Saturday, February 21, 2009

தியாகராஜ கிருதி - விநாயகுனி - ராகம் மத்4யமாவதி - Vinaayakuni - Raga Madhyamavati

பல்லவி
வினாயகுனி வலெனு ப்3ரோவவே நினு
வினா வேல்புலெவரம்மா

அனுபல்லவி
அனாத2 ரக்ஷகி ஸ்ரீ காமாக்ஷி
ஸு-ஜனாக4 மோசனி ஸ1ங்கரி ஜனனி (வி)

சரணம்
சரணம் 1
1நராத4முலகுனு வராலொஸக3-
2நுண்ட்3ரமுலை பூ4-ஸுராதி3 தே3வதலு
3ராயிடி3னி ஜெந்த3 ராது33
ஜூட3 ராதா3 4காஞ்சீ புராதி3 நாயகி (வி)


சரணம் 2
5பிதாமஹுடு3 ஜன ஹிதார்த2மை
நின்னு தா தெலிய வேட3 தாளிமி க3
அவதாரமெத்தியிகனு தாமஸமு
ஸேய தாள ஜாலமு நதார்தி ஹாரிணி (வி)


சரணம் 3
புரான த3யசே 6கி3ராலு மூகுனிகி
ரா ஜேஸி
ப்3ரோசு ராஜ த4ரி
த்யாக3ராஜுனி ஹ்ரு237ஸரோஜமேலின
ராம ஸோத3ரி 8பரா ஸ1க்தி நனு (வி)


பொருள் - சுருக்கம்
    அனாதைகளைக் காப்பவளே! காமாட்சி! நல்லோர் பாவம் களைபவளே! மங்களமருளும் தாயே! காஞ்சிபுரத் தலைவியே! பணிந்தோர் துயர் களைபவளே! பிறையணிபவளே! தியாகராசனின் இதயக் கமலத்தினை யாளும் இராமனின் சோதரியே! பரா சக்தியே!

  • உன்னையன்றி கடவுளர் யாரம்மா?

  • மனிதரில் இழிந்தோருக்கு (நீ) வரங்களளிக்க, வெந்து, அந்தணரும், தேவர்கள் மற்றோரும் துயருறலாகாது; தயை செய்யலாகாதா?

  • தாதை, மக்களின் நன்மைக்காக, உன்னைத் தானறிய வேண்ட, அமைதியான வடிவெடுத்து, இனியும் தாமதம் செய்தால் தாளவியலோம்;

  • முன்பு, தயவுடன், பேச்சு மூங்கைக்கு வரச்செய்தருளினாய்;

  • என்னை விநாயகனைப் போன்று காப்பாயம்மா.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
வினாயகுனி/ வலெனு/ ப்3ரோவவே/ நினு/
விநாயகனை/ போன்று/ காப்பாயம்மா/ உன்னை/

வினா/ வேல்புலு/-எவரு/-அம்மா/
அன்றி/ கடவுளர்/ யார்/ அம்மா/


அனுபல்லவி
அனாத2/ ரக்ஷகி/ ஸ்ரீ காமாக்ஷி/
அனாதைகளை/ காப்பவளே/ ஸ்ரீ காமாட்சி/

ஸு-ஜன/-அக4/ மோசனி/ ஸ1ங்கரி/ ஜனனி/ (வி)
நல்லோர்/ பாவம்/ களைபவளே/ மங்களமருளும்/ தாயே/


சரணம்
சரணம் 1
நர/-அத4முலகுனு/ வராலு/-ஒஸக3னு/-
மனிதரில்/ இழிந்தோருக்கு/ (நீ) வரங்கள்/ அளிக்க/

உண்ட்3ரமுலை/ பூ4-ஸுர/-ஆதி3/ தே3வதலு/
வெந்து/ அந்தணரும்/ மற்றோரும்/ தேவர்கள்/

ராயிடி3னி/ ஜெந்த3 ராது3/ த3ய/
துயர்/ உறலாகாது/ தயை/

ஜூட3 ராதா3/ காஞ்சீ/ புர/-ஆதி3 நாயகி/ (வி)
செய்யலாகாதா/ காஞ்சி/ புர/ தலைவியே/


சரணம் 2
பிதாமஹுடு3/ ஜன/ ஹித-அர்த2மை/
தாதை/ மக்களின்/ நன்மைக்காக/

நின்னு/ தா/ தெலிய/ வேட3/ தாளிமி க3ல/
உன்னை/ தான்/ அறிய/ வேண்ட/ அமைதியான/

அவதாரமு/-எத்தி/-இகனு/ தாமஸமு/
வடிவு/ எடுத்து/ இனியும்/ தாமதம்/

ஸேய/ தாள/ ஜாலமு/ நத/-ஆர்தி/ ஹாரிணி/ (வி)
செய்தால்/ தாள/ இயலோம்/ பணிந்தோர்/ துயர்/ களைபவளே/


சரணம் 3
புரான/ த3யசே/ கி3ராலு/ மூகுனிகி/
முன்பு/ தயவுடன்/ பேச்சு/ மூங்கைக்கு/

ரா ஜேஸி/ ப்3ரோசு/ ராஜ/ த4ரி/
வரச்செய்து/ அருளிய/ பிறை/ அணிபவளே/

த்யாக3ராஜுனி/ ஹ்ரு23ய/ ஸரோஜமு/-ஏலின/
தியாகராசனின்/ இதய/ கமலத்தினை/ யாளும்/

ராம/ ஸோத3ரி/ பரா/ ஸ1க்தி/ நனு/ (வி)
இராமனின்/ சோதரியே/ பரா/ சக்தியே/ என்னை/ விநாயகனை..


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - உண்ட்3ரமுலை - எல்லா புத்தகங்களிலும் 'உண்ட3ராமுலை' என கொடுக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் அப்படிப்பட்ட சொல் ஏதும் இருப்பதாகத் தோன்றவில்லை. கிட்டத்தட்ட அதேமாதிரி சொற்களாவன - 'உண்ட்3ரமு' மற்றும் 'உண்ட்3ராயி'. இது தமிழில் 'கொழுக்கட்டை' என்று அழைக்கப்படும், விநாயகருக்குப் பிரியமான இனிப்புப் பண்டம். இது அரிசி மாவினால் செய்து இட்லி மாதிரி வேகவைப்படுவது. விநாயகரைப் பற்றிக் கூறும் இந்த பாடலில், தியாகராஜர், இந்த பண்டத்தின் பெயரை கேலியாகவும், ஆயின் பொருத்தமாகவும் பயன்படுத்துகின்றார்.

3 - ராயிடி3னி - எல்லா புத்தகங்களிலும் 'ராயடி3னி' என்று கொடுக்கப்பட்டுள்ளது. சரியான தெலுங்கு சொல் 'ராயிடி3னி' யாகும்.

Top

6 - கி3ராலு மூகுனிகி ரா ஜேஸி - எல்லா புத்தகங்களிலும் 'கி3ராலு மாகுனிகி ரா ஜேஸி' என்று கொடுக்கப்பட்டுள்ளது. 'கி3ராலு' என்றால் 'பேச்சு' என்று பொருள்படும்; 'மாகு' என்ற தெலுங்கு சொல்லுக்கு 'மரம்' என்று பொருள். 'மூக' என்ற வடமொழி, மற்றும் தெலுங்கு சொல்லுக்கு 'ஊமை' என்று பொருள். காமாட்சி 'மூக கவி' என்ற ஊமைக்குப் பேசும் திறனருளி அவனை பெரும் தொண்டனாகவும் கவியாகவும் மாற்றியதாக காஞ்சியின் தல வரலாறு கூறும். எனவே இங்கு சரியான சொல் 'மூகுனிகி' ஆகும் 'மாகுனிகி' அல்ல.

மூக பஞ்ச ஸ1தி

மூக கவியினைப் பற்றி காஞ்சி மாமுளிவரின் விளக்கம்.

முத்துஸ்வாமி தீட்சிதர் தமது 'ஸ்ரீ கமலாம்பி3கயா கடாக்ஷிதோஹம்' என்ற சங்கராபரண கீர்த்தனையில் கூறுவது 'ஊமைக்குப் பேச்சு அருளியவளே' என்று;

ஸௌந்தர்ய லஹரியில் (செய்யுள் 98) 'ஊமையையும் கவியாக்கும் காரணத்தினால்...' என்று கூறப்படுகின்றது.

7- ஸரோஜமேலின - ஸரோஜமேலைன : 'ஸரோஜமேலின' என்பது சரியாகும்.

Top

மேற்கோள்கள்
8 - பரா ஸ1க்தி - இது அம்பாளின் ஒரு சிறப்பான பெயராகும். லலிதா ஸஹஸ்ரநாமத்தினில் அம்பாளுக்கு 'பரா', 'பஸ்1யந்தி', 'மத்4யமா' 'வைக2ரீ' என்ற பெயர்களுண்டு. 'வைக2ரீ' என்பது நம் வாயிலிருந்து ஒலியாக வெளிப்படும் சொல்லின் வடிவமாகும். இங்ஙனம் ஓலி வடிவமாக வெளிப்படுவதற்கு முன், 'பரா', 'பஸ்1யந்தி', 'மத்4யமா' என்ற மூன்று நிலைகள் உள்ளதாக சான்றோர் கூறுவர். இது குறித்து காஞ்சி மாமுனிவரின் விளக்கம் நோக்குக.

Top

விளக்கம்
1 - நராத4முலகுனு வராலொஸக3 - 'இழிந்தோருக்கு வரங்களளிக்க' - என்று எந்த நிகழ்ச்சியினை தியாகராஜர் குறிப்பிடுகின்றார் என்று தெரியவில்லை.

4 - காஞ்சீ புராதி3 நாயகி - 'காஞ்சீ புர ஆதி3 நாயகி' - காமாட்சி காஞ்சீபுரத்திற்கு தலையாய கடவுள் என புராணங்கள் கூறும். எனவே இந்த அடைமொழி 'காஞ்சீ புர அதி4 நாயகி' என்றிருக்கவேண்டும் என எனது சிற்றறிவிற்குத் தோன்றுகின்றது. ஆனால், எல்லா புத்தகங்களிலும் 'காஞ்சீ புர ஆதி3 நாயகி' என்று கொடுக்கப்பட்டுள்ளதால் அங்ஙனமே இங்கும் கொடுக்கப்பட்டது.

5 - பிதாமஹுடு3 - தாதை, மக்களின் நன்மைக்காக, உன்னைத் தானறிய வேண்ட, அமைதியான வடிவெடுத்து... - முன்னொரு காலத்தில், காமாட்சி, மிகவும் கொடுங்கோப வடிவுடை காளியாக இருந்ததாக தல வரலாறு கூறும். இந்த கோபத்தினை ஆதி சங்கராச்சாரியார், ஸ்ரீசக்ரம் அமைத்து, சாந்தப் படுத்தியதாக சில இடங்களில் கூறப்படுகின்றது. காமாட்சியை, துர்வாச முனிவரும், பிரமனும் வழிபட்டதாகவும் கூறப்படும். இது குறித்து முரண்பாடான கருத்துக்கள் உள்ளன. கீழ்க்கண்ட வலைத்தளங்களை நோக்கவும்.
kAmAkshi-1;
kAmAkshi-2;
kAmAkshi-3;
kAmAkshi-4;
kAmAkshi-5.

தாதை - பிரமன்

மூங்கை - ஊமை
Top


Updated on 22 Feb 2009

2 comments:

Govindaswamy said...

திரு கோவிந்தன் அவர்களே
 
சரணம் 1 ல் நராதமுலகுனு  என்பதில் இறுதியில் உள்ள ‘கு’ என்பது இழிந்தோருக்கும் என்று பொருள் தராதா? 
உண்ட்ரமு என்பது கொழுக்கட்டை மாவை வேறெதுவும் சேர்க்காது உருண்டைகளாக்கி வேகவைத்துச் செய்யப்படுவது. இதற்குத் தமிழில் பெயர் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
 
இழிந்தோருக்கும் நீ வரங்களளிக்க அந்தணரும் தேவர்களும் கொழுக்கட்டையைப் போல (வெந்து) துயருறலாகாது என்று பொருளா.
 
சரணம் 2 ல் அவதாரமு எத்தி என்பது எதனோடு சேருகிறது.
வணக்கம்
கோவிந்தசாமி

V Govindan said...

திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,

'நாரத4முலகுனு' - நீங்கள் கூறுவது சரியே.

கொழுக்கட்டை நோக்கவும்.

சரணம் 1 - நீங்கள் கூறிய பொருள் சரியே. ஆனால் அதில் 'கொழுக்கட்டை போல்' என்று நான் கொடுக்கவில்லை.

இரண்டாவது சரணத்தில் 'அவதாரமு எத்தி' என்பது 'தாளிமிக3ல' என்பதுடன் சேரும்.

வணக்கம்
கோவிந்தன்