Sunday, January 18, 2009

தியாகராஜ கிருதி - ராமாபி4ராம ரமணீய - ராகம் த3ர்பா3ரு - Ramaabhirama Ramaneeya - Raga Darbaaru

பல்லவி
ராமாபி4ராம ரமணீய நாம
1ஸாமஜ ரிபு பீ4ம ஸாகேத தா4 (ரா)

சரணம்
சரணம் 1
வனஜ லோசன 2நீ வலனயலஸிதினி
மனஸுன த3ய லேது3 அல்லாடி3
2லமேமி (ரா)

சரணம் 2
3மனஸு செலி நீகே மருலுகொன்னதி3 கானி
சனுவுன 4செயி பட்டி மமுல ரக்ஷிம்பவு (ரா)

சரணம் 3
கோரி கோரி நின்னு கொலுவக3 நீ
தா3ரி வேரைனதி3 தா45வ்ராலேமோ (ரா)

சரணம் 4
கமனீயமகு3 பான்பு காவிஞ்சிதினந்து3
ரமியிம்பக நன்னு ரச்ச 6ஜேஸெத3வு (ரா)

சரணம் 5
தி3க்கு நீவனி நேனு தி3ன தி3னமுனு நம்ம
7எக்குவ தக்குவலந்து3 எனஸெடு3 கு3ணமேமோ (ரா)

சரணம் 6
8நீகே த3ய புட்டி நீவு ப்3ரோவவலெ
ராகேந்து3 முக2 த்யாக3ராஜ வரத3 ஸ்ரீ (ரா)


பொருள் - சுருக்கம்
இராமா! களிப்பூட்டுவோனே! இனிய பெயரோனே! கரியின் பகைக்கு அச்சமூட்டுவோனே! சாகேத நகருறையே! கமலக்கண்ணா! முழுமதி முகத்தோனே! தியாகராசனுக்கருள்வோனே!
  • உன்னால் சோர்வுற்றேன்; (உனது) மனதில் தயையில்லை; திரிந்து பயனென்ன?

  • (எனது) மனப் பெண்ணாள் உன்னையே விழைந்தனள்; ஆயினும், கனிவுடன் கைப்பற்றி யெம்மைக் காவாயேனோ;

  • மிக்கு வேண்டியுன்னை சேவிக்க, உனது பாதை வேறானது, பிரமனின் எழுத்தோ என்னவோ;

  • இனிய படுக்கை யமைத்தேன்; அதனில் இன்புறா தென்னை வருத்தினாய்;

  • புகல் நீயேயென நான் அனுதினமும் நம்ப, ஏற்றத்தாழ்வினில் நுழையும் பண்பென்னவோ?

  • உனக்கே தயை பிறந்து நீ காக்க வேணும்;



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ராம/-அபி4ராம/ ரமணீய/ நாம/
ராமா/ களிப்பூட்டுவோனே/ இனிய/ பெயரோனே/

ஸாமஜ/ ரிபு/ பீ4ம/ ஸாகேத/ தா4ம/ (ரா)
கரியின்/ பகைக்கு/ அச்சமூட்டுவோனே/ சாகேத நகர்/ உறையே/


சரணம்
சரணம் 1
வனஜ/ லோசன/ நீ வலன/-அலஸிதினி/
கமல/ கண்ணா/ உன்னால்/ சோர்வுற்றேன்/

மனஸுன/ த3ய/ லேது3/ அல்லாடி3/ ப2லமு/-ஏமி/ (ரா)
மனதில்/ தயை/ இல்லை/ திரிந்து/ பயன்/ என்ன/


சரணம் 2
மனஸு/ செலி/ நீகே/ மருலுகொன்னதி3/ கானி/
மனம் (எனும்)/ பெண்ணாள்/ உன்னையே/ விழைந்தனள்/ ஆயினும்/

சனுவுன/ செயி/ பட்டி/ மமுல/ ரக்ஷிம்பவு/ (ரா)
கனிவுடன்/ கை/ பற்றி/ எம்மை/ காப்பாற்ற மாட்டாய்/


சரணம் 3
கோரி/ கோரி/ நின்னு/ கொலுவக3/ நீ/
மிக்கு/ வேண்டி/ யுன்னை/ சேவிக்க/ உனது/

தா3ரி/ வேரு/-ஐனதி3/ தா4த/ வ்ராலு/-ஏமோ/ (ரா)
பாதை/ வேறானது/ பிரமனின்/ எழுத்தோ/ என்னவோ/


சரணம் 4
கமனீயமகு3/ பான்பு/ காவிஞ்சிதினி/-அந்து3/
இனிய/ படுக்கை/ யமைத்தேன்/ அதனில்/

ரமியிம்பக/ நன்னு/ ரச்ச ஜேஸெத3வு/ (ரா)
இன்புறாது/ என்னை/ வருத்தினாய்/


சரணம் 5
தி3க்கு/ நீவு/-அனி/ நேனு/ தி3ன தி3னமுனு/ நம்ம/
புகல்/ நீயே/ யென/ நான்/ அனுதினமும்/ நம்ப/

எக்குவ/ தக்குவலு-அந்து3/ எனஸெடு3/ கு3ணமு/-ஏமோ/ (ரா)
ஏற்ற/ தாழ்வினில்/ நுழையும்/ பண்பு/ என்னவோ?


சரணம் 6
நீகே/ த3ய/ புட்டி/ நீவு/ ப்3ரோவ/ வலெ/
உனக்கே/ தயை/ பிறந்து/ நீ/ காக்க/ வேணும்/

ராகா/ -இந்து3/ முக2/ த்யாக3ராஜ/ வரத3/ ஸ்ரீ (ரா)
முழு/ மதி/ முகத்தோனே/ தியாகராசனுக்கு/ அருள்வோனே/ஸ்ரீ ராமா...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ஸாமஜ ரிபு பீ4ம ஸாகேத தா4 - பல்லவியின் இவ்வரி அனுபல்லவியாக சில புத்தகங்களில் கொடுக்கப்பட்டுள்ளது.

2 - நீ வலனயலஸிதினி மனஸுன த3ய லேது3 அல்லாடி3 - நீ வலனயலஸிதி நீ மனஸுன த3ய லேது3 மல்லாடி3.

3 - மனஸு செலி - மனஸனு செலி.

4 - செயி பட்டி மமுல ரக்ஷிம்பவு - செயி பட்டி ஸம்ரக்ஷிஞ்சவு - செயி பட்டி மமு ரக்ஷிம்புமு : 'ரக்ஷிம்புமு' பொருந்தாது

5 - வ்ராலேமோ - வ்ராதேமோ.

6 - ஜேஸெத3வு - ஜேஸேவு.

7 - எக்குவ - எக்கு : 'எக்குவ' - பொருந்தும்

Top

மேற்கோள்கள்

விளக்கம்
8 - நீகே த3ய புட்டி - உனக்கே தயை பிறந்து - 'என்னிடம் தயை கொள்வாய்' என நான் இனி வேண்டப்போவதில்லை.

கரியின் பகை - முதலை அல்லது சிங்கம்

கரியின் பகைக்கு அச்சமூட்டுவோனே -

'சிங்கம் நிகர் அச்சமூட்டுவோனே' என்றும் கொள்ளலாம்.

Top


Updated on 18 Jan 2009

No comments: