Thursday, January 15, 2009

தியாகராஜ கிருதி - பரிபாலய மாம் - ராகம் த3ர்பா3ரு - Paripalaya Mam - Raga Darbaaru

பல்லவி
பரிபாலய மாம் கோத3ண்ட3 பாணே
1பாவனாஸ்1ரித 2சிந்தாமணே

அனுபல்லவி
ஸரஸிஜ ப4வ நுத சரண ஸரோஜ
ஸாகேத ஸத3ன த31ரத2 தனூஜ (ப)

சரணம்
சரணம் 1
3ஸே1ஷாதி4 வர பூ4ஷண வாக்3-
விஸே1ஷ க்ரு2த நாம கோ4ஷ ஜனித
ஸந்தோஷ ரவிஜ ஸம்பா4ஷண நத ஜன
போஷண ஸு14 கர வேஷ நிர்தோ3ஷ (ப)

சரணம் 2
ஸத்ய-ஸந்த4 வர ப்4ரு2த்ய பால-
காதி3த்ய குலோத்தம ஸத்ய ஜனாவன
அத்யந்த ஸுந்த3ர ந்ரு2த்ய ஜன ப்ரிய
ஸ்துத்ய ஸு-சாரித்ர நித்யோத்ஸவ ரூப (ப)

சரணம் 3
ஸாக3ர மத33மன நாகா3ரி நுத
சரண க3ணபதி ஹ்ரு23யாகா3ர பாலன
ஜாக3-ரூக ஸ1ரணாக3த வத்ஸல
த்யாக3ராஜ நுத நாகா3ரி துரக3 (ப)


பொருள் - சுருக்கம்
  • கோதண்டபாணி! புனிதனே! சார்ந்தோரின் சிந்தாமணியே!

  • மலரோனால் போற்றப் பெற்றத் திருவடித் தாமரையோனே! சாகேத நகருறைவோனே! தசரதன் மைந்தா!

  • உயர் அரவரசனை அணிவோனின் வாயினால், தனித்ததென (ராம) நாமத்தினை பறைசாற்றியதால் களிப்புறுவோனே! பரிதி மைந்தனுடன் உரையாடுவோனே! வணங்கியோரைப் பேணுவோனே! மங்களமருளும் வேடத்தோனே! குற்றமற்றோனே!

  • சொல்லுறுதியோனே! சீரிய தொண்டரைக் காப்போனே! பகலவன் குலத்தின் உத்தமனே! உண்மையானவரைக் காப்போனே! பேரெழிலோனே! நடனமாடுவோருக்கு இனியோனே! துதிக்கப்பெற்றோனே! நன்னடத்தையோனே! என்றும் திருவிழா உருவத்தோனே!

  • கடலரசனின் செருக்கினை யொடுக்கியோனே! கருடன் போற்றும் திருவடியோனே! கணபதியின் இதயத்துறைவோனே! பேணுவதில் விழிப்புடையவனே! சரணடைந்தோருக்கு இனியோனே! தியாகராசனால் போற்றப்பெற்றோனே! கருடன்மேல் விரைவோனே!

பேணுவாயென்னை.


பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
பரிபாலய/ மாம்/ கோத3ண்ட3/ பாணே/
பேணுவாய்/ என்னை/ கோதண்ட/ பாணி/

பாவன/-ஆஸ்1ரித/ சிந்தாமணே/
புனிதனே/ சார்ந்தோரின்/ சிந்தாமணியே/


அனுபல்லவி
ஸரஸிஜ/ ப4வ/ நுத/ சரண/ ஸரோஜ/
கமலத்தில்/ உறைவோனால்/ போற்றப் பெற்ற/ திருவடி/ தாமரையோனே/

ஸாகேத/ ஸத3ன/ த31ரத2/ தனூஜ/ (ப)
சாகேத நகர்/ உறைவோனே/ தசரதன்/ மைந்தா/


சரணம்
சரணம் 1
ஸே1ஷ/-அதி4ப/ வர/ பூ4ஷண/ வாக்3-/
சேடன் - அரவு/ அரசனை/ உயர்/ அணிவோனின்/ வாயினால்/

விஸே1ஷ க்ரு2த/ நாம/ கோ4ஷ ஜனித/
தனித்ததென/ (ராம) நாமத்தினை/ பறைசாற்றியதால்/

ஸந்தோஷ/ ரவிஜ/ ஸம்பா4ஷண/ நத ஜன/
களிப்புறுவோனே/ பரிதி மைந்தனுடன்/ உரையாடுவோனே/ வணங்கியோரை/

போஷண/ ஸு14/ கர/ வேஷ/ நிர்தோ3ஷ/ (ப)
பேணுவோனே/ மங்களம்/ அருளும்/ வேடத்தோனே/ குற்றமற்றோனே/


சரணம் 2
ஸத்ய-ஸந்த4/ வர/ ப்4ரு2த்ய/ பாலக/-
சொல்லுறுதியோனே/ சீரிய/ தொண்டரை/ காப்போனே/

ஆதி3த்ய/ குல/-உத்தம/ ஸத்ய ஜன/-அவன/
பகலவன்/ குலத்தின்/ உத்தமனே/ உண்மையானவரை/ காப்போனே/

அத்யந்த ஸுந்த3ர/ ந்ரு2த்ய ஜன/ ப்ரிய/
பேரெழிலோனே/ நடனமாடுவோருக்கு/ இனியோனே/

ஸ்துத்ய/ ஸு-சாரித்ர/ நித்ய/-உத்ஸவ/ ரூப/ (ப)
துதிக்கப்பெற்றோனே/ நன்னடத்தையோனே/ என்றும்/ திருவிழா/ உருவத்தோனே/


சரணம் 3
ஸாக3ர/ மத3/ த3மன/ நாக3-அரி/ நுத/
கடலரசனின்/ செருக்கினை/ ஒடுக்கியோனே/ அரவின்/ பகைவன்/ போற்றும்/

சரண/ க3ணபதி/ ஹ்ரு23ய/-ஆகா3ர/ பாலன/
திருவடியோனே/ கணபதியின்/ இதயத்துள்/ உறைவோனே/ பேணுவதில்/

ஜாக3-ரூக/ ஸ1ரண/-ஆக3த/ வத்ஸல/
விழிப்புடையவனே/ சரண்/ அடைந்தோருக்கு/ இனியோனே/

த்யாக3ராஜ/ நுத/ நாக3/-அரி/ துரக3/ (ப)
தியாகராசனால்/ போற்றப்பெற்றோனே/ அரவின்/ பகைவன்மேல்/ விரைவோனே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - பாவனாஸ்1ரித - பவனாஸ்1ரித

மேற்கோள்கள்
2 - சிந்தாமணே - சிந்தாமணி - கோரியதை வழங்கும் தெய்வீக மணி

விளக்கம்
3 - ஸே1ஷாதி4 - சேடனின் அரசன் - சேடன் அரவுகளுக்கு அரசன் எனப்படும். இவ்விடத்தில், 'சேடனின் அரசன்' என்ற சொல்லுக்கு தனியான பொருளேதும் இருப்பதற்கில்லை.

Top

கமலத்தில் உறைவோன் - மலரோன் - பிரமன்

சாகேத நகர் - அயோத்தி

அரவரசனை அணிவோன் - சிவன்

தனித்ததென ராம நாமத்தினை பறைசாற்றியதால் - 'ராம' எனும் நாமம் பிறவிக்கடலைக் கடத்துவிக்கும் பிரணவத்திற்கு நிகரான தாரகமாகும்.

பரிதி மைந்தன் - சுக்கிரீவன்

அரவின் பகைவன் - கருடன்

Top


Updated on 15 Jan 2009

No comments: