Sunday, January 11, 2009

தியாகராஜ கிருதி - ஏதி3 நீ பா3ஹு ப3ல - ராகம் த3ர்பா3ரு - Edi Nee Baahu Bala - Raga Darbaaru

பல்லவி
ஏதி3 நீ பா3ஹு ப3ல பராக்ரமமென்னாள்ளகென்னாள்ளு

அனுபல்லவி
ஆதி3 தே3வ நிஜ தா3ஸுலகு கனனாஸயுண்ட33 கரி வரத3 (ஏ)

சரணம்
சரணம் 1
கரமுன 1மெரயு1ர சாபமு ஆகலி கொன லேதா3
2முர ஹர ஸோ1ணித பானமு ப3ஹு தி3னமுலு கா லேதா3 வாதா3 (ஏ)

சரணம் 2
ஸரஸ பூ4ஸுருல பா34லு வினி ரோஸமு ரா லேதா3
மொரலிட3கா3 யோக3 நித்3து3ர நிலிபி மோமு ஜூப ராதா3 வாதா3 (ஏ)

சரணம் 3
3வருஸ தப்பு பு3த்3து4லு நீசுலகு வச்சினதி3 தெலியதா3
வெரபு லேக திரிகே3ரு சாலனுசு வேக3மே ஸ்ரீ த்யாக3ராஜ ஸன்னுத (ஏ)


பொருள் - சுருக்கம்
முதற் கடவுளே! கரிக்கருள்வோனே! முரனை வென்றோனே! தியாகராசனால் போற்றப் பெற்றோனே!
  • எங்கே (காட்டு) உனது கை வலிமையின் வீரத்தினை! எத்தனை நாளைக் கெத்தனை நாள்?

  • உண்மைத் தொண்டர்களுக்கு காண ஆசையிருக்க, எங்கே (காட்டு) உனது கை வலிமையின் வீரத்தினை!

  • கையிலொளிரும் அம்புகளும், வில்லும் பசி கொள்ளவில்லையா? குருதி பருகி வெகு நாட்களாகவில்லையா? வாதா?

  • உயர் அந்தணர்களின் துன்பங்களைச் செவிமடுத்தும் கோபம் வரவில்லையா? முறையிட, யோகத்துயிலை நிறுத்தி, முகத்தைக் காட்டலாகாதா? வாதா?

  • வரிசை தவறும் புத்தி, இழிந்தோர்களுக்கு வந்தது தெரியாதா? அச்சமின்றி திரிகின்றனரே; போதுமென, வேகமாக, எங்கே (காட்டு) உனது கை வலிமையின் வீரத்தினை!



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஏதி3/ நீ/ பா3ஹு/ ப3ல/ பராக்ரமமு/-என்னாள்ளகு/-என்னாள்ளு/
எங்கே (காட்டு)/ உனது/ கை/ வலிமையின்/ வீரத்தினை/ எத்தனை நாளைக்கு/ எத்தனை நாள்/


அனுபல்லவி
ஆதி3/ தே3வ/ நிஜ/ தா3ஸுலகு/ கன/-ஆஸ/-உண்ட33/ கரி/ வரத3/ (ஏ)
முதற்/ கடவுளே/ உண்மை/ தொண்டர்களுக்கு/ காண/ ஆசை/ இருக்க/ கரிக்கு/ அருள்வோனே! எங்கே...


சரணம்
சரணம் 1
கரமுன/ மெரயு/ ஸ1ர/ சாபமு/ ஆகலி/ கொன லேதா3/
கையில்/ ஒளிரும்/ அம்புகளும்/ வில்லும்/ பசி/ கொள்ளவில்லையா/

முர/ ஹர/ ஸோ1ணித/ பானமு/ ப3ஹு/ தி3னமுலு/ கா லேதா3/ வாதா3/ (ஏ)
முரனை/ வென்றோனே/ குருதி/ பருகி/ வெகு/ நாட்கள்/ ஆகவில்லையா/ வாதா/ எங்கே...


சரணம் 2
ஸரஸ/ பூ4ஸுருல/ பா34லு/ வினி/ ரோஸமு/ ரா லேதா3/
உயர்/ அந்தணர்களின்/ துன்பங்களை/ செவிமடுத்தும்/ கோபம்/ வரவில்லையா/

மொரலு-இட3கா3/ யோக3/ நித்3து3ர/ நிலிபி/ மோமு/ ஜூப ராதா3/ வாதா3/ (ஏ)
முறையிட/ யோக/ துயிலை/ நிறுத்தி/ முகத்தை/ காட்டலாகாதா/ வாதா/ எங்கே...


சரணம் 3
வருஸ/ தப்பு/ பு3த்3து4லு/ நீசுலகு/ வச்சினதி3/ தெலியதா3/
வரிசை/ தவறும்/ புத்தி/ இழிந்தோர்களுக்கு/ வந்தது/ தெரியாதா/

வெரபு/ லேக/ திரிகே3ரு/ சாலு/-அனுசு/ வேக3மே/ ஸ்ரீ த்யாக3ராஜ/ ஸன்னுத/ (ஏ)
அச்சமி/ ன்றி/ திரிகின்றனரே/ போதும்/ என/ வேகமாக/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/ எங்கே...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - மெரயு - மெரஸே.

2 - முர ஹர - முர கர.

3 - வருஸ - வரஸ : இரண்டு சொற்களுக்கும் பொருள் ஒன்றே.

மேற்கோள்கள்
2 - முர ஹர - முரன் - கண்ணனால் கொல்லப்பட்ட அரக்கன் - நரகாஸுரன் எனப்படும் பௌமாஸுரனின் உடந்தை. பாகவத புராணம், 10-வது புத்தகம், அத்தியாயம் 59 நோக்குக. முரன் கதை - சுருக்கம்

விளக்கம்
எத்தனை நாளைக் கெத்தனை நாள் - நீண்ட நாளானது.

குருதி பருகி - வில்லையும் அம்பையும் குறிக்கும்.

யோகத்துயில் - பாற்கடலில் அரி யோகத் துயிலில் உள்ளதாக.

வரிசை - ஒழுங்கு, முறைமை.

Top


Updated on 12 Jan 2009

No comments: