Wednesday, January 14, 2009

தியாகராஜ கிருதி - நாரத3 கு3ரு ஸ்வாமி - ராகம் த3ர்பா3ரு - Narada Guru Svami - Raga Darbaaru

பல்லவி
நாரத3 கு3ரு ஸ்வாமியிகனைன
நன்னாத3ரிம்பவேமி ஈ கரவேமி

அனுபல்லவி
ஸாரெகு ஸங்கீ3த யோக3 நைக3
பாரங்க3துடை3ன பரம பாவன (நா)

சரணம்
1இதிஹாஸ புராணாக3 சரிதமுலெவரி-வல்ல கலிகே3
பதினி தா3னமிவ்வ பு3த்3தி4 2ஸத்யபா4கெடுல கலிகே3
த்3யுதி ஜித 31ரத3ப்4 நினு வினா முனி யதுலகெவரு கலிகே3
க்ஷிதினி த்யாக3ராஜ வினுத நம்மிதி சிந்த தீர்சி ப்ரஹ்லாது3னி ப்3ரோசின (நா)


பொருள் - சுருக்கம்
இசை, யோகம், மறைகளில் கரைகண்டவராகிய, முற்றிலும் தூய, நாரத குரு சுவாமியே! இலையுதிர்கால முகிலை வெல்லும் ஒளியுடையோரே! தியாகராசனால் போற்றப் பெற்றவரே!
  • எவ்வமயமும், இனியாகிலும் என்னை ஆதரிக்காததேனய்யா? இக்கருப்பேனய்யா?

  • வரலாறு, புராணம், ஆகமம், சரிதங்கள் எவராலுண்டாகின?

  • கணவனை தானமளிக்கும் எண்ணம் சத்தியபாமைக்கு எங்ஙன முண்டானது?

  • உம்மையன்றி முனிவர், இருடிகட்கு எவருளர்?

  • புவியில், கவலை தீர்த்து, பிரகலாதனை நீர் காத்தீர்

  • உம்மை நம்பினேன்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நாரத3/ கு3ரு/ ஸ்வாமி/-இகனைன/
நாரத/ குரு/ சுவாமியே/ இனியாகிலும்/

நன்னு/-ஆத3ரிம்பவு/-ஏமி/ ஈ/ கரவு/-ஏமி
என்னை/ ஆதரிக்காதது/ ஏனய்யா/ இந்த/ கருப்பேனய்யா/


அனுபல்லவி
ஸாரெகு/ ஸங்கீ3த/ யோக3/ நைக3ம/
எவ்வமயமும்/ இசை/ யோகம்/ மறைகளில்/

பாரங்க3துடை3ன/ பரம/ பாவன/ (நா)
கரைகண்டவராகிய/ முற்றிலும்/ தூய/ நாரத...


சரணம்
இதிஹாஸ/ புராண/-ஆக3ம/ சரிதமுலு/-எவரி-வல்ல/ கலிகே3/
வரலாறு/ புராணம்/ ஆகமம்/ சரிதங்கள்/ எவரால்/ உண்டாகின/

பதினி/ தா3னமு/-இவ்வ/ பு3த்3தி4/ ஸத்யபா4மகு/-எடுல/ கலிகே3/
கணவனை/ தானம்/ அளிக்கும்/ எண்ணம்/ சத்தியபாமைக்கு/ எங்ஙனம்/ உண்டானது/

த்3யுதி/ ஜித/ ஸ1ரத்3/-அப்4ர/ நினு/ வினா/ முனி/ யதுலகு/-எவரு/ கலிகே3/
ஒளியில்/ வெல்லும்/ இலையுதிர்கால/ முகிலை/ உம்மை/ அன்றி முனிவர்/ இருடிகட்கு/ எவர்/ உளர்?

க்ஷிதினி/ த்யாக3ராஜ/ வினுத/ நம்மிதி/ சிந்த/ தீர்சி/ ப்ரஹ்லாது3னி/ ப்3ரோசின/ (நா)
புவியில்/ தியாகராசனால்/ போற்றப் பெற்றவரே/ நம்பினேன்/ கவலை/ தீர்த்து/ பிரகலாதனை/ காத்த/ நாரத...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்
2 - ஸத்யபா4 - கிருஷ்ணனுடைய இரண்டாவது மனைவி சத்தியபாமா, கணவனை எவ்வமயமும் தன்னுடனேயே வைத்திருக்க எண்ணி, நாரதரை உபாயம் கேட்டாள். அவர், கிருஷ்ணனை ஒருவருக்கு சடங்குமுறையாக தானம் அளித்து, பின்னர், யாருக்கு தானம் கொடுத்தாளோ அவரிடமிருந்து கிருஷ்ணனின் எடைக்கு சமமான பொன்னும் பொருளும் கொடுத்து மீட்டுக்கொண்டால் கிருஷ்ணன் அவளுக்கு அடிமையாவான் என்று சொன்னார். அந்த சம்பவத்தினை தியாகராஜர் இங்கு விவரிக்கின்றார். சத்தியபாமா கிருஷ்ணனை எடைபோட்ட கதை

விளக்கம்
1 - இதிஹாஸ புராண - வரலாறுகள், புராணங்கள் அனைத்தும் நாரத முனிவரால் தொடக்கிவைக்கப்பட்டவை.

3 - 1ரத3ப்4 - இலையுதிர் கால முகில் தூய வெண்ணிறமாக இருக்கும்.

கருப்பு - பஞ்சம்

Top


Updated on 14 Jan 2009

No comments: