/ நிகேதனமே/
தைரியம்/ ஆனந்தம் (மற்றும்)/ சௌக்கியத்தின்/ இருப்பிடமாகுமே/
கர்ம/ ப3ந்த4/ ஜ்வலன/-அப்3தி4/ நாவமே/
கருமங்களினால்/ கட்டுண்ட/ எரி/ கடலில் (கடக்கும்)/ படகாகுமே/
கலி/ ஹரமே/ த்யாக3ராஜ/ வினுதுட3கு3/ (ராம)
கலியினை/ வெல்லுமே/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனாகிய/ இராமனின்...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - ஸ்ரீ - சீதா.
Top
மேற்கோள்கள்
1 - ப4ரதாது3லதோ - வால்மீகி ராமாயணம், பால காண்டம், அத்தியாயம் 13-ன் படி, ராமன், விஷ்ணுவின் பகுதியாகவும், பரதன் கால் பகுதியாகவும், லக்ஷ்மணன் மற்றும் சத்துருக்கினன் (ஒவ்வொருவரும்) எட்டிலோர் பாகமாகவும் பிறந்தனர். வாலி, சுக்கிரீவன், அனுமன் முதலான வானரங்கள், தேவர்கள் மற்றும் இருடிகளின் மக்களாவர்.
5 - கலி ஹரமே - அரி பஜனையின் ஓர் செய்யுளில் கூறப்படுவதனை தியாகராஜர் இங்கு சுருக்கமாகக் கூறுகின்றார் -
"இந்த கலியில், மனத்தினால் களங்கப்பட்டவர்களும், தவறான முறையில் ஈட்டப்பட்ட செல்வத்தில் வாழ்பவர்களும், சாத்திரங்களில் கூறப்பட்ட கடமைகளின் வரம்பு மீறி நடப்பவர்களும், தங்களை கோவிந்தனின் நாமத்தினைப் பகர்வதனால் மட்டுமே காத்துக்கொள்ள முடியும்". (தமிழாக்கம்)
Top
விளக்கம்
3 - த4ர்மாத்3யகி2ல - அறம் முதலாக - அறம், பொருள், இன்பம், வீடு எனப்படும் புருஷார்த்தங்கள்
4 - நாவமே - 'ராம' என்னும் பெயர் 'ஓம்' எனும் பிரணவத்திற்கீடான பிறவிக் கடலைத் தாண்டுவிக்கும் படகாகும்.
கருமங்களினால் கட்டுண்ட எரி கடல் - புவி வாழ்வெனும் கடல்
Top
Updated on 19 Feb 2009
No comments:
Post a Comment