முச்சட ப்3ரஹ்மாது3லகு தொ3ரகுனா
1முதி3தலார ஜூதாமு ராரே
அனுபல்லவி
பச்சனி தே3ஹினி பரம பாவனினி
பார்வதினி தலசுசுனு ஹருடே3கெ3டு3 (மு)
சரணம்
சரணம் 1
2சில்லர வேல்புல ரீதி நருல கர
பல்லவமுலனு தளுக்கனுசு பி3ருது3-
லெல்ல மெரய நிஜ ப4க்துலு பொக3ட3க3
உல்லமு ரஞ்ஜில்ல
தெல்லனி மேனுன நிண்டு3 ஸொம்முலதோ
மல்லெ ஹாரமுலு மரி ஸோ1பி4ல்லக3
சல்லனி வேள ஸகல நவ-ரத்னபு
பல்லகிலோ வேஞ்சேஸி வச்சு (மு)
சரணம் 2
ஹிதமைன ஸகல நைவேத்3யம்பு3ல
ஸம்மதமுன அடு3க3டு3கு3காரகி3ம்புசு
மிதமு லேனி உபசாரமுலதோ-
நதி ஸந்தோஷமுன ஸததமு
ஜப தபமுலனொனரிஞ்சு
நத ஜனுலகபீ4ஷ்டமுலவ்வாரிக3
வெதகி3யொஸகு3து3னனுசு பஞ்ச நதீ3
பதி வெட3லி ஸொக3ஸு மீரக3 வச்சு (மு)
சரணம் 3
பா4க3வதுலு ஹரி நாம கீர்தனமு
பா3கு3க3 ஸு-ஸ்வரமுலதோ விந்த
ராக3முலனாலாபமு ஸேயு
வைபோ4க3முலனு ஜூசி
நாக3 பூ4ஷணுடு3 கருணா நிதி4யை
வேக3மு ஸகல ஸு-ஜன ரக்ஷணமுன
ஜாக3-ரூகுடை3 கோர்கெலனொஸகு3
3த்யாக3ராஜு தானனுசுனு வச்சு (மு)
பொருள் - சுருக்கம்
பெண்டிரே!
- பச்சை மேனியள், முற்றிலும் தூயவள், பார்வதியை நினைத்துக்கொண்டு, அரன் எழுந்தருளும் காட்சி, பிரமன் முதலானோருக்கும் கிடைக்குமா?
- சில்லறைக் கடவுளர் போன்று, மனிதர்களின் கைகளில் தளுக்கென விருதுகள் எல்லாம் ஒளிர,
- உண்மையான தொண்டர்கள் போற்ற உள்ளம் மகிழ,
- வெண்மேனியில், நிறைய அணிகலன்களுடன், மல்லிகை மாலைகளும் சோபிக்க,
- இதமான, அனைத்து படையல்களையும், முழு மனதுடன், ஒவ்வோரடியிலும் ஏற்றுக்கொண்டு,
- அளவற்ற உபசரணைகளுடனும், மிக்குக் களிப்புடனும்,
- 'எவ்வமயமும் செப, தவங்களியற்றும் பணிந்தோருக்கு, வேண்டியவற்றை ஏராளமாக, தேடி வழங்குவாம்' என,
- பாகவதர்கள் அரி நாம கீர்த்தனங்களை நன்காக, இனிய சுரங்களுடன், புதுமையான ராகங்களில் ஆலாபனை செய்யும் வைபோகத்தினைக் கண்டு,
- அரவணிந்தோன், கருணைக் கடலாய், விரைவாக, அனைத்து நல்லோரையும் பேணுதற்கு, விழிப்புடையோனாய்,
குளிர்ந்த வேளையில், அனைத்து நவரத்தினப் பல்லக்கியில் எழுந்தருளி வரும் காட்சி, பிரமன் முதலானோருக்கும் கிடைக்குமா?
திருவைய்யாற்று ஈசன் புறப்பட்டு, சொகுசு மிக, வரும் காட்சி, பிரமன் முதலானோருக்கும் கிடைக்குமா?
'கோரிக்கைகளை வழங்கும் தியாகராசன் யாமே'யென, வரும் காட்சி, பிரமன் முதலானோருக்கும் கிடைக்குமா?
காண்போம், வாரீர்!
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
முச்சட/ ப்3ரஹ்மா/-ஆது3லகு/ தொ3ரகுனா/
காட்சி/ பிரமன்/ முதலானோருக்கும்/ கிடைக்குமா/
முதி3தலார/ ஜூதாமு/ ராரே/
பெண்டிரே/ காண்போம்/ வாரீர்/
அனுபல்லவி
பச்சனி/ தே3ஹினி/ பரம/ பாவனினி/
பச்சை/ மேனியள்/ முற்றிலும்/ தூயவள்/
பார்வதினி/ தலசுசுனு/ ஹருடு3/-ஏகெ3டு3/ (மு)
பார்வதியை/ நினைத்துக்கொண்டு/ அரன்/ எழுந்தருளும்/ காட்சி...
சரணம்
சரணம் 1
சில்லர/ வேல்புல/ ரீதி/ நருல/
சில்லறை/ கடவுளர்/ போன்று/ மனிதர்களின்/
கர பல்லவமுலனு/ தளுக்கு-அனுசு/ பி3ருது3லு/-
கைகளில்/ தளுக்கென/ விருதுகள்/
எல்ல/ மெரய/ நிஜ/ ப4க்துலு/ பொக3ட3க3/
எல்லாம்/ ஒளிர/ உண்மையான/ தொண்டர்கள்/ போற்ற/
உல்லமு/ ரஞ்ஜில்ல/
உள்ளம்/ மகிழ/
தெல்லனி/ மேனுன/ நிண்டு3/ ஸொம்முலதோ/
வெண்/ மேனியில்/ நிறைய/ அணிகலன்களுடன்/
மல்லெ/ ஹாரமுலு மரி/ ஸோ1பி4ல்லக3/
மல்லிகை/ மாலைகளும்/ சோபிக்க/
சல்லனி/ வேள/ ஸகல/ நவ-ரத்னபு/
குளிர்ந்த/ வேளையில்/ அனைத்து/ நவரத்தின/
பல்லகிலோ/ வேஞ்சேஸி/ வச்சு/ (மு)
பல்லக்கியில்/ எழுந்தருளி/ வரும்/ காட்சி...
சரணம் 2
ஹிதமைன/ ஸகல/ நைவேத்3யம்பு3ல/
இதமான/ அனைத்து/ படையல்களையும்/
ஸம்மதமுன/ அடு3கு3-அடு3கு3கு/-ஆரகி3ம்புசு/
முழு மனதுடன்/ ஒவ்வோரடியிலும்/ ஏற்றுக்கொண்டு/
மிதமு லேனி/ உபசாரமுலதோனு/-
அளவற்ற/ உபசரணைகளுடனும்/
அதி/ ஸந்தோஷமுன/ ஸததமு/
மிக்கு/ களிப்புடனும்/ 'எவ்வமயமும்/
ஜப/ தபமுலனு/-ஒனரிஞ்சு/
செப/ தவங்கள்/ இயற்றும்/
நத ஜனுலகு/-அபீ4ஷ்டமுலு/-அவ்வாரிக3/
பணிந்தோருக்கு/ வேண்டியவற்றை/ ஏராளமாக/
வெதகி3/-ஒஸகு3து3னு/-அனுசு/ பஞ்ச நதீ3/
தேடி/ வழங்குவாம்'/ என/ திருவைய்யாற்று/
பதி/ வெட3லி/ ஸொக3ஸு/ மீரக3/ வச்சு/ (மு)
ஈசன்/ புறப்பட்டு/ சொகுசு/ மிக/ வரும்/ காட்சி...
சரணம் 3
பா4க3வதுலு/ ஹரி/ நாம/ கீர்தனமு/
பாகவதர்கள்/ அரி/ நாம/ கீர்த்தனங்களை/
பா3கு3க3/ ஸு-ஸ்வரமுலதோ/ விந்த/
நன்காக/ இனிய சுரங்களுடன்/ புதுமையான/
ராக3முலனு/-ஆலாபமு/ ஸேயு/
ராகங்களில்/ ஆலாபனை/ செய்யும்/
வைபோ4க3முலனு/ ஜூசி/
வைபோகத்தினை/ கண்டு/
நாக3/ பூ4ஷணுடு3/ கருணா/ நிதி4யை/
அரவு/ அணிந்தோன்/ கருணை/ கடலாய்/
வேக3மு/ ஸகல/ ஸு-ஜன/ ரக்ஷணமுன/
விரைவாக/ அனைத்து/ நல்லோரையும்/ பேணுதற்கு/
ஜாக3-ரூகுடை3/ கோர்கெலனு/-ஒஸகு3/
விழிப்புடையோனாய்/ 'கோரிக்கைகளை/ வழங்கும்/
த்யாக3ராஜு/ தானு/-அனுசுனு/ வச்சு/ (மு)
தியாகராசன்/ யாமே'/ யென/ வரும்/ காட்சி...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - முதி3தலார - முதி3துலார
2 - சில்லர வேல்புல ரீதி நருல - சல்லரே வேல்புல ரீதி விருல : பிற்குறிப்பிட்ட வேறுபாடு தவறாகும்
Top
மேற்கோள்கள்
விளக்கம்
1 - முதி3தலார - பெண்டிரே! - தியாகராஜர், யாரை 'பெண்டிரே' என்றழைக்கின்றார்? கண்ணனின் பரம பக்தையான மீராவின் வாழ்வில் ஓர் சம்பவம் -
"பிருந்தாவனத்தில் உள்ளது ஓர் ஆண்தான்.
பிருந்தாவனத்தில் நிறைய சாதுக்கள் வசித்து வந்தனர். அவர்களில் 'ஜீவ கோஸ்வாமி' என்பவரும் ஒருவர். அவர் மிக்கு கட்டுப்பாடுடன் வாழ்ந்தவர். அவரை ஒரு பெண்ணின் நிழல் கூட தொடக்கூடாது. அதனால் அவரைக் காண பெண்கள் யாரும் செல்லக் கூடாது. சைதன்ய தேவரின் பக்தி இயக்கத்தினில் சேர்ந்து பக்தி நெறியினை அவர் பரப்பிக் கொண்டிருந்தார்.
சாதுக்களிடம் மிக்குப் பரிவுடைய மீரா அப்பெரியவரைக் காணச் சென்றாள். அவருடைய ஆசிரமத்தின் வாயிலிலேயே அவருடை சீடரால் நிறுத்தப்பட்டாள் மீரா. 'ஸ்வாமிஜி பெண்களைப் பார்க்கமாட்டார்' என்று அந்த சீடர் கூறினார்.
மீரா அதனைச் செவிமடுத்து, நகைத்துச் சொன்னாள் 'பிருந்தாவனத்தில் கண்ணன் ஒருவன் தான் ஆண் மகன் என்று இதுவரை நினைத்திருந்தேன். அவனுக்கு ஒரு போட்டி இருப்பதை இப்போதுதான் உணர்கின்றேன்.' சீடன் இச்சொற்களைத் தனது குருவிடம் கூறியவுடன், அவருக்கு தன்னுடைய இதயத்தினை யாரோ கூர்ந்த ஈட்டியினால் குத்தியது போன்றுணர்ந்தார். குடிலிக்கு வெளியே வந்து, வெறுங்காலுடன் மீராவிடம் சென்று, அவளைக் குடிலுக்குள், அனைத்து மரியாதைகளுடன், அழைத்து வந்தார்.
பக்தி இயக்கத்தினில், மனைவி தன்னுடைய கணவனிடம் கொள்வது போன்ற காதல் இறைவனிடம் கொள்வது சிறந்ததாகக் கருதப்படுகின்றது. இந்நெறியில் உலகத்தில் உள்ள யாவரும் பெண்டிரே - இறைவன் ஒருவனே யாவருக்கும் கணவனாவான். பிருந்தாவனத்தில் யாவரும் கோபியரே - கண்ணன் ஒருவன்தான் ஆண். பால் பாகுபாடு தொண்டர்களுக்குள் கிடையாது." (தமிழாக்கம்) மீராவின் சரிதச் சுருக்கம்.
இதனையொட்டித்தான், அனைத்து பக்தர்களையும், கூட்டாக, 'பெண்டிரே' என்று தியாகராஜர் அழைக்கின்றார். அவருடை கீர்த்தனங்கள் பலவற்றில் இந்த அழைப்பினைக் காணலாம். முக்கியமாக திருவரங்கத்தினில் அவர் பாடிய 'ஜூதாமு ராரே' என்ற பாடல் குறிப்பிடத் தக்கது.
Top
2 - சில்லர வேல்புல ரீதி - சில்லரை தேவதைகள் போன்று - இறைவனுக்குக் குடை பிடித்தும், சாமரம் வீசியும், மற்ற அலங்காரப் பொருட்களை ஏந்தி, கோயில் சிப்பந்திகள் சொகுசாக ஆடைகளுடுத்தி வரும் காட்சி, சில்லரை தேவதைகள் வருவது போன்று தோன்றுவதாக தியாகராஜர் வருணிக்கின்றார்.
3 - த்யாக3ராஜு - இங்கு 'தியாகராஜ' என்பது சிவனைக் குறிக்கும்.
Top
Updated on 18 Feb 2009
No comments:
Post a Comment