Showing posts with label Darbaaru Raga. Show all posts
Showing posts with label Darbaaru Raga. Show all posts

Thursday, January 22, 2009

தியாகராஜ கிருதி - ராம லோப4மேல - ராகம் த3ர்பா3ரு - Rama Lobhamela - Raga Darbaaru

பல்லவி
ராம லோப4மேல நனு
ரக்ஷிஞ்சுபட்ல நீகிந்த ஸ்ரீ (ராம)

அனுபல்லவி
ஸோமார்க லோசன ஸுகு3ண
ஸுத்ராமாது3லெல்ல நவ்வரா (ராம)

சரணம்
சரணம் 1
ஸ1ரணனுகொன்ன 1காகாஸுருனி 2ராவணுனி
ஸோத3ருனி
ப்3ரோவ லேதா3 ஸரகு3ன கரினி காசின ஸ்ரீ (ராம)

சரணம் 2
க3தி லேனி வேள 3த்3ரௌபதி3 4வேக3மே க்ரு2ஷ்ணாயன
அதி ப்ரேமதோ வேஞ்சேஸின மதி நேடெ3ந்து3 போயெனோ (ராம)

சரணம் 3
5டே3க3கை மேனொஸங்கு3 ராக4வான்வயமுன
பா3க3 ஜன்மிஞ்சின த்யாக3ராஜ நுத ஸ்ரீ (ராம)


பொருள் - சுருக்கம்
இராமா! மதி, பரிதிக் கண்களோனே! நற்குணத்தோனே! உடனே கரியைக் காத்த இராமா! பருந்துக்கு உடலளிக்கும், இரகு குலத்தில் சிறக்கத் தோன்றிய, தியாகராசனால் போற்றப் பெற்ற இராமா!
  • கஞ்சத்தனமேன் இத்தனை, என்னைக் காப்பதென்றாலுனக்கு?

  • இந்திரன் முதலான யாவரும் நகைப்பரன்றோ?

  • தஞ்சமென்ற காகாசுரனை, இராவணனின் சோதரனைக் காக்கவில்லையா?

  • போக்கற்ற வேளை, துரோபதை 'கண்ணா'யென, மிக்கன்புடன் விரைவாக எழுந்தருளிய உள்ளமின்றெங்கு போனதோ?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ராம/ லோப4மு/-ஏல/ நனு/
இராமா/ கஞ்சத்தனம்/ ஏன்/ என்னை/

ரக்ஷிஞ்சுபட்ல/ நீகு/-இந்த/ ஸ்ரீ/ (ராம)
காப்பதென்றால்/ உனக்கு/ இத்தனை/ ஸ்ரீ/ ராமா...


அனுபல்லவி
ஸோம/-அர்க/ லோசன/ ஸுகு3ண/
மதி/ பரிதி/ கண்களோனே/ நற்குணத்தோனே/

ஸுத்ராம/-ஆது3லு/-எல்ல/ நவ்வரா/ (ராம)
இந்திரன்/ முதலான/ யாவரும்/ நகைப்பரன்றோ/


சரணம்
சரணம் 1
ஸ1ரணு/-அனுகொன்ன/ காக/-அஸுருனி/ ராவணுனி/
தஞ்சம்/ என்ற/ காக்கை/ அசுரனை/ இராவணனின்/

ஸோத3ருனி/ ப்3ரோவ லேதா3/ ஸரகு3ன/ கரினி/ காசின/ ஸ்ரீ/ (ராம)
சோதரனை/ காக்கவில்லையா/ உடனே/ கரியை/ காத்த/ ஸ்ரீ/ ராமா...


சரணம் 2
க3தி/ லேனி/ வேள/ த்3ரௌபதி3/ வேக3மே/ க்ரு2ஷ்ணா/-அன/
போக்கு/ அற்ற/ வேளை/ துரோபதை/ விரைவாக/ 'கண்ணா'/ யென

அதி/ ப்ரேமதோ/ வேஞ்சேஸின/ மதி/ நேடு3/-எந்து3/ போயெனோ/ (ராம)
மிக்கு/ அன்புடன்/ எழுந்தருளிய/ உள்ளம்/ இன்று/ எங்கு/ போனதோ/


சரணம் 3
டே3க3கை/ மேனு/-ஒஸங்கு3/ ராக4வ/-அன்வயமுன/
பருந்துக்கு/ உடல்/ அளிக்கும்/ இரகு/ குலத்தில்/

பா3க3/ ஜன்மிஞ்சின/ த்யாக3ராஜ/ நுத/ ஸ்ரீ/ (ராம)
சிறக்க/ தோன்றிய/ தியாகராசனால்/ போற்றப் பெற்ற/ ஸ்ரீ/ ராமா...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்
1 - காகாஸுருனி - காகாசுரன் - காக்கையுருவ அரக்கன் - வால்மீகி ராமாயணம் - ஸுந்தர காண்டம் - அத்தியாயம் 38 நோக்குக.

2 - ராவணுனி ஸோத3ருனி - இராவணனின் சோதரன் - விபீடணன் - வால்மீகி ராமாயணம் - யுத்த காண்டம் - அத்தியாயம் 18 நோக்குக.

3 - த்3ரௌபதி3 - துரோபதை - ஐம்பாண்டவர் இல்லாள் - மகாபாரதம் - மூன்றாவது புத்தகம் - வன பர்வம் - த்3ரௌபதி3 ஹரண பர்வம் - அத்தியாயம் 261 நோக்குக.

5 - டே3க3கை மேனொஸங்கு3 - பருந்துக்கு உடலளித்த - சிபி - இராமனின் முன்னோர் - வால்மீகி ராமாயணம் - அயோத்தியா காண்டம் - அத்தியாயம் 12, (செய்யுள் 43) மற்றும் யுத்த காண்டம் - அத்தியாயம் 18 (செய்யுள் 24-25) நோக்குக.
மகாபாரதத்திலும் இக்கதை காணப்படுகின்றது - சிபியும் பருந்தும்-1; சிபியும் பருந்தும்-2. இக்கதையின் சீன, ஜப்பானிய மாற்றங்கள்

Top

விளக்கம்
4 - வேக3மே - விரைவாக - இச்சொல் தோன்றும் இடத்தை நோக்கில், துரோபதையை குறிக்கவேண்டும். ஆனால் இத்தருணத்தில் (context), 'விரைவாக' துரோபதையின் மானத்தைக் காத்த இறைவனுக்கு மிக்கு பொருந்தும்.

கரியைக் காத்த - கஜேந்திரனை மீட்டது

Top


Updated on 22 Jan 2009

Sunday, January 18, 2009

தியாகராஜ கிருதி - ராமாபி4ராம ரமணீய - ராகம் த3ர்பா3ரு - Ramaabhirama Ramaneeya - Raga Darbaaru

பல்லவி
ராமாபி4ராம ரமணீய நாம
1ஸாமஜ ரிபு பீ4ம ஸாகேத தா4ம (ரா)

சரணம்
சரணம் 1
வனஜ லோசன 2நீ வலனயலஸிதினி
மனஸுன த3ய லேது3 அல்லாடி3
ப2லமேமி (ரா)

சரணம் 2
3மனஸு செலி நீகே மருலுகொன்னதி3 கானி
சனுவுன 4செயி பட்டி மமுல ரக்ஷிம்பவு (ரா)

சரணம் 3
கோரி கோரி நின்னு கொலுவக3 நீ
தா3ரி வேரைனதி3 தா4த 5வ்ராலேமோ (ரா)

சரணம் 4
கமனீயமகு3 பான்பு காவிஞ்சிதினந்து3
ரமியிம்பக நன்னு ரச்ச 6ஜேஸெத3வு (ரா)

சரணம் 5
தி3க்கு நீவனி நேனு தி3ன தி3னமுனு நம்ம
7எக்குவ தக்குவலந்து3 எனஸெடு3 கு3ணமேமோ (ரா)

சரணம் 6
8நீகே த3ய புட்டி நீவு ப்3ரோவவலெ
ராகேந்து3 முக2 த்யாக3ராஜ வரத3 ஸ்ரீ (ரா)


பொருள் - சுருக்கம்
இராமா! களிப்பூட்டுவோனே! இனிய பெயரோனே! கரியின் பகைக்கு அச்சமூட்டுவோனே! சாகேத நகருறையே! கமலக்கண்ணா! முழுமதி முகத்தோனே! தியாகராசனுக்கருள்வோனே!
  • உன்னால் சோர்வுற்றேன்; (உனது) மனதில் தயையில்லை; திரிந்து பயனென்ன?

  • (எனது) மனப் பெண்ணாள் உன்னையே விழைந்தனள்; ஆயினும், கனிவுடன் கைப்பற்றி யெம்மைக் காவாயேனோ;

  • மிக்கு வேண்டியுன்னை சேவிக்க, உனது பாதை வேறானது, பிரமனின் எழுத்தோ என்னவோ;

  • இனிய படுக்கை யமைத்தேன்; அதனில் இன்புறா தென்னை வருத்தினாய்;

  • புகல் நீயேயென நான் அனுதினமும் நம்ப, ஏற்றத்தாழ்வினில் நுழையும் பண்பென்னவோ?

  • உனக்கே தயை பிறந்து நீ காக்க வேணும்;



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ராம/-அபி4ராம/ ரமணீய/ நாம/
ராமா/ களிப்பூட்டுவோனே/ இனிய/ பெயரோனே/

ஸாமஜ/ ரிபு/ பீ4ம/ ஸாகேத/ தா4ம/ (ரா)
கரியின்/ பகைக்கு/ அச்சமூட்டுவோனே/ சாகேத நகர்/ உறையே/


சரணம்
சரணம் 1
வனஜ/ லோசன/ நீ வலன/-அலஸிதினி/
கமல/ கண்ணா/ உன்னால்/ சோர்வுற்றேன்/

மனஸுன/ த3ய/ லேது3/ அல்லாடி3/ ப2லமு/-ஏமி/ (ரா)
மனதில்/ தயை/ இல்லை/ திரிந்து/ பயன்/ என்ன/


சரணம் 2
மனஸு/ செலி/ நீகே/ மருலுகொன்னதி3/ கானி/
மனம் (எனும்)/ பெண்ணாள்/ உன்னையே/ விழைந்தனள்/ ஆயினும்/

சனுவுன/ செயி/ பட்டி/ மமுல/ ரக்ஷிம்பவு/ (ரா)
கனிவுடன்/ கை/ பற்றி/ எம்மை/ காப்பாற்ற மாட்டாய்/


சரணம் 3
கோரி/ கோரி/ நின்னு/ கொலுவக3/ நீ/
மிக்கு/ வேண்டி/ யுன்னை/ சேவிக்க/ உனது/

தா3ரி/ வேரு/-ஐனதி3/ தா4த/ வ்ராலு/-ஏமோ/ (ரா)
பாதை/ வேறானது/ பிரமனின்/ எழுத்தோ/ என்னவோ/


சரணம் 4
கமனீயமகு3/ பான்பு/ காவிஞ்சிதினி/-அந்து3/
இனிய/ படுக்கை/ யமைத்தேன்/ அதனில்/

ரமியிம்பக/ நன்னு/ ரச்ச ஜேஸெத3வு/ (ரா)
இன்புறாது/ என்னை/ வருத்தினாய்/


சரணம் 5
தி3க்கு/ நீவு/-அனி/ நேனு/ தி3ன தி3னமுனு/ நம்ம/
புகல்/ நீயே/ யென/ நான்/ அனுதினமும்/ நம்ப/

எக்குவ/ தக்குவலு-அந்து3/ எனஸெடு3/ கு3ணமு/-ஏமோ/ (ரா)
ஏற்ற/ தாழ்வினில்/ நுழையும்/ பண்பு/ என்னவோ?


சரணம் 6
நீகே/ த3ய/ புட்டி/ நீவு/ ப்3ரோவ/ வலெ/
உனக்கே/ தயை/ பிறந்து/ நீ/ காக்க/ வேணும்/

ராகா/ -இந்து3/ முக2/ த்யாக3ராஜ/ வரத3/ ஸ்ரீ (ரா)
முழு/ மதி/ முகத்தோனே/ தியாகராசனுக்கு/ அருள்வோனே/ஸ்ரீ ராமா...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ஸாமஜ ரிபு பீ4ம ஸாகேத தா4ம - பல்லவியின் இவ்வரி அனுபல்லவியாக சில புத்தகங்களில் கொடுக்கப்பட்டுள்ளது.

2 - நீ வலனயலஸிதினி மனஸுன த3ய லேது3 அல்லாடி3 - நீ வலனயலஸிதி நீ மனஸுன த3ய லேது3 மல்லாடி3.

3 - மனஸு செலி - மனஸனு செலி.

4 - செயி பட்டி மமுல ரக்ஷிம்பவு - செயி பட்டி ஸம்ரக்ஷிஞ்சவு - செயி பட்டி மமு ரக்ஷிம்புமு : 'ரக்ஷிம்புமு' பொருந்தாது

5 - வ்ராலேமோ - வ்ராதேமோ.

6 - ஜேஸெத3வு - ஜேஸேவு.

7 - எக்குவ - எக்கு : 'எக்குவ' - பொருந்தும்

Top

மேற்கோள்கள்

விளக்கம்
8 - நீகே த3ய புட்டி - உனக்கே தயை பிறந்து - 'என்னிடம் தயை கொள்வாய்' என நான் இனி வேண்டப்போவதில்லை.

கரியின் பகை - முதலை அல்லது சிங்கம்

கரியின் பகைக்கு அச்சமூட்டுவோனே -

'சிங்கம் நிகர் அச்சமூட்டுவோனே' என்றும் கொள்ளலாம்.

Top


Updated on 18 Jan 2009

Friday, January 16, 2009

தியாகராஜ கிருதி - யோசனா கமல - ராகம் த3ர்பா3ரு - Yochanaa Kamala - Raga Darbaaru

பல்லவி
1யோசனா கமல லோசன நனு ப்3ரோவ

அனுபல்லவி
ஸூசன தெலியகனொருல
யாசன ஸேதுனனுசு நீகு
தோசெனா த்3யுதி விஜிதாயுத
விரோசன நன்னு ப்3ரோவனிங்க (யோ)

சரணம்
2கேசன நிஜ ப4க்த நிசய பாப
விமோசன கல பி3ருது3லெல்ல கொனி
3நன்னேசனா 4க்ரு2த விபின சர
வராபி4ஷேசன
த்யாக3ராஜ பூஜித (யோ)


பொருள் - சுருக்கம்
கமலக்கண்ணா! பன்னாயிரம் பரிதிகளை வெல்லும் ஒளியோனே! மெய்த்தொண்டர்களின் வினைகளைக் களைவோனே! அடவி வாழ்வோனுக்கு (அரியணை) திருமுழுக்கு செய்வித்தவனே! தியாகராசனால் தொழப்பெற்றோனே!

இன்னமும் யோசனையா, என்னைக் காக்க?
குறிப்பறிந்துகொள்ளாது, மற்றோரை இரப்பேனென வுனக்குத் தோன்றியதா?
எதற்காக? உள்ள விருதுகளை யெல்லாம் உற்று, என்னை ஏய்ப்பதற்கா?


பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
யோசனா/ கமல/ லோசன/ நனு/ ப்3ரோவ/
யோசனையா/ கமல/ கண்ணா/ என்னை/ காக்க/


அனுபல்லவி
ஸூசன/ தெலியகனு/-ஒருல/
குறிப்பு/ அறிந்துகொள்ளாது/ மற்றோரை/

யாசன ஸேதுனு/-அனுசு/ நீகு/
இரப்பேன்/ என/ உனக்கு/

தோசெனா/ த்3யுதி/ விஜித/-அயுத/
தோன்றியதா/ ஒளியில்/ வெல்லும்/ பன்னாயிரம்/

விரோசன/ நன்னு/ ப்3ரோவனு/-இங்க/ (யோ)
பரிதிகளை/ என்னை/ காக்க/ இன்னமும்/ யோசனையா...


சரணம்
கேசன/ நிஜ/ ப4க்த நிசய/ பாப/
எதற்காக/ மெய்/ தொண்டர்களின்/ வினைகளை/

விமோசன/ கல/ பி3ருது3லு/-எல்ல/ கொனி/
களைவோனே/ உள்ள/ விருதுகளை/ யெல்லாம்/ உற்று/

நன்னு/-ஏசனா/ க்ரு2த/ விபின/ சர/
என்னை/ ஏய்ப்பதற்கா/ செய்வித்தவனே/ அடவி/ வாழ்வோனுக்கு/

வர-அபி4ஷேசன/ த்யாக3ராஜ/ பூஜித/ (யோ)
திருமுழுக்கு/ தியாகராசனால்/ தொழப்பெற்றோனே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
3 - நன்னேசனா - நின்னேசனா : இவ்விடத்தில் 'நன்னேசனா' பொருந்தும்

4 - க்ரு2த விபின சர வராபி4ஷேசன - க்ரு2த விபின சர அபி4ஷேசன.

Top

மேற்கோள்கள்
4- க்ரு2த அபி4ஷேசன - இராமன் அனுமனை அனுப்பி சுக்கிரீவனுக்கு பட்டாபிஷேகம் செய்விக்க உத்தரவிடுகின்றான். வால்மீகி ராமாயணம் – கிஷ்கிந்தா காண்டம் – அத்தியாயம் 26 நோக்குக.

விளக்கம்
1 - யோசனா - எல்லா புத்தகங்களிலும், இச்சொல்லுக்கு 'தயக்கமா' என பொருள் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், 'யோசன' எனும் தெலுங்கு சொல்லுக்கும், அதற்கீடான 'யோசனை' என்னும் தமிழ் சொல்லுக்கும் அத்தகையதொரு நேரிடையான பொருள் இருப்பதாகத் தோன்றவில்லை.

Top

2 - கேசன - எதற்காக? - தியாகராஜரின் பல கீர்த்தனைகள், உரையாடல் முறையிலேயே அமைந்துள்ளன. இங்கு, இக்கேள்விக்கு, "எதற்காக இத்தனை விருதுகளை நீ பெற்றுள்ளாய்? - என்னை ஏய்ப்பதற்கா?" என்று பொருள் - அதாவது 'நீ என்னை காக்க யோசனை செய்தால் விருதுகளினால் பயன் என்ன' என.

3 - ஏசனா - எல்லா புத்தகங்களிலும், இச்சொல்லுக்கு 'ஏமாற்றுதல்' என்ற பொருள் கொள்ளப்பட்டுள்ளது. அத்தகைய பொருள் இவ்விடத்தில் பொருந்தும். ஆனால், 'ஏசு' என்னும் தெலுங்கு சொல்லுக்கு அத்தகைய பொருள் இல்லை. பல கீர்த்தனைகளில் தியாகராஜர் இச்சொல்லுக்கு 'ஏமாற்றுதல்' என்ற பொருள்பட இயற்றியுள்ளார். அதனால் அவர் 'ஏசு' -க்கு ஈடான 'ஏய்த்தல்' - என்னும் தமிழ்ச் சொல்லினை பயன் படுத்துகின்றார் என நம்பவேண்டியுள்ளது.

குறிப்பறிந்துகொள்ளாது - 'தகவல் தெரியாது' என்றும் கொள்ளலாம்

அடவி வாழ்வோன் - சுக்கிரீவன்

Top


Updated on 17 Jan 2009

Thursday, January 15, 2009

தியாகராஜ கிருதி - முந்து3 வெனுக - ராகம் த3ர்பா3ரு - Mundu Venuka - Raga Darbaaru

பல்லவி
முந்து3 வெனுகயிரு பக்கல தோடை3
1முர 2க2ர ஹர ராரா

அனுபல்லவி
எந்து3 கான நீயந்த3மு வலெ ரகு4
நந்த3ன வேக3மே ராரா (மு)

சரணம்
சரணம் 1
சண்ட3 பா4ஸ்கர குலாப்3தி4 சந்த்3ர
கோத3ண்ட3 பாணியை ராரா
3அண்ட3 கொலுசு ஸௌமித்ரி ஸஹிதுடை3
அமித பராக்ரம ராரா (மு)

சரணம் 2
ஓ க3ஜ ரக்ஷக ஓ ராஜ குமார
4ஓங்கார ஸத3ன ராரா
பா4க3வத ப்ரிய பா3க3 ப்3ரோவவய்ய
த்யாக3ராஜ நுத ராரா (மு)


பொருள் - சுருக்கம்
முர, கரர்களை வதைத்தோனே! இரகு நந்தனா! வெஞ்சுடர்ப் பகலோன் குலக் கடலின் மதியே! அளவற்ற ஆற்றலோனே! ஓ கரியைக் காத்தோனே! ஓ இளவரசே! ஓங்காரத்துள்ளறையே! பாகவதர்களுக்கினியோனே! தியாகராசனால் போற்றப் பெற்றோனே
  • முன், பின், இரு பக்கங்களிலும் துணையாய் வாராயய்யா;

  • எங்கும் காணேன், உனதெழில் போன்று;

  • வேகமாய் வாராயய்யா;

  • கோதண்டமேந்தி வாராயய்யா;

  • அண்மையில் பணியாற்றும் இலக்குவனுடன் கூடி, வாராயய்யா

  • நன்கு காப்பாயய்யா;

  • வாராயய்யா.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
முந்து3/ வெனுக/-இரு/ பக்கல/ தோடை3/
முன்/ பின்/ இரு/ பக்கங்களிலும்/ துணையாய்/

முர/ க2ர/ ஹர/ ராரா/
முர/ கரர்களை/ வதைத்தோனே/ வாராயய்யா/


அனுபல்லவி
எந்து3/ கான/ நீ/-அந்த3மு/ வலெ/ ரகு4/
எங்கும்/ காணேன்/ உனது/ எழில்/ போன்று/ இரகு/

நந்த3ன/ வேக3மே/ ராரா/ (மு)
நந்தனா/ வேகமாய்/ வாராயய்யா/


சரணம்
சரணம் 1
சண்ட3/ பா4ஸ்கர/ குல/-அப்3தி4/ சந்த்3ர/
வெஞ்சுடர்/ பகலோன்/ குல/ கடலின்/ மதியே/

கோத3ண்ட3/ பாணியை/ ராரா/
கோதண்டம்/ ஏந்தி/ வாராயய்யா/

அண்ட3/ கொலுசு/ ஸௌமித்ரி/ ஸஹிதுடை3/
அண்மையில்/ பணியாற்றும்/ சுமித்திரை மகனுடன்/ கூடி/

அமித/ பராக்ரம/ ராரா/ (மு)
அளவற்ற/ ஆற்றலோனே/ வாராயய்யா/


சரணம் 2
ஓ க3ஜ/ ரக்ஷக/ ஓ ராஜ குமார/
ஓ கரியை/ காத்தோனே/ ஓ இளவரசே/

ஓங்கார/ ஸத3ன/ ராரா/
ஓங்காரத்துள்/ உறையே/ வாராயய்யா/

பா4க3வத/ ப்ரிய/ பா3க3/ ப்3ரோவு/-அய்ய/
பாகவதர்களுக்கு/ இனியோனே/ நன்கு/ காப்பாய்/ அய்யா!

த்யாக3ராஜ/ நுத/ ராரா/ (மு)
தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/ வாராயய்யா/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்
1 - முர - முரன் - கண்ணனால் கொல்லப்பட்ட ஓரரக்கன்

2- க2ர - கரன் - இராமனால் கொல்லப்பட்ட அரக்கன்

4 - ஓங்கார ஸத3ன - ஓங்காரத்துள்ளறையே - 'ஜக3தா3னந்த3 காரக' என்ற பஞ்ச ரத்ன கிருதியில், தியாகராஜர், இறைவனை 'ஓங்கார பஞ்ஜர கீர' (ஓங்காரமென்னும் கூண்டிலுள்ள கிளியே) என்றழைக்கின்றார். இது குறித்து 'பதஞ்சலி யோக சூத்திர'த்தின் செய்யுள் நோக்குக -

"ஓம் எனும் சொல் (ஓங்காரம்) அவனை (பரம்பொருளை) சுட்டும்" (I.27) (ஸ்வாமி ப்ரபவானந்தாவின் ஆங்கில உரையின் தமிழாக்கம்)

Top

விளக்கம்
3 - அண்ட3 கொலுசு - அண்மையில் பணியாற்றும் - இச்சொல் இலக்குவனைக் குறிக்கும். ஆனால் 'அண்ட' என்ற சொல்லுக்கு 'புவனம்' என்றும், 'கொலுசு' என்ற சொல்லுக்கு 'அளந்த' என்றும் பொருளுண்டு. அதன்படி, வாமனாவதாரத்தில் மூன்று அடிகளில் பேரண்டத்தினை அளந்த விஷ்ணுவின் அவதாரமாகிய ராமனுக்கும் இச்சொல் பொருந்தும்.

புராண விரிவுரையாற்றும் திருவாளர் பாலகிருஷ்ண சாஸ்திரிகள், தனது 'தியாகராஜ ராமாயணம்' என்னும் அரிகதையில், இப்பாடல் குறித்து பகர்வது யாதெனில் - "தியாகராஜர், திருப்பதி வெங்கடேச பெருமானை தரிசித்துவிட்டு, தம்முடைய ஆட்களுடன் நாகலாபுரம் காடு வழியாக திரும்பி வரும்போது, கொள்ளைக்காரர்கள் அவர்களைச் சூழ்ந்து கொண்டார்கள்; அவர்களிடமிருந்து தமது ஆட்களைக் காப்பாற்ற இப்பாடலை அவ்வமயமே பாடினார்; உடனே இரு சேவகர்கள் தோன்றி அவர்களைக் காத்தனர் . அவ்விருவரும் மாறுவேடம் பூண்ட ராம-லக்ஷ்மணர்கள் என்று தியாகராஜர் கருதினார்."

வெஞ்சுடர்ப் பகலோன் - பரிதி
சுமித்திரை மகன் - இலக்குவன்

Top


Updated on 16 Jan 2009

தியாகராஜ கிருதி - பரிபாலய மாம் - ராகம் த3ர்பா3ரு - Paripalaya Mam - Raga Darbaaru

பல்லவி
பரிபாலய மாம் கோத3ண்ட3 பாணே
1பாவனாஸ்1ரித 2சிந்தாமணே

அனுபல்லவி
ஸரஸிஜ ப4வ நுத சரண ஸரோஜ
ஸாகேத ஸத3ன த3ஸ1ரத2 தனூஜ (ப)

சரணம்
சரணம் 1
3ஸே1ஷாதி4ப வர பூ4ஷண வாக்3-
விஸே1ஷ க்ரு2த நாம கோ4ஷ ஜனித
ஸந்தோஷ ரவிஜ ஸம்பா4ஷண நத ஜன
போஷண ஸு1ப4 கர வேஷ நிர்தோ3ஷ (ப)

சரணம் 2
ஸத்ய-ஸந்த4 வர ப்4ரு2த்ய பால-
காதி3த்ய குலோத்தம ஸத்ய ஜனாவன
அத்யந்த ஸுந்த3ர ந்ரு2த்ய ஜன ப்ரிய
ஸ்துத்ய ஸு-சாரித்ர நித்யோத்ஸவ ரூப (ப)

சரணம் 3
ஸாக3ர மத3 த3மன நாகா3ரி நுத
சரண க3ணபதி ஹ்ரு2த3யாகா3ர பாலன
ஜாக3-ரூக ஸ1ரணாக3த வத்ஸல
த்யாக3ராஜ நுத நாகா3ரி துரக3 (ப)


பொருள் - சுருக்கம்
  • கோதண்டபாணி! புனிதனே! சார்ந்தோரின் சிந்தாமணியே!

  • மலரோனால் போற்றப் பெற்றத் திருவடித் தாமரையோனே! சாகேத நகருறைவோனே! தசரதன் மைந்தா!

  • உயர் அரவரசனை அணிவோனின் வாயினால், தனித்ததென (ராம) நாமத்தினை பறைசாற்றியதால் களிப்புறுவோனே! பரிதி மைந்தனுடன் உரையாடுவோனே! வணங்கியோரைப் பேணுவோனே! மங்களமருளும் வேடத்தோனே! குற்றமற்றோனே!

  • சொல்லுறுதியோனே! சீரிய தொண்டரைக் காப்போனே! பகலவன் குலத்தின் உத்தமனே! உண்மையானவரைக் காப்போனே! பேரெழிலோனே! நடனமாடுவோருக்கு இனியோனே! துதிக்கப்பெற்றோனே! நன்னடத்தையோனே! என்றும் திருவிழா உருவத்தோனே!

  • கடலரசனின் செருக்கினை யொடுக்கியோனே! கருடன் போற்றும் திருவடியோனே! கணபதியின் இதயத்துறைவோனே! பேணுவதில் விழிப்புடையவனே! சரணடைந்தோருக்கு இனியோனே! தியாகராசனால் போற்றப்பெற்றோனே! கருடன்மேல் விரைவோனே!

பேணுவாயென்னை.


பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
பரிபாலய/ மாம்/ கோத3ண்ட3/ பாணே/
பேணுவாய்/ என்னை/ கோதண்ட/ பாணி/

பாவன/-ஆஸ்1ரித/ சிந்தாமணே/
புனிதனே/ சார்ந்தோரின்/ சிந்தாமணியே/


அனுபல்லவி
ஸரஸிஜ/ ப4வ/ நுத/ சரண/ ஸரோஜ/
கமலத்தில்/ உறைவோனால்/ போற்றப் பெற்ற/ திருவடி/ தாமரையோனே/

ஸாகேத/ ஸத3ன/ த3ஸ1ரத2/ தனூஜ/ (ப)
சாகேத நகர்/ உறைவோனே/ தசரதன்/ மைந்தா/


சரணம்
சரணம் 1
ஸே1ஷ/-அதி4ப/ வர/ பூ4ஷண/ வாக்3-/
சேடன் - அரவு/ அரசனை/ உயர்/ அணிவோனின்/ வாயினால்/

விஸே1ஷ க்ரு2த/ நாம/ கோ4ஷ ஜனித/
தனித்ததென/ (ராம) நாமத்தினை/ பறைசாற்றியதால்/

ஸந்தோஷ/ ரவிஜ/ ஸம்பா4ஷண/ நத ஜன/
களிப்புறுவோனே/ பரிதி மைந்தனுடன்/ உரையாடுவோனே/ வணங்கியோரை/

போஷண/ ஸு1ப4/ கர/ வேஷ/ நிர்தோ3ஷ/ (ப)
பேணுவோனே/ மங்களம்/ அருளும்/ வேடத்தோனே/ குற்றமற்றோனே/


சரணம் 2
ஸத்ய-ஸந்த4/ வர/ ப்4ரு2த்ய/ பாலக/-
சொல்லுறுதியோனே/ சீரிய/ தொண்டரை/ காப்போனே/

ஆதி3த்ய/ குல/-உத்தம/ ஸத்ய ஜன/-அவன/
பகலவன்/ குலத்தின்/ உத்தமனே/ உண்மையானவரை/ காப்போனே/

அத்யந்த ஸுந்த3ர/ ந்ரு2த்ய ஜன/ ப்ரிய/
பேரெழிலோனே/ நடனமாடுவோருக்கு/ இனியோனே/

ஸ்துத்ய/ ஸு-சாரித்ர/ நித்ய/-உத்ஸவ/ ரூப/ (ப)
துதிக்கப்பெற்றோனே/ நன்னடத்தையோனே/ என்றும்/ திருவிழா/ உருவத்தோனே/


சரணம் 3
ஸாக3ர/ மத3/ த3மன/ நாக3-அரி/ நுத/
கடலரசனின்/ செருக்கினை/ ஒடுக்கியோனே/ அரவின்/ பகைவன்/ போற்றும்/

சரண/ க3ணபதி/ ஹ்ரு2த3ய/-ஆகா3ர/ பாலன/
திருவடியோனே/ கணபதியின்/ இதயத்துள்/ உறைவோனே/ பேணுவதில்/

ஜாக3-ரூக/ ஸ1ரண/-ஆக3த/ வத்ஸல/
விழிப்புடையவனே/ சரண்/ அடைந்தோருக்கு/ இனியோனே/

த்யாக3ராஜ/ நுத/ நாக3/-அரி/ துரக3/ (ப)
தியாகராசனால்/ போற்றப்பெற்றோனே/ அரவின்/ பகைவன்மேல்/ விரைவோனே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - பாவனாஸ்1ரித - பவனாஸ்1ரித

மேற்கோள்கள்
2 - சிந்தாமணே - சிந்தாமணி - கோரியதை வழங்கும் தெய்வீக மணி

விளக்கம்
3 - ஸே1ஷாதி4ப - சேடனின் அரசன் - சேடன் அரவுகளுக்கு அரசன் எனப்படும். இவ்விடத்தில், 'சேடனின் அரசன்' என்ற சொல்லுக்கு தனியான பொருளேதும் இருப்பதற்கில்லை.

Top

கமலத்தில் உறைவோன் - மலரோன் - பிரமன்

சாகேத நகர் - அயோத்தி

அரவரசனை அணிவோன் - சிவன்

தனித்ததென ராம நாமத்தினை பறைசாற்றியதால் - 'ராம' எனும் நாமம் பிறவிக்கடலைக் கடத்துவிக்கும் பிரணவத்திற்கு நிகரான தாரகமாகும்.

பரிதி மைந்தன் - சுக்கிரீவன்

அரவின் பகைவன் - கருடன்

Top


Updated on 15 Jan 2009

Wednesday, January 14, 2009

தியாகராஜ கிருதி - நாரத3 கு3ரு ஸ்வாமி - ராகம் த3ர்பா3ரு - Narada Guru Svami - Raga Darbaaru

பல்லவி
நாரத3 கு3ரு ஸ்வாமியிகனைன
நன்னாத3ரிம்பவேமி ஈ கரவேமி

அனுபல்லவி
ஸாரெகு ஸங்கீ3த யோக3 நைக3ம
பாரங்க3துடை3ன பரம பாவன (நா)

சரணம்
1இதிஹாஸ புராணாக3ம சரிதமுலெவரி-வல்ல கலிகே3
பதினி தா3னமிவ்வ பு3த்3தி4 2ஸத்யபா4மகெடுல கலிகே3
த்3யுதி ஜித 3ஸ1ரத3ப்4ர நினு வினா முனி யதுலகெவரு கலிகே3
க்ஷிதினி த்யாக3ராஜ வினுத நம்மிதி சிந்த தீர்சி ப்ரஹ்லாது3னி ப்3ரோசின (நா)


பொருள் - சுருக்கம்
இசை, யோகம், மறைகளில் கரைகண்டவராகிய, முற்றிலும் தூய, நாரத குரு சுவாமியே! இலையுதிர்கால முகிலை வெல்லும் ஒளியுடையோரே! தியாகராசனால் போற்றப் பெற்றவரே!
  • எவ்வமயமும், இனியாகிலும் என்னை ஆதரிக்காததேனய்யா? இக்கருப்பேனய்யா?

  • வரலாறு, புராணம், ஆகமம், சரிதங்கள் எவராலுண்டாகின?

  • கணவனை தானமளிக்கும் எண்ணம் சத்தியபாமைக்கு எங்ஙன முண்டானது?

  • உம்மையன்றி முனிவர், இருடிகட்கு எவருளர்?

  • புவியில், கவலை தீர்த்து, பிரகலாதனை நீர் காத்தீர்

  • உம்மை நம்பினேன்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நாரத3/ கு3ரு/ ஸ்வாமி/-இகனைன/
நாரத/ குரு/ சுவாமியே/ இனியாகிலும்/

நன்னு/-ஆத3ரிம்பவு/-ஏமி/ ஈ/ கரவு/-ஏமி
என்னை/ ஆதரிக்காதது/ ஏனய்யா/ இந்த/ கருப்பேனய்யா/


அனுபல்லவி
ஸாரெகு/ ஸங்கீ3த/ யோக3/ நைக3ம/
எவ்வமயமும்/ இசை/ யோகம்/ மறைகளில்/

பாரங்க3துடை3ன/ பரம/ பாவன/ (நா)
கரைகண்டவராகிய/ முற்றிலும்/ தூய/ நாரத...


சரணம்
இதிஹாஸ/ புராண/-ஆக3ம/ சரிதமுலு/-எவரி-வல்ல/ கலிகே3/
வரலாறு/ புராணம்/ ஆகமம்/ சரிதங்கள்/ எவரால்/ உண்டாகின/

பதினி/ தா3னமு/-இவ்வ/ பு3த்3தி4/ ஸத்யபா4மகு/-எடுல/ கலிகே3/
கணவனை/ தானம்/ அளிக்கும்/ எண்ணம்/ சத்தியபாமைக்கு/ எங்ஙனம்/ உண்டானது/

த்3யுதி/ ஜித/ ஸ1ரத்3/-அப்4ர/ நினு/ வினா/ முனி/ யதுலகு/-எவரு/ கலிகே3/
ஒளியில்/ வெல்லும்/ இலையுதிர்கால/ முகிலை/ உம்மை/ அன்றி முனிவர்/ இருடிகட்கு/ எவர்/ உளர்?

க்ஷிதினி/ த்யாக3ராஜ/ வினுத/ நம்மிதி/ சிந்த/ தீர்சி/ ப்ரஹ்லாது3னி/ ப்3ரோசின/ (நா)
புவியில்/ தியாகராசனால்/ போற்றப் பெற்றவரே/ நம்பினேன்/ கவலை/ தீர்த்து/ பிரகலாதனை/ காத்த/ நாரத...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்
2 - ஸத்யபா4ம - கிருஷ்ணனுடைய இரண்டாவது மனைவி சத்தியபாமா, கணவனை எவ்வமயமும் தன்னுடனேயே வைத்திருக்க எண்ணி, நாரதரை உபாயம் கேட்டாள். அவர், கிருஷ்ணனை ஒருவருக்கு சடங்குமுறையாக தானம் அளித்து, பின்னர், யாருக்கு தானம் கொடுத்தாளோ அவரிடமிருந்து கிருஷ்ணனின் எடைக்கு சமமான பொன்னும் பொருளும் கொடுத்து மீட்டுக்கொண்டால் கிருஷ்ணன் அவளுக்கு அடிமையாவான் என்று சொன்னார். அந்த சம்பவத்தினை தியாகராஜர் இங்கு விவரிக்கின்றார். சத்தியபாமா கிருஷ்ணனை எடைபோட்ட கதை

விளக்கம்
1 - இதிஹாஸ புராண - வரலாறுகள், புராணங்கள் அனைத்தும் நாரத முனிவரால் தொடக்கிவைக்கப்பட்டவை.

3 - ஸ1ரத3ப்4ர - இலையுதிர் கால முகில் தூய வெண்ணிறமாக இருக்கும்.

கருப்பு - பஞ்சம்

Top


Updated on 14 Jan 2009

Tuesday, January 13, 2009

தியாகராஜ கிருதி - ஏல தெலிய லேரோ - ராகம் த3ர்பா3ரு - Ela Teliya Lero - Raga Darbaaru

பல்லவி
1ஏல தெலிய லேரோ 2பூர்வ கர்ம-
மேலாகு3ன ஜேஸிரோ
ராமய்ய

அனுபல்லவி
பா3ல ஸ1ஸா1ங்க 3கலாலங்க்ரு2த நுத
நீல வர்ண ஸுகு3ணாலய நீ மஹிம(லேல)

சரணம்
சரணம் 1
பா3ல தனமுன ஸூ1ல த4ருனி
விஸா1ல த4னுவுனு லீலகா3 பூ4-
பாலகுலு கன கேல விரசி
குஸா1லுகா3 ஸ்ரீனேலின நி(ன்னேல)

சரணம் 2
நாலுகொ3க பதி3 வேல கஞ்சு
ரதா2ல ஸுர ரிபு மூல ப3லமுல
லீலகா34னொக கோலனேஸி
கால யம புரி பாலு ஜேஸின நி(ன்னேல)

சரணம் 3
ராஜ ஸே1க2ருனியீ ஜக3திலோ
5ராஜஸம்பு3ன பூஜ ஸேயு
ராஜுலனு
க3ஜ ராஜுலகு ம்ரு2க3
ராஜ த்யாக3ராஜ நுத நி(ன்னேல)


பொருள் - சுருக்கம்
இராமய்யா? சிவனால் போற்றப்பெற்றோனே! நீல வண்ணா! பண்புகளினுறைவிடமே! சிவனை, இப்புவியில், இராசதத்தினால் வழிபடும் அரசர்களெனும் கரிகளுக்குச் சிங்கமே! தியாகராசனால் போற்றப்பெற்றோனே!
  • ஏனறிந்திலரோ உனது மகிமைகளை? முன் வினைகள் எவ்விதம் செய்தனரோ?

  • இளமையில், சிவனின் பெருத்த வில்லினை, விளையாட்டாக, புவியாள்வோர் காண, கைகளால் முறித்து, களிப்புடன் திருமகளையாண்ட உன்னை ஏனறிந்திலரோ?

  • பதினான்காயிரம் கஞ்சியத் தேர்களையும், ராவணனின் மூல பலத்தினையும்,விளையாட்டாக, ஓரம்பெய்து, நமனின் புரமடையச் செய்தவுன்னை ஏனறிந்திலரோ?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஏல/ தெலிய லேரோ/ பூர்வ/ கர்மமு/-
ஏன்/ அறிந்திலரோ/ முன்/ வினைகள்/

ஏலாகு3ன/ ஜேஸிரோ/ ராமய்ய/
எவ்விதம்/ செய்தனரோ/ இராமய்யா/


அனுபல்லவி
பா3ல/ ஸ1ஸ1/-அங்க/ கலா/-அலங்க்ரு2த/ நுத/
இளம்/ முயல்/ சின்னத்தோன்/ பிறை/ அணிவோனால்/ போற்றப்பெற்றோனே/

நீல/ வர்ண/ ஸுகு3ண/-ஆலய/ நீ/ மஹிமலு/-(ஏல)
நீல/ வண்ணா/ பண்புகளின்/ உறைவிடமே! உனது/ மகிமைகளை/ ஏன்...


சரணம்
சரணம் 1
பா3ல தனமுன/ ஸூ1ல/ த4ருனி/
இளமையில்/ சூலம்/ ஏந்தியின்/

விஸா1ல/ த4னுவுனு/ லீலகா3/ பூ4/-
பெருத்த/ வில்லினை/ விளையாட்டாக/ புவி/

பாலகுலு/ கன/ கேல/ விரசி/
யாள்வோர்/ காண/ கைகளால்/ முறித்து/

குஸா1லுகா3/ ஸ்ரீனி/-ஏலின/ நின்னு/-(ஏல)
களிப்புடன்/ திருமகளை/ யாண்ட/ உன்னை/ ஏன்...


சரணம் 2
நாலுகு3/-ஒக/ பதி3/ வேல/ கஞ்சு/
நான்குடன்/ ஓர்/ பதின்/ ஆயிரம்/ கஞ்சிய/

ரதா2ல/ ஸுர/ ரிபு/ மூல/ ப3லமுல/
தேர்களையும்/ சுரர்/ பகைவனின்/ மூல/ பலத்தினையும்/

லீலகா3னு/-ஒக/ கோலனு/-ஏஸி/
விளையாட்டாக/ ஓர்/ அம்பு/ எய்து/

கால/ யம/ புரி/ பாலு ஜேஸின/ நின்னு/-(ஏல)
கால/ யமனின்/ புரம்/ அடையச் செய்த/ உன்னை/ ஏன்...


சரணம் 3
ராஜ/ ஸே1க2ருனி/-ஈ/ ஜக3திலோ/
திங்கள்/ தலையிலணிவோனை/ இந்த/ புவியில்/

ராஜஸம்பு3ன/ பூஜ ஸேயு/
இராசதத்தினால்/ வழிபடும்/

ராஜுலு/-அனு/ க3ஜ/ ராஜுலகு/ ம்ரு2க3/ ராஜ/
அரசர்கள்/ எனும்/ கரி/ அரசர்களுக்கு/ மிருக/ ராசனே!

த்யாக3ராஜ/ நுத/ நின்னு/-(ஏல)
தியாகராசனால்/ போற்றப்பெற்றோனே/ உன்னை/ ஏன்...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்
3 - கலா - 16-ல் 1 (1/16) பாகம் 'கலா' எனப்படும். அந்த முறையில், திங்களின் ஒவ்வொரு பிறையும் 'கலா' எனப்படும்

விளக்கம்
1 - ஏல தெலிய லேரோ - ஏன் அறிந்திலரோ - வால்மீகி ராமாயணம், யுத்த காணடத்தில் (117-வது அத்தியாயம் - சீதை நெருப்பினுள் புகுதல்) பிரம்மா, சிவன் ஆகியோரை நோக்கி ராமன் பகர்வது - "நான் என்னை ஒரு சாதாரண மனிதனாக, தசரத மன்னனின் புதல்வனாக உணர்கின்றேன். பிரம்மா, நான் யாரென்றும் எங்கிருந்து வந்தேனென்றும் பகரட்டும்."

தியாகராஜர், தன்னுடைய 'ரமா ரமண பா4ரமா' (ராகம் வஸந்த பைரவி) என்ற கிருதியில் உரைப்பது - "உன்னுடைய மருமங்களை அறிந்தவர் மட்டுமே உன்னுடை செயல்களைப் புரிந்துகொள்ளமுடியும்".
Top
2 - பூர்வ கர்மமேலாகு3ன ஜேஸிரோ - முன்வினைகள் எவ்விதம் செய்தனரோ - வால்மீகி ராமாயணம், யுத்த காணடத்தில் (111-வது அத்தியாயம்) ராவணனின் மனைவி, மண்டோதரி, 'தன்னுடைய கணவன் இவ்வளவு பெருமையுடைத்தவனாயிருந்தும், ராமன், விஷ்ணுவின் அவதாரமென உணராமற்போனானே' என்று புலம்புகிறாள்.

மூன்றாவது சரணத்தில், தியாகராஜர் 'ராஜஸம்பு3ன பூஜ ஸேயு ராஜுலு' - 'இராசத குணங்களுடன் வழிபடும் அரசர்கள்' என்கிறார். இவ்விரண்டையும் சேர்த்து நோக்குகையில், தியாகராஜர், பகவத் கீதையில் (அத்தியாயம் 3, செய்யுள் 9) கண்ணன் உரைத்த சொற்களை நினைவுகூர்கின்றார் எனத் தெரிகின்றது - "இவ்வுலகோர் வேள்விக்காகவென்றல்லாது (சுய நலத்திற்காக) இயற்றும் பணிகளால் (பிறப்பு இறப்பெனும்) கட்டுக்குள் அகப்படுகின்றனர். எனவே, ஓ, குந்தி மகனே, வேள்விக்காகவென்றே, பற்றறறுத்து, பணிகளை இயற்றுவாய்".
Top
4 - ஒக கோலனேஸி - ஓரம்பெய்து - வால்மீகி ராமாயணம் - ஆரண்ய காண்டம், அத்தியாயம் 30, செய்யுடகள் 30, 31-ல் தண்டகாரண்யத்தில், 14000 அரக்கர்களை ராமன், ஒன்றரை மணி நேரத்தில் வதைத்ததை, தேவர்கள் புகழ்கின்றனர். அவ்விதமே, யுத்தகாண்டத்திலும் (அத்தியாயம் 93-ல்) ராவணனின் மூல பல சேனைகளை வதைத்த பெருமை கூறப்படுகின்றது.

5 - ராஜஸம்பு3ன பூஜ ஸேயு ராஜுலு - இராசத குணத்துடன் (சுய நலத்திற்காக) வழிபடும் மன்னர்கள் - தியாகராஜர் ராவணனை முக்கியமாகக் குறிப்பிடுகின்றார்.
Top

முயல் சின்னத்தோன் - திங்கள்
இளந்திங்கட் பிறை சூடி, சூலமேந்தி, திங்களணிவோன் - சிவன்
திருமகள் - இங்கு சீதையைக் குறிக்கும்
நான்குடனோர் பதினாயிரம் - பதினான்காயிரம்
கஞ்சியம் - வெண்கலம்
கஞ்சியத் தேர்கள் - கரன் (சூர்ப்பநகையின் சோதரன்) சேனை
சுரர் பகைவன் - இராவணன்
மூல பலம் - அடிப்பெலமாயிருக்கும் சேனை
காலவியமன் - நமன்
இராசதம் - முக்குணங்களிலொன்று
மிருகராசன் - சிங்கம்
Top


Updated on 13 Jan 2009

Sunday, January 11, 2009

தியாகராஜ கிருதி - ஏதி3 நீ பா3ஹு ப3ல - ராகம் த3ர்பா3ரு - Edi Nee Baahu Bala - Raga Darbaaru

பல்லவி
ஏதி3 நீ பா3ஹு ப3ல பராக்ரமமென்னாள்ளகென்னாள்ளு

அனுபல்லவி
ஆதி3 தே3வ நிஜ தா3ஸுலகு கனனாஸயுண்ட3க3 கரி வரத3 (ஏ)

சரணம்
சரணம் 1
கரமுன 1மெரயு ஸ1ர சாபமு ஆகலி கொன லேதா3
2முர ஹர ஸோ1ணித பானமு ப3ஹு தி3னமுலு கா லேதா3 வாதா3 (ஏ)

சரணம் 2
ஸரஸ பூ4ஸுருல பா3த4லு வினி ரோஸமு ரா லேதா3
மொரலிட3கா3 யோக3 நித்3து3ர நிலிபி மோமு ஜூப ராதா3 வாதா3 (ஏ)

சரணம் 3
3வருஸ தப்பு பு3த்3து4லு நீசுலகு வச்சினதி3 தெலியதா3
வெரபு லேக திரிகே3ரு சாலனுசு வேக3மே ஸ்ரீ த்யாக3ராஜ ஸன்னுத (ஏ)


பொருள் - சுருக்கம்
முதற் கடவுளே! கரிக்கருள்வோனே! முரனை வென்றோனே! தியாகராசனால் போற்றப் பெற்றோனே!
  • எங்கே (காட்டு) உனது கை வலிமையின் வீரத்தினை! எத்தனை நாளைக் கெத்தனை நாள்?

  • உண்மைத் தொண்டர்களுக்கு காண ஆசையிருக்க, எங்கே (காட்டு) உனது கை வலிமையின் வீரத்தினை!

  • கையிலொளிரும் அம்புகளும், வில்லும் பசி கொள்ளவில்லையா? குருதி பருகி வெகு நாட்களாகவில்லையா? வாதா?

  • உயர் அந்தணர்களின் துன்பங்களைச் செவிமடுத்தும் கோபம் வரவில்லையா? முறையிட, யோகத்துயிலை நிறுத்தி, முகத்தைக் காட்டலாகாதா? வாதா?

  • வரிசை தவறும் புத்தி, இழிந்தோர்களுக்கு வந்தது தெரியாதா? அச்சமின்றி திரிகின்றனரே; போதுமென, வேகமாக, எங்கே (காட்டு) உனது கை வலிமையின் வீரத்தினை!



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஏதி3/ நீ/ பா3ஹு/ ப3ல/ பராக்ரமமு/-என்னாள்ளகு/-என்னாள்ளு/
எங்கே (காட்டு)/ உனது/ கை/ வலிமையின்/ வீரத்தினை/ எத்தனை நாளைக்கு/ எத்தனை நாள்/


அனுபல்லவி
ஆதி3/ தே3வ/ நிஜ/ தா3ஸுலகு/ கன/-ஆஸ/-உண்ட3க3/ கரி/ வரத3/ (ஏ)
முதற்/ கடவுளே/ உண்மை/ தொண்டர்களுக்கு/ காண/ ஆசை/ இருக்க/ கரிக்கு/ அருள்வோனே! எங்கே...


சரணம்
சரணம் 1
கரமுன/ மெரயு/ ஸ1ர/ சாபமு/ ஆகலி/ கொன லேதா3/
கையில்/ ஒளிரும்/ அம்புகளும்/ வில்லும்/ பசி/ கொள்ளவில்லையா/

முர/ ஹர/ ஸோ1ணித/ பானமு/ ப3ஹு/ தி3னமுலு/ கா லேதா3/ வாதா3/ (ஏ)
முரனை/ வென்றோனே/ குருதி/ பருகி/ வெகு/ நாட்கள்/ ஆகவில்லையா/ வாதா/ எங்கே...


சரணம் 2
ஸரஸ/ பூ4ஸுருல/ பா3த4லு/ வினி/ ரோஸமு/ ரா லேதா3/
உயர்/ அந்தணர்களின்/ துன்பங்களை/ செவிமடுத்தும்/ கோபம்/ வரவில்லையா/

மொரலு-இட3கா3/ யோக3/ நித்3து3ர/ நிலிபி/ மோமு/ ஜூப ராதா3/ வாதா3/ (ஏ)
முறையிட/ யோக/ துயிலை/ நிறுத்தி/ முகத்தை/ காட்டலாகாதா/ வாதா/ எங்கே...


சரணம் 3
வருஸ/ தப்பு/ பு3த்3து4லு/ நீசுலகு/ வச்சினதி3/ தெலியதா3/
வரிசை/ தவறும்/ புத்தி/ இழிந்தோர்களுக்கு/ வந்தது/ தெரியாதா/

வெரபு/ லேக/ திரிகே3ரு/ சாலு/-அனுசு/ வேக3மே/ ஸ்ரீ த்யாக3ராஜ/ ஸன்னுத/ (ஏ)
அச்சமி/ ன்றி/ திரிகின்றனரே/ போதும்/ என/ வேகமாக/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/ எங்கே...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - மெரயு - மெரஸே.

2 - முர ஹர - முர கர.

3 - வருஸ - வரஸ : இரண்டு சொற்களுக்கும் பொருள் ஒன்றே.

மேற்கோள்கள்
2 - முர ஹர - முரன் - கண்ணனால் கொல்லப்பட்ட அரக்கன் - நரகாஸுரன் எனப்படும் பௌமாஸுரனின் உடந்தை. பாகவத புராணம், 10-வது புத்தகம், அத்தியாயம் 59 நோக்குக. முரன் கதை - சுருக்கம்

விளக்கம்
எத்தனை நாளைக் கெத்தனை நாள் - நீண்ட நாளானது.

குருதி பருகி - வில்லையும் அம்பையும் குறிக்கும்.

யோகத்துயில் - பாற்கடலில் அரி யோகத் துயிலில் உள்ளதாக.

வரிசை - ஒழுங்கு, முறைமை.

Top


Updated on 12 Jan 2009

Saturday, January 10, 2009

தியாகராஜ கிருதி - எந்து3ண்டி3 வெட3லிதிவோ - ராகம் த3ர்பா3ரு - Endundi Vedalitivo - Raga Darbaru

பல்லவி
எந்து3ண்டி3 வெட3லிதிவோ ஏவூரோ நே தெலிய இபுடை3ன தெலுபவய்ய

அனுபல்லவி
அந்த3 சந்த3மு வேரை நட3தலெல்ல த்ரி-கு3ணாதீதமையுன்னதே3 கானி ஸ்ரீ ராம (எந்து3)

சரணம்
சிடுகண்டேனபராத4 சயமுல தகி3லிஞ்சே 1ஸி1வ லோகமு காது3
வடு ரூபுடை3 ப3லினி வஞ்சிஞ்சியணசு-வானி 2வைகுண்ட2மு காது3
விட வசனமுலாடி3 ஸி1ரமு த்ரும்ப-ப3ட்3ட3 3விதி4 லோகமு காது3
தி3டவு த4ர்மமு ஸத்யமு ம்ரு2து3 பா4ஷலு கலுகு3 தி3வ்ய ரூப த்யாக3ராஜ வினுத நீ(வெந்து3)


பொருள் - சுருக்கம்
இராமா! திடம், அறம், மெய்ம்மை, மென்சொற்களும் உடைத்த தெய்வீக வடிவே! தியாகராசனால் போற்றப் பெற்றோனே!
எங்கிருந்து எழுந்தருளினாயோ! எவ்வூரோ! நானறியேனே; இப்போழ்தேனும் தெரிவியுமைய்யா!
  • அழகும், ஒயிலும் வேறாகி, நடத்தையாவும் முக்குணத்திற்கு அப்பாற்பட்டுள்ளதன்றோ!

  • சொடக்கினால் குற்றங்களைச் சாட்டும் சிவலோகமன்று;

  • மாணாக்கனாக உருக்கொண்டு பலியினை வஞ்சித்து அடக்குவோனின் வைகுண்டமன்று;

  • பொய்ச் சொற்கள் பகர்ந்து தலை கிள்ளப்பெற்ற விதி லோகமன்று;

அப்படியானால், நீயெங்கிருந்து எழுந்தருளினாயோ! எவ்வூரோ!


பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
எந்து3ண்டி3/ வெட3லிதிவோ/ ஏ/-ஊரோ/ நே/ தெலிய/ இபுடை3ன/ தெலுபவய்ய/
எங்கிருந்து/ எழுந்தருளினாயோ/ எந்த/ ஊரோ/ நான்/ அறியேனே/ இப்போழ்தேனும்/ தெரிவியுமைய்யா/


அனுபல்லவி
அந்த3/ சந்த3மு/ வேரை/ நட3தலு/-எல்ல/ த்ரி-கு3ண/-அதீதமை/-உன்னதே3 கானி/ ஸ்ரீ ராம/ (எந்து3)
அழகும்/ ஒயிலும்/ வேறாகி/, நடத்தை/ யாவும்/ முக்குணத்திற்கு/ அப்பாற்பட்டு/ உள்ளதன்றோ/ ஸ்ரீ ராமா/ எங்கிருந்து...


சரணம்
சிடுகண்டே/-அபராத4 சயமுல/ தகி3லிஞ்சே/ ஸி1வ/ லோகமு/ காது3/
சொடக்கினால்/ குற்றங்களை/ சாட்டும்/ சிவ/ லோகம்/ அன்று/

வடு/ ரூபுடை3/ ப3லினி/ வஞ்சிஞ்சி/-அணசு-வானி/ வைகுண்ட2மு/ காது3/
மாணாக்கனாக/ உருக்கொண்டு/ பலியினை/ வஞ்சித்து/ அடக்குவோனின்/ வைகுண்டம்/ அன்று;

விட/ வசனமுலு/-ஆடி3/ ஸி1ரமு/ த்ரும்ப-ப3ட்3ட3/ விதி4/ லோகமு/ காது3/
பொய்/ சொற்கள்/ பகர்ந்து/ தலை/ கிள்ளப்பெற்ற/ விதி/ லோகம்/ அன்று/

தி3டவு/ த4ர்மமு/ ஸத்யமு/ ம்ரு2து3/ பா4ஷலு/ கலுகு3/ தி3வ்ய/ ரூப/ த்யாக3ராஜ/ வினுத/ நீ/ (வெந்து3)
திடம்/ அறம்/ மெய்ம்மை/ மென்/ சொற்களும்/ உடைத்த/ தெய்வீக/ வடிவே/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/ நீ/ யெங்கிருந்து..


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்
2 - வைகுண்ட2மு - பலி சக்ரவர்த்தி, தன்னையாட்கொள்ள வந்திருப்பது, தான் வழிபடும் விஷ்ணுவென்றறிந்தே, தன் தலையே முன்வைத்தான். ஒரு தொண்டனுக்கு, இதைவிட பெரிய பேறென்ன வேண்டும்? ஆயினும், விஷ்ணுவைப் பொருத்தவரையில் அது வஞ்சனையாகும். பாகவத புராணம், 8-வது புத்தகம், அத்தியாயங்கள் 18 – 23 நோக்கவும்

Top

3 - விதி4 லோகமு - சிவனின் உண்மையான உருவ்த்தினை அறிய, விஷ்ணு, பன்றி உருவமெடுத்து அடியையும், பிரமன், அன்னப் பறவையினுருவெடுத்து முடியையும் தேடினார்கள். விஷ்ணு, தான் அடி காண இயலாததை ஒப்புக்கொள்ள, பிரமனோ தன்னுடை செருக்கினால், தான் முடி கண்டதாக பொய் சொன்னான். அதனால் சிவன், பிரமனுடைய ஐந்து தலைகளில் ஒன்றினைக் கிள்ளியதாக புராணங்கள் கூறும்.

இந்நிகழ்ச்சி திருவண்ணாமலையில் நடைபெற்றதாக அக்கோயில் தலவரலாறு கூறும்.

இச்சம்பவம் குறித்து ஆதி சங்கரரின் ஸௌந்தர்ய் லஹரி, 70-வது செய்யுளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விளக்கம்
1 - ஸி1வ லோகமு - சொடக்கினால் குற்றங்களைச் சாட்டும் சிவலோகம் - எதனை ஆதாரமாக வைத்து தியாகராஜர் இப்படி் கூறுகின்றாரென விளங்கவில்லை.

முக்குணங்கள் - சாத்துவிக, இராசத, தாமத குணங்கள்
மாணாக்கன் - வாமனராக அவதரித்தது
பலி - அரியாலொடுக்கப்பட்ட ஓர் அரக்கப் பேரரசன்
விதி - பிரமன்

Top


Updated on 11 Jan 2009

Friday, January 9, 2009

தியாகராஜ கிருதி - அபராத4முல மான்பி - ராகம் த3ர்பா3ரு - Aparaadhamula Maanpi - Raga Darbaaru

பல்லவி
அபராத4முல மான்பியாது3கோவய்ய

அனுபல்லவி
க்ரு2ப ஜூசி ப்3ரோசிதே கீர்தி க3லதி3க நீகு (அ)

சரணம்
சரணம் 1
அத்யந்த மத்ஸர மதா3ந்து4டை3 ஸஜ்ஜனுல
நித்ய கர்மமுல வலெ நிந்தி3ஞ்சுகொன்ன நா (அ)

சரணம் 2
சூசு வாரலகெது3ட ஸொக்கி ஜபிதுட3னைதி
யோசிஞ்ச நீ பாத3 யுக3ள த்4யானமு லேனி நா (அ)

சரணம் 3
1ஸ்த்ரைண ஜனுலனு கூடி3 2வீணாடி3தினி கானி
ப்ராண ஹித கு3ண கத2ல பல்கனைதி நா (அ)

சரணம் 4
ஸ1ரணு ஜொச்சின நன்னு கருணிஞ்சவே ராம
வர த்யாக3ராஜ நுத வஸ1மு காதி3க 3நாகு (அ)


பொருள் - சுருக்கம்
இராமா! தியாகராசனால் போற்றப்பெற்ற மேலோனே!
  • குற்றங்களை மன்னித்து ஆதரிப்பாயய்யா!

  • பெரும் காழ்ப்பும் செருக்குமுடைக் குருடனாகி, நல்லோரை தினசரிச் சடங்குகள் போலும், நிந்தித்திருந்தேன்;

  • காண்போரெதிரில் சொக்கி, செபம் செய்பவனாகினேன்;

  • உனது திருவடியிணை தியானம் செய்தேனில்லை;

  • பெண்டிரை விழைவோரைக் கூடி, (பொழுதை) வீணாக்கினேன்;

  • உயிருக்கு நன்மை பயக்கும் (உனது) பண்பு கதைகளைப் பகர்ந்திலேன்;

  • சரணடைந்த என்னை கருணிப்பாயய்யா;

  • இயலாதினியு மெனக்கு;

  • யோசிக்காதே;

  • கருணை செய்து காத்தால், புகழோங்குமுனக்கு.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
அபராத4முல/ மான்பி/-ஆது3கோ/-அய்ய/
குற்றங்களை/ மன்னித்து/ ஆதரிப்பாய்/ அய்யா!


அனுபல்லவி
க்ரு2ப/ ஜூசி/ ப்3ரோசிதே/ கீர்தி/ க3லது3-இக/ நீகு/ (அ)
கருணை/ செய்து/ காத்தால்/ புகழ்/ ஓங்கும்/ உனக்கு


சரணம்
சரணம் 1
அத்யந்த/ மத்ஸர/ மத3/-அந்து4டை3/ ஸஜ்ஜனுல/
பெரும்/ காழ்ப்பும்/ செருக்குமுடை/ குருடனாகி/ நல்லோரை/

நித்ய/ கர்மமுல/ வலெ/ நிந்தி3ஞ்சுகொன்ன/ நா/ (அ)
தினசரி/ சடங்குகள்/ போலும்/ நிந்தித்திருந்த/ எனது/ குற்றங்களை...


சரணம் 2
சூசு வாரலகு/-எது3ட/ ஸொக்கி/ ஜபிதுட3னு/-ஐதி/
காண்போர்/ எதிரில்/ சொக்கி/ செபம்/ செய்பவன்/ ஆகினேன்;

யோசிஞ்ச/ நீ /பாத3/ யுக3ள/ த்4யானமு/ லேனி/ நா/ (அ)
யோசிக்காதே/ உனது/ திருவடி/ இணை/ தியானம்/ இல்லாத/ எனது/ குற்றங்களை...


சரணம் 3
ஸ்த்ரைண ஜனுலனு/ கூடி3/ வீணு-ஆடி3தினி/ கானி/
பெண்டிரை விழைவோரை/ கூடி/ (பொழுதை) வீணாக்கினேன்/ அன்றி,

ப்ராண/ ஹித/ கு3ண/ கத2ல/ பல்கனைதி/ நா/ (அ)
உயிருக்கு/ நன்மை பயக்கும்/ (உனது) பண்பு/ கதைகளை/ பகர்ந்திலேன்/ எனது/ குற்றங்களை...


சரணம் 4
ஸ1ரணு/ ஜொச்சின/ நன்னு/ கருணிஞ்சவே/ ராம/
சரணம்/ அடைந்த/ என்னை/ கருணிப்பாயய்யா/ இராமா/

வர/ த்யாக3ராஜ/ நுத/ வஸ1மு காது3/-இக/ நாகு/ (அ)
மேலான/ தியாகராசனால்/ போற்றப்பெற்றோனே/ இயலாது/ இனியும்/ எனக்கு/ குற்றங்களை...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
3 - நாகு - நாது3.

மேற்கோள்கள்

விளக்கம்
1 - ஸ்த்ரைண ஜனுல - இச்சொல்லுக்கு 'பெண்டிரைச் சேர்ந்தவர்' என்று பொருள். இவ்விடத்தில் 'பெண்களை விழைவோர்' என பொருள் கொள்ளப்பட்டது. ஆனால் இச்சொல்லினை, தியாகராஜர் 'காமுகன்' என்று பொருளில் உபயோகப்படுத்தியுள்ளாரா என விளங்கவில்லை.

2 - வீணாடி3தினி - தெலுங்கு மொழியில் 'வீண்' என்று சொல் இருப்பதாகத் தெரியவில்லை. தியாகராஜர், ஒரு வேளை, தமிழ்ச் சொல்லினை பயன்படுத்தியுள்ளாரா எனத் தெரியவில்லை. இச்சொல்லுக்கு இங்கு 'பொழுதை வீணாக்கினேன்' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது.
Top


Updated on 09 Jan 2009